தலைவரின் சிந்தனைகள்

தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…! மாவீரர்கள்

Posted on Updated on

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்..

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

***

prabakaran quotes maaverar 2

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

**prabakaran quotes maaverar 5

நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

– தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

**

prabakaran quotes maaverar 3
இந்த யுத்தத்தில் எமது போராளிகளும் பொதுமக்களும் செய்துள்ள அற்புதமான தியாகங்கள், உலக வரலாற்றில் ஓர் ஒப்பற்ற வீரகாவியமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

**prabakaran quotes maaverar 4

தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்துநிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு.நீண்ட நெடங்காலமாத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.

-தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

**prabakaran quotes maaverar 5

எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது.நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

*prabakaran quotes maaverar 6
நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.

-தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

Posted on Updated on

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.

எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

Posted on Updated on

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

தியாக தீபம் திலீபன் நினைவாக-தேசியத் தலைவர்

Posted on Updated on

  • ஈடு இணையற்ற ஒரு மகத்தான சாதனையை திலீபன் புரிந்தான்
  • திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.

தமிழீழ தேசியத் தலைவர்-மேதகு வே.பிரபாகரன்

வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு தலைவன் பிரபாகரன்

Posted on

prabakaran quotes 10பிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத தலைநிமிர்வு.

ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்கு தந்த தலைவன்

அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன்

தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழன் கதற வைத்த வீரயுகமொன்றின் திருஷ்டிகர்த்தா

தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று அதன் உந்து விசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன்.

குறுகிய ஒரு காலத்திற்கு முன்னாள் சிறிய ஆயுதக் குழுவொன்றின் கெரில்லாத் தலைவனாக மட்டுமே இனங்காணப்பட்ட பிரபாகரன்

இன்று தொன்மையும் செழுமையும் வாழ்ந்த பழம்பெரும் பாரம்படியங்கள் மிக்க இனமொன்றின் தேசியத் தலைவராக உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மாமனிதன்

தமிழன் அடிபட்டு தமிழன் துன்புற்று தமிழன் அலைந்தோடி தமிழன் கண்ணீர் சிந்திக் கிடந்தகாலகட்டத்தில் இனப்பற்று மிகுந்த ஒரு புரட்சி வீரனாக ஆயுதம் ஏந்திய பிரபாகரன் வீழாத படையாகத் தமிழன் அணிதிரண்டு ஓயாத புயலாகப் பகையைச் சுழன்றடித்து சாயாத மலையாக நிமிரும் வரலார்று அதிசயத்தைக் கண்முன்னால் நிகழ்த்திய பெருந்தலைவன்.

தனியொரு மனிதனாய் நின்று தமிழீழத் தேசியத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பி தமிழர்களையே வியக்கவைத்த பெரும் வீரன்

குலையாத கட்டுப்பாடும் வழுவாத நேர்மையும் தமிழனின் வாழ்வுநெறி பிறழாத ஒழுக்கமும் சளையாத போர்த்திறனும் இளாகாத வீரமும் யாரும் நினையாத வகையாக எவரும் மிகையாக நேசிக்கும் உயிரை இயல்பாகத் தூக்கி எறியும் கலையாத தேசப்பற்றும் சுதந்திரத்தில் தணியாத தாகமும் கொண்டோராக ஆயிரமாயிரம் இளையோரை வனைந்தெடுத்து தளராத துணிவான தேசத்தின் பலமான படையொன்றை உருவாக்கி உலகில் எவருமே புரியாத விதமாக ஒரு பெரும் சாதனை படைத்த தளபதி

பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள். தமிழர்களின் வாழ்வு என்று பொருள். தமிழர்களின் கீர்த்தி என்று பொருள்

அவர் ஒரு அற்புதமான மனிதர், அபூர்வமான மனிதர். ஆச்சரியமான பல தன்மைகளாலும் பண்புகளாளும் குணவியல்புகளாலும் நிறைந்திருக்கும் அதிசயப் பிறவி.

அபரிதமான ஆற்றல்கள் மிக்க தனது அழகான ஆளுமையால் முழுத்தேசத்தையுமே ஆகர்சித்து நிற்கும் அசாதாரண தலைவர்.

தத்தமது தேசங்களிற்கும் இனங்களிற்கும் தங்களது பெயர்களினால் பெருமையினைத் தேடித்தந்த உலக சரித்திரத்தின் தலைசிறந்த மனிதர்களின் வரிசையில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது.

பிரபாகரன் என்ற பெயர் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் ஓர் அழியாத புகழ். என்றும் கிடையாத தலைநிமிர்வு.

தமிழர்களின் சேவகனாகி, தமிழர்களின் தொண்டனாகி, தமிழர்களின் தலைவனாகி, தமிழர்களின் பலமாகி, தமிழர்களின் கவசமாகி, தமிழர்களின் மணிமகுடமாகி…. அடக்கி ஒடுக்கப்பட்டு முடங்கிச் சுருண்டுகிடக்கும் உலகத் தேசிய இனங்களுக்கு உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும் ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன்.

இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது தலைவரின் சிந்தனைகள் என்னும் நூலின் முன்னுரை.

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

Posted on

praba quotes women brigades 2

நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

Posted on

praba quotes politics

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

மக்கள் கண்ணீரை தன் இதயத்தில் இடியாக இறக்கி ஆறுதல் கொடுத்து அன்புகாட்டி அவர்கள் விடிவுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் கொடுத்து போராடிய உண்மை தலைவன் எங்கே…

காலில் விழும் மக்களை கூட ஏளனமாக பார்த்து மக்கள் கண்ணீரை துடைக்க முயற்சிகள் எடுக்காமல் மக்கள் போராட்டங்களிற்கு செவி கொடுக்காமல் மக்கள் அவலங்களை பாராமுகமாக உதாசீனம் செய்து இந்திய இலங்கை அரசுகளைதிருப்திப் படுத்தும் அவர்கள் எங்கே..

எல்லோரும் தலைவர்கள் ஆகி விட முடியாது. மக்களை உயிரில் சுமப்பவர்கள் மட்டுமே உண்மையான தலைவர்கள்.

உண்மையான தலைவர்கள் மக்களில் இருந்து அந்நியப்பட்டு இருப்பதில்லை. மக்களோடு மக்களாகவே எளிமையின் வடிவமாக வாழ்வார்கள். சிறந்த தொண்டனால் மட்டுமே சிறந்த தலைவனாக இருக்க முடியும். மக்களின் மன உணர்வுகளை புரிந்து செயல்ப்படுபவன் மட்டுமே மக்களின் தலைவன் ஆகலாம். மக்களுக்காக குரல் கொடுக்கும் தகுதியும் அத்தகையை மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவர்களுக்கு மட்டுமே உண்டு.

அத் தகைமை எமது தமிழீழத் தேசிய தலைவன் வே பிரபாகரனுக்கு மட்டும் பொருந்தும்….!

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

Posted on

praba quotes 20பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்.

**

பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.