தமிழ்த்தேசியம்

தேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு ஒரு பார்வை-காணொளி

Posted on Updated on

 

2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.

காணொளி

தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலானது. அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள் கூட வர்ணித்திருந்தன அந்த சந்திப்பை.

இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு தேதி குறித்த பின்னர் இது நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கையும் சிங்களதேசத்தையும் இணைக்கும் ஏ9 பாதை திறந்துவிடப்பட்டது.

தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகும். தமிழீழ விடுதலையின் மூலஇயக்கு சக்தியான தேசியத்தலைவர் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஊடகவியலாளர்களுக்கு பேட்டிகள் வழங்கி இருந்தாலும் 2002 ஏப்ரல் 10ம்நாள்தான் விடுதலைப்புலிகள் தமது தலைவருடன் உலக பத்திரிகையாளர்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் அழைப்பை விடுத்திருந்தனர்.

உலக ஊடகங்களுக்கும் இது வித்தியாசமான ஒரு அனுபவமாகவே அவர்கள் பதிந்தார்கள்.

அதுநாள் வரைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைப் பிரகடனமாக, வேலைத்திட்ட அறிவிப்பாக, உலகத்துக்கு செய்தியாக உலகம் கணித்து வந்தது ஒவ்வொரு மாவீரர் நாளிலும் தேசியத்தலைவரின் குரலில் வெளிவரும் மாவீரர் உரையை வைத்துதான். முதல்முறையாக தமது சந்தேகங்களை தமது கேள்விகளை தேசியத்தலைவரிடம் நேரடியாக கேட்பதற்கு கிடைத்த இந்த சந்தர்ப்பம் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது.

இது ஒரு புறம்இருக்க, இந்த சந்திப்பை சிங்களதேசத்தின் ஆளும்தரப்பு அவ்வளவாக மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதாக இல்லை.தேசியத்தலைவரின் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நேரடியாக சிங்களதேசத்தின் தேசிய தொலைக்காட்சியாக கருதப்பட்ட ரூபவாகினியில் நேரடியாக ஒளிபரப்பியே தீரவேண்டிய தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தமும் சிங்களத்துக்கு ஏற்பட்டது.

விடுதலைப்புலிகளை சுற்றி மர்மங்களையும் விடைகள் இல்லாத கேள்விகளையும் தொடர்ச்சியாக இருக்கவைப்பதன் மூலமே விடுதலைப்புலிகளை ஒரு பயங்கர சக்தியாக உலகின் கண்களுக்குள் தக்க வைக்கமுடியும் என்பதே சிங்களத்தின் எண்ணம்.

இத்தகைய மர்மங்கள் நீங்குவதிலோ,உலகின் கேள்விகளுக்கு விடுதலைப்புலிகளின் அதிஉச்சமான தலைவரே நேரடியாக பதில் வழங்குவதோ சிங்கள ஆட்சியாளர்களுக்கு பிடிப்பதமானதாக இருந்திருக்கவே முடியாது.

ஆனாலும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை,போர் நிறுத்தம்,மற்றும் முக்கியமாக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்ற நாடகத்தில் இத்தகைய அடுத்த தரப்பினரின் இத்தகைய ஊடக சந்திப்புகளை மறுப்பதோ தடை செய்வதோ முடியாது என்பதால்தான் சிங்களமும் இதற்கு ஒப்புகொள்வதாக சொல்லவேண்டி வந்தது.

ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஒரு அமைப்பு என்ற முறையில் மாறிவரும் உலக நிலைமைகளில் தமது நிலைப்பாட்டை வெளிஉலகத்துக்கு பகிரங்கமாக அதே நேரம் முடிவுகளை எடுக்கும் ஆற்றல்மிக்க ஒரே சக்தியான தேசியத்தலைவரின் குரலில் சொல்வதற்கான சந்தர்ப்பாக இதனை கணித்திருந்தார்கள்.

அதிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடப்பதற்கு சரியாக ஏழு மாதத்துக்கு முன்னர் உலகின் அனைத்து சமநிலைகளையும் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் பற்றிய கணிப்புகளையும் தலைகீழாக மாற்றிய இரட்டை கோபுரச் சம்பவம் 2001 செப்படம்பர் 11ல் நிகழ்ந்தேறி இருந்தது. (இந்த கேள்வியும் தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது).

இராணுவ பல சமநிலையில் ஏறத்தாழ சிங்கள தேசத்துக்கு ஒப்பானதாக விடுதலைப்புலிகள் அந்நேரம் பலத்துடன் இருந்தாலும் செப்டம்பர் 11க்கு பின்னான உலகின் கேள்விகள் வித்தியாசமானதாக இருந்ததால், அதற்கு தேசிய தலைவர்தான் பதில் அளிப்பது காத்திரமானதாக இருக்கும் என்பதாலும் நடாத்தப்பட்டது.

இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அதற்கான தேசியத்தலைவரின் பதில்களுக்கும் அப்பால் தேசியத்தலைவர் தன்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளை உள்வாங்கும் முறைமையும் எந்தவொரு கட்டத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு மிகத்தேர்ந்த தலைவனுக்கு உரிய அணுமுறையை கையாண்டதாகவே, ஒரு பழுத்த இராஜதந்திரிக்கே உரிய வார்த்தை பிரயோகங்களை வெளிப்படுத்தியதாகவுமே ஆச்சரியத்துடன் உலக ஊடகங்கள் எழுதின.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி அதில் கலந்துகொண்ட சிங்கள ஊடகவியலாளரான ரஞ்சன் பெரேரா கூறுகையில் “பிரபாகரனின் செய்தியாளர் மாநாடு வரலாறு காணாத நிகழ்வாகும். 300க்கும் மேற்பட்ட உள்நாட்டு-வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மிகுந்த சிரமத்துடன் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாடு மூலம் உலகில் விடுதலைப்புலிகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை உணரமுடிந்தது.

பிரபாகரனை பற்றிய எவ்வளவோ கதைகளும் கற்பனைகளும் பரவி இருந்தவேளையில் செய்தியாளர்கள் மாநாட்டில் மிகச் சாதாரணமாக காட்சியளித்தார். அவரது ஒவ்வொரு சொல்லும் அவரைப் பற்றிய தவறான கருத்துகளை போக்கின என்றோ சொல்ல வேண்டும்” என்று சொன்னார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தலைவர் கொடுத்த பதில்கள் வெறுமனே அந்த ஊடகம் கேட்ட கேள்விக்கான பதில் என்பதாக மட்டும் இல்லாமல் அதனை பார்க்கும், கேட்கும், வாசிக்கும் உலக அரங்கிற்கு சொல்லப்பட்ட பதில்களாகவே மிகவும் அற்புதமாக அமைந்திருந்தன.

என்றுமே சிங்கள பேரிவாதம் அதன் அடக்குமுறை முகத்தை மாற்றிக்கொள்ளாது என்று வரலாற்று அனுபவங்கள் மூலம் தெரிந்து கொண்டிருந்தாலும் பிரிந்துசெல்லும் முடிவை மாற்றுவதற்கான அணுகுமுறை சிங்களத்தின் நடைமுறையில்தான் இருக்கின்றது என சொல்லி இருந்தார்.

மீண்டும் ஆயுதந்தாங்கி போராட விடுதலைப்புலிகள் போகபோகிறார்கள் என்ற கருத்தை தேசியதலைவரின் வாயால் சொல்ல வைப்பதற்காக

“பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்.?” என்று கேட்கப்பட்டபோது மிகவும் இலாவகமாக வார்த்தையை தெரிவுசெய்து

“பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் தொடர்ந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று சொன்னதும்,

“பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நினைக்கிறீர்களா”? என்று கேட்கப்பட்டபோது சிங்களதேசத்தின் ஒரு அதிபர் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுப்பதற்கு எத்தகைய தடங்கல்களை கொடுப்பார் என்று தெரிந்திருந்தும்

“சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.” என்பதுடன் நின்றுவிடாமல்

“அவர் அப்படி ஏதும் செய்தால் அதை பார்த்து கொள்வது ரணிலின் பொறுப்பு” என்று சொன்னதன் மூலம் பதிலிலேயே ரணிலுக்கான செய்தியையும் சொல்லி இருந்தது இன்றும் ஆச்சர்யத்துடன் நோக்கப்படுகிறது.

ஏறத்தாழ இதே மாதிரியான கேள்வி ஒன்று இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் 1984ம் ஆண்டு மார்ச் மாதம் ‘சண்டே’ இதழுக்காக அனிதா பிரதாப்பால் கேட்கப்பட்டபோது

“ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தி இருந்திருக்க மாட்டேன்” என்று கூறியிருந்ததும் தலைவர் சிங்களதேச அதிபர்களை பார்க்கும் எப்படி பார்க்கிறார் என்று காட்டியிருந்தது.

என்னை பொறுத்தவரையில் இந்த இனத்துக்கென்று தனியான ஏதும் கைகாட்டிநூலோ,வழிகாட்டி புத்தகமோ தேவையில்லை. தேசியத்தலைவரின் அனைத்து பேட்டிகளையும் அவரது அனைத்து மாவீரர் உரைகளையும் தொகுத்தாலே அதற்குள் இந்த இனம் இப்போது செல்லவேண்டிய திசையும் பாதையும் அதற்கான பக்குவமான முறைகளும் பொதிந்து கிடக்கும்.

இருள்நிறைந்த இந்நேரத்தில் அவைகளே பாதை வெளிச்சங்களாக ஒளிதரக் கூடியவை.

ச.ச.முத்து

வைரவிழா காணும் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

Posted on Updated on

**

***

காரிருள் நீக்க வந்த பேரொளி! அறுபது அகவை – ச.ச.முத்து

கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ‘ அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்’ என்று..,

வீடிழந்த, ஊரிழந்த, மண் இழந்த சோகத்தை செரிக்கமுடியாமல் தமிழ்நாட்டு அகதி முகாமில் தினமும் கடலின் முடிவையே பார்த்து கொண்டிருக்கும் முதியவர் கண்களில் நம்பிக்கை பொங்கி வழிய சொல்வார். ‘ தலைவர் நிச்சயம் ஒருநாள் வருவார்…அவர் வரவேணும்…’என்று

நேர்த்திக்காக லூட்ஸ் மாதா போய்வந்த குடும்பம் ஒன்று மிக நம்பிக்கையுடனேயே சொன்னது ‘தலைவருக்கு ஒன்றும் நேரக்கூடாது என்று மாதாவுக்கு மெழுகுவர்த்தி ஏற்றினோம்.. அவர்தான் இந்த இனத்துக்கு தேவை’..

2009 மே மாதத்துக்கு பிறகு சொல்லமுடியாத வறுமைக்குள்ளும், சமூக நிராகரிப்புக்குள்ளும், அன்றாட தேவைகளையே தன் பிள்ளைகளுக்கு நிறைவேற்றிவைக்க முடியாத போராளி தாய் ஒருத்தி.

‘ அண்ணை இப்போ வெளியாலை இருந்தால் எங்களை இப்பிடி விடவேமாட்டார்..அவர் எங்கை இருந்தாலும் எங்களை பற்றியே நினைத்து கொண்டிருப்பார் ‘ என்று சொல்வதும்,

படிப்பின் உச்சங்களை வெகு சாதாரணமாக தாண்டி கலாநிதி பட்டங்களும் மிகச்சிறந்த ஆய்வுகளும் தரும் பல்கலைகழகசமூக அறிவுத்தூண்களில் ஒருத்தர் ‘ இப்போதைய தமிழ் சமூகத்தின் அத்தனை தூசிகளையும் துடைத்தெடுத்து, இதனை சரியான மனிதர்களாக மாற்றுவதற்கு அவர்தான் வரவேணும்’ என்பதும்

எல்லாவற்றிலும் மேலாக நவம்பர் 26ம் திகதி நெருங்கும் போதே ஏதோ தங்கள் வீட்டின் முக்கிய இரத்த சொந்தம் ஒன்றின் பிறந்தநாள் வருவது போல கோடானுகோடி தமிழர்கள் எண்ணுவதும் கொண்டாடுவதும் அந்த மனிதனின் வரலாற்று தேவையை இன்னும் மிகத் தெளிவாகவே உணர்த்தி நிற்கின்றன.

இந்த இனத்துக்கு இருந்துகொண்டிருக்கும் மிகநீண்ட வரலாற்றை கொண்ட மொழியின் மக்கள் என்ற பெருமையோ,

ஆழமான பண்பாட்டு வேர்களையும் அதனூடு எழுந்த செவ்விலக்கியங்களையும் கொண்ட மக்கள் என்ற பெரும் மகிழ்வோ

,உலகில் மிகநீண்ட கால(சோழ) பேரரசு ஒன்றின் ஆட்சிமொழியை பேசும் மக்கள் என்ற பேருவகையோ, எத்தனை இருந்தாலும் அவை எல்லாவற்றையும்விட பிரபாகரன் என்ற மனிதன் பேசும் மொழியை பேசுகின்றோம்,

அவரது இனத்தின் மக்கள் என்பதே உயரிய பெரும் பெருமையாக நினைக்கும் அளவுக்கு அந்த மனிதன் இந்த வரலாற்றின் மிக முக்கிய இயக்கு சக்தியாக வழிகாட்டியாக நிலைத்திருக்கிறார்.

இன்றும் கூட மேலாதிக்க-வல்லாதிக்க சக்திகள் எல்லாம் ஒரு சமன்பாட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். .அதுதான் போருக்கு பின்பான தமிழினம் எழுவது இப்போதைக்கு முடியாது மட்டுமல்ல.முடியவே முடியாது என்பதுதான் அது.

படைத்துறை வலு,போரிடும் வலு, ஆளணிவலு என்று எதுவுமே இல்லாத ஒரு பொழுதில் வல்லாதிக்கத்தினதும் சிங்கள பேரினவாதத்தினதும் கணிப்பு ஒரளவு சரி என்றே தோன்றும்.

ஆனால் இதனை எல்லாம் உடைத்தெறியக் கூடியது ஒரே ஒரு ஒற்றைக்குரல் என்பதை அவர்கள் சுலபமாக மறந்துவிடுகிறார்கள்.

பிரபாகரன் எனும் அந்த மனிதனது ஒற்றைகுரல் ஒன்று போதும் மீண்டும் இந்த இனத்தின் அத்தனை வலுவும் எழுவதற்கு. இந்த நம்பிக்கையே இன்று உலகம் முழுதும் அத்தனை தமிழ் மக்களதும் நெஞ்சுக்குள் படர்ந்திருக்கிறது.
இந்த நம்பிக்கையை அந்த மனிதன் எவ்வாறு பெற்றுக் கொண்டார்.

அவரது வரலாற்றை ஆழ்ந்து பார்த்தால்,அவரது ஆரம்பவரலாற்றை நேரடியாக பார்த்திருக்கும் ஒரு பேறு கிடைத்ததால் ஒன்றை உறுதியாக சொல்லலாம் ‘ இந்த இனத்தினது நம்பிக்கையை பெற்று கொள்ள வேண்டும் என்பதற்காகவோ,இதன் அங்கீகாரத்துக்காகவோ வலிந்து எதனையும் செய்தவர் அல்ல’ ஆனால் மிகமிக உண்மையாக போராடினார்.

தான் நம்பிய இலட்சியத்தை வென்றடைய முழுமையான அர்ப்பணிப்பு அவரிடம் இருந்தது.அதனைவிட ஓய்வறியாத பயணம் இருந்தது.எதற்கும் சோர்ந்து போகாத வலு இருந்தது.இவை எல்லாவற்றையும் விட இந்த மக்களை தன் உயிரினும் மேலாக நேசித்தார்.அதுவே அவருக்கான அங்கீகாரத்தை மிக இயல்பாக பெற்று தந்தது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

தெளிவான அரசியல்ஒன்றை வரித்துக்கொண்ட அவர் அதனை அடைய ஓய்வு ஒளிச்சல் அற்ற செயற்பாடே முக்கியம் என்பதை முன்வைத்து பயணப்பட்டவர்.அவருடைய பயணம் இப்போது அறுபதாவது அகவையில் நிற்கிறது.

எங்கள் எல்லோரினதும் முன்நிலை களப்பயணி அவர்.1973ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி அவர் தனது வீட்டை முழுதாக துறந்து தேசத்துக்கான விடுதலைப்பாதையில் நடக்க ஆரம்பிக்கின்றார். இன்று நாற்பது வருடங்களுக்கும் மேலாகின்றது அவர் போராட புறப்பட்டு. தனது வழிகாட்டி வரலாறு என்றே அவர் சொன்னார்.

எமக்கும் வரலாறுதான் வழிகாட்டி.அவரது வரலாறுதான் வழிகாட்டி.அந்த வரலாறுமுழுதும் எண்ணற்ற சம்பவங்கள் நாம் கற்றுக்கொள்ள, எம்மை கூர்தீட்டி கொள்ள, எம்மை செதுக்கி கொள்ள. அவரது ஆற்றல்கள் அனைத்துமே ஒருவிதமான நுண்ணிய தன்மை கொண்டவை. யாராலும் அளவிடவே முடியாதவையாக அவை இருக்கும்.

அவரது நுண்ணிய ஆற்றல்கள் நிறைந்த அவரது கணிப்புகள். பெரும்பாலும் அது தவறுவதே இல்லை.

ஒருமுறை 80ம் ஆண்டில் வன்னியின் முல்லைத்தீவுக்கு அண்மித்த அடர்காடொன்றில் பண்ணை முறையிலான முகாம் ஒன்றில் இருந்த போது அந்த முகாமில் இருந்து ஐந்து மைல்களுக்கு அப்பால் இருக்கும் கடை ஒன்றுக்கு சாமான்கள் வாங்க சென்ற போராளி ஒருவன் அந்த கடைகாரரிடம் குண்டூசி வாங்க கேட்டபோது அந்த கடைக்காரர் ‘ஏன் பொம் செய்யவா’ என்று கேட்டதாக அந்த போராளி திரும்பி வந்து சாப்பிடும்போது சர்வசாதாரணமாக சொன்னான்.

அந்தநேரம் அந்த முகாமில் செல்லக்கிளிஅண்ணா, கலா, வெங்கிட்டு, பொன்னம்மான் உட்பட பத்துபேர் இருந்தார்கள்.எல்லோரும் இந்த செய்தியை காதில் வாங்கி ஏதும் அர்த்தம் செய்யவில்லை.

ஆனால் எல்லோரும் சாப்பிட்ட உடனே தலைவர் எல்லோருக்கும் கைகளில் 100ரூபா தந்து எல்லோரும் உடனே இந்த முகாமைவிட்டு வெளிக்கிடுங்கோ.அடுத்த தொடர்பு வரும்வரைக்கும் உங்கள் பகுதிகளில் இருங்கோ என்றார்.

அந்த நேரம் முகாமில் இருந்த அனைவருக்கும் அதன் அர்த்தம் புரியவில்லை.எல்லோரும் ‘ யாரோ கடைக்காரன் ஒரு கதைக்காக கேட்டதை ஏன் தலைவர் ஆபத்து என்று நினைக்க வேண்டும் என்று கதைத்தார்கள்.

ஆனால் தலைவர் உறுதியாக சொல்லிவிட்டார் ‘ எல்லோரும் இன்று மாலை இருட்டு வருவதற்குள் வெளிக்கிட்டு விடவேணும்’ என்று.

அந்த நேரம்தான் அந்த முகாமில் அறுவடை செய்யப்பட்டிருந்த உழுந்து மூட்டைமூட்டையாக இருந்தது.

அத்தனையையும் விட்டுவிட்டு எப்படி செல்வது என்று மற்றவர்கள் கேட்டபோது தலைவர் சொன்னார் ‘பொருட்கள் பிறகும் வாங்கலாம்,ஆனால் உங்களில் யாரையும் இழக்க நான் தயாரில்லை’ என்று.

எல்லோரும் புறப்பட்டு சென்று ஒரு கிழமைக்குள் அரசாங்க பத்திரிகை தினகரனில் அந்த முகாம் சிங்கள பொலீஸ்படையால் பிடிக்கப்பட்டு அதில் இருந்த உழுந்துமூட்டைகள் எடுக்கப்படடதான செய்தி வெளிவந்திருந்தது.

இப்போது இதனை நினைத்து பார்த்தாலும் ஆச்சர்யமே மேலெழும்புகிறது. எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு தகவல் அவருக்கு மட்டுமே விடுதலைக்கான ஏதோ ஒன்றாக இருக்கிறது.

இந்த நுண்ணுனர்வு என்பது அவரது ஆழமான இலட்சிய தாகத்தில் இருந்தே உதயமாவதாக நான் நினைக்கிறேன்.முழுமையான ஈடுபாடு ஒருவிடயத்தில் இருந்தால் இயல்பாகவே அந்த விடயம் சம்பந்தமான உள்ளுணர்வுகள் வந்து விடும் என்பது விஞ்ஞான முடிபு.

இன்னொருமுறை பொலிகண்டி புதியகுடியேற்றத்தின் வீடுகளில் ஒன்றில் 83பெப்ரவரியில் தங்கி இருந்தபோது எல்லோரும் தூங்கி கொண்டிருந்த நேரம்.தலைவரும் தூங்கித்தான் இருந்தார்.

ஆனால் திடீரென எல்லோரையும் எழுப்பி ஒரு வெகுதூரத்தில் ஒரு வாகன சத்தம் வித்தியாசமாக இருப்பதை சொன்னார்.அந்த வீதி வாகனங்கள் அடிக்கடி செல்லும் வீதி என்பதால் மற்றவர்கள் அது சாதாரண வாகனம் என்றே சொல்லி மீண்டும் தூங்க எத்தனித்தனர்.

ஆனால் தலைவரோ ‘ இல்லை அந்த வாகனம் இந்த குடியேற்றத்துக்கு வரும் வழியில் நிற்கிறது’ என்று உறுதியாக சொல்லி இரண்டு போராளிகளை உடனே போய் என்ன என்று பார்த்து வரும்படி சொன்னார்.

போராளிகள் அங்கு சென்றபோது ‘ஒரு ஹையஸ் ரக வான் ஒன்று தலைவர் சொன்ன இடத்தில் நின்றிருந்தது. அது மண்ணுக்குள் புதைந்து நின்றதால் வாகனஓட்டி இன்ஜினை ரேஸ் பண்ணி கொண்டிருந்தார்.

போராளிகளுக்கு தெரிந்த வாகன ஓட்டி என்பதால் அது ஆபத்தான வாகனம் இல்லை என்று திரும்பி வந்தனர்.

மறுநாள் தலைவரிடம் அது எப்படி அத்தனை உறுதியாக அந்த இடத்தில்தான் வாகனம் நிற்கிறது என்று எப்படி இங்கிருந்தே சொன்னீங்கள் என்று கேட்டபோது ‘நேற்று இந்த இடத்துக்கு வரும்போது கவனித்தேன்.

அந்த இடத்தில் பாதையை மூடி மணல் கிடந்தது. அதில் ஏதோ ஒரு வாகனம் புதைந்து நிற்கிறது என்பதை கணித்தேன்’ என்றார்.

எல்லோருக்கும் அது வீதி.தலைவர் அதனையும் எவ்வளவு நுணுக்கமாக கவனித்து இருக்கிறார் என்று அதிசயமாக இருந்தது.

அமைப்பு, அதன் கட்டுபாடுகள், நடைமுறை என்பனவற்றில் கண்டிப்பானவராக இருக்கும் அதே மனிதனது இன்னொரு பக்கம் ஈரம் நிறைந்தது. கிட்டு ஒருமுறை பேட்டியில் சொன்னதுபோல ‘ இளகிய மனம் படைத்தவர்களே மற்றவர்களுக்கு நடக்கும் கொடுமைகள், அநீதிகளை கண்டு பொறுக்க முடியாமல் போராட வருகிறார்கள்.

போராளிகள் இளகிய மனம் கொண்டவர்கள்’ என்று சொன்னது போல தலைவரின் இன்னொரு பக்கம் முழுக்க முழுக்க பாசமும், அன்பும், அரவணைப்பும், நேசிப்பும் நிறைந்தவை.

ஆரம்பநாட்களில் காடுகளில் யாருக்கும் மலேரியா,அல்லது வேறு காய்ச்சல் வந்துவிட்டால் தலைவரே அருகில் இருந்து கவனிக்கும் காட்சிகள் இன்னும் மனதுள் நிற்கிறது.

‘மகனுக்கு என்ன செய்யுது’ மகன் இதை குடி’ ‘இந்த போர்வையை போர்த்து ‘ என்று இருக்கின்ற அற்ப வசதிகளுள் நல்லதை தரும் அந்த மனிதன் எல்லோரையும்விட மிகச்சிறந்த தந்தை போன்றவர். வீடுகளை துறந்து தன்னிடம் வரும் இவர்களுக்கு தானே ஒரு தாயாக தந்தையாக நிற்கவேணும் என்பதே அவரது நடைமுறை.

வெறுமனே ஆயுதங்களை இயக்குவதற்கு மட்டும் சொல்லித் தந்தவர் அல்ல அவர்.மிகச்சிறந்த இலக்கியங்களை படிக்க கொண்டுவந்து தந்தவர்.லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போன்ற உலக இலக்கியங்கள் முதற்கொண்டு மைக்கல்கோலின்ஸ் போன்ற விடுதலை வரலாறுகள் வரைக்கும் படிக்க சொல்லி பிறகு அதில் கேள்வியும் கேட்பார்.

தான் தவறவிட்ட ஆங்கிலமொழிக்கல்வியை கற்கவேணும் என்பதற்காக உடுப்பிட்டி அரியம் மாஸ்ரரிடம் கிட்டுவையும் எம்மையும் ரியூசனுக்கு அனுப்பியவர் அவர்.

இவை எல்லாவற்றினும் இன்னுமொரு அவரது ஆளுமை மீண்டும் மீண்டும் சொல்லத்தக்கது.எல்லாவற்றிலும் முக்கியமானது அவர் முடிவெடுப்பது என்பது ஒரு தனிமனித முடிவாக ஒருபோதும் இருந்தது இல்லை..எல்லோருடனும் கூடி கதைத்தே முடிவுகளை எடுக்கும் பண்பு நிறைந்தவர்.

.உதாரணத்துக்கு ஒரு சம்பவம்,83ம் ஆண்டு மேமாதம் யாழ். குடாவின் மூன்று நகரசபைகளுக்கும், யாழ். மாநகரசபைக்கும் தேர்தல் நடாத்தப் போவதாக சிங்கள தேசம் அறிவித்ததும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்துகள் அப்போதிருந்த போராளிகளிடம் கதைத்தே எடுக்கப்பட்டது என்பது பலருக்கும் வெளித்தெரியாத உண்மை.

அந்த தேர்தலை நிராகரிக்கும்படி,வாக்களிப்பை புறக்கணிக்கும்படி மக்களை கோருவது என்று மக்களிடம் கோரவேண்டும் என்ற தலைவரின் கருத்து பலமணி நேரம் பல உறுப்பினர்களால் விவாதத்துக்கும் உட்படுத்தப்பட்டது.

நாமோ 28பேர். முப்படைகளினதும் பொலீஸ்படையினதும் உதவியுடன் தேர்தலை நடாத்த சிங்களம் தேசம் முற்பட்டால் எவ்வாறு நாம் வெல்லமுடியும் என்ற அவநம்பிக்கை குரல்கள் எழுந்தன.

மக்கள் எமது கோரிக்கையை நிராகரித்து தேர்தலில் வாக்களித்தால் சிங்களதேசம் அதனை வைத்து போராளிகளை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பிரச்சாரம் செய்யும்.அது அமைப்பை அழிவுக்கு கொண்டு சென்று விடும் என்று சில உறுப்பினர்கள் தயக்கத்துடன் கதைத்தனர்.

நாம் பலமான பின்னர் இத்தகைய முயற்சிகளை செய்யலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

தலைவர் மிக ஆறுதலாக மிகமிக தெளிவாக விளக்கம் கொடுத்தார்.மறுநாள்கூட நீண்டது அந்த விவாதம். அப்போது தலைவர் சொன்ன ஒருவிடயம் ‘ அவன் எல்லா படையையும் வைத்திருக்கிறான் என்று பயந்து கொண்டிருந்தால் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும்.

நாம் எமது மக்களை நம்பி இறங்குவோம். இருக்கின்ற எல்லா போராளிகளும் இருபத்துநான்கு மணிநேரமும் இதனை மட்டுமே இலக்காக வைத்து வேலை செய்தால் இது முடியும் ‘ என்றார்.

இறுதியில் எல்லோரது சம்மதத்துடன் தலைவரது கருத்தே ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் நிராகரிப்புக்கு மக்களை கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.சிங்களஅரச இயந்திரத்துக்கான அனைத்து தேர்தல்களையும் நிராகரிப்போம் என்ற தலைப்புடன் மறுநாளே துண்டுப்பிரசுரம் எம்மால் வெளியிடப்பட்டது.

தொடர்ச்சியான வேலைகளை தலைவரே முன்னின்று செய்தார். செய்வித்தார்.

83மே 18ம்திகதி தேர்தல் முடிவு வந்தபோது 94 வீதமான மக்கள் எம் கோரிக்கையை ஏற்று தேர்தலை நிராகரித்திருந்தனர். நாம் எல்லோரும் வெற்றி குதூகலிப்பில் இருந்த போது தலைவர் அடுத்த கட்டத்துக்கான வேலையில் இருந்தார்.

இன்றும் தலைவர் சொன்ன அதே வசனம்தான் இந்த இனத்துக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது.

‘இலக்கை நிர்ணயித்து அர்ப்பண உணர்வோடு வேலை செய்தால் எந்த படைபலத்தையும் வெல்லலாம்’ அறுபது அகவை காணும் அந்த அதிமானுடன் எமக்கு நேற்றும் இன்றும் இனி என்றும் வழிகாட்டியாக முன் செல்வார்.

அதுவே இந்த இனத்தின் விடுதலைக்கான பாதை. அவரே இந்த இனத்தின் பேரொளி

**

மாபெரும் தமிழ் வீரனுக்கு இன்று அகவை அறுபது..

அவனுக்கு முன்னும் அவனுக்கு பின்னும் அவன் போல் ஒருவன் இல்லை..

தமிழினத்தின் மாபெரும் வீரனான தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் அறுபதாவது அகவை இன்று..

வைரவிழா காணும் தலைவர் வாழ்க என்ற மகிழ்வுடன் உலகம் முழுவதும் அவருடைய பிறந்த நாள் விழா எழுச்சியுடன் நடைபெறுகிறது.

எப்படி தமிழர்களின் வீர வரலாற்றில் ராஜராஜ சோழன், அவனுக்குப் பின்னர் இராஜேந்திர சோழன் ஆகிய இருவரும் உயர் பெரும் போர்க்கலையாளர் என்று போற்றப்படுகிறார்களோ… அவர்கள் வரிசையில் போற்றப்படும் உன்னத வீரன் பிரபாகரன்.

உலகத்தின் மிகச்சிறந்த கெரில்லாப் போர் வீரன் என்று பீ.பீ.சி செய்திச் சேவையே பிரபாகரனை தேர்வு செய்து புகழ்ந்தது ஒரு காலம்.

அதையெல்லாம் தாண்டி மரபு ரீதியான படை அமைத்து, போலீஸ் படை அமைத்து, நீதி மன்றுகளை அமைத்து, சமுதாய நிறுவனங்களை உருவாக்கி, வங்கித் தொழிற்பாடுகளை ஏற்படுத்தி, கலைகளை வளர்த்து, கடற்படை அமைத்து, வான்படை அமைக்கும் வரை முன்னேறிய உலகத்தின் ஒரேயொரு வீரன் பிரபாகரன்.

நீர்மூழ்கிக் கப்பலும், வான்படையும் கண்ட ஒரேயொரு தமிழ் வீரன்..

நெப்போலியனோ, அலக்சாண்டரோ, ராஜராஜ சோழனோ எட்டித் தொட்டிருக்காத முகடுகளை எல்லாம் தனது படைப்பிரிவால் எட்டித் தொட்ட ஒரேயொரு போர்த் தலைவன் பிரபாகரன்.

முப்பது ஆண்டு காலம் உலகத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிய மாபெரும் போர்க்காவிய நாயகன்.

அவரைப்போல ஒரு வீரன் ஈழத் தமிழினத்தில் பிறந்தது அந்த இனம் செய்த மாபெரும் பெருமையாகும்.

கன்னடர்களிடம் அடி வாங்கி காயங்களுடன் வந்த தமிழக மக்களும் இந்திய நடுவண் அரசு இருக்கிறதென்றோ, தமிழகத்தில் ஓர் அரசு இருக்கிறது என்றோ பேசவில்லை பிரபாகரன் வருவான் கன்னட வெறியரை உதைக்க என்று பேசியதே வரலாறு.

தமிழ் வீரத்தின் சின்னமாக, தமிழர் மானத்தின் கவசமாக, தமிழர் வாழ்வின் தலை நிமிர்வாக இன்றும் இலங்கும் ஒரேயொரு அடையாளம் தேசியத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களே.

சரியான திட்டமிடுகையும், அதற்கான இடையறாத உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தாலே போதும் இலக்கை எட்டித் தொட்டுவிடலாம் என்று கூறி சின்னஞ்சிறு இனத்தை பென்னம் பெரும் சாதனை படைக்கச் செய்த செயல் வீரன்.

இன்று உலகத்தில் உள்ள போராட்டக்காரரை எல்லாம் நிதி வழங்கி நெறிப்படுத்திக் கொண்டிருப்பது ஐ.நாவில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளே.

இன்றும் உலகப் பயங்கரவாதிகளுக்கு பைனான்ஸ் செய்வது ஐ.நாவில் அங்கத்துவம் பெற்ற நாடுகள்தான், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கான நிதி மத்திய கிழக்கில் இருந்தே போகிறதாக கூறுகிறார்கள்.

ஆனால் உலகத்தில் எந்த நாட்டின் சிந்தனையையும் ஏற்றுக் கொள்ளாது, எந்தவொரு உலக சித்தாந்தங்களையும் தமது சித்தாந்தமாக வரித்துக் கொள்ளாது, நமது நிலத்தோடு கூடிய தமிழ் சித்தாந்தமே என் சித்தாத்தம் என்று உறுதிபட நின்று அதில் கடுகளவும் மாற்றம் செய்யாது போராடியவர் பிரபாகரன்.

உன்னதங்களை இழக்காது போராடிய உன்னதங்களின் உச்சம் பிரபாகரன்.

நோர்வே நாட்டு தூதுவர் எரிக் சோல்கெய்ம் விடுதலைப் புலிகள் சிறந்த போராளிகள் ஆனால் அவர்களுக்கு உலக அரசியல் போதாது என்றார்.

உலக அரசியலின் அவலங்களை தெரிந்த எவனும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான், இவ்வளவு பெரிய மாவீர தியாகங்களை சுமந்த இனம் களங்கம் நிறைந்த உலக அரசியலுக்கு வளைந்து போகாது என்ற பிரபாகரனின் மௌனமான பதிலை இன்றுவரை அவரால் விளங்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

உலகத்தால் விளங்க முடியாத உன்னதம் நிறைந்த ஆளுமையின் வடிவமே பிரபாகரன்.

தமிழன் பயங்கரவாதி அல்ல..

தமிழன் உலகத்தின் உயர் நாகரிகமுள்ள இனம்…

அவன் மரணத்திற்கு பயந்து மண்டியிடும் கோழை அல்ல..

அவன் சுயநலவாதியும் அல்ல..

அவன் அறிந்த அரசியலின் அரிச்சுவட்டையும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பதை துணிச்சலுடன் ஐ.நாவில் அங்கம் பெற்று பாதுகாப்பு அடைந்துள்ள உலக சமுதாயத்திற்கு நாடில்லாத ஓர் இனத்தின் சார்பில் உணர்த்திய ஒரே ஒரு வீரன் பிரபாகரன்.

அவனுக்கு இணையான ஒருவன் அவனுக்கு முன்னும் இந்த உலகில் இல்லை அவனுக்கும் பின்னும் இந்த உலகில் இல்லை..

தம்பி பிரபாகரன் தமிழினத்தில் பிறந்தமைக்காக பெருமைப்பட்டு தமிழ்த்தாய் தன் புதல்வனுக்கு அறுபதாவது பிறந்த நாளை இன்று அக மகிழ்ந்து கொண்டாடுகிறாள்.

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்..
வைரவிழா காணும் எங்கள் வீரனுக்கு இன்று பிறந்தநாள்..
வெண்ணிலா வாழும்வரை நீ வாழ வேண்டும் என்று
எண்ணிலா ஆசை கொண்டு ஏற்றுவோம் சுடர்கள் இன்று..
பிறந்த நாள் தலைவர் பிறந்த நாள்…

http://www.ibctamil.co.uk/radio/tamil-leader-birthday-60/69/play.aspx

அலைகள் தலைவர் பிறந்த நாள் ஆக்கம்.. 26.11.2014

அகவை 60 காணும் தலைவா! நீ பிறந்தமண்ணில் பிறந்ததே பெருமை எமக்கு

Posted on Updated on

உலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துள்ளுள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்று மனிதமந்தைகளாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உள்ளது. ஆனால் அப்படி வாழ்ந்த மக்களின் இன்றய வாழ்க்கை எப்படி இருக்கின்றது அவர்கள் இப்போது எப்படி வாழ்கின்றார்கள் என்று பார்த்தால் உலகத்தில் நாகரிகம் மிக்கவர்களாகவும் அறிவாளிகளாகவும் எத்தனையோ சட்டதிட்டங்களை உருவாக்கியவர்களாகவும் எங்கும் சுதந்திரமாக நடமாடக்கூடிய வல்லமை மிக்கவர்களாகவும் மாறியுள்ளமை தெளிவாகும் .எப்படி இந்த மாற்றம் ? மந்தைக்கூட்டங்களாக வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்கள் எவ்வாறு இப்படி ஒரு நல்ல நிலையினை அடைந்தார்கள் அந்த மாற்றத்தினை செய்தது யார் ? என்ற வினா எழும்போது அதற்கு ஒரே பதில் அவர்களுக்கு கிடைத்த தலைமை என்பதேயாகும் நல்ல மனிதர்களின் பிறப்பினால்தான் ஒரு சமூகமே விழித்துக்கொள்கின்றது விடுதலையடைகின்றது.

இதேபோலத்தான் ஈழமண்ணிலே அழியப்போகும் தனது இனத்தினை காப்பாற்ற தமிழினத்தின் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் போராட 1954ஆம் ஆண்டு கார்திகை மாதம் வீரத்தமிழ்மகன் உலகத்திமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் அதிமேதகு வே.பிரபாகரன் அவர்கள் வல்வெட்டித்துறையிலே பிறந்தார் பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பக்கத்துவீட்டு நிலவரம்கூடதெரியாத சிறுபிள்ளைகளாக அனேகமான பிள்ளைகள் வாழ்ந்துகொண்டிருக்கும்போது தன் இனம் படும் வேதனைகளையும் சிங்களப்பேரினவாத அரசினால் தன் இனம் அடக்கியாளப்படுகின்றது என்பதனையும் புரிந்துகொள்வதற்குக்கூட பக்குவமில்லாத அந்த பதினைந்து வயதிலேயே. பேராடவேண்டும் தன் இனத்தினை சிங்களப்பேரினவாதிகளிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உருவாகியது ?அரசகுடும்பத்தில் அல்லாது சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது பதினைந்து வயதிலேயே தன் இனத்திற்காக ஒருவன் போராடப்புறப்பட்டான் என்பதும் தானாகவே ஒரு விடுதலை அமைப்பினை உருவாக்கினான் என்பது உலகத்தில் வரையப்படாத வரலாறு. அதிசயிக்கத்தக்க விடயம் ஆதாலால்த்தான் உலகத்தமிழினத்தின் ஒப்பற்றதலைவனாக பிரபாகரனை தமிழினம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை பதினைந்து வயதிலே தாய் தந்தையின் அரவணைப்பிலே உறங்கவேண்டிய அந்தச்சின்னஞ்சிறு பிள்ளை தலைமறைவுப்போராளியாக மாறியது தன் இனத்திற்காக அதற்காக எத்தனையோ பழிகளையும் பயங்கரவாதி என்ற பட்டத்தினையும் இன்றுவரைக்கும் சுமந்துகொண்டிருக்கின்றான்

அந்த உத்தமபுத்திரன் பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.

சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அரசினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார். தாமும் தமது குடும்பமும் வாழ்ந்தால்போதும் என்று
சுயநலவாதப்பேய்கள் வாழும் இந்த உலகத்தில் தன் இனம் வாழவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை ஆனால் அப்படிப்பட்ட உயர்ந்த எண்ணமும் எல்லோரும் வாழவேண்டும் என்ற சிந்தனையும் எங்கள் தேசியத்தலைவனது எண்ணத்தில் தேன்றிய காரணத்தினால் 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். மிண்டும் வைகாசி 5, 1976 இல் புதிய தமிழ்ப்புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

“‘நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.'”இது அந்த உத்தமமான தலைவனின் கூற்று இதையே அவர் செயலிலும் காட்டினார்.கூட்டம் கூட்டியவன் வெறும் கூச்சல்போட்டவன் எல்லாம் தலைவனாகமுடியாது. ஏழு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற இயக்கம் இன்று உலகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் பரவியுள்ளது எப்படி? அடிவாங்கி அடிவாங்கி அழுதுகொண்டிருந்த தமிழினம் திருப்பி அடிக்கும் வல்லமையினைப்பெற்றது எப்படி? அதில்தான் இருக்கின்றது அந்தத்தலைவனின் தலைமைத்துவம் உன்மையான அற்பணிப்பு நுன்னறிவு வீரம் விவேகம் இன்னும் எத்தனையோ காரணங்கள் கூறிக்கொண்டேபோகலாம் எங்களில் அனேகமானவர்கள் எப்போதும் மற்றவரை குறைகூறிக்கொள்வதிலே காலத்தை கடத்துகின்றோம் ஆனால் எங்கள் தாலைவனோ “ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில்
இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்.” என்று கூறி மானிடசமூகத்திற்கே வெற்றிக்காண பல வழிகளைக்காட்டியுள்ளார்.

நானே உலகத்தில் உத்தமன் நானே உலகத்தில் உன்னதமானன் என்று பலர் தலையில் அடித்து சத்தியம் செய்யும் அதே நேரம் எங்கள் ஒப்பற்றதலைவன் இவ்வாறு கூறுகின்றான் “உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் உயர்ந்தவர்கள் நானும் உண்மையானவனல்லன்.” என்று தன்னையும் தாழ்த்திக்கொள்வார். இப்படிப்பட்ட மனிதர்கள் உலகத்தில் பிறப்பதினால்தான் என்னவோ இன்னமும் நீதியும் நியாயமும் உயிர்வாழ்கினறது இறந்தவனை புதைத்துவிட்டு அந்த இடத்தையே மறந்துவிடும் மனிதர்களுக்கு மத்தியிலே “வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.” “எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்.” என்று விடுதைலைக்காகவீழ்ந்துபோன வீரர்களை பூசைக்குரிய புனிதர்களாகவும் அராதனைக்குரிய தெய்வங்களாகவும் மதித்தார் அதனால்தான் இத்தனை வீரர்களும் ஒருவர்பின் ஒருவராக களத்திலே குதித்தார்கள்.

கால்மிதிக்கும் கற்களாகவும் கரும் பாறைகளாகவும் இருந்த தமிழர்களை சிற்பங்களாக செதுக்கிய தலைசிறந்த சிற்பி எங்கள் தலைவன் அச்சம் என்ற சொல்லே அச்சப்படும் அவனைக்கண்டால் வீரத்தின் மறுவடிவமாக எங்கள் மண்ணிலே அவன் தலைநிமிர்ந்து நின்றபோது அவன் பின்னாலே ஆயிரம் ஆயிரம் போராளிகள் அணிவகுத்துக்கொண்டார்கள் போராளிகளுக்கு அறிவைப்புகட்டும் சிறந்த ஆசானாகவும் பாசத்தினைக்காட்டும் நல்ல நண்பனாகவும் களத்திலே தோளோடு தோள் கொடுத்துநின்றான் தமிழர்கள் என்றால் நாய்கள் என்று நகைபேசிய சிங்களப்பேரினவாதிகள் தமிழர்கள் என்றால் புலிகள் என்று கிலிகொள்ளும் அளவிற்கு ஒவ்வொரு தமிழனையும் தமிழிச்சியையும் வளத்தெடுத்தான் காற்றுக்கூட நுளையமுடியாது என்ற இரும்புக்கோட்டைகளுக்குள் எல்லாம் புலிகளால் நுளைந்துவிடமுடியும் என்று மெய்ப்பித்துக்காட்டினான்.

ஒன்றா இரண்டா எத்தனையோ வீரதீரச்செயல்களையெல்லாம் நடுக்காடுகளுக்குள் இருந்தபடியே செய்துகாட்டியவீரத்தமிழன் பிரபாகரன் உலகநாடுகளால் அங்கீகரிக்கப்படத ஒரு சுதந்திரதமிழீழதேசத்தின் தலைவனாகவும் தளபதியாகவும் தமிழினத்தின் விடியலுக்காய் பொறுப்பேற்று போராடினான்.

எத்தனை படையணிகள் எத்தனை உற்கட்டமைப்புக்கள் வியக்கத்தக்க விடயங்களையெல்லாம் எப்படி எங்கள் தலைவனால் மட்டும் சாதரணமாக செய்ய முடிந்தது தன் நாட்டின் மக்களின் நலனுக்காக எத்தனையோ நல்ல சட்டதிட்டங்களை உருவாக்கினான் நீதி நெறிதவறாது தமிழீழ அரசின் மன்னனாக அவன் அரசாண்ட காலத்தில் அந்த மாவீரனின் ஆட்சியிலே வாழ்ந்தோம் என்பதும் அவன் பிறந்த மன்ணிலே நாம் பிறந்தோம் என்பதும் எமக்கு பெருமையும் எம்மையும் அறியாமல் செருக்கினையும் கொடுக்கின்றது.

எத்தனையோ நாடுகள் தடைசெய்தும் பயங்கரவாதி என்று முத்திரை குற்றியும் அதையெல்லாம் பொருட்படுத்தாது யாருக்கும் தலைகுனியாது புலிகள் என்றால் அய்யோ அம்மே என்று சிங்களம் இன்றுவரைக்கும் அலறும்படி தமிழீழவிடுதலைப்புலிகளை வளத்தெடுத்தான்

கடற்புலிகள்-வான்புலிகள்-லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி-மாலதி படையணி (பெண்புலிகள்)-சோதியா படையணி (பெண்புலிகள்) -அன்பரசி படையணி சிறுத்தைகள்-கரும்புலிகள்-கடற்கரும்புலிகள்-கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி-லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி-லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி-ஜெயந்தன் படையணி-இம்ரான் பாண்டியன் படையணி-இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி-எல்லைப் படை-துணைப்படை என சிங்களப்பேரினவாதத்தின் முதுகெலும்பினை முறிக்கவும் தமிழர்கள் தலைநிமிர்ந்து துணிச்சலுடன் நடமாடவும் இத்தனை படையணிகளையும் உருவாக்கினார்.

தமிழ்மக்களின் நலனுக்காகவும் தமிழினத்தின் நலனுக்காகவும் ஆட்சி அதிகாரங்கள் யாவும் மக்களை பாதித்துவிடக்கூடாது என்பதிற்காகவும் அவரால் எத்தனையோ உற்கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன (வழங்கற் பிரிவு-மருத்துவப் பிரிவு-கொள்முதல் பிரிவு-பரப்புரைப் பிரிவு-தமிழீழப் பொறியியற்றுறை-வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவு-கணிணி தொழில்நுட்பப் பிரிவு இலத்திரனியல் தொழில்நுட்பப் பிரிவு-போர்கருவித் தொழிற்சாலை-தமிழீழ இராணுவ விஞ்ஞானக் கல்லூரி-விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி திரைப்பட, புத்தக மொழிபெயர்ப்புத் துறை-புலனாய்வுத் துறை-தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை – -தமிழீழ விளையாட்டுத் துறை -தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் கழகம்-தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம்-தமிழீழ நீதித்துறை-தமிழீழ நிர்வாக துறை-தமிழீழ நிதித் துறை – தமிழீழ வைப்பகம் (வங்கி) – தமிழீழக் காவல்துறை-விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு – சூழல் நல்லாட்சி ஆணையம்-தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு-தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் -பொருண்மிய மதியுரையகம் -தமிழீழக் காலநிலை அவதானிப்பு நிலையம்-தமிழீழக் காட்டுமானப் பொறியியற் செயலகம் -வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் – ஓளிக்கலைப்பிரிவு (நிதர்சனம், ஒளி வீச்சு) – /விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு -புலிகளின் குரல் (வானொலி) – விடு தலைப்புலிகள் பத்திரிகை -எரிமலை சஞ்சிகை – தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி – என இவை யாவும் மக்களின் நலனுக்காகவே தவிர எந்தவிதத்திலும் அது தமிழ்மக்களைப்பாதிப்பதில்லை.

இப்படி தமிழினத்தின் விடியலுக்காகவும் விடுதலைக்காகவும் போராடி தமிழினத்தின் அடையாளத்தினை உலகிற்கு காட்டிய ஒரு மாபெரும்தலைவன் இந்த காத்திகைமாதத்தில் பிறந்தான் என்பதால் அது கார்த்திகை மாதத்திற்கே பெருமை ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த பிரபாகரன் என்ற தலைவனைப்போல் தம்மை தலைவன் என்று சொல்லும் எல்லோருமே இருப்பதில்லை .ஆட்சியும் அதிகாராமும் கைகளில் இருக்கும்வரை கிடைத்ததை எல்லாம் சுறுட்டிவிடவேண்டும். என்ற எண்ணத்தில்தான் அதிகமாணவர்கள் தலைவர்களாக ஆசைப்படுகின்றனர் உதரணமாக எமது அண்மையிலே இருக்கும் தமிழகத்தினை எடுத்துக்கொண்டால் தம்மை தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் அதிகமானவர்கள் இருந்தபோதும் உனமையான தலைவர்களாக மக்களின் நலம்காக்கும் எண்ணத்துடன் இதுவரை
எந்தத்தலைவர்களும் செயற்படவில்லை மக்களைத்தெளிவுபடுத்தவேண்டிய தலைவர்களாலேயே அங்கே மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் அரசியல் சினிமா என்ற இரண்டு கொடிய நோய்களால் அங்கே மக்கள் பீடிக்கப்பட்டு முன்னேறமுடியாதவர்களாக இன்றுவரைக்கும் வாழ்கின்றனர்.

ஈழத்தீவில் வல்வெட்டித்துறையிலே பிறந்த பிரபாகரன் இந்தியா மலேசியா சிங்கப்பூர் தென்னாபிரிக்கா அமெரிக்கா ஐரோப்பியா என்று உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களிலே நீங்காத இடத்தினைப்பிடித்து உலகத்தமிழர்களின் ஒரே தலைவனாக முடிந்தது அங்கேதான் அந்தத்தலைவனின் வீரதீரமும் தியாகமும் உயர்ந்தபண்புகளும் உள்ளன தமது தலைவன் தமக்கான விடுதலையினை பொற்றுக்கிடுக்காது மரணித்துப்போகமாட்டான் என்ற நம்பிக்கையினை ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களிலே ஆழமாக பதியச்செய்தது அந்த தலைவனின் தனித்துவத்தினை வெளிச்சமிட்டுக்காட்டும்.

எங்கோ ஒரு தேசத்தில் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருகின்றான் என்ற நம்பிக்கையுடன் இன்றுவரை காத்திருக்கின்றது தமிழினம் ஆனால் இதற்கான பதிலை காலாம்தான் பெற்றுத்தரவேண்டும் நீதியும் நியாயமும் நிலைத்திருப்பது உன்மையாக இருந்தால் நம்பிக்கையுடன் காத்திருக்கும் தமிழர்கள் ஏமார்ந்துபோகாமாட்டார்கள் எங்கள் மண்ணைச்சூழ்ந்துகொண்ட சிங்களப்பனி விலக ஈழமண்ணின் கதிரவன் காரிருளினைக்கிழித்து உதயமாகுவான் விரைவிலே …

-ஆதி-

60-வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு வாழ்த்துக்கூறும் -காணொளிகள்

Posted on Updated on

iPhone Wallpaper

தேசியத் தலைவரின் பிறந்த நாளில் அவரின் கனவை நனவாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றுபடவேண்டும் – தேனிசைச் செல்லப்பா

தமிழர்களையே உலகறியச் செய்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் – கோவை.ராமகிருஷ்ணன்

கவிஞர் சிநேகன்: தலைவரின் பிறந்தநாளில் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் உரக்கப்பேசுவோம்! புதிய இலக்கினை அடைய உறுதி எடுப்போம்!

முனைவர் ம.நடராசன்: வீரமிக்க தலைவனின் பிறந்தாளில் அனைவரும் புதிய நம்பிக்கையுடனும், கொள்கையுடனும் செயற்படவேண்டும்.

ஐயா பழ.நெடுமாறன்: மே கலங்காத தேசியத் தலைவரின் கண்கள் முதல் மாவீரன் சங்கர் மடியில் உயிர்விட்டபோது கலங்கினதைப் பார்த்தேன்

திருமுருகன் காந்தி: தேசியத் தலைவரின் பிறந்த நாள் என்பது எங்களது வரலாற்றுக் கடமைகளை உணர்த்துகின்ற நாளாக இருக்க வேண்டும்

பெ.மணியரசன்: அற்பசலுகைகளைக் காட்டி இலட்சிய வீரர்களை மடக்கும் ஆதிக்க சக்திகளின் தந்திரங்களை அறிந்தவர் தேசியத் தலைவர்

பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர்: பிரபாகரன் ஓர் இனத்தின் உயிர்ப்பு இவனே இதயம்

பின்னணிப் பாடகர் முகேஷ்: தேசியத் தலைவரின் 60-ஆவது பிறந்தநாளுக்கான பாடலைப் பாடுவதில் நான் பெருமைப்படுகின்றேன்

சிவப்பிரியன் செம்பியன்: “தலைவன் வருவான்” சிறப்புக் கவிதையுடன் வாழ்த்துக்கள்

ஓவியர் வீரசந்தானம்: தமிழர்களை மீட்பதற்காக ஓர் அவதாரப் புருசராகத் தம்பி தோன்றினார் என்பது வரலாறு

பாடகர் குப்புசாமி: வீரத்திருமகன் தலைவன் பிரபாகரன் வாழும் திசைக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இயக்குநர் ரி.ராஜேந்தர்: புறநானூறுப் பரப்பரையின் புதிய அத்தியாயத்தின் மாவீரர் யார் என்றால் அது பிரபாகரன் என்ற தமிழனே!

***

தேசியத் தலைவர் :வரலாறு பிரசவித்த புதுமை

Posted on Updated on

உலகில் உள்ள ஒவ்வொரு இனங்களும் வரலாற்றின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொற்காலத்தைத் தரிசித்தவைதான். தமக்கான அரசு இன்றி உலகெங்கும் இன்று அலைந்து உழலும் இனங்களாக இருந்தாலும்சரி, தமக்கான அரசைக் கொண்டுள்ள இனங்களாக இருந்தாலும்சரி இவையெல்லாம் ஏதோவொரு காலகட்டத்தில் தமது பிராந்தியத்திலோ அல்லது உலக அளவிலோ பேரரசுகளாகத் திகழ்ந்தவையே. இவ்வாறான நிலையை இவ் இனங்கள் எய்தியமை என்பது தற்செயலாக நிகழ்ந்தவையன்று. இந்நிகழ்வுகளிற்கு ஆதர்சமாக இவ் இனங்களிலிருந்து தோற்றம் பெற்ற புகழ்பூத்த தலைவர்களே காரணமாக இருந்துள்ளார்கள்.

தமிழர்களின் வரலாறும் இவ்வாறான ஒன்றுதான். வீரம் என்பது பண்டைத் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்தது. பண்டைத் தமிழர்களின் வீரத்திற்கு சான்றாகத் திகழ்வது புறநானூறு. அதில் மிளிரும் வீரம்செறிந்த தமிழ் மன்னர்களில் முதன்மையானவன் கரிகாற்பெருவளவன் என்ற சோழப் பேரரசன். தமிழகத்தையும், ஈழத்தீவு முழுவதையும் ஆட்சி செய்த இம்மன்னன், இமயத்திலும் புலிக்கொடி நாட்டிய பெருமைக்குரியவன். இற்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்கூறும் நல்லுலகை ஆட்சி செய்த இம்மன்னனின் காலம் பண்டைத் தமிழர் வரலாற்றில் பொற்காலமாகக் கணிக்கப்படுகின்றது.

கரிகாற்பெருவளனுக்குப் பின்னர் தமிழர்களின் வரலாற்றில் பொற்காலத் தரிசனத்தைக் கொண்டு வந்தவர்கள் இருவர். ஒருவர் இராசராச சோழன். மற்றையவர் அவரது புதல்வனான இராசேந்திர சோழன். இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்கூறும் நல்லுலகை ஆட்சி செய்த இவர்கள் வரலாற்றின் பொன்னேடுகளில் பதியப்பட்டுள்ளனர்.

இதில் குறிப்பாக இராசேந்திர சோழனின் ஆட்சி என்பது முழுத் தமிழகத்தையும், ஈழத்தீவையும் மட்டும் உள்ளடக்கவில்லை. கடல்கடந்து தென்மேற்கே மாலைதீவு, லக்~தீவு ஆகியவற்றையும், தென்கிழக்கே அந்தமான்-நிக்கோபார் தீவுகளையும், வடகிழக்கே கலிங்கம், வங்கதேசம் (பங்களாதே~;), இன்றைய பீகார் மாநிலம், பர்மாவின் கடலோரப் பகுதி, சுமேத்திரா, ஜாவா, மலாயக் குடாப் பகுதி ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது. அத்தோடு இம்மன்னனிற்கு திறைசெலுத்தும் நாடுகளாக தாய்லாந்து, கம்போடியா ஆகிய தேசங்களும் திகழ்ந்தன.

இவ்வாறு தமிழர்களின் வரலாற்றில் பொற்காலத் தரிசனத்தைக் கொண்டு வந்த பெருமை இம்மூன்று மன்னர்களுக்கு இருந்தாலும், இவர்களின் காலத்தில் அடக்குமுறைத் தளைகளிலிருந்து தமிழர்கள் விடுபட்டதாக நாம் கூற முடியாது. இவர்களின் காலத்தில் பெண்ணடக்குமுறையும், சாதிய அடக்குமுறையும் தாரளமாகவே தலைவிரித்தாடின. தொலைதூர அந்நிய தேசங்கள் மீது படையெடுத்துத் தமிழர்களின் படைவலிமையையும், வீரத்தையும் வரலாற்றின் பொன்னேடுகளில் இவர்கள் பதிவு செய்தாலும்கூட, தமிழ்ப் பெண்ணினமும், தமிழ்ச் சமூகத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த உழைக்கும் மக்களும் இவர்களின் சாதனைகளால் பயன்பெற்றார்கள் என்று நாம் கூற முடியாது.

ஆனாலும் வரலாறு என்பது எப்பொழுதும் தவறுகளை மட்டும் செய்து கொண்டிருப்பதில்லை. தனது தவறுகளை சீர்செய்யும் வகையில் புதுமைகளைப் பிரசவிக்கும் ஆற்றலும் வரலாற்றிற்கு உண்டு. அவ்வாறு வரலாறு பிரசவித்த புதுமையான தமிழ்மகன்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். பண்டைக் காலத்திலும், இடைக்காலத்திலும் பொற்கால தரிசனத்தைத் தமிழர்கள் எதிர்கொண்ட பொழுது நிகழ்ந்த வரலாற்றுத் தவறுகளை சீர்செய்யும் ஒருவராகத் தமிழ்கூறும் நல்லுலகில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிரவேசித்தார்.

புறநானூற்றையும், ஏனைய சங்க கால இலக்கியங்களையும், இடைக்காலச் சோழ மன்னர்களின் வரலாற்றையும் படித்துத் தமது மூதாதையர்களின் வீரத்தை மெச்சிப் பெருமூச்செறிவதைத் தவிர வேறெதனையும் செய்ய முடியாது கூனிக்குறுகி நின்ற தமிழர்களுக்கு வீரத்தின் நவகால வடிவத்;தைத் தமிழீழத் தேசியத் தலைவர் காண்பித்தார். தலைமறைவு கெரில்லா இயக்கமாகத் தமிழ்த் தேசிய ஆயுத எதிர்ப்பியத்தைத் தோற்றுவித்த தலைவர் அவர்கள், தொடர்ந்து அவ் எதிர்ப்பியக்கத்தை நவீன மரபுவழிப் படையமைப்பாகக் கட்டியெழுப்பினார்.

ஆனால் வீரத்தின் நவகால வடிவத்தைத் தமிழினத்திற்குக் காண்பிப்பதோடு மட்டும் தலைவர் அவர்கள் நின்றிருந்தால் கரிகாற்பெருவளவன், இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் வரிசையில் பொற்கால தரிசனத்தைத் தமிழர்களுக்கு அளித்த ஒருவராக மட்டும் அவரை வரலாறு பதிவு செய்திருக்கும். மாறாகத் தமிழ்த் தேசிய ஆன்மாவை ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களிலும் தட்டியெழுப்பி, சமூகக் களத்தில் பெண்ணடிமைத்தனத்திற்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போர்தொடுத்து, நீதியான முறையில் இயங்கக்கூடிய தமிழீழ நடைமுறை அரசை நிர்வகித்தவர் என்ற வகையில் அவரைத் தமிழினத்தின் பெருந்தலைவராகவே நவகால வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் தலைமையில் தமிழரசுக் கட்சி இயங்கிய காலப்பகுதியாகிய 1961ஆம் ஆண்டு சிங்கள-பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக வெடித்தெழுந்த அறவழிக் கிளர்ச்சி ஈழத்தீவின் வரலாற்றில் தமிழ்த் தேசிய இனம் சந்தித்த முதலாவது எழுச்சியாக அமைந்தது என்பதும், அதனைத் தொடர்ந்து தமிழீழத் தனியரசுக்கு மக்களாணை வேண்டி 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அதனைத் தொடர்ந்து மறுஆண்டு தேர்தல் களத்தில் அவ்வாணைக்குத் தமிழ் மக்கள் அங்கீகாரம் அளித்ததும் தமிழீழ தேசம் எழுச்சி கொண்ட முக்கிய காலகட்டங்கள் என்பதும் உண்மையே.

ஆனால் இக்காலகட்டங்களில் ஏற்பட்ட எழுச்சியை விடத் தமிழீழத் தேசியத் தலைவரின் முழுமையான நேரடி வழிநடத்தலில் தமிழீழ தேசம் எழுச்சி கொண்ட காலகட்டங்கள் வீரியம் மிக்கவை: தனித்துவமானவை.

04.08.1987 அன்று சுதுமலையில் மக்கள் மத்தியில் முதற்தடவையாகத் தோன்றி உரைநிகழ்த்தியதிலிருந்து, 27.11.2008 அன்று நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி உலகத் தமிழர்கள் மத்தியில் ஆற்றிய மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரை வரை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய ஒவ்வொரு உரைகளும் தமிழினத்தை வீறுகொண்டெழ வைக்கும் சக்தி மிக்கவையாக இருந்தன.

நவகாலத் தமிழினத்தின் வரலாற்றில் தலைவர் பிரபாகரன் அவர்களைத் தவிர வேறெந்தத் தலைவரின் பின்னாலும் ஒரேகுடையின் கீழ் தமிழினம் அணிதிரண்டு நின்றதில்லை. தலைவர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட பலரைத் தமிழினம் சந்தித்திருக்கின்றது. இன்றும் தலைவர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலரைத் தமிழினம் சந்திக்கின்றது. ஆனால் இவர்கள் எவராலும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் முடிதரித்த உச்சியை எட்ட முடியவில்லை.

இதற்குப் பல காரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றை விபரித்துக் கூறுவதற்கு இந்தப் பத்தியில் இடம் போதாது. ஆனாலும் தலைவர் அவர்களின் சிறப்புக்கான மூன்று முக்கிய காரணங்களை இவ்விடத்தில் சற்று விபரித்துக் கூறுவது பொருத்தமானது.

முதலாவதாக ஒரு தலைவனாகத் தனக்குத் தானே முடிசூடிநின்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னெடுக்கவில்லை. மாறாக, மக்களின் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடும் ஒரு போராளியாகத் தன்னைக் கருதியவாறு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைவர் தலைமையேற்றார். ‘நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் பின்னால் வருகின்றேன்’ என்று ஒவ்வொரு தடவையும் இறுதியாகக் கரும்புலிகளைச் சந்திக்கும் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கூறும் வார்த்தைகள் அவரது தன்னலமற்ற தலைமைப் பாங்கிற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

அடுத்ததாகத் தலைவர் அவர்கள் வரித்துக் கொண்ட புரட்சிகர சிந்தனை. தமிழீழ விடுதலை என்பது வெறுமனே தனியரசை அமைப்பது என்று குறுகிய சிந்தனையுடன் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் முன்னெடுக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலை என்பது தேச விடுதலை, சமூக விடுதலை என்ற இரண்டு பரிமாணங்களைக் கொண்டது என்ற தெளிவான பார்வை தலைவர் அவர்களுக்கு இருந்தது. தேச விடுதலை எனும் பொழுது அது சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் தமிழீழ நிலப்பகுதிகளையும், மக்களையும் விடுவிப்பதைக் குறிக்கும். அதேபோன்று சமூக விடுதலை என்பது தமிழீழ சமூகத்தில் தமிழர்களே தமிழர்களை அடக்கியொடுக்கும் சகல விதமான அடக்குமுறைகளையும் இல்லாதொழிப்பதைக் குறிக்கும்.

இது பற்றி அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு 08.03.1991 அன்று வெளியிடப்பட்ட தனது அதிகாரபூர்வ அறிக்கையில் பின்வருமாறு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்:

‘‘நாம் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு மக்கள் இனம். அந்நியனின் அடக்குமுறையால் நாம் அழிக்கப்பட்டு வந்தபோதும், எமக்குள்ளே, எமது சமூக வாழ்வில் நாம் எம்மவர்களை மோசமான முறையில் அடக்கியொடுக்கி வருகிறோம். இப்படியாக எம் மத்தியில் நிலவி வரும் ஓர் ஒடுக்குமுறை வடிவம்தான் பெண் ஒடுக்குமுறை. பழமைவாதத்தில், மூடநம்பிக்கைகளில் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாகப் பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது வேதாந்தங்களும், மனுநீதி சாஸ்திரங்களும் அந்தக் காலந்தொட்டே பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்குமுறையானது பெண்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது.

…நாம் ஒன்றுபட்ட மக்களாக, ஒரே தேசிய சக்தியாக அணிதிரண்டு எமது எதிரியின் சவாலை எதிர்கொள்ள வேண்டும். மலைபோல உறுதியுடன் நாம் ஒன்றுகுவிந்து நின்றால் எம்மை எத்தகைய சக்தியாலும் அழித்துவிட முடியாது.

இந்த ஒற்றுமையையும், இன ஒருமைப்பாட்டையும் ஒரு வலுவான அத்திவாரத்தில் கட்டி எழுப்புவதென்றால் எம் மத்தியில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். சமூக முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். சமூக அநீதிகள் அழிக்கப்பட வேண்டும்.’’

இவ்விடயம் தொடர்பாக 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘சண்டே’ சஞ்சிகைக்கு வழங்கிய தனது முதலாவது ஊடகச் செவ்வியிலும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அச்செவ்வியின் பொழுது எதிர்காலத்தில் மலரும் தமிழீழம் எவ்வாறான நாடாக அமையும் என்று அனித்தா பிரதாப் அவர்கள் வினவிய பொழுது அதற்குப் பதிலளித்த தமிழீழ தேசியத் தலைவர்: ‘‘தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப்பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கு உத்தரவாதமுண்டு. எல்லாவிதமான ஒடுக்குமுறையும், சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தமிழீழ விடுதலை பற்றிய புரட்சிகரமான சிந்தனையைக் கொண்டிருந்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனமான பார்வையையும் கொண்டிருந்தார். இதுபற்றி 1985ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் ‘சண்டே’ சஞ்சிகைக்கு வழங்கிய பிறிதொரு செவ்வியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நீண்ட காலத்திற்கு இழுபட்டுச் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி வினவப்பட்ட பொழுது அதற்குப் பதிலித்த தலைவர் அவர்கள்: ‘‘எமது வாழ்நாளிலேயே தமிழீழத்தை அடையலாம் என்ற நம்பிக்கையில் நாம் போராடுகிறோம். எமது விடுதலைப் போராட்டத்தின் பழுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.’’

அன்று இச்செவ்வியைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய பொழுது அவருக்கு அகவை இருபத்தொன்பது. ஒரு இளைஞனான நின்று தமிழ்த் தேசிய இனத்தின் ஆன்மாவை அன்று வீறுகொண்டெழ வைத்த தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு இப்பொழுது அகவை அறுபது. அன்று 1980களில் தம்பியாக நின்ற தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 1990களில் அண்ணனாகப் பரிணமித்தார். சக போராளிகள் பலர் அவரை அண்ணா என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் 2006ஆம் ஆண்டு நான்காம் கட்ட ஈழப்போர் வெடித்த பொழுது இதில் இன்னுமொரு மாற்றம் ஏற்பட்டது. அன்று விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட புதிய தலைமுறை அவரை தம்பி என்றோ அண்ணா என்றோ அழைக்கவில்லை. மாறாக ‘அப்பா’ என்று அழைக்கத் தொடங்கியது. தம்பியாகிப் பின்னர் அண்ணனாகப் பரிணமித்த தமிழீழ தேசியத் தலைவர் இன்று அப்பாவாக புதிய தலைமுறையின் இதயங்களில் நிறைந்து நிற்கிறார். இது தமிழீழத்தில் தோற்றம் பெற்றுள்ள புதிய தலைமுறைக்கு மட்டும் பொருத்தமானதன்று: புலம்பெயர் தேசங்களில் உள்ள இளைய தலைமுறையினருக்கும் இது பொருத்தமானது.

இவ்வாறு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தீர்க்கதரிசனம் மிக்க பார்வையும், அவரது புரட்சிகர சிந்தனையும், தன்னலமலற்ற ஒரு போராளிக்குரிய பாங்குமே அவரைத் தமிழினத்திற்குப் பொற்கால தரிசனத்தைத் தந்த வீரத் தலைவன் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் பெருந்தலைவனாக உயர்த்தி விட்டுள்ளது எனலாம். அந்த வகையில் வரலாறு பிரசவித்த புதுமையாகவே தமிழீழ தேசியத் தலைவர் திகழ்கிறார்.

– கலாநிதி சேரமான்

பிரபாகரன் என்ற இளைஞனின் வரலாறு ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு

Posted on Updated on

praba book nedumaran

பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் கடந்த 12ம் திகதி கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலின் முதல் பதிப்பாக தேசியத் தலைவர் குறித்த சொற்ப செய்திகளுடனும், விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த ஆரம்பகாலச் செய்திகளுடனும் 1988 இலேயே மதுரையில் வெளியிடப்பட்டுப் பின்னர் கூடுதல் செய்திகள், வரலாறு ஆகியன இணைக்கப்பட்டு சென்ற ஆண்டு பெப்ரவரியில் சென்னையில் வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் திருத்தங்கள், கூடுதல் இணைப்புகள், ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டு கட்நத ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முழுமையான பதிப்பாக இது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகள் எங்கும் வெளியிட்டதன் தொடர்ச்சியாக கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது.

பழ. நெடுமாறன் ஐயா அவர்களால் எழுதப்பட்ட இந்த பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற 1200 பக்கங்களைக் கொண்ட நூல், முள்ளிவாய்க்காலுக்கு முந்திய 33 ஆண்டுகால விடுதலைப் போராட்ட வரலாற்றையும், அந்த வரலாற்றின் பாடுபொருளாகிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சேர எடுத்து அக்காலகட்டத்தில் பயணித்து பதிவு செய்து இருக்கிறது.

அந்த வகையில், பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் வீழ்ந்த எம் தமிழ் இனத்தின் மீள் எழுச்சியின் வடிவம் என்பதனை அரசியல், இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் துணைக்கொண்டு மிகச்சிறப்பாக இந்நூலில் ஆவணப்படுத்தியுமிருக்கிறார்.

praba book nedumaran 2
பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் அன்பரசி, முன்னாள் முழக்கம் இணை ஆசிரியர் ஆற்றிய ஆய்வுரை

இன்று இங்கு வெளியிடப்படும் பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற இந்த நூல் முதல் பதிப்பாக தலைவர் குறித்த சொற்ப செய்திகளுடனும், இயக்கம் குறித்த ஆரம்பகாலச் செய்திகளுடனும் 1988இலேயே மதுரையில் வெளியிடப்பட்டுப் பின்னர் கூடுதல் செய்திகள், வரலாறு ஆகியன இணைக்கப்பட்டு சென்ற ஆண்டு பெப்ரவரியில் சென்னையில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் திருத்தங்கள், கூடுதல் இணைப்புகள், ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முழுமையான பதிப்பாக இது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகள் எங்கும் வெளியிட்டதன் தொடர்ச்சியாக இன்று கனடாவில் வெளியிடப்படுகிறது.

பழ. நெடுமாறன் ஐயாஅவர்களால் எழுதப்பட்ட இந்த ‘பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம்” என்ற 1200 பக்கங்களைக் கொண்ட நூல், முள்ளிவாய்க்காலுக்கு முந்திய 33 ஆண்டுகால விடுதலைப்போராட்ட வரலாற்றையும், அந்த வரலாற்றின் பாடுபொருளாகிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சேர எடுத்து அக்காலகட்டத்தில் பயணித்து பதிவு செய்து இருக்கிறது என்று சொல்லலாம்.

தொடக்க காலம் முதற்கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அறம் குறித்தும், எழுச்சி குறித்தும் அறிந்தவர் என்ற வகையிலும், வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் பங்குகொண்டவர் என்ற வகையிலும், கெரில்லாப் போராட்ட தாக்குதல் சம்பவங்களில் தொடங்கி வான்படை அமைத்துப் போராடிய வரையிலான போராட்ட வளர்ச்சியினை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் பழ. நெடுமாறன் அவர்கள் இந்நூலை எழுதுவதற்கு மிகப்பொருத்தமான தெரிவாகிறார் என்பது ஐயத்திற்கிடமற்றது.

வரலாற்றை ஆவணப்படுத்துதல் என்பது காலங்காலமாய் நடைமுறையில் இல்லாமை என்பது எம் இனத்தைப் பீடித்த சாபம் எனலாம். அந்தளவுக்கு எம்மினம், எமது வரலாற்றை, எம்மினச் சான்றோர்களது வரலாற்றை, இலக்கியங்களை, அரசியலை, நாகரீகத்தை, கண்டுபிடிப்புகளை, அறிவியலை, மருத்துவத்தை என்று எதனையும் சரிவர ஆவணப்படுத்தத் தவறிவிட்டது என்பது சோகம்.

அந்த வகையில், அந்தக் குறையை ஓரளவேனும்போக்க, தமிழகத்தில் தான் கூட இருந்து தெரிந்துகொண்டது, செவிவழி அறிந்தது, பிறர் சொல்லக் கேட்டது, படித்தது என்று அத்தனையையும் தன்னாலியன்ற வகையில் தொகுத்து இந்நூலில் பதிவாக்கியிருக்கிறார் திரு. நெடுமாறன். பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் வீழ்ந்த எம் தமிழ் இனத்தின் மீள் எழுச்சியின் வடிவம் என்பதனை அரசியல், இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் துணைக்கொண்டு மிகச்சிறப்பாக ஆவணப்படுத்தியுமிருக்கிறார்.

தம்மை எதிரியிடம் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் ஆயுத தளபாடங்களைத் தாமே உருவாக்குவதில் தொடங்கி வானூர்தி வரை உருவாக்கி, உலகத்தையே வியக்கவைத்த, எதிரியை அச்சுறுத்திய தொழில்நுட்பத்திறனை வளர்த்தது, இயக்கத்தை கெரில்லாப் போராட்ட வழிமுறையில் இருந்து மரபுவழி இராணுவமாக உருவெடுக்க உழைத்தது, தான் கொண்ட இலட்சியத்தில் எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், பதவி ஆசை என்பது சிறிதுமற்று, இறுதிவரை தனது இலட்சியத்தில் தெளிவாக, நேர்மையாக இருந்தது.. சாதி, மத, ஆண்-பெண் பேதமற்ற சமூகத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தது என்ற உலக விடுதலைப்போராட்டங்கள் அனைத்துக்கும் முன்மாதிரியாக விளங்கிய ஆளுமை, தலைவர் பிரபாகரன் என்பதை ஆதாரங்களோடு சரியான வகையில் ஆவணப்படுத்தி, தலைவர் பிரபாகரன் அவர்களே தமிழர் எழுச்சியின் வடிவம் என்பதை அறுதியிட்டுக் கூறியிருக்கிறது இந்நூல்.

தமிழீழத் தேசியத் தலைவரது இளமைப்பருவம் தொடங்கி, போராட்ட ஆரம்பகால வளர்ச்சி, குறிக்கோள்கள், இந்தியத் தலையீடு, ஈழப்போர், வாகைசூடிய களங்கள், படைப்பிரிவுகள், சமரச முயற்சிகள் எனப் பல்வேறு வரலாற்றுச்செய்திகளை 90 தலைப்புகளில் ஆராய்கிறது நூல்.

இதில் இந்திய இராணுவத்தலையீட்டுக்குப் பின்னரான காலம் குறித்து ஐயா ஈழவேந்தன் அவர்களும், சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதி குறித்து ஐயா குணநாதன் அவர்களும் உரையாற்ற இருப்பதால் இந்திய இராணுவத் தலையீடு வரையிலான பகுதியைக் கொஞ்சம் சுருக்கமாக, அதாவது போராட்ட தொடக்க காலம் மீதான என் பார்வையை இங்கே உங்களுடன் பகிரலாம் என நினைக்கிறேன்.

இந்தப் போராட்ட ஆரம்ப காலத்தை, அதாவது முதல் பத்தாண்டுகளை, தலைவர் பிரபாகரனது இளமைப்பருவம் தொடங்கி இயக்கம் பிறந்ததுவரையான காலகட்டம், இயக்கம் தொடங்கிய காலந்தொட்டு திம்பு மாநாடு வரையான காலம், திம்பு மாநாடு தொடங்கி இந்திய- சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும், அதன் பின்னரான காலப்பகுதியும் என மூன்று பகுதிகளாக பிரித்துப் பார்க்கலாம்.

1982 ஆம் ஆண்டு பலமுறை தனது இல்லத்துக்கு திரு. பேபி சுப்ரமணியம் அதாவது இளங்குமரன் அண்ணா அவர்களுடன் வந்த இளைஞர்தான் பிரபாகரன் என்பதைத் தான் அறியாமலே இருந்ததையும், தலைவர் அவர்களிடமேயே பலமுறை உங்கள் தலைவர் பிரபாகரனைப் பார்க்கவேண்டும் என்று கேட்டதையும் குறிப்பிடும் பழ. நெடுமாறன் அவர்கள் பின்னர் பாண்டிபஜார்சூளை சூட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களைப் பார்க்கச்சென்றபோதுதான் காவலர் முன்னிலையில் மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணா, நான்தான் பிரபாகரன் என்று தலைவர் அவர்கள் சிரித்தபடி அறிமுகப்படுத்திய நெகிழ்வான நிகழ்வை நினைவுகூர்ந்தபடி தொடங்குகிறது நூல்.

முதலாவது அத்தியாயத்தில் தமிழீழத்தேசியத் தலைவர் அவர்களது குடும்பப்பின்னணி குறித்து எடுத்துரைக்கும் நூலாசிரியர், பணியின் நிமித்தம் தலைவர் அவர்களது பெற்றோர் அனுராதபுரத்தில் தங்கியிருந்த சமயம்தான் பார்வதியம்மா அவர்கள் தலைவர் அவர்களைக் கருவில் சுமக்க ஆரம்பித்தார் என்பதையும் அப்போது அவர்கள் வீட்டுக்கு அருகே இருந்த எல்லாளனின் சமாதிக்கு தலைவர் அவர்களது தாய் தினசரி விளக்கு ஏற்றிவழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் மக்கள் அறியத் தருகிறார். பிரபாகரன் என்ற வரலாறு உருவாகி வளர்கிறது. மனோகரன், ஜெகதீஸ்வரி, வினோதினி என்ற மூத்தவர்களோடு தொடங்குகிறது கடைக்குட்டி பிரபாகரனின் வாழ்க்கை.

1958 இனக் கலவரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களின் விவரிப்பை மிகச்சிறிய வயதிலேயே கேட்டு மனம் வெம்பியது, தமிழன் காரணமின்றிச் சிங்களவர்களால் தாக்கப்படுவது குறித்து சினங்கொண்டது, பின்னர் தமிழீழம் விடுதலைபெறவேண்டும் என்ற கருத்தினைச் சிறுவயதில் விதைத்த தமிழாசிரியர் வேணுகோபால் என்று விரிகிறது அவர் வாழ்வு. பதின்ம வயதுகளிலேயே நாட்டுக் குண்டு தயாரிக்க முயன்று காலை எரித்தது, 16வயதிலேயே எதிரிகளால் தேடப்பட்டுத் தலைமறைவு வாழ்வை ஏற்றுக் கொள்ளவேண்டிய அவலநிலையை ஏற்றது, உறைவிடமின்றி, உணவின்றி நாடோடி வாழ்க்கை வாழ்ந்தது, பல நாட்கள் காடு, தெருக்களிலேயே உறங்கி எழுந்தது, பசி, பட்டினியால் பச்சை மரவள்ளிக் கிழங்குகளைப் பிடுங்கி பச்சைமிளகாயைக் கடித்தபடி பசிதீர்த்தது… இப்படியாக தலைவர் அவர்கள் ஆரம்பகாலத்தில் அனுபவித்த இடர்கள், சோதனைகள், சவால்கள் எல்லாமுமே அவரது இலட்சிய உறுதிக்கு எவ்வாறு உரமூட்டின என்பது குறித்து தெளிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.

அநீதியாளர்களுடன் மோதியவர்களின் வாழ்க்கை வரலாறுகளையே அந்த நாட்களில் நான் சுற்றிச்சுழன்று கொண்டிருந்தேன் என்று தலைவர் அவர்கள் இந்து நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டதையும் அந்த ஈர்ப்புடன் அவர் வாழ்வு அமைந்ததையும் கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.

தலைவர் அவர்களது சிறுவயதுத் தோழர்கள் பிற்காலத்தில் இயக்கத் தோழர்களாகவும் மாறிய ஒவ்வொருவர் பற்றிய வரலாற்றுக்குறிப்புகளுடன் தொடர்கிறது நூல். மேற்கூறியவர்களுடனதும், இளங்குமரன், குமரப்பா. விக்டர் ஆகியோருடனுமான இயக்க ஆரம்ப நாட்கள், சத்தியசீலன் நிறுவிய தமிழ் மாணவர்பேரவையுடனான தொடர்பு, பொன். சிவகுமாரனின் செயற்பாடுகளின் மீதான ஈர்ப்பு, தமிழ் மாணவர் பேரவையின் தீவிரவாதப் பிரிவாக உருவாகிய குட்டிமணி, தங்கத்துரை சின்னசோதி சார்ந்த தமிழீழ விடுதலை இயக்கத்துடனான இணைவு என்று தொடர்கிறது ஆரம்ப காலம் தொடர்பான ஆசிரியரின் பதிவுகள்.

உலகத்தமிழாராய்ச்சி மாநாடும் அதில் கொல்லப்பட்ட 9 அப்பாவித் தமிழ் உயிர்களும் பொன் சிவகுமாரன் போன்றோர் மத்தியில் விதைத்த வலி தீவிரவாதப்போக்கினை உத்வேகம்பெறச் செய்தது என்பதை சிவகுமாரன் வரலாறு மூலம் விளக்கி புதிய தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் பிறப்பையும், அதுவே பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பிப்பதற்கான அடித்தளம் என்பதுமான செய்திகளை இங்கே பதிவாக்கியுள்ளார் நூலாசிரியர்.

1976 ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் பிறப்பெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோற்றமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டமே புதிய திருப்பம் பெற்றது என்பதை உணரவைக்கும் செய்திப் பகிர்வுகளைத் தருகிறார் பழ.நெடுமாறன்.

அதே மாதம் சுதந்திரத் தமிழீழம் அமைப்பதே தமது இலட்சியம் என வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு தேசிய மாநாட்டினை நடத்தியது, அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேண்டுகோளுக்கு மக்கள் பேராதரவு அளித்தார்கள் என்ற குறிப்பை இங்கே தந்து, இந்தத் தீர்ப்பு தலைவர் அவர்களையும் தோழர்களையும் ஊக்கப்படுத்தியது, தமிழ் இனம் விடுதலைபெற தம்மாலியன்ற வழிகளில் உழைக்கவேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது என்பதனைப் பதிவு செய்கிறார்.

1978ஆம் ஆண்டு லெப். செல்லக்கிளி மறைந்திருந்த பயிற்சிப் பாசறையை பஸ்தியாம்பிள்ளை தலைமையில் சென்ற அணி தாக்கியதையும், அதில் வீரம்செறிந்த வகையில் லெப். செல்லக்கிளி செயற்பட்டு பஸ்தியாம்பிள்ளை, மற்றும் அவருடன் வந்த மூவரையும் அவ்விடத்திலேயே கொன்று தப்பித்ததையும் இதன் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதையும் விவரிக்கிறார். நூலின் இந்த அத்தியாயங்கள் கூடுதலாக ஐயர் அவர்கள் எழுதிய போராட்ட ஆரம்ப நாட்கள் குறித்த நூலில் பதியப்பட்ட நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டதாக வாசித்தபோது தோன்றியது.

அடுத்து, பயங்கரவாதத் தடைச்சட்டம், ஒருவரை எந்த விசாரணையுமின்றி 18 மாதங்களுக்கு சிறையில் வைக்கமுடியும் என்ற அடக்குமுறையை ஏவியது என்பதை பதிவுசெய்கிறார். தொடர்ந்து 1981ஆம் ஆண்டு யாழ் பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்டதைப் பார்த்த பிரபாகரன் மனம் பதைத்து அன்றிலிருந்து எப்பாடுபட்டேனும் என் மக்களை விடுவிக்கப் போராடியே ஆக வேண்டும் என்ற உறுதி என் நெஞ்சில் வேரூன்றியது என்று பின்னாளில் செவ்வியொன்றில் தெரிவித்ததை நினைவ+ட்டுகிறார்.

இயக்கத்தில் பிளவு ஏற்படும் நிலை வந்தபோது அனைவரையும் கூட்டி நிலைமைகளை விளக்கிவிட்டு, தான் இயக்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததானது பிரபாகரனின் பண்பு நலனுக்கு சான்றாகும் என்று குறிப்பிடும் ஆசிரியர், இதன் பின்னர் சாவகச்சேரி காவல்நிலையம் தாக்கப்பட்டது, முதல் மாவீரர் சங்கர் காயப்பட்டுப்பின்னர் சிகிச்சைக்காக மதுரை கொண்டுவரப்பட்டு அங்கு வீரச்சாவைத் தழுவியது, உயிர்போகும் நிலையிலும் தம்பி, தம்பி என்று தலைவர் பெயரை உரைத்தது, உயிர்த்தோழன் சங்கர் வீரச்சாவடைந்த நிலையில் தலைவர் அவர்கள் கதறி அழுதது என்பதான தான் நேரே பார்த்து அனுபவித்த அக்காலத்தை நினைவு கூர்கிறார் திரு. நெடுமாறன்.

1982 இலேயே தமது கோரிக்கைகள் குறித்து அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் அந்நாடுகளின் தலைவர்களிடம் புலிகள் மனு வழங்கினார்கள் என்ற செய்தியை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழ. நெடுமாறன், தமது அரசு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்து, தமிழர் சொத்துக்களை எரித்து, இரண்டு இலட்சம் தமிழர்களை அகதியாக்கியபோது, ‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்களைப் பற்றி நான் இப்போது சிந்திக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைக்குறித்து எத்தகைய கருத்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியோ சிந்திக்கமுடியாது” என்று ஜெயவர்த்தனாவால் அறிவிக்கப்பட்ட கறுப்பு சூலை நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்து, தொடர்ந்த சிங்களப் பௌத்த இனத்துவேசம் துப்பும் நடவடிக்கைகள், தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான புறச்சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொடுத்தன என்பதைப் பதிவுசெய்கிறார்.

இந்த இனக் கலவரம் தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது, தமிழீழம் விடுதலைபெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தெளிவோடு, இயக்கங்களில் இணைவோரின் எண்ணிக்கை வகைதொகையற்றுப் பெருகின என்ற செய்தி இந்நூலில் வருகின்றது.

தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு தமிழீழப் பகுதியெங்கும் சென்று பார்வையிட்டு அங்கு நடைபெறும் கொடுமைகளை அம்பலப்படுத்தும் வீpடியோப் பதிவுகளைக் கொண்டு வந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் காட்டியதாகக் கூறும் திரு. நெடுமாறன், அங்கு சென்றிருந்த வேளை, ஆண்களைப் போலவே பெண்களும் பயிற்சிபெற்று ஆயுதங்களை இலாவகமாகக் கையாளுவதைப் பார்த்து தான் ஆச்சரியடைந்ததாகவும், மருத்துவம், பிரச்சாரம் போன்ற பணிகளுக்கே பெண்கள் ஏற்றவர்கள் என்ற நிலையைப் பிரபாகரன் அடியோடு மாற்றியிருந்தார் என்றும் பதிவுசெய்து, விடுதலை வேட்கையும் உரிமை உணர்வும் கொண்ட பெண்போராளிகள் படையணியை அவர் உருவாக்கியுள்ள விதம் பாராட்டத்தக்கது என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண்களைப் பிரபாகரனே உருவாக்கியிருந்தார் என்றும் நெகிழ்கிறார்.

தொடர்ந்து வரும் அத்தியாயத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எப்படி ஒரு தேசிய இயக்கமாக, மக்கள் இயக்கமாக உருவெடுத்தது என்பதை இயம்புகிறார். தலைவர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெறும் ஆயுதம் தாங்கிய கும்பலாக இல்லாமல், திட்டவட்டமான, தெளிவான இலட்சியங்களை இலக்காகக் கொண்டு அவற்றுக்காகப் போராடும் ஒரு புரட்சி இயக்கமாக, தமிழீழ மக்களின் சுதந்திர இராணுவமாக எப்படிக் கட்டி அமைத்தார் என்பதைப் பற்றிய செய்திகளை பகிர்கிறார்.

இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் இணைபிரிக்க முடியாத அங்கம் ஆவார்கள் என்பதில் தலைவர் அவர்கள் உறுதி கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார். தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், மக்களிடையே தங்களுக்குள்ள செல்வாக்கை 1989, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் விடுதலைப்புலிகள் நிரூபித்துக் காட்டினார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். விடுதலைப்புலிகள் நேரடியாகப் போட்டியிடாவிடினும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் 15இடங்களையும், 2004ஆம் ஆண்டு 22 இடங்களையும் கைப்பற்றியதன் மூலம், ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளே தங்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதைத் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக நிலைநாட்டியதைப் பதிவுசெய்கிறார்.

தன் இளம் வயதிலேயே இலட்சிய நோக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டது, தாயக விடுதலை உணர்வைப் பெற்றது எவ்வாறு என்பது குறித்து தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே ‘சண்டே, இந்து, தி வீக், வெளிச்சம், பிபிசி ஆகிய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளில் தெரிவித்திருப்பதைப் பகிர்ந்திருக்கிறார். ‘இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி” என்ற அவரது மேற்கோளுக்கமையவே அவரது வாழ்வும் அமைந்தது என்பதைச் சுட்டியிருக்கிறார்.

தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களுடனான தலைவர் பிரபாகரன் அவர்களது நட்புறவு குறித்தும், முதன்முறையாக திருமதி. அடேல் பாலசிங்கம் அவர்கள் நான்கு இளைஞர்களுடனும் சில பெண்களுடனும் சென்னையில் வீடெடுத்துத் தங்கியிருந்தபோது சில விச மூளைகள் ஒரு வெள்ளைக்காரப்பெண்ணொருத்தி கொஞ்சம் பெண்களை வைத்து விலைமாதர் விடுதியை நடத்துகிறாள் என்று கதைகட்டிவிட, சுற்றுவட்டார மக்கள் வீட்டைக் கல்லால் தாக்கத் தொடங்கியதுபற்றியும், அங்கு அப்போது வந்த பொன்னம்மான் சீற்றம் அடைந்து கூட்டத்தை நோக்கிக் கத்தி, பிஸ்டலை எடுத்துக்காட்டி தாங்கள் யார் என்பது குறித்து விளக்கியபின் கூட்டத்தினர் ஒவ்வொருவராக மன்னிப்புக்கேட்டுக் கலைந்த, நாம் இதுவரை அறிந்திராத சில சம்பவங்களை நினைவுகூருகிறார் நெடுமாறன் ஐயா.

அடுத்து திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களைக் குறிவைத்துச் சென்னையில் நடந்த கொலைமுயற்சி குறித்தான நாம் அறியாத பல செய்திகளைப் பகிர்கிறார்.

இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்ட வரலாறு குறித்தும், இலங்கையில் இராணுவ ரீதியாகத் தலையிடுவது என்ற இந்திரா காந்தியின் இரகசியத் திட்டம் குறித்தும், இந்தியத்தலையீட்டின் உள்நோக்கம் குறித்தும் தான் அறிந்த, உணர்ந்த செய்திகளைத் தொடர்நது பகிர்கிறார்.

தலைவர் பிரபாகரன்-முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் ஆகியோரது முதல் சந்திப்பு குறித்தும், தமிழ்நாட்டின் அரசியலில் தலையிடுவதில்லை என்ற விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்தும், எம்ஜிஆர் அளித்த பேருதவி குறித்தும், தான் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த சம்மதிக்கமாட்டேன் என்று உறுதிகூறி அந்த வாக்குறுதியைக் கடைசிவரை எம்ஜிஆர் அவர்கள் காப்பாற்றியது குறித்தும் பதிவுசெய்து அக்காலகட்டத்தை நினைவுகூர்கிறார்.

தமிழகத்தில் கொளத்தூர் மணி அண்ணன் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்ட புலிகளின் பயிற்சி முகாம்கள், கோவை இராமகிருஸ்ணன் அவர்களின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட முகாம்கள், திராவிடர் கழகத்தின் கரூர் மாவட்டத்தலைவர் பழ. இராமசாமி அவர்கள் வழங்கிய ஜீப் வாகனம் குறித்தான செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார்.

தமிழர்கள் தமக்கென்று தனிநாடு அமைத்துவிடக்கூடாது என நினைப்பவர்களும் சிங்கள இந்திய ஏகாதிபத்தியத் தாசர்களுக்கு பிரபாகரனைப் பழிசாற்றுவதில் ஒன்றுசேர்ந்து கொள்கிறார்கள் என்றும் தமிழ்த் தேசிய எழுச்சியின் வடிவமாகத் தலைவர் அவர்கள் திகழ்வதே அவரைக் குறிவைத்து இவர்கள் அழிக்கத் திட்டமிடக் காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.

தமிழீழத் தேசியத் தலைவருக்கும் பிற இயக்கங்களுக்கும் உடனான உறவு குறித்துச் செய்திகளைத் தரும் திரு. நெடுமாறன், திரு பாலசிங்கம் அவர்களின் முயற்சியில் 1985 ஆம் ஆண்டு அனைத்து இயக்கத் தலைமைகளும் சந்தித்து அரசியல் ரீதியான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றுபட்டுச் செயற்படத் தீர்மானித்ததையும், அவர்களைப் பிளவுபடுத்தும் சதித்திட்டம் தீட்டிய ரா உளவு அமைப்பின் சீர்குலைவு வேலைகள், திம்புப்பேச்சுக்கள், மற்றும் இயக்க மோதல்களின் பின்னணி, டெலோ அமைப்புடனான மோதல் ஆகியன குறித்தும் பதிவுசெய்கிறார்.

தமிழகத்தில் புலிகளின் பயிற்சிமுகாம்களில் இருந்த தொலைத் தொடர்புக்கருவிகளைப்பறிமுதல் செய்ததும் அவற்றை மீளத்தரவேண்டும் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து அறவழியில் போராடியது, தொலைத்தொடர்புக்கருவிகள் மீளக்கிடைத்தபின்பே அறவழிப்போராட்டத்தைக் கைவிட்ட – எந்த வழியில் போராடினாலும் அதில் உறுதியாக இருக்கும் பாங்கு, இந்திரா காந்தி அம்மையாரின் மறைவும் அதன்பின்னரான ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை மாற்றம், புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலும் அது சிங்களத்துக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியும் இந்தியாவின் தலையீட்டை வேண்டிநின்ற பின்னணியையும், இதன் தொடர்ச்சியாக இந்திய இலங்கை உடன்பாடு ஏற்பட்டதையும் பதிவுசெய்கிறது நூல்.

ஆகஸ்டு 4 ஆம் தேதி சுதுமலையில் பிரபாகரன் அவர்கள் இந்திய சிறீலங்கா ஒப்பந்தத்துக்குப்பின்னர் ஆற்றிய உரையில். ‘நமது போராட்டத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுவிட்டது. ஒரு வல்லரசு நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. மகத்தான தியாகங்கள் செய்து இரத்தம் சிந்தி உயிர் கொடுத்து நாம் உருவாக்கி வைத்த போராட்டத்தின் வடிவமே சிதைக்கப்படுகிறது. நம் மக்களைக் காப்பாற்றுகின்ற எமது ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லிவிட்டார்கள். எங்கள் கருத்தைக் கேட்காமல் மக்கள் கருத்தைக் கேட்காமல் இந்த ஒப்பந்தம் நம்மீது திணிக்கப்பட்டது. அதற்கு எங்கள் எதிர்ப்பை முழுமையாகத் தெரிவித்தோம். இனி எம் மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, இந்திய அரசை எதிர்த்துப் போராடும் ஒரு துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்துவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்.

அதே நேரம் ‘இப்போது நம்முடைய இராணுவ வீரர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய இராணுவமும் விடுதலைப்புலிகளும் களத்திலே மோதிக்கொண்டு இருக்கிறார்கள். புரிந்ததா சூட்சுமம்? நான் எதற்காக இந்த ஒப்பந்தத்தைச் செய்தேன் என்பது இப்போது புரிகிறதா? என்கிறார் ஜெயவர்த்தனர்.. இந்நிகழ்வுகளை மக்கள் அறியப் பதிவுசெய்கிறார் திரு. நெடுமாறன்.

1987 செப்டம்பர் 16 அன்று இரவில் இந்தியத் தளபதி ஹர்கிரத் சிங்குக்கு ஒரு தகவல் வருகின்றது. தீட்சித் பேசுகிறார். உங்களைச் சந்திக்க பிரபாகரன் வருகிறாரா என்று கேட்கிறார் அவர். ஆம் மரியாதை நிமித்தம் சந்திப்பு நடக்கிறது என்கிறார் ஹர்கிரத் சிங். அவரைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள் டில்லியின் உத்தரவு என்கிறார் தீட்சித். அப்படியொரு துரோகத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று ஹர்கிரத் சிங்க பதில் சொல்கிறார். அதற்குப்பிறகு ஐந்துகோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாநிலை அறப்போர் தொடங்குகிறார். அதன்போது பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் அவ்வேளை தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பில் மரியாதையைத் தெரிவிக்க வந்திருக்கிறேன், எங்கள் அன்பைச் செலுத்த வந்திருக்கிறேன் என்று உறுதிகூற அங்கு விரைந்த நிகழ்வை இங்கே நினைவுகூருகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சியையும் கட்டமைப்பையும் பாழாக்கித் துரோகம் செய்தது இந்தியா என்பதற்கான சான்றுகள் நூல் முழுதும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. வரலாற்றுச்செய்திகளை ஆவணப்படுத்துவது என்ற கடமையை ஐயா நெடுமாறன் அவர்கள் மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.

தமிழகத்தில் அவரறிய நடைபெற்ற நிகழ்வுகள், அரசியல் செய்திகள், பிறர் அறியாத பல செய்திகளை மக்கள் அறியத் தந்திருக்கிறார். பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல. அவரே தமிழர் எழுச்சியின் வடிவம் என்பதைப் படிப்போர் உணரும் வகையில் நேர்த்தியாக நிறுவியுள்ளார் ஐயா நெடுமாறன். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் எம் தலைமுறையும், இனி வரும் தலைமுறைகளும் அறியவேண்டியது. பிரபாகரன் என்ற ஒரு தனி மனிதன் இந்த இனத்தின் எழுச்சியின் குறியீடு. பிரபாகரன் என்று இளைஞனின் வரலாறு, ஒரு விடுதலை இயக்கத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியாக, ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு இந்த நூல்.

அழகான வடிவமைப்பு, வண்ண ஒளிப்படங்கள், நிகழ்வுகளின் கோர்வை, பிரகடனங்கள், ஒப்பந்தங்கள் குறித்த இணைப்புகள் என்று பாராட்டும் வண்ணம் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். செவ்விகள், நிகழ்வுகள், அனுபவங்களின் பதிவாக இந்நூல் இருப்பதால் அத்தியாயங்கள் தொடர் வரலாறாகச் செல்லவில்லை. அதாவது 70ஆம் ஆண்டுகளின் பதிவுகளிலேயே 80கள், 90களில் நடந்தவற்றின் குறிப்புகள் வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்து அடுத்து இது, அடுத்து என்ன என்று சொல்லும் வகையில் ஆண்டுவாரியாக, தொடர்ச்சியான காலப் பதிவாக இது இல்லை. தமிழீழப் போராட்ட வரலாறு குறித்து அதிகம் தெரியாத வாசகர்களை இது கொஞ்சம் குழப்புவதாகவே அமைகிறது.

நிச்சயமாய் இது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது முழுமையான வாழ்க்கை வரலாறு அல்ல, ஆயினும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆவணம் இது. தமிழீழத் தேசியத் தலைவரே எமது இனத்தின் எழுச்சியின் வடிவம் என்பதைச் சரியான சான்றுகளுடன் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் நூல் இது என்பதனைத் தெரிவித்து இந்த நூல் நிச்சயம் தமிழர்கள் வீடெங்கிலும் இருக்கவேண்டும், இந்தத் தலைமுறையும் அடுத்த தலைமுறைகளும் இவ்வரலாற்றினை நிச்சயம் தெரிந்துவைத்திருக்கவேண்டும், அதற்குதவும் வகையில் மொழிமாற்றமும் செய்திடப்படவேண்டும் என்ற அவாவையும் தெரிவித்து, இந்த உரையை நிறைவுசெய்கிறேன். நன்றி.

அனைவருக்கும் வணக்கம்.

இன்று இங்கு வெளியிடப்படும் பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற இந்த நூல் முதல் பதிப்பாக தலைவர் குறித்த சொற்ப செய்திகளுடனும், இயக்கம் குறித்த ஆரம்பகாலச் செய்திகளுடனும் 1988இலேயே மதுரையில் வெளியிடப்பட்டுப் பின்னர் கூடுதல் செய்திகள், வரலாறு ஆகியன இணைக்கப்பட்டு சென்ற ஆண்டு பெப்ரவரியில் சென்னையில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் திருத்தங்கள், கூடுதல் இணைப்புகள், ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முழுமையான பதிப்பாக இது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகள் எங்கும் வெளியிட்டதன் தொடர்ச்சியாக இன்று கனடாவில் வெளியிடப்படுகிறது.

பழ. நெடுமாறன் ஐயாஅவர்களால் எழுதப்பட்ட இந்த ‘பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம்” என்ற 1200 பக்கங்களைக் கொண்ட நூல், முள்ளிவாய்க்காலுக்கு முந்திய 33ஆண்டுகால விடுதலைப்போராட்ட வரலாற்றையும், அந்த வரலாற்றின் பாடுபொருளாகிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சேர எடுத்து அக்காலகட்டத்தில் பயணித்து பதிவு செய்து இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆரம்ப காலம் முதற்கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அறம் குறித்தும், எழுச்சி குறித்தும் அறிந்தவர் என்ற வகையிலும், வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் பங்குகொண்டவர் என்ற வகையிலும், கெரில்லாப் போராட்ட தாக்குதல் சம்பவங்களில் தொடங்கி வான்படை அமைத்துப் போராடிய வரையிலான போராட்ட வளர்ச்சியினை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் பழ. நெடுமாறன் அவர்கள் இந்நூலை எழுதுவதற்கு மிகப்பொருத்தமான தெரிவாகிறார் என்பது ஐயத்திற்கிடமற்றது.

வரலாற்றை ஆவணப்படுத்துதல் என்பது காலங்காலமாய் நடைமுறையில் இல்லாமை என்பது எம் இனத்தைப் பீடித்த சாபம் எனலாம். அந்தளவுக்கு எம்மினம், எமது வரலாற்றை, எம்மினச் சான்றோர்களது வரலாற்றை, இலக்கியங்களை, அரசியலை, நாகரீகத்தை, கண்டுபிடிப்புகளை, அறிவியலை, மருத்துவத்தை என்று எதனையும் சரிவர ஆவணப்படுத்தத் தவறிவிட்டது என்பது சோகம்.

அந்த வகையில், அந்தக் குறையை ஓரளவேனும்போக்க, தமிழகத்தில் தான் கூட இருந்து தெரிந்துகொண்டது, செவிவழி அறிந்தது, பிறர் சொல்லக் கேட்டது, படித்தது என்று அத்தனையையும் தன்னாலியன்ற வகையில் தொகுத்து இந்நூலில் பதிவாக்கியிருக்கிறார் திரு. நெடுமாறன். பிரபாகரன் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் வீழ்ந்த எம் தமிழ் இனத்தின் மீள் எழுச்சியின் வடிவம் என்பதனை அரசியல், இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் துணைக்கொண்டு மிகச்சிறப்பாக ஆவணப்படுத்தியுமிருக்கிறார்.

தம்மை எதிரியிடம் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் ஆயுத தளபாடங்களைத் தாமே உருவாக்குவதில் தொடங்கி வானூர்தி வரை உருவாக்கி, உலகத்தையே வியக்கவைத்த, எதிரியை அச்சுறுத்திய தொழில்நுட்பத்திறனை வளர்த்தது, இயக்கத்தை கெரில்லாப் போராட்ட வழிமுறையில் இருந்து மரபுவழி இராணுவமாக உருவெடுக்க உழைத்தது, தான் கொண்ட இலட்சியத்தில் எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், பதவி ஆசை என்பது சிறிதுமற்று, இறுதிவரை தனது இலட்சியத்தில் தெளிவாக, நேர்மையாக இருந்தது.. சாதி, மத, ஆண்-பெண் பேதமற்ற சமூகத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தது என்ற உலக விடுதலைப்போராட்டங்கள் அனைத்துக்கும் முன்மாதிரியாக விளங்கிய ஆளுமை, தலைவர் பிரபாகரன் என்பதை ஆதாரங்களோடு சரியான வகையில் ஆவணப்படுத்தி, தலைவர் பிரபாகரன் அவர்களே தமிழர் எழுச்சியின் வடிவம் என்பதை அறுதியிட்டுக் கூறியிருக்கிறது இந்நூல்.

தமிழீழத் தேசியத் தலைவரது இளமைப்பருவம் தொடங்கி, போராட்ட ஆரம்பகால வளர்ச்சி, குறிக்கோள்கள், இந்தியத் தலையீடு, ஈழப்போர், வாகைசூடிய களங்கள், படைப்பிரிவுகள், சமரச முயற்சிகள் எனப் பல்வேறு வரலாற்றுச்செய்திகளை 90 தலைப்புகளில் ஆராய்கிறது நூல்.

இதில் இந்திய இராணுவத்தலையீட்டுக்குப் பின்னரான காலம் குறித்து ஐயா ஈழவேந்தன் அவர்களும், சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதி குறித்து ஐயா குணநாதன் அவர்களும் உரையாற்ற இருப்பதால் இந்திய இராணுவத் தலையீடு வரையிலான பகுதியைக் கொஞ்சம் சுருக்கமாக, அதாவது போராட்ட தொடக்க காலம் மீதான என் பார்வையை இங்கே உங்களுடன் பகிரலாம் என நினைக்கிறேன்.

இந்தப் போராட்ட ஆரம்ப காலத்தை, அதாவது முதல் பத்தாண்டுகளை, தலைவர் பிரபாகரனது இளமைப்பருவம் தொடங்கி இயக்கம் பிறந்ததுவரையான காலகட்டம், இயக்கம் தொடங்கிய காலந்தொட்டு திம்பு மாநாடு வரையான காலம், திம்பு மாநாடு தொடங்கி இந்திய- சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும், அதன் பின்னரான காலப்பகுதியும் என மூன்று பகுதிகளாக பிரித்துப் பார்க்கலாம்.

1982ஆம் ஆண்டு பலமுறை தனது இல்லத்துக்கு திரு. பேபி சுப்ரமணியம் அதாவது இளங்குமரன் அண்ணா அவர்களுடன் வந்த இளைஞர்தான் பிரபாகரன் என்பதைத் தான் அறியாமலே இருந்ததையும், தலைவர் அவர்களிடமேயே பலமுறை உங்கள் தலைவர் பிரபாகரனைப் பார்க்கவேண்டும் என்று கேட்டதையும் குறிப்பிடும் பழ. நெடுமாறன் அவர்கள் பின்னர் பாண்டிபஜார்சூளை சூட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களைப் பார்க்கச்சென்றபோதுதான் காவலர் முன்னிலையில் மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணா, நான்தான் பிரபாகரன் என்று தலைவர் அவர்கள் சிரித்தபடி அறிமுகப்படுத்திய நெகிழ்வான நிகழ்வை நினைவுகூர்ந்தபடி தொடங்குகிறது நூல்.

முதலாவது அத்தியாயத்தில் தமிழீழத்தேசியத் தலைவர் அவர்களது குடும்பப்பின்னணி குறித்து எடுத்துரைக்கும் நூலாசிரியர், பணியின் நிமித்தம் தலைவர் அவர்களது பெற்றோர் அனுராதபுரத்தில் தங்கியிருந்த சமயம்தான் பார்வதியம்மா அவர்கள் தலைவர் அவர்களைக் கருவில் சுமக்க ஆரம்பித்தார் என்பதையும் அப்போது அவர்கள் வீட்டுக்கு அருகே இருந்த எல்லாளனின் சமாதிக்கு தலைவர் அவர்களது தாய் தினசரி விளக்கு ஏற்றிவழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் மக்கள் அறியத் தருகிறார். பிரபாகரன் என்ற வரலாறு உருவாகி வளர்கிறது. மனோகரன், ஜெகதீஸ்வரி, வினோதினி என்ற மூத்தவர்களோடு தொடங்குகிறது கடைக்குட்டி பிரபாகரனின் வாழ்க்கை.

1958 இனக் கலவரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களின் விவரிப்பை மிகச்சிறிய வயதிலேயே கேட்டு மனம் வெம்பியது, தமிழன் காரணமின்றிச் சிங்களவர்களால் தாக்கப்படுவது குறித்து சினங்கொண்டது, பின்னர் தமிழீழம் விடுதலைபெறவேண்டும் என்ற கருத்தினைச் சிறுவயதில் விதைத்த தமிழாசிரியர் வேணுகோபால் என்று விரிகிறது அவர் வாழ்வு. பதின்ம வயதுகளிலேயே நாட்டுக் குண்டு தயாரிக்க முயன்று காலை எரித்தது, 16வயதிலேயே எதிரிகளால் தேடப்பட்டுத் தலைமறைவு வாழ்வை ஏற்றுக் கொள்ளவேண்டிய அவலநிலையை ஏற்றது, உறைவிடமின்றி, உணவின்றி நாடோடி வாழ்க்கை வாழ்ந்தது, பல நாட்கள் காடு, தெருக்களிலேயே உறங்கி எழுந்தது, பசி, பட்டினியால் பச்சை மரவள்ளிக் கிழங்குகளைப் பிடுங்கி பச்சைமிளகாயைக் கடித்தபடி பசிதீர்த்தது… இப்படியாக தலைவர் அவர்கள் ஆரம்பகாலத்தில் அனுபவித்த இடர்கள், சோதனைகள், சவால்கள் எல்லாமுமே அவரது இலட்சிய உறுதிக்கு எவ்வாறு உரமூட்டின என்பது குறித்து தெளிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.

அநீதியாளர்களுடன் மோதியவர்களின் வாழ்க்கை வரலாறுகளையே அந்த நாட்களில் நான் சுற்றிச்சுழன்று கொண்டிருந்தேன் என்று தலைவர் அவர்கள் இந்து நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டதையும் அந்த ஈர்ப்புடன் அவர் வாழ்வு அமைந்ததையும் கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.

தலைவர் அவர்களது சிறுவயதுத் தோழர்கள் பிற்காலத்தில் இயக்கத் தோழர்களாகவும் மாறிய ஒவ்வொருவர் பற்றிய வரலாற்றுக்குறிப்புகளுடன் தொடர்கிறது நூல். மேற்கூறியவர்களுடனதும், இளங்குமரன், குமரப்பா. விக்டர் ஆகியோருடனுமான இயக்க ஆரம்ப நாட்கள், சத்தியசீலன் நிறுவிய தமிழ் மாணவர்பேரவையுடனான தொடர்பு, பொன். சிவகுமாரனின் செயற்பாடுகளின் மீதான ஈர்ப்பு, தமிழ் மாணவர் பேரவையின் தீவிரவாதப் பிரிவாக உருவாகிய குட்டிமணி, தங்கத்துரை சின்னசோதி சார்ந்த தமிழீழ விடுதலை இயக்கத்துடனான இணைவு என்று தொடர்கிறது ஆரம்ப காலம் தொடர்பான ஆசிரியரின் பதிவுகள்.

உலகத்தமிழாராய்ச்சி மாநாடும் அதில் கொல்லப்பட்ட 9 அப்பாவித் தமிழ் உயிர்களும் பொன் சிவகுமாரன் போன்றோர் மத்தியில் விதைத்த வலி தீவிரவாதப்போக்கினை உத்வேகம்பெறச் செய்தது என்பதை சிவகுமாரன் வரலாறு மூலம் விளக்கி புதிய தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் பிறப்பையும், அதுவே பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பிப்பதற்கான அடித்தளம் என்பதுமான செய்திகளை இங்கே பதிவாக்கியுள்ளார் நூலாசிரியர்.

1976 ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் பிறப்பெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோற்றமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டமே புதிய திருப்பம் பெற்றது என்பதை உணரவைக்கும் செய்திப் பகிர்வுகளைத் தருகிறார் பழ.நெடுமாறன்.

அதே மாதம் சுதந்திரத் தமிழீழம் அமைப்பதே தமது இலட்சியம் என வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு தேசிய மாநாட்டினை நடத்தியது, அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேண்டுகோளுக்கு மக்கள் பேராதரவு அளித்தார்கள் என்ற குறிப்பை இங்கே தந்து, இந்தத் தீர்ப்பு தலைவர் அவர்களையும் தோழர்களையும் ஊக்கப்படுத்தியது, தமிழ் இனம் விடுதலைபெற தம்மாலியன்ற வழிகளில் உழைக்கவேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது என்பதனைப் பதிவு செய்கிறார்.

1978ஆம் ஆண்டு லெப். செல்லக்கிளி மறைந்திருந்த பயிற்சிப் பாசறையை பஸ்தியாம்பிள்ளை தலைமையில் சென்ற அணி தாக்கியதையும், அதில் வீரம்செறிந்த வகையில் லெப். செல்லக்கிளி செயற்பட்டு பஸ்தியாம்பிள்ளை, மற்றும் அவருடன் வந்த மூவரையும் அவ்விடத்திலேயே கொன்று தப்பித்ததையும் இதன் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதையும் விவரிக்கிறார். நூலின் இந்த அத்தியாயங்கள் கூடுதலாக ஐயர் அவர்கள் எழுதிய போராட்ட ஆரம்ப நாட்கள் குறித்த நூலில் பதியப்பட்ட நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டதாக வாசித்தபோது தோன்றியது.

அடுத்து, பயங்கரவாதத் தடைச்சட்டம், ஒருவரை எந்த விசாரணையுமின்றி 18 மாதங்களுக்கு சிறையில் வைக்கமுடியும் என்ற அடக்குமுறையை ஏவியது என்பதை பதிவுசெய்கிறார். தொடர்ந்து 1981ஆம் ஆண்டு யாழ் பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்டதைப் பார்த்த பிரபாகரன் மனம் பதைத்து அன்றிலிருந்து எப்பாடுபட்டேனும் என் மக்களை விடுவிக்கப் போராடியே ஆக வேண்டும் என்ற உறுதி என் நெஞ்சில் வேரூன்றியது என்று பின்னாளில் செவ்வியொன்றில் தெரிவித்ததை நினைவ+ட்டுகிறார்.

இயக்கத்தில் பிளவு ஏற்படும் நிலை வந்தபோது அனைவரையும் கூட்டி நிலைமைகளை விளக்கிவிட்டு, தான் இயக்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததானது பிரபாகரனின் பண்பு நலனுக்கு சான்றாகும் என்று குறிப்பிடும் ஆசிரியர், இதன் பின்னர் சாவகச்சேரி காவல்நிலையம் தாக்கப்பட்டது, முதல் மாவீரர் சங்கர் காயப்பட்டுப்பின்னர் சிகிச்சைக்காக மதுரை கொண்டுவரப்பட்டு அங்கு வீரச்சாவைத் தழுவியது, உயிர்போகும் நிலையிலும் தம்பி, தம்பி என்று தலைவர் பெயரை உரைத்தது, உயிர்த்தோழன் சங்கர் வீரச்சாவடைந்த நிலையில் தலைவர் அவர்கள் கதறி அழுதது என்பதான தான் நேரே பார்த்து அனுபவித்த அக்காலத்தை நினைவு கூர்கிறார் திரு. நெடுமாறன்.

1982இலேயே தமது கோரிக்கைகள் குறித்து அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் அந்நாடுகளின் தலைவர்களிடம் புலிகள் மனு வழங்கினார்கள் என்ற செய்தியை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழ. நெடுமாறன், தமது அரசு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்து, தமிழர் சொத்துக்களை எரித்து, இரண்டு இலட்சம் தமிழர்களை அகதியாக்கியபோது, ‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்களைப் பற்றி நான் இப்போது சிந்திக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைக்குறித்து எத்தகைய கருத்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியோ சிந்திக்கமுடியாது” என்று ஜெயவர்த்தனாவால் அறிவிக்கப்பட்ட கறுப்பு சூலை நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்து, தொடர்ந்த சிங்களப் பௌத்த இனத்துவேசம் துப்பும் நடவடிக்கைகள், தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான புறச்சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொடுத்தன என்பதைப் பதிவுசெய்கிறார்.

இந்த இனக் கலவரம் தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது, தமிழீழம் விடுதலைபெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தெளிவோடு, இயக்கங்களில் இணைவோரின் எண்ணிக்கை வகைதொகையற்றுப் பெருகின என்ற செய்தி இந்நூலில் வருகின்றது.

தொடர்ந்து 1985ஆம் ஆண்டு தமிழீழப் பகுதியெங்கும் சென்று பார்வையிட்டு அங்கு நடைபெறும் கொடுமைகளை அம்பலப்படுத்தும் வீpடியோப் பதிவுகளைக் கொண்டு வந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் காட்டியதாகக் கூறும் திரு. நெடுமாறன், அங்கு சென்றிருந்த வேளை, ஆண்களைப் போலவே பெண்களும் பயிற்சிபெற்று ஆயுதங்களை இலாவகமாகக் கையாளுவதைப் பார்த்து தான் ஆச்சரியடைந்ததாகவும், மருத்துவம், பிரச்சாரம் போன்ற பணிகளுக்கே பெண்கள் ஏற்றவர்கள் என்ற நிலையைப் பிரபாகரன் அடியோடு மாற்றியிருந்தார் என்றும் பதிவுசெய்து, விடுதலை வேட்கையும் உரிமை உணர்வும் கொண்ட பெண்போராளிகள் படையணியை அவர் உருவாக்கியுள்ள விதம் பாராட்டத்தக்கது என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண்களை பிரபாகரனே உருவாக்கியிருந்தார் என்றும் நெகிழ்கிறார்.

தொடர்ந்து வரும் அத்தியாயத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எப்படி ஒரு தேசிய இயக்கமாக, மக்கள் இயக்கமாக உருவெடுத்தது என்பதை இயம்புகிறார். தலைவர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெறும் ஆயுதம் தாங்கிய கும்பலாக இல்லாமல், திட்டவட்டமான, தெளிவான இலட்சியங்களை இலக்காகக் கொண்டு அவற்றுக்காகப் போராடும் ஒரு புரட்சி இயக்கமாக, தமிழீழ மக்களின் சுதந்திர இராணுவமாக எப்படிக் கட்டி அமைத்தார் என்பதைப் பற்றிய செய்திகளை பகிர்கிறார்.

இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தின் இணைபிரிக்க முடியாத அங்கம் ஆவார்கள் என்பதில் தலைவர் அவர்கள் உறுதி கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார். தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், மக்களிடையே தங்களுக்குள்ள செல்வாக்கை 1989, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் விடுதலைப்புலிகள் நிரூபித்துக் காட்டினார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். விடுதலைப்புலிகள் நேரடியாகப் போட்டியிடாவிடினும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் 15இடங்களையும், 2004ஆம் ஆண்டு 22 இடங்களையும் கைப்பற்றியதன் மூலம், ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளே தங்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதைத் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக நிலைநாட்டியதைப் பதிவுசெய்கிறார்.

தன் இளம் வயதிலேயே இலட்சிய நோக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டது, தாயக விடுதலை உணர்வைப் பெற்றது எவ்வாறு என்பது குறித்து தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே ‘சண்டே, இந்து, தி வீக், வெளிச்சம், பிபிசி ஆகிய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளில் தெரிவித்திருப்பதைப் பகிர்ந்திருக்கிறார். ‘இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி” என்ற அவரது மேற்கோளுக்கமையவே அவரது வாழ்வும் அமைந்தது என்பதைச் சுட்டியிருக்கிறார்.

தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களுடனான தலைவர் பிரபாகரன் அவர்களது நட்புறவு குறித்தும், முதன்முறையாக திருமதி. அடேல் பாலசிங்கம் அவர்கள் நான்கு இளைஞர்களுடனும் சில பெண்களுடனும் சென்னையில் வீடெடுத்துத் தங்கியிருந்தபோது சில விச மூளைகள் ஒரு வெள்ளைக்காரப்பெண்ணொருத்தி கொஞ்சம் பெண்களை வைத்து விலைமாதர் விடுதியை நடத்துகிறாள் என்று கதைகட்டிவிட, சுற்றுவட்டார மக்கள் வீட்டைக் கல்லால் தாக்கத் தொடங்கியதுபற்றியும், அங்கு அப்போது வந்த பொன்னம்மான் சீற்றம் அடைந்து கூட்டத்தை நோக்கிக் கத்தி, பிஸ்டலை எடுத்துக்காட்டி தாங்கள் யார் என்பது குறித்து விளக்கியபின் கூட்டத்தினர் ஒவ்வொருவராக மன்னிப்புக்கேட்டுக் கலைந்த, நாம் இதுவரை அறிந்திராத சில சம்பவங்களை நினைவுகூருகிறார் நெடுமாறன் ஐயா.

அடுத்து திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களைக் குறிவைத்துச் சென்னையில் நடந்த கொலைமுயற்சி குறித்தான நாம் அறியாத பல செய்திகளைப் பகிர்கிறார்.

இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்ட வரலாறு குறித்தும், இலங்கையில் இராணுவ ரீதியாகத் தலையிடுவது என்ற இந்திரா காந்தியின் இரகசியத் திட்டம் குறித்தும், இந்தியத்தலையீட்டின் உள்நோக்கம் குறித்தும் தான் அறிந்த, உணர்ந்த செய்திகளைத் தொடர்நது பகிர்கிறார்.

தலைவர் பிரபாகரன்-முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் ஆகியோரது முதல் சந்திப்பு குறித்தும், தமிழ்நாட்டின் அரசியலில் தலையிடுவதில்லை என்ற விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்தும், எம்ஜிஆர் அளித்த பேருதவி குறித்தும், தான் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த சம்மதிக்கமாட்டேன் என்று உறுதிகூறி அந்த வாக்குறுதியைக் கடைசிவரை எம்ஜிஆர் அவர்கள் காப்பாற்றியது குறித்தும் பதிவுசெய்து அக்காலகட்டத்தை நினைவுகூர்கிறார்.

தமிழகத்தில் கொளத்தூர் மணி அண்ணன் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்ட புலிகளின் பயிற்சி முகாம்கள், கோவை இராமகிருஸ்ணன் அவர்களின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட முகாம்கள், திராவிடர் கழகத்தின் கரூர் மாவட்டத்தலைவர் பழ. இராமசாமி அவர்கள் வழங்கிய ஜீப் வாகனம் குறித்தான செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார்.

தமிழர்கள் தமக்கென்று தனிநாடு அமைத்துவிடக்கூடாது என நினைப்பவர்களும் சிங்கள இந்திய ஏகாதிபத்தியத் தாசர்களுக்கு பிரபாகரனைப் பழிசாற்றுவதில் ஒன்றுசேர்ந்து கொள்கிறார்கள் என்றும் தமிழ்த் தேசிய எழுச்சியின் வடிவமாகத் தலைவர் அவர்கள் திகழ்வதே அவரைக் குறிவைத்து இவர்கள் அழிக்கத் திட்டமிடக் காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.

தமிழீழத் தேசியத் தலைவருக்கும் பிற இயக்கங்களுக்கும் உடனான உறவு குறித்துச் செய்திகளைத் தரும் திரு. நெடுமாறன், திரு பாலசிங்கம் அவர்களின் முயற்சியில் 1985 ஆம் ஆண்டு அனைத்து இயக்கத் தலைமைகளும் சந்தித்து அரசியல் ரீதியான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றுபட்டுச் செயற்படத் தீர்மானித்ததையும், அவர்களைப் பிளவுபடுத்தும் சதித்திட்டம் தீட்டிய ரா உளவு அமைப்பின் சீர்குலைவு வேலைகள், திம்புப்பேச்சுக்கள், மற்றும் இயக்க மோதல்களின் பின்னணி, டெலோ அமைப்புடனான மோதல் ஆகியன குறித்தும் பதிவுசெய்கிறார்.

தமிழகத்தில் புலிகளின் பயிற்சிமுகாம்களில் இருந்த தொலைத் தொடர்புக்கருவிகளைப்பறிமுதல் செய்ததும் அவற்றை மீளத்தரவேண்டும் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து அறவழியில் போராடியது, தொலைத்தொடர்புக்கருவிகள் மீளக்கிடைத்தபின்பே அறவழிப்போராட்டத்தைக் கைவிட்ட – எந்த வழியில் போராடினாலும் அதில் உறுதியாக இருக்கும் பாங்கு, இந்திரா காந்தி அம்மையாரின் மறைவும் அதன்பின்னரான ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை மாற்றம், புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலும் அது சிங்களத்துக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியும் இந்தியாவின் தலையீட்டை வேண்டிநின்ற பின்னணியையும், இதன் தொடர்ச்சியாக இந்திய இலங்கை உடன்பாடு ஏற்பட்டதையும் பதிவுசெய்கிறது நூல்.

ஆகஸ்டு 4ஆம் தேதி சுதுமலையில் பிரபாகரன் அவர்கள் இந்திய சிறீலங்கா ஒப்பந்தத்துக்குப்பின்னர் ஆற்றிய உரையில். ‘நமது போராட்டத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுவிட்டது. ஒரு வல்லரசு நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. மகத்தான தியாகங்கள் செய்து இரத்தம் சிந்தி உயிர் கொடுத்து நாம் உருவாக்கி வைத்த போராட்டத்தின் வடிவமே சிதைக்கப்படுகிறது. நம் மக்களைக் காப்பாற்றுகின்ற எமது ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லிவிட்டார்கள். எங்கள் கருத்தைக் கேட்காமல் மக்கள் கருத்தைக் கேட்காமல் இந்த ஒப்பந்தம் நம்மீது திணிக்கப்பட்டது. அதற்கு எங்கள் எதிர்ப்பை முழுமையாகத் தெரிவித்தோம். இனி எம் மக்களைக் காப்பாற்றுகிற பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, இந்திய அரசை எதிர்த்துப் போராடும் ஒரு துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்துவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்.

அதே நேரம் ‘இப்போது நம்முடைய இராணுவ வீரர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய இராணுவமும் விடுதலைப்புலிகளும் களத்திலே மோதிக்கொண்டு இருக்கிறார்கள். புரிந்ததா சூட்சுமம்? நான் எதற்காக இந்த ஒப்பந்தத்தைச் செய்தேன் என்பது இப்போது புரிகிறதா? என்கிறார் ஜெயவர்த்தனர்.. இந்நிகழ்வுகளை மக்கள் அறியப் பதிவுசெய்கிறார் திரு. நெடுமாறன்.

1987 செப்டம்பர் 16 அன்று இரவில் இந்தியத் தளபதி ஹர்கிரத் சிங்குக்கு ஒரு தகவல் வருகின்றது. தீட்சித் பேசுகிறார். உங்களைச் சந்திக்க பிரபாகரன் வருகிறாரா என்று கேட்கிறார் அவர். ஆம் மரியாதை நிமித்தம் சந்திப்பு நடக்கிறது என்கிறார் ஹர்கிரத் சிங். அவரைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள் டில்லியின் உத்தரவு என்கிறார் தீட்சித். அப்படியொரு துரோகத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று ஹர்கிரத் சிங்க பதில் சொல்கிறார். அதற்குப்பிறகு ஐந்துகோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாநிலை அறப்போர் தொடங்குகிறார். அதன்போது பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் அவ்வேளை தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பில் மரியாதையைத் தெரிவிக்க வந்திருக்கிறேன், எங்கள் அன்பைச் செலுத்த வந்திருக்கிறேன் என்று உறுதிகூற அங்கு விரைந்த நிகழ்வை இங்கே நினைவுகூருகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சியையும் கட்டமைப்பையும் பாழாக்கித் துரோகம் செய்தது இந்தியா என்பதற்கான சான்றுகள் நூல் முழுதும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. வரலாற்றுச்செய்திகளை ஆவணப்படுத்துவது என்ற கடமையை ஐயா நெடுமாறன் அவர்கள் மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.

தமிழகத்தில் அவரறிய நடைபெற்ற நிகழ்வுகள், அரசியல் செய்திகள், பிறர் அறியாத பல செய்திகளை மக்கள் அறியத் தந்திருக்கிறார். பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல. அவரே தமிழர் எழுச்சியின் வடிவம் என்பதைப் படிப்போர் உணரும் வகையில் நேர்த்தியாக நிறுவியுள்ளார் ஐயா நெடுமாறன். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் எம் தலைமுறையும், இனி வரும் தலைமுறைகளும் அறியவேண்டியது. பிரபாகரன் என்ற ஒரு தனி மனிதன் இந்த இனத்தின் எழுச்சியின் குறியீடு. பிரபாகரன் என்று இளைஞனின் வரலாறு, ஒரு விடுதலை இயக்கத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியாக, ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு இந்த நூல்.

அழகான வடிவமைப்பு, வண்ண ஒளிப்படங்கள், நிகழ்வுகளின் கோர்வை, பிரகடனங்கள், ஒப்பந்தங்கள் குறித்த இணைப்புகள் என்று பாராட்டும் வண்ணம் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். செவ்விகள், நிகழ்வுகள், அனுபவங்களின் பதிவாக இந்நூல் இருப்பதால் அத்தியாயங்கள் தொடர் வரலாறாகச் செல்லவில்லை. அதாவது 70ஆம் ஆண்டுகளின் பதிவுகளிலேயே 80கள், 90களில் நடந்தவற்றின் குறிப்புகள் வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்து அடுத்து இது, அடுத்து என்ன என்று சொல்லும் வகையில் ஆண்டுவாரியாக, தொடர்ச்சியான காலப் பதிவாக இது இல்லை. தமிழீழப் போராட்ட வரலாறு குறித்து அதிகம் தெரியாத வாசகர்களை இது கொஞ்சம் குழப்புவதாகவே அமைகிறது.

நிச்சயமாய் இது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது முழுமையான வாழ்க்கை வரலாறு அல்ல, ஆயினும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆவணம் இது. தமிழீழத் தேசியத் தலைவரே எமது இனத்தின் எழுச்சியின் வடிவம் என்பதைச் சரியான சான்றுகளுடன் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் நூல் இது என்பதனைத் தெரிவித்து இந்த நூல் நிச்சயம் தமிழர்கள் வீடெங்கிலும் இருக்கவேண்டும், இந்தத் தலைமுறையும் அடுத்த தலைமுறைகளும் இவ்வரலாற்றினை நிச்சயம் தெரிந்துவைத்திருக்கவேண்டும், அதற்குதவும் வகையில் மொழிமாற்றமும் செய்திடப்படவேண்டும் என்ற அவாவையும் தெரிவித்து, இந்த உரையை நிறைவுசெய்கிறேன்.

நன்றி.

 

தமிழீழ தேசியத் தலைவரின் புரட்சிகர சித்தாந்தம்

Posted on

anita-prabakaran interview

English Tamil Eelam National Leader Hon.V.Pirapaharan’s revolutionary socialism

Pdf tamil version   Anita Pratap’s interview V.Pirapaharan 1984 TAMIL

இக்கட்டுரையின் முழுக்கருத்திலும் உடன்பாடு இல்லாவிட்டாலும்  தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் உருவான புரட்சிகர சோசலிசத் தமிழீழம் என்ற சித்தாந்தம் காலப்பொருத்தம் கருதி வாசகர்களுக்காக பிரசுரம் செய்கிறோம்.

2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற அனைத்துலக செய்தியாளர் மாநாட்டில் திறந்தவெளிப் பொருளாதாரம் தொடர்பாக தமிழீழ தேசியத் தலைவர் தெரிவித்த கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு சோசலிச சித்தாந்தத்தை தலைவர் அவர்கள் கைவிட்டார் என்று உருத்திரகுமாரன் குழுவினர் கூறுவதுதான் இதில் இன்னும் வேடிக்கையாக உள்ளது.

தேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை-காணொளி

சோசலிசம் என்றால் என்ன?

இதற்கு எவ்வாறான வரைவிலக்கணத்தை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கொடுத்தார்?

திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகள் தொடர்பாக 2002ஆம் ஆண்டு தலைவர் அவர்கள் விடுத்த அறிவித்தல் அவரது சிந்தனையில் உருவான புரட்சிகர சோசலிச சித்தாந்தத்திற்கு முரணானதா?

இவற்றுக்கான பதில்களை நாம் வேறு எங்கும் தேடி அலையத் தேவையில்லை. இவற்றை தலைவர் அவர்களின் உரைகள் – செவ்விகள் போன்றவற்றிலும், தலைவரின் சிந்தனைக்கு தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வெளியீடுகளிலும், தலைவர் அவர்களின் தமிழீழ சுதந்திர சாசனமாக விளங்கும் ‘சோசலிசத் தமிழீழம்’ PDF ltte Freedom Charter for Tamil Eelam என்ற ஆவணத்திலும் நாம் காணலாம்.National Leader Hon.V.Pirapaharan’s Freedom Charter for Tamil Eelam

இவை பற்றி நாம் விரிவாக ஆராய்வதற்கு முன்னர் திறந்தவெளிப் பொருண்மியம் தொடர்பாக பொதுவுடமை (கம்யூனிசம்) சித்தாந்தத்தின் தந்தையாக விளங்கும் கார்ல் மார்க்ஸ், சோசலிசப் (சமவுடமை) புரட்சியின் பிதாமகனாக விளங்கும் விலாடிமிர் லெனின் ஆகியோரின் கருத்துக்களை இங்கு சுருக்கமாகப் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

திறந்தவெளிப் பொருண்மியம் என்பது இன்று முதலாளித்துவத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக காணப்படுவது மறுக்க முடியாதது. சந்தை வணிகத்தில் ஆட்சியாளர்களின் தலையீடுகளை எதிர்க்கும் இக்கோட்பாடே மேற்குலகின் தாராண்மை சனநாயக ஆட்சியமைப்புக்களுக்கு அடிநாதமாக விளங்குகின்றது. அதேநேரத்தில் கார்ல் மார்க்ஸ் கனவுகண்ட பொதுவுடமை சமுதாயமாக இருந்தாலும் சரி, லெனின் அவர்களால் தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்ட சமவுடமைப் புரட்சிச் சித்தாந்தமாக இருந்தாலும் சரி, இவற்றுக்கு அடிநாதமாகவும் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாடே விளங்குகின்றது. இதுதான் அரசியல் சித்தாந்தத்தில் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாடு வகிக்கும் நகைமுரண் வகிபாகமாகும்.

எவ்வளவு தூரத்திற்கு வர்க்க முரண்பாடுகளுக்கும், சுரண்டல்களுக்கும் திறந்தவெளிப் பொருண்மியம் வித்திடுகின்றதோ, அதே அளவிற்கு ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிக்கு வித்திடும் தன்மையையும் அது கொண்டுள்ளதை கார்ல் மார்க்ஸ் அவர்கள் புரிந்து கொண்டிருந்தார். இதனால்தான் 09.01.1848 அன்று பிறசெல்சில் நடைபெற்ற பிறசெல்ஸ் சனநாயக ஒன்றியத்தின் மாநாட்டில் உரையாற்றும் பொழுது திறந்தவெளிப் பொருண்மியம் தொடர்பாக பின்வருமாறு மார்க்ஸ் அவர்கள் குறிப்பிட்டார்:

“சகோதரத்தின் பெயரில் ஒரே தேசத்திற்குள் எவ்வாறான வகுப்பு வேறுபாடுகளை திறந்தவெளிப் பொருண்மியம் தோற்றுவிக்கின்றது என்பதை நாம் ஏற்கனவே நிரூபித்துவிட்டோம்.

அந்த வகையில் உலகில் உள்ள தேசங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் தன்மையையே திறந்தவெளிப் பொருண்மியம் கொண்டுள்ளது… இது பழமை
வாய்ந்த தேசங்களிடையே பிளவை ஏற்படுத்தி பாட்டாளி – முதலாளி வர்க்க முரண்பாடுகளை உச்சநிலைக்கு இட்டுச் செல்கின்றது.

ஒற்றை வார்த்தையில் கூறுவதானால் சோசலிசப் புரட்சிக்கு திறந்தவெளிப் பொருண்மியம் வித்திடுகின்றது.

இந்தப் புரட்சிகர எண்ணத்துடனேயே திறந்தவெளிப் பொருண்மியத்தை நான் ஆதரிக்கிறேன்.” இதே கருத்தையே 17.10.1921 அன்று திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாடுகளை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியத்திற்கான புதிய பொருண்மியக் கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றும் பொழுது லெனின் அவர்களும் வெளியிட்டார்.

திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைளை அமுல்படுத்துவதன் மூலம் புரட்சிகர பட்டாளி வர்க்கத்தை தோற்றுவித்து அதன் ஊடாக சமூகத்தில் புரட்சிகர பொருண்மிய மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்பதே லெனினின் கருத்தாக இருந்தது:

“நிகழும் போரில் யார் வெற்றி பெறுவார்கள், எவர் பயனடைவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள கேள்வி: நாம் திறந்து விடும் கதவாலும், மேலும் பல கதவுகளாலும் (எமது பிரசன்னத்தின் மத்தியிலும், எமக்குத் தெரியாமல் திறக்கும் கதவுகளாலும்) நுழையும் முதலாளிகளா? அல்லது ஆட்சியிலிருக்கும் பாட்டாளி வர்க்கமா? இதனால் பயனடையப் போகின்றது என்பதுதான் கேள்வி… அதேநேரத்தில் முதலாளித்துவம் பயனடையும் பொழுது தொழில் உற்பத்தியும் வளர்ச்சி கண்டு பாட்டாளி வர்க்கம் பலமடைவதற்கு வழிகோலும் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.”

அதாவது திறந்தவெளிப் பொருண்மியம் சரியான முறையில் கையாளப்பட்டால் அது சமூகப் புரட்சிக்கு வித்திட்டு வர்க்க முரண்பாடுகளும், சுரண்டல்களும் நீங்கிய சுபீட்சமான சமுதாயம் தோற்றம் பெறுவதற்கு வழிகோலும் என்பதே கார்ல் மார்க்ஸ் அவர்களினதும், விலாடிமிர் லெனின் அவர்களினதும் கருத்தாக இருந்தது.

சரி, இது பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்.

1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த ‘சண்டே’ எனப்படும் இந்திய ஆங்கில சஞ்சிகை தலைவரின் சித்தாந்தம் பற்றி வினவியது. அதற்கு ஒற்றை வசனத்தில் தலைவர் பதிலளித்தார்:

“கேள்வி: உங்களின் சித்தாந்தக் கோட்பாடு என்ன?

பதில்: புரட்சிகர சோசலிசம்.

கேள்வி: எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன்மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான சனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புக்கள் கிடைக்கின்ற ஒரு சுதந்திர சமூகமாகத் தமிழீழம் அமையும்…”

இச்செவ்வி மூலம் 1984ஆம் ஆண்டிலேயே ஒரு செய்தியை தெளிவாக தலைவர் அவர்கள் எடுத்துரைத்தார். அதாவது தனது புரட்சிகர சோசலிச சித்தாந்தம் என்பது ஈழத்தமிழர்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் திறந்த வெளிப் பொருண்மியக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதே அது.

திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கு அடிநாதமாக விளங்குவது மனிதவுரிமைகள் என்று மேற்குலக நாடுகளில் போற்றப்படும் மனித சுதந்திரமும், லிபெற்றி (liberty) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தனிநபர் உரிமைகளும் ஆகும்.

தலைவர் அவர்களின் செவ்வி வெளிவருவதற்கு ஓராண்டுக்கு முன்னர் 1983ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வெளியீட்டு வாரியத்தின் பதிப்பாக ‘அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை பாலா அண்ணை வெளியிட்டார். அதில் தலைவரின் புரட்சிகர சோசலிசம் தொடர்பாகவும், அதில் பொதிந்துகிடக்கும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தையும் பின்வருமாறு அவர் விளக்கினார்:

“எமது இயக்கத்தை ஆரம்பித்து, அதனைக் கட்டுக்குலையாது கட்டுப்பாட்டுடன் கட்டி வளர்த்து வரும் பெருமை, எமது தலைவர் பிரபாகரனையே சாரும். இவரே இன்று எமது இயக்கத் தலைவராகவும், தளபதியாகவும் இருந்து கொண்டு இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.

இன ஒடுக்குமுறையால் எழுந்த சமூக, அரசியல், பொருளாதாரப் புறநிலைகள் தமிழ்த் தேசியவாத எழுச்சியை ஈழத்தமிழரிடையே வலுப்பெறச் செய்தன. ஆரம்பத்தில் அதே தேசியவாதத்தால், தேசாபிமானத்தால் உந்தப்பட்டு ஆயுதப் போராட்டத்தில் குதித்த நாம், காலப்போக்கில் ஒரு புரட்சிகர சித்தாந்தத்தையும், அதனால் நெறிப்படுத்தப்பட்ட கொள்கைத் திட்டம் – செயற்திட்டத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் உணர்ந்து கொண்டு, ஒரு விடுதலை இயக்கத்தை கட்டுக்கோப்பாக அமைத்து, ஒரு புரட்சிகர கொள்கைத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கும், நாம் வரித்துள்ள ஆயுதப் போராட்ட வடிவங்களுக்கு வலுவேற்றி தேசிய விடுதலையுடன் சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்துச் செல்லவும், மார்க்சி-லெனினிச தத்துவத்தை இன்றியமையாததாக ஏற்றுக் கொண்டோம். இந்த அரசியல் விழிப்புணர்வால் நாம் புரட்சிகர சோசலிசத்தை எமது புரட்சிச் சித்தாந்தமாக வரித்துக் கொண்டோம்.“

அதாவது, சரியான முறையில் கையாளப்படும் திறந்தவெளிப் பொருண்மியம் எவ்வாறு சமூகப் புரட்சிக்கு வித்திட்டு சமூகத்தில் சுபீட்சமான சூழலுக்கு வழிவகுக்கும் என்று கார்ல் மார்க்ஸ், விலாடிமிர் லெனின் ஆகியோர் கருதினார்களோ அதே வழியிலேயே தனது புரட்சிகர சோசலிச சித்தாந்தத்திற்குள் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும் உள்ளடக்கினார்.

தலைவர் அவர்களின் புரட்சிகர சோசலிசம் என்பது வைதீக மார்க்சியவாதிகள் முன்வைத்த உழுத்துப் போன அரச இயந்திரத்தின் பிடிக்குள் சிக்கித் திணறும் பொருண்மியக் கொள்கைகளை அடியோடு நிராகரித்தது. அதேநேரத்தில் பொருண்மிய சுதந்திரத்தின் போர்வையில் சமூகத்தில் சுரண்டல்களும், முரண்பாடுகளும் வலுவடையும் சூழல் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் தலைவர் அவர்களின் புரட்சிகர சோசலிச சித்தாந்தம் அமைந்தது.

அதாவது தலைவரின் புரட்சிகர சோசலிசம் என்பது அரச கட்டுப்பாடுகள் இன்றி தமிழீழ மக்கள் சுதந்திரமாக தமது பொருண்மிய வாழ்வைக் கட்டியெழுப்பும் விதத்திலும், அதில் காத்திரமான பங்கை புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் முதலீட்டாளர்கள் வகிப்பதற்கு இடமளிக்கும் வகையிலும் அமைந்தது. இதுதான் மலரும் சோசலிச தமிழீழத்தில் மனித சுதந்திரத்திற்கும், தனிமனித உரிமைகளுக்கும் உத்தரவாதம் இருக்கும் என்று 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைவர் அவர்கள் விடுத்த அறிவித்தலின் அர்த்தபரிமாணமாகும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் இந்நிலைப்பாடு பாலா அண்ணையால் தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தலைவரின் சுதந்திர சாசனமாக விளங்கும் சோசலிச தமிழீழம் எனும் ஆவணத்தில் உள்ளது. அதில் திறந்தவெளிப் பொருண்மியம் தொடர்பாகவும், புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களின் பங்கு பற்றியும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“மத்திய அரசின் குறுகிய வட்டத்திற்குள் அல்லாது சனநாயக ரீதியில், சுயாதீனமான முறையில் தேசிய பொருளாதாரத் திட்டம் வகுக்கப்படுவதையும், செயற்படுத்தப்படுவதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஊக்குவிக்கும். தமிழீழத்தின் சமூக-பொருளாதார புனரமைப்பில் பொதுமக்கள் சகல மட்டத்திலும் பங்குகொள்ள எமது விடுதலை இயக்கம் வாய்ப்பளிக்கும். தேசிய செல்வம் சமத்துவமாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை உறுதியளிக்கும் அதேவேளை, தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளில் வெளிநாடுகளில் வதியும் தமிழீழத் தேசாபிமானிகளுக்கு சகல சந்தர்ப்பங்களும் அளிக்க எமது இயக்கம் தீர்மானித்திருக்கின்றது.”

இவ்வாறு திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை தன்னகத்தே கொண்டுள்ள தலைவரின் சுதந்திர சாசனத்தின் ஆங்கில வடிவம் பின்வருமாறு தெரிவிக்கின்றது:

The LTTE will not adopt a rigid centralised planning but opt for liberalisation and democratisation in the framing and implementing national economic programmes. LTTE will encourage people’s participation at all levels in the socio-economic transformation of the nation. Concept of self-management and self-reliance will be governing principles in shaping policies towards economic progress. While ensuring equal distribution of national wealth, the LTTE will provide incentives for expatriate Tamil patriots to contribute to the development of the national economy.”

தலைவரின் சுதந்திர சாசனமாக விளங்கும் சோசலிச தமிழீழம் என்ற ஆவணத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் மேற்கண்ட பகுதியில் குறிப்பிடப்படும் லிபரலைஸ்சேன் (liberalisation) என்ற சொற்பதம் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை உள்ளடக்கிய புரட்சிகர சோசலிச சித்தாந்தத்தையே விளித்து நிற்கின்றது. இதுவே தனது சுதந்திர சாசனம் வெளியிடப்பட்டு பதினேழு ஆண்டுகள் கடந்த பின்னர் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற அனைத்துலக செய்தியாளர் மாநாட்டில் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகள் தொடர்பாக தலைவர் வெளியிட்ட கருத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

இதனைத்தான் ‘நாங்கள் திறந்தவெளிப் பொருண்மியத்தை ஆதரிக்கின்றோம் (We are for free trade)’ என்று தலைவரின் கருத்தை ஆங்கிலத்தில் பாலா அண்ணை மொழிபெயர்த்துக் கூறியதன் அர்த்தமாகும்.

உருத்திரகுமாரனின் நாடுகடந்த குழுவின் பரப்புரை செய்வது போன்று புரட்சிகர சோசலிச சித்தாந்தத்தைக் கைவிட்டு திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை தலைவர் தழுவிக் கொள்ளவில்லை. மாறாக தலைவரின் புரட்சிகர சோசலிசச் சித்தாந்தம் என்பது திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை உள்ளடக்கியதாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்ற நாள் முதல் இருந்து வந்துள்ளது.

இதனால்தான் 1980களில் யாழ்ப்பாணக் குடாநாடு தமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொழுது சுயசார்பு பொருண்மியத்திற்கு அடித்தளமிட்ட அதேவேளை, திறந்தவெளிப் பொருண்மியத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊக்குவித்தார்கள். இதனைத்தான் 1990ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை நிர்வாகத் தலைநகராகக் கொண்டு தமிழீழ நடைமுறை அரசை நிறுவிய பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தார்கள்.

இதுதான் 1995ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் மையம் வன்னிக்கு நகர்ந்த பொழுதும் நடந்தது. இதுதான் 2002ஆம் ஆண்டு போர்நிறுத்தம் ஏற்பட்டதும் கிளிநொச்சியை நிர்வாகத் தலைநகராகக் கொண்டு தமிழீழ நடைமுறை அரசை தமிழீழ விடுதலைப் புலிகள் விரிவாக்கம் செய்த பொழுதும் நடந்தது.

அதாவது சோசலிச தமிழீழம் என்ற சுதந்திர சாசனத்தை எழுதுவதோடு மட்டும் தலைவர் நின்றுவிடவில்லை. தனது சுதந்திர சாசனத்தில் குறிப்பிட்டப்பட பொருண்மிய விடுதலை, பெண் விடுதலை, சாதிய விடுதலை, மத சார்பின்மை, மலையக தமிழர்களின் உரிமைகள் உட்பட பலதரப்பட்ட திட்டங்களை தனது நெறியாட்சியில் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசில் தலைவர் அவர்கள் நடைமுறைப்படுத்தினார்.tamileelam freedom charter

http://tamileelamfreedomcharter.org/

தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்

Posted on Updated on

தமிழர்களின் போரிடும் ஆற்றலை உலகறியச் செய்து, உலகை வியக்க வைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போரிடும் அற்றலை நன்கு அறிந்த உலக வல்லரசான அமெரிக்கா 6 மாதங்களுக்கு முன் தனது பாதுகாப்புப் படையில் தமிழர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது.

Nilal Cholai

பல வழி ஆராய்ச்சிகளின் அடிப்படையிலேயே இத்தீர்மானத்தை எடுத்திருந்தது அமெரிக்கா. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் இந்நூற்றாண்டில் தமிழர்களின் போரிடும் ஆற்றலை உலகறியச் செய்தமைக்கான யுத்த தளங்களாக தமிழீழத்தில் நடைபெற்ற 1ம், 2ம், 3ம் மற்றும் 4ம் கட்ட விடுதலைப் புலிகளின் மண் மீட்புப் போராட்டங்களை குறிப்பிடலாம்.

சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் அமெரிக்கா முதல் பல வல்லரசுக்கள் சிறிலங்கா அரசிற்கு பல வகையிலான இராணுவ உதவிகளையும் வழங்கியிருந்தன அவற்றைக் கொண்டு சிங்களத்தினால் அன்று விடுதலைப் புலிகளை விழ்த்த முடியவில்லை. மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் போரிடும் ஆற்றல் இவற்றை தகர்த்து சிங்களத்திற்கு மட்டுமல்லாமல் பல வல்லரசு நாடுகளையும் மிரளவைத்து அவர்களை உலுக்கியிருந்தது என்றால் அது மிகையாகாது.
அன்று புலிகளின் அடியை சிங்களம் மட்டுமல்ல மறக்கவில்லை, அமெரிக்காவும் மறந்துவிடாதமையினால் தமிழர்களின் வீரத்தினை தன்னொடு இணைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்கா. தமிழீழ விடுதலைப் புலிகளின் படைகொண்டு தமிழரின் வீரத்தினை இவ்வுலகிற்க்கு அறியச் செய்திருக்கிறார் தமிழிழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

கனவில் புலிகளைக் கனவாக கண்டு அச்சத்தினால் மிரண்டு எழுந்து கொள்பவர்கள் சிங்களப் படையினர், விடுதலைப் புலிகளின் படையினருடன் போரிட முடியாத நிலையில் பல மைல்களுக்கு போர்க்களத்தை விட்டு தப்பியோடியவர்கள் சிங்களப் படையினர், சிலர் ஓட முடியாத நிலையில் பனை மரத்தில் ஏறி இருந்தோம் என்று சிங்களப் படையினர் கூறிய வரலாறும் உண்டு.
இவ்வாறு சிங்களக் கோழைகளில் வரலாறுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. சிங்களக் கோழைகளும் வல்லரசுகளும் ஒன்று கூடி தமிழீழ விடுதலைப் புலிகளை விழ்த்துவதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது அவர்களை ஆயுதங்கள் இல்லாதவர்களாக முடமாக்க வேண்டும் என்ற கோழைத்தனமான திட்டத்தையே செயல்படுத்தினார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் படையின் பலமாக பீரங்கிப் படையணி இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதியாக பல ஆண்டுகளாக பணியாற்றிய சரத் பொன்சேகா பல முறை கூறிவந்திருக்கிறார். அவர்களின் முதல் திட்டம் புலிகளுக்கு அயுதத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலமாகவே புலிகளை விழ்த்த முடியும் என்ற கோழைத்தனமான சிந்தனையும், மற்றும் தடைசெய்யப்பட்டவற்றைக் கொண்டு ஆயுதங்களாக பயன்படுத்தினால் மட்டுமே தான் புலிகளை விழுத்த முடியும் என்ற கோழைத்தனமான எண்ணமும், தமிழினத்தை அழிக்கும் திட்டமுமே சிங்களத்திடம் குடிகொண்டிருந்தது.

புதுக்குடியிருப்பு மற்றும் எனைய இடங்களில் நடைபெற்ற மோதல்களில் புலிகளை விழுத்த முடியாத நிலை சிங்களத்திற்கு ஏற்பட்ட போது தடைசெய்யப்பட்டவற்றை ஆயுதங்களாக பயன்படுத்தியிருந்தது சிங்களம். இது தான் சிங்களத்தின் வீரத்தின் அழகாகும். உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போராடி வெல்ல முடியாத கோழைகள் நாங்கள் என்பதையே சிங்களம் இதில் இருந்து உணர்த்தியது. இந்தச் சிங்களக் கோழைகளைத் தான் அண்மையில் ராமரின் வழித் தோன்றலில் வந்தவர்கள் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் அத்வானி கூறியிருந்தார்.

போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகள் கிடைத்தாலும் விடுதலைப் புலிகளுடன் நேர்வழியின் ஊடாகப் போரில் தங்களால் வெற்றியை பெறமுடியாது என்ற அழுத்தமான நம்பிக்கையே சிங்களத்திடம் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றலை நேர்வழியின் ஊடாக தோற்கடிக்க முடியாது என்பது சிங்களம் நன்கு உணர்ந்திருந்தது. இதனையே உலகவல்லரசான அமெரிக்காவும் மற்றைய நாடுகளும் உணர்ந்திருந்தன. ஆனால் புலிகள் நேர்வழிப் போரினையே நடத்தினார்கள்.

தமிழினத்தை தலை நிமிரச் செய்து, தமிழரின் வீரத்தினை உலகறியச் செய்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள், இதனை தமிழ்க்குலம் காக்க அவதரித்த தமிழீழத் தேசியத் தலைவர் இந்நூற்றாண்டில் நிகழ்த்திக் காட்டினார்.

தாய்மண் மீதும், தமிழ் மக்கள் மீதும் பிரபாகரன் அவர்கள் அதிக பற்றைக் கொண்டிருந்தார். அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி, பிரபாகரன் என்ற நாமம் இன்னும் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது என சிங்கள இனத்தவரான விக்கிரமபாகு கருணாரட்ன சென்றவருடம் கூறியிருந்தார். அதி உயரிய உன்னதமான அர்ப்பணிப்புக்களை தமிழீழம் என்ற இலக்கிற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் செய்திருந்தார்கள், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஏற்றி வைத்த தீ எரிந்துகொண்டு தான் இருக்கிறது. அது தமிழீழம் என்ற இலக்கை அடையாமல் அது அணையாது.

-விஸ்வா

சரித்திரத்தின் சரித்திரம் மேதகு வே.பிரபாகரன் -04 – LOTUS தொலைக்காட்சி

Posted on

Prabhakaran a Leader for all Season frontLotus TV தனது சரித்திரத்தின் சரித்திரம் தொடரின், மேதகு வே.பிரபாகரன் பகுதி 4 தொகுப்பை 10-2-2013 இரவு 9.00 மணிக்கு வெளியிட்டது. அதன் காணொளி வடிவம் இது. லோட்டஸ் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள்