தமிழீழ படையணி

தேசியத் தலைவர் பிரபாகரனோடு 2009 மே 17 ஆம் திகதி வீரச்சாவைடைந்த மெய்ப்பாதுகாவலர்கள் !

Posted on Updated on

ராதா வான்காப்புப் படையணி

முதலாம் , இரண்டாம் வட்டப்பொறுப்பாளர்கள்

சுவர்ணன்

சிலம்பரசன்

செங்கை

பிரிகேடியர் ரட்ணம் மாஸ்ரர் –றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை

சேந்தன்

குறிஞ்சிக்குமரன்

ஈழவாணன்

வண்ணன்

இகைவேந்தன்

தென்றல்

பெருவாணன்

நக்கீரன்

அழகரசன்

தயாளன்

ஈகை

விடியல்

கதிரேசன்

மே மாதம் முதாலம் வாரம் வீரச்சாவைத் தழுவியவர்கள்

வள்ளுவன்

இளங்கோ

புரட்சி

காசி

அறிவுமாறன்

வள்ளல்

பொண்ணன்னன்

முரசு

தென்னவன்

மொழியறிவு

அய்யன்னா மாஸ்ரர்

—-

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பமும் முடிவும்

Posted on

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். “புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோ- ட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார்.

இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் “கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்” என்று கூறினார்.

காணொளி:  போராட்டவரலாறு விடுதலைத் தீப்பொறி


திரு.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்

Prabha childhoodயாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர் -கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது.

காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார். வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் திருமேனியார் குடும்பமாகும்.

இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர்.

இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.

பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள ‘சிதம்பரா கல்லூரியில்” 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப்பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது.

தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன. அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. சிங்கள இனவெறியரால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடு, அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம்,

இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.

இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் ~கரிகாலன்~ என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது.

தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் ~தரப்படுத்தல் கொள்கை~ ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை.

பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார். ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் இரகசிய இயக்கத்தில் இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிரு க்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார்.

வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். “உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். உன்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார்.

*************

தலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார்.

  • சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை, துரோகிகளாக அழித்தல்.
  • தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல்.

இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து, அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.

1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் ‘தமிழின அழிப்பு” ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார்.

1978 சித்திரை 7ம் நாள், கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1978 சித்திரை 25ம் நாள், முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர்.

1978 வைகாசி 19ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்” சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது.

1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் Nஐ.ஆர். nஐயவர்த்தனா அரசு “புதிய அரசியலமைப்பை” உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது.

1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர்.

1979 ஆடி 20ம் நாள் Nஐ.ஆர்.nஐயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை” அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும்.

இதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கிpல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (Nஐ.ஆரின் மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் Nஐ.ஆர். nஐயவர்த்தன.

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில், தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார். இதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு, இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94,000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது.

இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.

ஆரம்பகால புரட்சித் தோழர்கள்

பிரபாகரன் அவர்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவாகளாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கதைதை ஆரம்பிக்கும்போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது, யதார்த்தமானது.

ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்

1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.

1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் Nஐ.ஆர். nஐயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர்.

1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.

1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.

1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ‘பாதுகாப்பு மாநாடு’ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.

1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.

1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை, நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு Nஐ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது. 1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.

இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர், தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து, விடுதலை பெற்ற தமிழீழத்தில், தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.

தமிழீழப் போர் 1(ஆவணி 1984 – ஆடி 1987)

ஆடி 1983இல் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தனர். விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் பன்மடங்காகப் பெருகின. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளைப் புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி, பாரிய கெரில்லா இராணுவப் பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவாக்கம் செய்தார்.

தமிழீழப் போர் ஒன்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் இந்த ஆடி 1983 இன அழிப்புடன்தான் ஆரம்பமாகின்றது. இந்தக் காலகட்டத்தில் புயலின் மையமாக நின்று, ஈடுகொடுத்து, எல்லா எதிர்ப்பியக்கத்திற்கும் தமிழீழ மக்களின் வீரவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்.

இந்தியத் தலையீடு

இதுவரை காலமும் இலங்கைத் தீவை அதிரவைத்த சம்பவங்களையும் அதன் வரலாற்றுப் போக்கினையும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அரசியல், இராணுவ நகர்வுகளையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்த இந்திய அரசு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் ஆடிக்கலவரத்தை ஏதுவாகக் கொண்டு இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிட முடிவு செய்தது.

1983 ஆவணியில், இலங்கைத் தீவை தனது பூகோள-கேந்திர ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர இந்திய அரசு முடிவு செய்தது. தமிழ்ப் போராளிகளுக்கு ஆயதமும்பயிற்சியும் அளித்து ஆயத எதிர்ப்பயிக்கத்தைத் தீவிரமாக்கி, சிங்கள அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, தனது பூகோள நலன்களை சாதித்துக் கொள்ள இந்தியாவின் உளவுப்பிரிவான ~றோ~ மூலம் திட்டமிட்டு செயற்பட்டது. அதேநேரத்தில் பல தமிழ் இயக்கங்களுக்குக் கூடிய அளவு ஆயுதங்களும் பயிற்சியும் பண உதவியும் அளித்துவிட்டால் இராணுவ சம பலத்தை மாற்றியமைத்து ‘தமிழீழ விடுதலை’யில் உறுதியாக நிற்கும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் அல்லது ஒழித்து விடலாம் எனவுந் திட்டமிட்டு இந்திய அரசு செயற்பட்டது. ஆனால் இவை யாவற்றையும் நன்கு அவதானித்து அதற்கு ஏற்ப திட்டமிட்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு செய்துவந்த சிறு உதவிகளைப் பெற்றுக்கொண்ட அதே நேரத்தில் தன் ஆளுமையால் எவருக்கும் தெரியாமல் குறிப்பாக இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைக்கும் தெரியாமல் விடுதலைப் போருக்குத் தேவையான பல ஆயத தளபாடங்களையும் வேறு பொருட்களையும் தமிழீழத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

மாசி 24, 1983இல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தொடர்ச்சியாகவும் தீர்க்கமாகவும் விடுதலைப் புலிகளின் கெரில்லா அணியினர் பல அதிரடித் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றனர். இதனால் கொதிப்படைந்த இராணுவம் அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்தது. தலைவர் பிரபாகரனின் தலைமையில் விடுதலைப் புலிகள் புரிந்து வந்த போராட்ட சாதனைகளைக் கண்டு தமிழீழ மக்கள் பூரிப்படைந்தனர்.

ஆனால் இந்திய அரசோ கலக்கம் அடைந்திருந்த நிலையில் ஐப்பசி 31, 1984 இல் இந்திரா காந்தி தன் மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அரசியல் அனுபவம் குறைந்த விமான ஓட்டியான இந்திரா காந்தியின் மூத்த மகன் ~ராஐPவ் காந்தி~ இந்தியப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் இலங்கைத் தீவின் இனப் பிரச்சினை பற்றியும் தமிழீழ விடுதலைப் போர் பற்றியும் குறிப்பாக தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் தவறான எண்ணங்கள் கொண்டு செயற்படத் தொடங்கினார். தமிழீழ மக்களின் உயிர்வாழும் உரிமை இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசால் பறிக்கப் பட்டுள்ளது என்ற உண்மையைப் புரிய மறுத்த ராஐPவ் காந்தி பதவியேற்ற காலம் முதல் தமிழீழ விடுதலைக்கு எதிராக, சிறீலங்கா அரசுக்குச் சார்பாகச் செயற்படத் தொடங்கினார். இதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழிநடத்தி வந்த தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் குறிப்பாக ராஐPவ் காந்திக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது முப்பத்தொராவது வயதில் தமிழீழம், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனி என்ற பெண்ணை 1984ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திம்புப் பேச்சுவார்த்தை

ராஐPவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில் கெரில்லா நடவடிக்கைகளில் 1985 ஆனி 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஆடிமாத முற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின. சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக் கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சு வார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது. ஆனால் இந்தியா பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறியிருக்கிறார். “எமக்கு இந்தியாவின் உதவியும் நல்லெண்ணமும் அவசியம். அதே வேளையில் இந்தியா தனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம் விருப்பவில்லை. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழு உரிமையும் எமது மக்களுக்கு உண்டு”என்று.

ஆனால் இந்திய அரசும் அதன் பிரதமரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அப்போதைய தமிழக முதல்வருக்கு அழுத்தங்களைக் கொடுத்து, 1986ம் ஆண்டு ஐப்பசியில் தமிழக காவற்துறை மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த தகவல் தொடர்புச் சாதனங்களைப் பறித்தார்கள். தலைவர் பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை நடத்துவது போன்று நடத்தினார்கள்.

சாகும்வரையிலான உண்ணாவிரதம்

இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது.ஆயுதப் போராட்ட இயக்கத்தின் தளபதி, சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான தலைவர் பிரபாகரன், அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர், ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ம் நாள் தொடங்கினார். அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்துகொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப் பட்டது. இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள்.

பத்திரிகையாளர்-உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமே, ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள்.
தலைவர் பிரபாகரன்-
உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவேதான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்” என்றார்.

பெங்களுர் மாநாடு

இதற்குப் பின் பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் சனாதிபதி Nஐ.ஆர் nஐயவர்த்தனா வந்தபோது அவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற ரீதியில் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கலாம்~~ என்று Nஐ.ஆர். nஐயவர்த்தனா சொன்னதாக தலைவர் பிரபாகரனிடம் இந்திய அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தலைவர் பிரபாகரனோ “வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இருப்பதனை ஒன்றாக இணைக்கவேண்டும் என்பதனை நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது, இரண்டை நாலாக கூறுபோடும் யோசனையை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?” என்று கூறி நிராகரித்து விட்டார்.

அத்துடன் இந்த பெங்களுர் பேச்சுவார்த்தையில் தான், தலைவர் பிரபாகரனுக்கு முதல் அமைச்சர் பதவி தருவதாக Nஐ.ஆர். nஐயவர்த்தனா இந்திய அரசுக்கூடாக தெரிவித்தார். இதற்கு தலைவர் பிரபாகரன் “இது ஒரு மாயவலை, தமிழ் இனத்தை அழிப்பதற்கு வேறு வகையாகப் பின்னப்பட்ட சதிவலை. அதிகாரங்கள் எதுவுமற்ற, நினைத்தால் சனாதிபதியால் கலைக்கக் கூடிய மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யமுடியாத பொம்மைப் பதவிதான் முதல் மந்திரிப் பதவி” என்று கூறி அதனைத் தூக்கி எறிந்துவி;ட்டார்.

தமிழீழம் திரும்புதல்

தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேசவரும்போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும்வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ம் ஆண்டு தை 3ம் நாள் தமிழீழம் திரும்பினார்.

தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில், இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் “இரட்சகர்” என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது.

1987 வைகாசி 1ம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில், “நாம் போராடி, இரத்தம் சிந்தி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசுதான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம். இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்” என்றார்.

தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு

1987ம் ஆண்டு ஆடி 24ம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து ‘இந்தியாவின் பிரதமர் ராஐPவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக’ கூறித் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து செல்ல முயன்றார்கள், அவசரப்படுத்தினார்கள்.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கு தலைவர் பிரபாகரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ‘இன்று தமிழ் மக்கள் தங்கள் இலட்சியத்தை வென்று எடுக்கும் ஒரு தலைமையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறுதி யிட்டுக் கூறுகின்றேன். நீங்கள் எனக்கு அளித்துவரும் பொறுப்புக்களை நான் நேர்மை- யாகவும் உண்மையாகவும் உறுதியுடனும் செய்வேன் என நம்புகின்றேன். தற்காலத்தில் காணப்படும் இடைக்கால தீர்வுகள் எமது பிரச்சினையின் தீர்வாக அமையாது. எனவே தமிழ் மக்களின் நிரந்தரமான, நிம்மதியான, சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நிரந்தர தீர்வுக்காகவே நான் பாடுபடுகின்றேன். இத் தீர்வு தமிழீழம் என்றே நான் நம்புகிறேன். இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தியின் விசேட அழைப்பின் பேரிலேயே நான் தமிழீழத்தைவிட்டு உத்தியோக பூர்வமாக இந்தியா செல்கின்றேன்’ என்று கூறிவிட்டு இந்திய அரசு அனுப்பி இருந்த இராணுவ கெலிகொப்டரில் டில்லிக்கு புறப்பட்டார். போகும் வழியில் தமிழகத்தின் முதலமைச்சர் எம்.ஐp. ஆரை சந்தித்துப் பேசினார். அப்போதும் எதற்காக இந்த அவசர அழைப்பு என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. டில்லி சென்ற தலைவர் பிரபாகரனையும் அவரது ஆலோசகர்களையும் ‘அசோகா ஹொட்டலில்’ தங்க வைத்தனர்.

இந்தியாவின் சிறீலங்காவுக்கான தூதுவர் தீட்சித், இந்திய வெளிநாட்டுத்துறைச் செயலாளர் மேனன் உட்படப் பல அதிகாரிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து இந்தியாவும் சிறீலங்காவும் செய்து கொள்ளவிருக்கும் ~ஒப்பந்தம்~ பற்றி முதன்முதலாகத் தெரிவித்தார்கள். இதைக் கேட்டதும் தலைவர் பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார். ஒப்பந்தத்தின் பிரதிகளை அவரிடம் கொடுத்துவிட்டு உடனே திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினை ஏற்கமுடியாது என்று தலைவர் பிரபாகரன் மறுத்தார். தலைவர் பிரபாகரனை சம்மதிக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தலைவர் பிரபாகரன் உறுதியாக ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார். இந்தியப் பிரதமர் சந்திக்க விரும்புவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள், பிரதமரும் தலைவர் பிரபாகரனும் சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை. இடையில் நான்கு நாட்கள் பறந்தோடின. தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்ததும் தமிழகத்தில் இருந்த இந்தியாவின் அடிவருடிகளான மற்றைய தமிழ் குழுக்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். சொல்லி வைத்தபடியே ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தி அறிவித்தார். யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆடி 29ம் நாள் கொழும்பு செல்லப் போவதாகவும் அறிக்கை விட்டார்.

இதற்குப் பின்னர் தலைவர் பிரபாகரனை இந்தியப் பிரதமர் சந்தித்தார். அப்போது தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்திலுள்ள பலகுறைகளைச் சுட்டிக் காட்டினார். ஆனால் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகப் பொய்யான செய்திகள் இந்திய அதிகாரிகளால் தொடர்பு சாதனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. உடனே தலைவர் பிரபாகரன் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த அசோகா ஹொட்டலைச் சுற்றி ‘கறுப்புப் பூனைகள்’ என்ற இந்திய கொமாண்டோப் படைப்பிரிவினர் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.

இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்

1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றி, தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப் போரை வழிநடத்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் ஒப்புதல் இன்றி அவரை டில்லியில் ஹொட்டலில் பூட்டி வைத்துவிட்டு, பிராந்திய வல்லரசு என்ற இறுமாப்புடன் இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தி சிறீலங்காப் பிரதமர் Nஐ.ஆர். nஐயவர்த்தனாவுடன் இந்தியாவின் பூகோள நலனுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இந்திய இராணுவம் தமிழீழப் பகுதிகளுக்கு ‘அiதிப்படை’ என்ற பெயரில் அனுப்பப்பட்டது.
ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியா திரும்பிய இந்தியப்பிரதமர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துச் சில உறுதிமொழிகளை அளித்தார். இந்த உறுதி மொழிகளைப் பெற்றுக் கொண்ட தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பினார்.

சுதுமலைப் பிரகடனம், திலீபனின் தியாகச்சாவு

இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம்.

தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை.தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

இதன் பின்னர் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.ஆனால் இந்தியப் பிரதமர் ராஐPவ்காந்தி, தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாது இழுத்தடித்து வந்ததோடு, தமிழ்த் துரோகக் குழுக்களை தமிழீழப்பகுதிகளில் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய அவர்களை ஏவிவிட்டார்.

திலீபனின் தியாகச்சாவு

இந்நிலையில் விடுதலைப் போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் இந்தியாவின் ‘இரட்சகர்” என்ற போலி வேடத்தை மக்களுக்கு புரிய வைக்கவும் தலைவர் பிரபாகரனின் அனுமதியுடன் தியாகி திலீபன், இந்திய – சிறீலங்கா ஒப்பந்தத்தில் இருந்த 5 விடயங்களை நிறைவேற்றும்படி கூறி நீராகாரம் இன்றி சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை 1987 ஐப்பசி 15ம் நாள் ஆரம்பித்தார்.இந்தியாவின் துரோகப் போக்கினால் ஐப்பசி 26ல் லெப்டினன்ட் கேணல் திலீபன் வீரச்சாவடைந்தார்.

லெப்டினன் கேணல் திலீபனின் வீரமரணம் குறித்து தலைவர் பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘வடக்கு கிழக்கு அடங்கலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் முன்னெடுக்கும் இந்தச் சாத்வீகப் போராட்டத்தில் அணிதிரள வேண்டும். மக்களின் ஒரு முகப்பட்ட எழுச்சி மூலமே நாம் எமது உரிமைகளை வெள்றெடுக்கலாம். திலீபனின் ஈடுஇணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இதுதான்’ என்றார்.

12 போராளிகள் வீரமரணம்

திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் இருவர் உட்பட 17 போராளிகள் சிறீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டுப் பலாலி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். ‘போர் நிறுத்த நேரத்தில், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் போராளிகளும் கைது செய்யப்பட்டது இந்திய – சிறீலங்கா ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானது’ என தலைவர் பிரபாகரன் இந்திய அரசுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்துப் போராளிகளை உடன் விடுவிக்குமாறு இந்திய, சிறீலங்கா அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இந்திய அரசின் துரோகத்தனத்தால் 17 போராளிகளும் சயினைட் உட்கொண்டனர். அவர்களில் 12 போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டனர். இதுபற்றி மக்களுக்கு தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில் ‘எமது போராளிகளை விடுவிக்க வேண்டுமென இந்திய அரசு சிறீலங்கா சனாதிபதி ஐயவர்த்தனாவிடம் உறுதியாகச் சொல்லி இருந்தால் இந்த அநியாயமான சாவுகள் நிகழ்ந்தே இருக்காது.

இந்த வகையில் எமது போராளிகளுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பளிக்கும் பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது. எமக்குப் பாதுகாப்பளிக்கும் அதிகாரமும் பொறுப்பபும் தார்மீகக் கடமைப்பாடும் இந்தியாவுக்கு இல்லை என்றால் இந்தியப் படைகள் இங்கிருப்பதன் அர்த்தம் என்ன?

சனாதிபதி ஐயவர்த்தனாவுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் சமூக விரோத இயக்ககங்களுக்கும் பாதுகாப்பளித்து விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதுதான் இந்திய சமாதானப் படைகளின் நோக்கமா?

எமது தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்குப் பதில் அவர்களைச் சிங்கள இராணுவத்திடம் ஒப்படைக்கத் துணைபோனது இந்திய சமாதானப் படையினர் எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றம். இந்த சூழ்நிலையில்தான் நாம் இனி யுத்த நிறுத்தத்தைப் பேணுவதில்லை என முடிவெடுத்தோம்’ என்றார்.

இந்திய – தமிழீழப் போர்

1987ஐப்பசி 10ம் நாள் இந்திய – தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம். ஐp. இராமச்சந்திரனுக்கு 1987 ஐப்பசி 11ம் நாள் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு. பந்த், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் ஐனரல் சுந்தர்ஐ ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா சனாதிபதி ஐயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையென்றும் nஐயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராககடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது.

1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகைக் (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம். போர் மூண்டது. இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை, விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காக போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிட போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.’

யுத்தம் தீவிரமாக நடைபெற்றது. யாழ் குடாநாட்டை கைப்பற்ற இந்தியப்படை ஒரு மாதகாலம் போரிட்டது. இப்போரைத் தலைவர் பிரபாகரன் தலைமையேற்று விடுதலைப் புலிகளை வழிநடத்தினார். தொடர்ச்சியான கெரில்லாப் போர்முறைதான் இனிமேல் இந்தியப் படையை எதிர்கொள்ளத் தகுந்த போர்முறை எனத் தீர்மானித்து, தலைவர் பிரபாகரன் தனது போராளிகளுடன் தமிழீழக் காடுகளுக்குச் சென்றார்.

கெரில்லா போர் தொடர்ந்தது. இந்தியப் படையினர் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளை எதிர் கொள்ளத் திராணியற்ற இந்தியப் படை பொதுமக்கள் மீது தனது வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பொது மக்கள் பலரைக் கொன்று குவித்தது. பெண்கள் பலரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தது.

இந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் 12.10.1987 இலும் 14.10.1987 இலும் 13.01.1988 இலும் இந்தியப்பிரதமர் இராஐPவ்காந்திக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமக்கு அளித்த உறுதி மொழிகளின்படி இடைக்கால அரசைத் தமிழ்ப்பகுதிகளில் நிறுவினால் தாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துக் கடிதம் அனுப்பினார். ஆனால் ராஐPவ் காந்தி தலைவர் பிரபாகரனைக் கொன்று, தமிழீழ விடுதலை அரசியல் இலட்சியத்தை அறவே ஒழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் தன்னுடைய ஆயுதப் படைகளை இலட்சக்கணக்கில் தமிழீழத்தில் இறக்கிவிட்டார். போர் தொடர்ந்தது.

தமிழீழத் தேசியத் தலைவர்

‘தமிழீழ விடுதலை’ என்று சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கிப் போராடப் புறப்பட்ட தமிழ்க்குழுக்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்து. ‘தமிழீழவிடுதலை’ என்ற இலட்சியத்தைக் கைவிட்டு இந்திய, சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகளாக மாறிச் செயற்படத் தொடங்கினர்.

ஆனால் தலைவர் பிரபாகரனோ சாதி, சமய, பிரதேச வேறுபாடு இன்றி, தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்தார். உலகம் பார்த்து வியந்து நிற்க சின்னஞ் சிறிய தமிழீழ தேசம் வீராவேசத்துடன் போரிட்டது. இலங்கைத் தீவில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் போரை தலைமை தாங்கி நடத்தும் ஒப்பாரும் மிக்காரும் அற்ற முதல் தலைவன் பிரபாகரன் தான் என்று சிறீலங்கா நாட்டு சிங்கள மக்களும் புகழந்தனர். இப்போர் உக்கிரமாக நடைபெற்ற காலப் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் என்ற நிலை ‘தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்’ என தமிழ் மக்கள் தமிழீழத்திலும் உலகெங்கிலும் அழைக்கத் தொடங்கினர்.

அன்னை பூபதி தியாகச் சாவு

இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தாய்க்குலம் எழுச்சி கொண்டு போராடப் புறப்பட்ட போது தென் தமிழீழத்தில் உள்ள மட்டக்களப்பில் அன்னை பூபதி தன் வயிற்றினில் போர் தொடுத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்து என்று இந்திய அரசுக்குக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் காந்தியம் பற்றி புகழ்ந்துரைக்கும் இந்திய தேசத்துப் பிரதமர் அன்னை பூபதியின் உண்ணாவிரதத்தை எள்ளிநகையாடினார். அன்னை பூபதி 19.04.1988 இல் ‘தியாகச் சாவு’ அடைந்தார்.

அன்னை பூபதியின் தியாகச் சாவு பற்றி அறிக்கை ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்தார். ‘எமது புனித விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுக் காவியமாகிவிட்ட எமது தியாகிகளில் அன்னை பூபதி ஓர் உன்னத இடத்தைப் பெறுகிறார். ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் தலைவியாக வாழ்ந்து வந்த சாதாரண வாழ்க்கையைத் துறந்து, சாதாரண பற்று உறவுகளைத் துறந்து, தனது இனத்தின் விடுதலைக்காக அவர் தனது உயிரை அர்ப்பணித்தார். இந்திய இராணுவ அடக்குமுறைக்கு எதிராக அவர் தொடுத்த அறப்போர் காந்திய தேசத்தை தலைகுனிய வைத்தது. தனி மனிதப் பிறவியாக அவர் சாகவில்லை. தமிழீழத்தாய்க் குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னத வடிவம் அடைகிறது’ என்றார்.

சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை

1988இல் புதிய சனாதிபதியாக பதவியேற்ற பிரேமதாச 1989இல் இருந்தே விடுதலைப்புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு மாறி மாறி அழைப்புக்களை விடுத்தார். தமிழீழ மண்ணில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளும் விரும்பியதால் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிரேமதாசாவின் அழைப்பை ஏற்க முடிவு செய்தார். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் விவேகமான இராசதந்திர காய்நகர்த்தலால் இந்திய – சிறீலங்கா உறவுகளில் பகைமை மூண்டது. இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு பிரேமதாசா பகிரங்கமாக அறிவித்தார்.

சிறீலங்காவின் அழைப்பின் பேரில் அமைதிகாக்கப் போரிடுவதாகக் கூறி வந்த இந்திய அரசுக்கு நிலைமை சங்கடமாகியது. அவமானப்பட்டு போரில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் படுதோல்வியடைந்து முகத்தில் கரிப+சியபடி இந்திய இராணுவம் பங்குனி 1990இல் தமிழீழத்தில் இருந்து வெளியேறிச் சென்றது.

இந்திய பிராந்திய வல்லரசு விடுத்த மிகப் பெரும் இராணுவ சவாலை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உறுதியான இராணுவ நடவடிக்கைகளாலும், ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அரசாலும் அதன் இராணுத்தாலும் உருவாக்கப் பட்ட ‘தமிழ் தேசிய இராணுவம்’ என்ற கூலிப்படை சிதறுண்டு ஓடியது. பெரும்பான்மையோர் ஆயதங்களுடன் சரணடைந்தனர். மாகாணசபை கவிழ்ந்தது. இந்திய அரசின் இறுதித்திட்டமும் தவிடுபொடியாகியது.

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தனது மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார். சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இறுதியில் சிங்கள இனவாதத்தின் ஏமாற்று வேலைகளால், விவேகமான அரசியல் நகர்வுகளினாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெற்றி கொண்டது. இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்கள் துரித கதியில் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்தன. இல்டசிய உறுதியும் போர் அனுபவமும் வீரமும் மிகுந்த விடுதலைப்புலிப் படைவீரர்களின் மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு பேச்சுவார்த்தை உருப்படியான தீர்வுகள் பற்றி ஆராயப்படாது முறிந்து போனது.

மாவீரர் நாள் (கார்த்திகை 27)

இந்திய தமிழீழப்போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் விடுதலைப்புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989, கார்த்திகை 27, அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், முதலாவது விடுதலைப்புலிப் போராளி வீரச்சாவு அடைந்த நாளான ~கார்த்திகை 27~ஐ ~மாவீரர் நாள்~ ஆகப் பிரகடனப்படுத்தி உரையாற்றும் போது, ‘எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த 1207 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

முதல் முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட படை வீரர்களின், பாதுகாப்புக்காக போரிட்ட படை வீரர்களின் நினைவாகவும் இப்படிப்பட்ட மாவீரர் நாட்களைக் கொண்டா1டுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும், இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் இந்த வருடத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒருநாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே ~மாவீரர் நாள்~ ஆகப் பிரகடனப்படுத்தி உள்ளோhம். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில்முதலாவதாக வீரச்சாவு அடைந்த ~சங்கரின்~ நினைவு தினமாக இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம்.

அத்தோடு வழமையாக எங்கள் மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள் இப்படிப் பட்டவர் களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் என்னும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு எடுத்துள்ளோம்.அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் தினத்தை ஒரு நாளில் வைப்பதால் எல்லோரும் அன்று எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர்வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம் என்பதுடன், வீரச்சாவு அடைந்த எல்லா போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக நினைத்து மாவீரர் நாளாக இன்று கொண்டாடுகிறோம்.இல்லாவிட்டால் காலப்போக்கில் குறிப்பிட்ட சிலசில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அந்த மரியாதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்து, எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவு கூரப்படவேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாவீரர்நாள் கொண்டாடுவதற்கு முடிவெடுத்தோம்.

ஓர் இனத்தைப் பொறுத்த வரை வீரர்களையும் அறிவாளிகளையும் பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாகத்தான் மாறி அழிந்துவிடும்.எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக்கிறார்கள்.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது எங்கள் இனத்தில் பெண்களை புனிதமாக மதிக்கப்படுகிறார்கள். அதேவேளை வீரர்களுக்குத்தான் பஞ்சமாக இருந்தது. ஆனால் இன்று இந்த மாவீரர் நாளில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆம், எமது வீரர்களைக்கூட நாம் கௌரவிக்க ஆரம்பித்துள்ளோம்.இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவு கூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது.

மாவீரர் நாள் கையேடுஇன்று எமது இனம் உலகிலேயே தலைநிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த்தியாகம்தான். அவர்களுடைய வீரமான, தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.

தமிழீழப் போர் 2

http://puliveeram.files.wordpress.com/2008/09/charles_memorial01.jpg
சிங்களக் காவல்துறையினரின், ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு அரசுக்கு சுட்டிக்காட்டி வந்தனர். ஆனால் சிறீலங்கா அரசோ அதுபற்றிய அக்கறையின்றி இருந்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தைகளில் முறுகல் நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்த போது ஆனி 10, இராணுவத்தினரின் அத்துமீறில்கள் பற்றிப் பலமுறை சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகளில் 1990 இல் தென்தமிழீழத்தில் உள்ள கல்முனை என்ற இடத்தில் இஸ்லாமியத் தமிழர் ஒருவருக்கு எதிராக சிங்களக் காவற்துறையினர் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் சிங்களக் காவல்துறையினருக்கும் இடையில் எழுந்த சச்சரவு இறுதியில் யுத்தமாக மூண்டது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உடனடியாகவே இவ்யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் சிறீலங்காவின் சிங்கள இனவாத அரசும் அதன் படைகளும் தமிழின அழிப்பும் தமிழ்மண் பறிப்புமே தமது இறுதி முடிவு என்ற ரீதியில் செயற்பட்ட போது தமிழீழ மக்களையும் தமிழீழ மண்ணையும் பாதுகாப்பதற்குச் சிறீலங்கா அரசு ஏவிவிட்ட யுத்தத்தை எதிர்கொள்வதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.

1991 புரட்டாதி 1ம் நாள் தமிழீழப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அப்போதைய அரசியல், இராணுவ நிலைமைகள் பற்றி விளக்கும்போது ‘தமிழீழப் போர் 2 தொடங்கும் போது இருந்த பல சிங்கள இராணுவ முகாம்கள் தற்போது இல்லை. கொக்காவில், மாங்குளம் போன்ற இடங்களில் இருந்த இராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதால் வன்னி;ப் பிரதேசத்தின் பெரும்பகுதி எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. யாழ் கோட்டை முகாம் அழிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்தின் நகரப்பகுதியும் விடுவிக்கப்பட்டது. ஆனையிறவுப் போரில் மரபு ரீதியான இராணுவ அணியாக எதிரிகளுடன் நேரடியாக மோதி அழிக்கும் நிலையின் முதற்படியை எடுத்து வைத்Nதூம். பெரிய எண்ணிக்கையிலான இராணுவத்தை நீண்ட நாட்களாக தடுத்து வைத்துப் போரிட்டோம். ஆனையிறவுப் போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அஞ்சினால் யுத்தம் நடத்த முடியாது. இழப்புக்களை வளர்ச்சியின் ஊன்று கோலாகக் கருதவேண்டும்.

10-07-91 இல் ஆனையிறவுப் போர் ஆரம்பித்து 23-08-91 வரையிலான 43 நாள் போரில் 564 போராளிகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்ததைவிட பெரியளவில் படையினர் இறக்கப்பட்டு நீண்ட நாட்கள் இடம் பெற்ற யுத்தத்தைப் பார்த்தால் எமது தரப்பிலான இழப்பு பெரிதெனச் சொல்ல முடியாது. துன்பங்களை அனுபவிக்கும் மக்களிடம் அடுத்து என்ன என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யும். எனினும் பெரிய அளவில் அவர்கள் அணிதிரள வேண்டும். போராட்டத்தில் ஏற்படும் இழப்புக்களை உடனுக்குடன் ஈடுசெய்ய வேண்டும். மக்கள் முழுமையாக எம்மோடிணைந்து எமது கஷ்டதுன்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நிபந்தனையற்ற வகையில் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு எப்போதும் தயாரக இருக்கிறோம். ஆனால் பேச்சுவாhத்தைக்குரிய சூழ்நிலையை சிறீலங்கா அரசுதான் உருவாக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசுக்கு எதிராகத்தான் போராடுகிறார்கள். இந்திய அரசு விடுதலைப் புலிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.

மலையகத் தமிழ்மக்களின் தொடரும் துன்பங்களுக்கு மலையகத் தலைமைகளின் தொடரும் துரோகமே காரணம் என்பதை மலையகத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஆயுதத்தாலும் எத்தகைய குண்டு வீச்சாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட முடியாது’ என்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு

1984 இன் ஆரம்பப்பகுதியில் முதன் முதலாக பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் மறைமுகமாக ஆதரவு நல்கத் தொடங்கியவர்கள் பின்பு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியுடன் ஆயுதப்பயிற்சி பெற்று இந்திய – தமிழீழப் போர் 1987 ஐப்பசி 10 இல் ஆரம்பமாகிய போது நேரடியாக யுத்தமுனைக்குச் சென்று பல வீர சாதனைகளை இன்றுவரை படைத்து வருகிறார்கள்.

விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்புக் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தெரிவிக்கையில்இ ‘எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசிய போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்துதான் எமது இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப் படுத்தியது. பெண்களை அரசியல் மயப்படுத்தி போராட்டத்திற்கு அவர்களை அணி திரட்டியது. இவ்வகையில் நாம் தமிழீழப் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தி இருக்கிறோம்.

தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கிறது. காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழீழப் பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது. சீருடை தரித்து நிற்கிறது. காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்துஇ எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலையுணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை எமது பெண் போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்” என்றார்.

விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைய தலை முறையினரின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆகவே இளைய தலைமுறையினர் அறிவுள்ளவர்களாகஇ ஆற்றல் மிகுந்தவர்களாகஇ பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டியது ஒரு கட்டாயத் தேவை. எனவே அதற்கேற்ற வகையில் இளஞ் சிறார்களுக்குக் கல்வி ஊட்டப்பட வேண்டியதும் மிக முக்கியமான தொன்றாகிறது. ஆகவேதான் எமது தேச மாணவர்களின் நலன் கருதிஇ தமிழீழத் தேசியத் தலைவரின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் ‘விடுதலைப்புலிகள் மாணவர் அமைப்பு”.

கடற்புலிகள்

எமது ஆயுதப் போராட்டம் கடந்து வந்த ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் தமிழீழக் கடல் மிகப்பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது. 1984ம் ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் படைப்பிரிவிற்கு அதன் வரலாற்று ரீதியான பிறப்பைக் கொடுத்துஇ ஆரம்பத்தில் அதற்கு ~கடற்புலிகள்~ என்ற பெயர் சூட்டினார். சுpறீலங்காக் கடற்படைக்குச் சவால்விடும் அளவிற்குஇ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி இன்று வளர்ந்துள்ளது. இவ்வமைப்பில் ஆண் போராளிகளின் அணியுடன்இ கடற்புலிகள் மகளிர் படை அணி 01-03-1992 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஆண்களின் பங்களிப்புக்குச் சமமான தமது பங்களிப்பை ஆற்றி சாதனை படைத்து வருகின்றனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

1985 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தேவைபற்றி தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் குறிப்பிடும் போது ‘தமிழீழ மக்கள் இரு போர் முனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து மண்மீட்கும் போர்முனைஇ மற்றையது சிங்களப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடைகள் என்னும் அடக்கு முறையை எதிர்த்து உற்பத்திப் போர்முனை. இதயம் எவ்வாறு குருதிச் சுற்றோட்டத்தை ஒழுங்கு படுத்தி நோய்களையும் பாதிப்புக்களையும் வென்றிட உடலுக்கு உதவுகின்றதோ அவ்வாறே தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தமிழீழம் எங்கும் உழைப்பைக் குருதியாய் ஓட வைத்து தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியின் அத்திவாரமாக திகழ வேண்டும்” என்றார்.

இவ் அமைப்பின் வளர்ச்சியால் இன்று தமிழீழத்தில் பல குடும்பங்கள் நிவாரணத்தை நம்பி வாழாமல் தாமாகச் சுயதொழில் மூலம் வாழும் நிலையைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம்

வைகாசி 6,1994 வேளான் மன்னர்களுக்கு பரிசு அளித்து கௌரவித்து உரையாற்றிய தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்இ ‘தமிழீழம் ஒரு செழிப்பான பூமிஇ வளங்கள் பல நிறைந்த தேசம்@ தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும் நில வளத்தையும் மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது. இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனம் கண்டு அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.

மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் திறமையான திட்டமிடுதலின் அடிப்படையில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். வேளாண்மையும் கைத்தொழிலுமே பொருண்மியக் கட்டுமானத்திற்கு அடித்தளமானது. இந்த இரு துறைகளையும் கட்டி வளர்ப்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த இலக்கில் ~ தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்~ ஆக்கபூர்வமான பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. இந்த முயற்சிகள் மேலும் மேலும் தீவிரம் பெற்றுஇ விடுதலை பெறும் தமிழீழம் தங்கு நிலையற்றதாக தன் காலில் தரித்து நின்று வளர்ச்சி பெறக்கூடியதாக அமைய வேண்டும்” என்றார்.

கரும்புலிகள்

இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்

http://puliveeram.files.wordpress.com/2008/09/lrg-731-ltte22080701adv6.jpg

கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு 1993 ஆடி 5இல் தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையில்இ ‘கப்டன் மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பம் ஆகியது. என்றுமே உலகம் கண்டிராதஇ எண்ணிப் பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது. கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அப10ர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் ஆழமான மனித நேயம் படைத்தவர்கள். கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோ திடத்திற்கும்இ உறுதிப்பாட்டிற்குமே நாம் குறிப்பிடுகின்றோம். இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத பூடகமான இரகசியத் தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே கரும்புலி என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும்.

ஆழமான படிவமாக அமையப் பெற்றிருக்கிறது. இந்த இரகசியத் தன்மை கரும்புலிகளின் செயற்பாட்டு வெற்றிக்கு மூலதாரமானது. இது கருப்புலிகளின் சகாப்தம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும். சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள்”இ என்று தெரிவித்தார்.

வான்புலிகள்

வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.


வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர்.

பங்குனி 8 பெண்கள் தினம்

அனைத்துலக பெண்கள் தினமான பங்குனி 8, 1992 இல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில் ‘பெண் விடுதலை எனும் பொழுது அரச ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளாதார சுரண்டல் முறையிலிருந்தும் பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறிக்கிறோம். எனவே எமது இயக்கம் வடிவமைத்துள்ள பெண் விடுதலைப் போராட்டமானது தேச விடுதலை சமூக விடுதலை பொருளாதார விடுதலை என்ற என்ற குறிக்கோள்களை கொண்ட மும்முனை விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டம். இந்தச் சிந்தாந்தப் போராட்டம் ஆண்களின் மனவுலக மாற்றத்தைக் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்” என்றார்.

தமிழீழ படைத்துறைப் பள்ளி


1991 புரட்டாதி 19ம் நாள் உருவாக்கப்பட்ட தமிழீழ படைத்துறைப் பள்ளியின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்இ ‘தமிழீழப் படைத்துறைப் பள்ளி எனது முயற்சிகளில் ஒன்று. எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ளவேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாகஇ புத்திசாலிகளாகஇ தேசப்பற்று உள்ளவர்களாகஇ போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாகஇ நிர்வாகிகளாகஇ ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்” என்று கேட்டிருந்தார்.

செஞ்சோலை சிறுவர் இல்லம்

யுத்த சூழ்நிலையால் பெற்றோரைஇ பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் 1991 ஐப்பசி 23ம் நாள் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ‘வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்தச் செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய் மாறி ஒரு காலம் தமிழீழ தேசத்தின் சிந்தனைச் சோலையாகச் செழிப்புற வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள்” என்றார்.

தமிழீழ காவற்துறை

tamil eelam police_a3

1991 கார்த்திகை 9ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ காவற்துறையினது செயற்பாடுகள் அதிகாரபூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறைஇ அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக்காவற்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது ‘தமிழீழக் காவற்துறையினர் நல்லொழுக்கம்இ நேர்மைஇ கண்ணியம்இ கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள்.

பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களொடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள். சமூக விரோத குற்றச் செயல்கள் எவற்றுடனும் சம்பந்தப்படாதவர்களாகவும் தேசப்பற்று மிகுந்தவர்களாகவும் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். தமிழீழ காவற்துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து கூட்டில் நிறுத்துவது அதன் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் இலட்சியமாகும்” என்றார்.

குறிப்பு சிங்கள காவற்துறையினரால் யாழ்.பொது நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாளான ஆனி 1ம் நாள் தமிழீழ காவற்துறையினர் தமது பயிற்சிகளைத் தொடங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்

எமது மொழியும்இ கலையும்இ பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது கலையும் பண்பாடும் எமது தேசத்தின் ஆன்மா. இந்த நோக்கத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் கலைஇ பண்பாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்கு 1992 ஆடி 15 இல் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அனுப்பிய செய்தியில்இ ‘எமது விடுதலைப் போராட்டத்தை மக்கள் மயமாக்கிஇ மக்கள் போராட்டமாக முழுமைப்படுத்தி மக்கள் அரங்கிலிருந்து ஒரு பலமான உறுதிமிக்க தேசிய எதிர்ப்பியக்கத்தைக் கட்டி எழுப்பும் பணி இன்றைய வரலாற்றுத் தேவையாக எழுந்திருக்கிறது. இந்தத் தேவையை பூர்த்தி செய்வதில் எமதுஇ கலை இலக்கியப் படைப்பாளிகளின் பங்கு முக்கியமானது” என்று குறிப்பிட்டிருந்தார்.

புலிகளின் குரல் வானொலிச் சேவை

புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ‘எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.

தமிழீழ சட்டக் கல்லூரி

http://puliveeram.files.wordpress.com/2008/09/thalaivar70.jpg

1993 தை 25ம் நாள் தமிழீழ சட்டக் கல்லூரியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையாறும் போது ‘தமிழீழத் தனியரசு என்ற இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்தத் தனியரசுக்கான அத்திவாரங்களை நாம் இப்போதிருந்தே கட்டியெழுப்ப வேண்டும். நீதித்துறை அரச நிர்வாக இயந்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு நிறுவனம் என்பதால் இப்பொழுதிருந்தே இத்துறை சம்பந்தமாக எமது போராளிகளாகிய உங்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக நிர்வாகத்தில் நீதித்துறை பிரதானமானது. நேர்மைஇ ஒழுக்கம்இ கண்ணியம்இ கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கொண்டவர்களே நீதிபரிபாலனத்தைக் கையாள வேண்டும். முன்பு நீதிபரிபாலனத்திற்கென நாம் உருவாக்கிய இணக்க மன்றுகள் என்ற அமைப்பில் பல தவறுகள் நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்கள்.

இந்த இணக்க மன்றுகளால் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் மக்களின் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் இலக்காகின. சுயநலமற்ற முறையில்இ பாரபட்சமற்ற முறையில் நீதி வழுவாது தீர்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவேதான் ஒழுங்கும் கட்டுப்பாடுமுடைய எமது இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளைக் கொண்ட நீதி நிர்வாகமானது ஒரு வலுவான அரசிற்கும் கட்டுப்பாடுடைய சமூக அமைப்பிற்கும் ஆணிவேரானது. சமூக நீதி சரிவரப் பேணப்பட்டால்தான் சமுதாயம் ஒரு உன்னத நிலைக்கு வளரும்” என்றார்.

தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை

தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை நடத்திய தமிழீழப் பொதுக்கல்வித் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் 1993 மாசி 13 இல் வெளியிட்ட அறிக்கையில் ‘மனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. சமுதாய விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் தெரிவிக்குமஇ; கல்வி கற்கும் உரிமைக்கும் இடையில் நாம் என்றுமே முரண்பாட்டைக் கற்பிக்க முயல- வில்லை. இரண்டுமே எமது சமூகத்தின் வாழ்வியக்கத்திற்கு இன்றியமை- யாதவை. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும். இன்று தமிழீழத்தில் கல்வித்துறை சீரழிந்த நிலையில் உள்ளது.

தமிழரின் கல்வியைத் திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரசு புறக்கணித்து வருகிறது. எத்தனையோ நெருக்கடிகள் இடர்பாடுகளை எதிர்கொண்டு எமது மாணவர் சமூகம் கல்வியை கற்க வேண்டியிருக்கிறது. தமது ஆர்வத்தினாலும் திறமையினாலும் கடும் உழைப்பினாலும் கல்வி கற்றுப் பொதுத் தேர்வுக்கு தயாரானாலும் உரிய காலத்தில் அவை நடைபெறுவதில்லை. தேர்வு நடைபெறும் காலங்களிலும் அரச படைகள் அமைதியைக் குலைத்து விடுகின்றன. இத்தனை தடைகளையும் தாண்டித்தான் எமது மாணவர்கள் தேர்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கணிதப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வுக்கு ஈடாக முதல் தடவையாக தமிழீழக்கல்வி மேம் பாட்டுப் பேரவை சிறப்புற நடாத்தி முடித்திருக்கிறது. இந்த முயற்சியை நான் மனப் பூர்வமாக பாராட்டுவதுடன் இத்தேர்வில் தோற்றிய தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்

சட்டவாளர்களின் சத்தியப் பிரமாணம்

1993 ஆவணி 19 இல் தமிழீழ நீதித்துறையின் நீதியாளர் சட்டவாளர் ஆகியோரின் சத்தியப் பிரமாண வைபவத்தில் ஆற்றிய சொற்பொழிவில் ‘போராளிகள் நீதியாளர்களாகவும் சட்டவாளர்களாகவும் பொறுப்பை ஏற்றால் தமது பிரச்சினைகளை நேர்மையாக அணுகி சரியான முறையில் நீதி வழங்குவார்கள் என எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். போராளிகள் ஒரு உன்னத குறிக்கோளுக்காக தமது உயிரையும் துறக்கத் தயாராகவுள்ள இலட்சியவாதிகள் என்பதை பொதுமக்கள் அறிவார்கள். எனவே போராளிகளாகிய நீங்கள் நீதி நிர்வாகத்தை பொறுப்பேற்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயவாற்றுவீர்கள் என நம்புகிறேன். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். இந்த உண்மையின் அடிப்படையில் நீங்கள் உலக அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முயல வேண்டும். அனுபவம் மூலமாகவே நீங்கள் நிறைந்த அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து அவர்களுக்கு நீதி வழங்குவதை உங்கள் கடமையாகக் கொள்ளவேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுவதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எப்போதும் நேர்மை தவறாது சத்தியத்தின் வழியில் நீங்களும் உங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கான உறுதியும் துணிவும் உங்களிடம் இருக்க வேண்டும்” என்றார்.

காந்தரூபன் அறிவுச்சோலை

1993 காhத்திகை 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அவர் ஆற்றிய உரையில் ‘எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள். எமது போராளிகள் அனைவருமே இவர்களது சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணைபிரியாத அங்கமாக இணைந்து உள்ளனர். தனிக்குடும்பம்இ அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டுவளரப்போகும் இவர்கள்இ எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச் சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேரூ ஈடுபடுகின்றோம். ஆனால் இத்தகைய சமூக சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்க வேண்டும்” என்று கூறினார்.

குறிப்பு- பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த காந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்று வீரச்சாவை தழுவிக் கொண்டார். இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ‘யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப் புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப் போல்இ தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறைவேற்றும் முகமாக காந்தரூபன் அறிவுச்சோலை எனப் பெயரிடப்பட்டது.

தமிழீழக் தேசியக்கொடி

உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.

தேசியச் சின்னங்கள்

தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன.

தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு.

************************************

தமிழீழப் போர் 4 -மாபெரும் இனவழிப்புப்போர்

மேற்குலகப் பயங்கரவாதிகளோடு இந்திய ,சிறிலங்காப் பயங்கரவாதிகள் கூட்டுச் சேர்ந்து  உணவு ,மருந்துப்பொருட்கள் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் தடை செய்து உலகத்தில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் அனைத்தையும் பாவித்து தமிழர்களது விடுதலைப்போரை  மே 18, 2009 இல் கொன்றொழித்து அங்கு வாழ்ந்த மக்களது வாழ்வாதரங்களை அழித்து அடிமைகளாக முகாங்களிலும் , சித்திரவதைக் கூடங்களிலும் , எஞ்சியோரை திறந்த வெளி முகாங்களிலும் வைத்து அடக்கி ஆழ்கின்றது

*****************************************

“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்”

ஈழத் தமிழர் தேசத்தின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் அமைகிறது. இதனால் கட்டுரையின் முக்கிய பேசுபொருளாக விடுதலைப்புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் அவரது அரசியலும் அணுகுமுறையும் அமையப் போகிறது. பிரபாகரன் அவர்களது வீரச்சாவினை ஏற்று – ஒரு போராளியாக – ஈழத்தமிழர் தேசத்தின் தலைவராக – தனது சரிகளோடும் தவறுகளோடும் அவர் வாழ்ந்த ஏறத்தாழ 4 தசாப்த கால போராட்ட வாழ்வுக்கு  மதிப்பளிக்கின்றோம்’

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், ஒரு வருடத்துக்கு முன்னர் இக் காலப்பகுதியில் தமது உயிர்களை ஈகம் செய்த தளபதிகள், போராளிகள் மக்கள் அனைவருக்கும் உலகத் தமிழினம் தலைவணங்கி மரியாதை வணக்கம் செலுத்துகின்றோம்.

*****************

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

ஆயிரம் ஆண்டுகளானாலும் அயியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!

தனது வாழ்க்கையின் ஏறத்தாழ 4 தசாப்தங்களை போராட்ட வாழ்க்கைக்காக அர்ப்பணித்தவருக்கு, தனது மனைவி 3 பிள்ளைகள் உட்பட தனது முழுக் குடும்பத்தையே தமிழீழ விடுதலை இலட்சியத்துக்காக ஈகம் செய்தவருக்கு, ஈழத் தமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்ற

leader-Prabakaran-tribute 2

” எங்கள் உயிரினும் மேலான உயிராய்,என்றும் சிரஞ்சீவியாய், உலகத்தமிழினத்தின் கலங்கரை விளக்கமாய், எங்கள் இதயக் கமலத்துக்குள் என்றும் அழியாச்சுடராய், வரலாறு தந்த வல்லமையாய் தமிழ்த்தேசியத்தின் ஆத்மாவாய், விளங்கும் விடுதலையின் வியாபகப்பொருளே  எங்கள் திவ்யாத்ம சொரூபணுக்கு சிரம்தாழ்த்தி எமது வீரவணக்கங்கள்.”

****************************

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ?

******************

Tamil National Liberation Struggle and National Leader Prabhakaran

**********************

புலிகளின் படைத்துறைக் கட்டமைப்புக்கள்
லெப் சாள்ஸ் அன்ரனி சிறப்புபடையணி
மேஐர் சோதியா படையணி
லெப் கேணல் குட்டிசிறி படையணி
லெப் கேணல் விக்ரர் படையணி
தமிழீழ தேசிய துணைப்படை
கப்டன் ஜெயந்தன் படையணி
2ம்லெப் மாலதி படையணி

இம்ரான் பாண்டியன் படையணி


புலிகளின் உள் கட்டமைப்புகள்

கடற்புலிகள்

1)சாள்ஸ் படையணி
2)அங்கைய கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு
3)நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு
4)ஈரூடக தாக்குதல் படையணி
5)கடற்படை படகு கட்டுமான பிரிவு
6)கடற்கரும்புலிகள் அணி
7)கடற்சிறுத்தை படையணி

வான்புலிகள்

1)ராதா வான் காப்பு படையணி
2)விமான தாக்குதல் படையணி

தரைப்படை

1) சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி
2) ஜெயந்தன் படையணி
3) இம்ரான் பாண்டியன் படையணி
4) யாழ் செல்லும் படையணி
5) புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி
6) சோதியா படையணி
7) அன்பரசி படையணி
8)- மாலதி படையணி
9) சிறுத்தை படையணி
10)தரைக்கரும் புலிகள் படையணி
11)பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு
12)கிட்டு பீராங்கி படையணி
13)விக்ரர் விசேடகவச எதிர்ப்பு படையணி
14)லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி
15)மகளிர் அரசியல் துறை தாக்குதல் படையணி
16)இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி
17)எல்லை படை
18)துணைப்படை

அறிவியல்

1) வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு
2)கணிணி தொழில்நுட்ப பிரிவு
3)இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு
4) போர்கருவி தொழிற்சாலை
5)தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி

அரசியல் துறை

1) பரப்புரை பிரிவு
2) தமிழீழ பொறியியல் துறை
3) தமிழீழ விளையாட்டு துறை
4) விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி
5) திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை
6) தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியல் பிரிவு
7) தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்
8 ) தமிழீழ கலை பண்பாட்டு கழகம்
9) விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு
10)சூழல் நல்லாட்சி ஆணையம்
11)தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு
12)பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
13)பொருண்மிய மதியுரைகம்
14)தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்
15)ஓளிக்கலைப்பிரிவு
16)தமிழிழ தேசிய தெலைக்காட்சி
17)நிதர்சனம்
18)ஒளி வீச்சு ஒலிபரப்பு
19)புலிகளின் குரல் பத்திரிகை
20)புலிகளின் குரல் தமிழீழ வானொலி
21)ஈழநாதம்
22)சுதந்திரப் பறவைகள்
23)விடுதலைப்புலிகள் ஏடு
24)மருத்துவ பிரிவு
25)திலீபன் மருத்துவ சேவை

தமிழீழ காவல்துறை

1)குற்றதடுப்புபிரிவு
2)விசாரணை பிரிவு
3)வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு
4)தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி

தமிழீழ நீதித்துறை

*தமிழீழ நீதி மன்றம்
*சட்ட ஆக்க கழகம்

புலனாய்வுத் துறை

நிதித்துறை

*தமிழீழ நிர்வாக நிதிபிரிவு
*தமிழீழ வழங்கல் பிரிவு
*தமிழீழ வங்கி
*கொள்முதல் பிரிவு

தமிழீழ பேக்குவரத்து கழகம்

இதைவிட இரகசியமான சில படைகளும் உண்டு

******************************************************************

**************


வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் நாள்

Posted on


தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள்.


இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் [ மார்ச் 26, 2007 ] இன்று…!!

வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.

வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்கதொடங்கி விட்டார்கள்.

செப்டம்பர் 27, 1998 – 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில்பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வான்புலிகள்  விக்கிப்பீடியாவில் இருந்து.

http://ta.wikipedia.org

*2000 – ‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது*

——————-

புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்


விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.

தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது. கடைசி நேரத் தாக்குதலில் இவ்விரு விமானங்களும் சிங்கள இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை பொட்டுஅம்மான், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் கேணல் தீபன் ஆகியோர் முறையே பார்வையிடுகின்றனர்,

மற்றும் பொட்டுஅம்மானையும், தமிழ்ச்செல்வன் அவர்களையும் விமானிகள் ஏற்றி பறப்பில் ஈடுபட்டுள்ளதையும் காணலாம்.

———-


 

கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவுதொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.

ஜனவரி 26, 2005 – இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை

ஆகஸ்டு 11, 2006 – யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மார்ச் 26, 2007 – அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26 மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.

26 ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ளகொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

அக்டோபர் 22, 2007 – எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர்கொல்லப்பட்டனர்.

வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது.

இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது. இவை தவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.

முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.

இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை. வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.

வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது

தொடக்கத்தில், வான்புலிகள் யப்பானிய கமிகாச போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கைதாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது.

விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றைகருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.

வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் “சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்றஅவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்.”

வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் “Intelligence sources” முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.

இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒருவிமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன.





————————

Tigers confirm Air wing

[TamilNet, Friday, 27 November 1998, 15:55 GMT]
The Voice of Tigers (VoT) radio said in its night broadcast today that aircraft of the Air Tigers sprinkled flowers on the LTTE’s Heroes’ memorials in the Vanni this evening during the Maaveerar day ceremonies.

The radio did not specify the number of aircraft which flew today or whether they were helicopters or fixed wing planes.

The announcement comes after weeks of speculation that the Liberation Tigers had established an air wing, following press reports that unidentified aircraft had been spotted in the Vanni.

Despite denials by the Sri Lankan Deputy Defence Minister that the reports were untrue, defence analysts said there was credible evidence that the Tigers were in possession of at least one aircraft.

Chronology:

Related Articles:
02.11.08   LTTE planes drew Indian embassy gunfire as Rajapaksa moved t..
01.11.08   LTTE leader decorates Tiger airmen, heroes of Vavuniyaa miss..
29.10.08   Turbines damaged in TAF airstrike on power plant, one killed
28.10.08   Tigers launch airstrike in Mannaar, Colombo
09.09.08   Indian radar operators wounded in Vanni SF HQ
09.09.08   Vanni SF HQ attacked
27.08.08   Airstrike targeted SLN Eastern HQ – LTTE
01.11.07   Pirapaharan decorates LTTE heroes of Anuradhapura
27.10.07   Did LTTE plane down SLAF helicopter?
27.10.07   Anuradhapura losses worse than Katunayake’s – Athas
23.10.07   Key spy plane amongst SLAF’s $40m losses – reports
22.10.07   Tigers claim Anuradhapura air base attack success, say 8 air..
21.10.07   Tigers launch air, ground attack on Anuradhapura air base
02.05.07   Tiger planes hit Sri Lanka economy
28.04.07   Air Tigers attack 2 targets in Colombo – LTTE
24.04.07   Barrage of gunfire as Tiger aircrafts complete bombing raid,..
23.04.07   Tiger aircrafts bomb Palaali military base
26.03.07   LTTE releases photographs of air mission
11.08.06   Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna
27.11.98   Tigers confirm Air wing