சுத்துமாத்துக்கள்

தேசியத் தலைவர் உயிருடன் இல்லை !

Posted on Updated on

வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”

இறுதியில் நடந்தது இதுவே ! விடுதலைப்புலிகள் அரசியல் துறை சங்கீதன், ஜெயாத்தன் செவ்வி

பிரபாகரன் உயிர்:

கடைசி யுத்தத்தில் போரிட்ட முன்னாள் போராளி பிபிசி தமிழுக்கு பேட்டி
இதைத் தவிர மேலதிக தகவல்களை பேச முடியாத நிலைமையில் இருக்கின்றோம். இதைப்பற்றி பேச விளைகின்றவர்கள், இறுதிச் சண்டை களத்திலே நின்றவர்களாகவோ, அல்லது அண்ணனினுடைய பாதுகாப்பில் நின்றவர்களாகவோ அல்லது குறைந்த பட்சம் நந்திக்கடல் சண்டை களத்தில் கலந்து கொண்டவர்களாகவோ இருந்து, இதற்கு பதிலளிப்பது, உகந்ததாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.” என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசாங்கம் தீர்வுத் திட்டத்தை வழங்கும் தருணத்தில், இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டமையானது, ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் போராளி அரவிந்தன் கூறுகின்றார்.

”போராளிகள் என்ற விதத்தில் இதை நாங்கள் சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கின்றோம். தற்போது இலங்கை அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை வழங்குகின்ற நிலைமையிலேயே, அதனை குழப்பி விடுகின்ற ஒரு தரப்பினுடைய வேலையாக இது இருக்கலாம். 13வது திருத்தச் சட்டத்தை வழங்க போகின்றார்கள், போலீஸ், காணி அதிகாரங்களை வழங்க போகின்றார்கள். என்ற நிலையிலேயே இதனை செய்கின்றார்கள்.
அண்ணன் வரப் போகின்றார் என கூறி, புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிக்கின்றார்கள். இவை அனைத்துமே திட்டமிடப்பட்ட இந்தியாவின் ‘ரா’ உளவுப்பிரிவின் திட்டமாக நாங்கள் பார்க்கின்றோம்.

கோத்தபாயவின் பங்காளி தவிபு துரோக கட்சி தலைவர் கந்தசாமி இன்பராஜா முன்னாள் போராளி அரவிந்தன் பிபிசிக்கு பேட்டி அளித்ததற்காக மிரட்டிய -பிள்ளையான் கட்சி ஊடக காணொளி


விடுதலைப்புலிகள் இப்படிச் செய்தார்கள் என்று பொய்ச் செய்தி பரப்பும் இந்த கோத்தபயா கட்சி கந்தசாமி இன்பராஜா இதற்கு யார் உரிமம் அளித்தது -பிள்ளையான் கட்சி ஊடக காணொளி

பிரபாகரன் பற்றி பழ.நெடுமாறன் கருத்து ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துமா?

தமிழனாக இருந்தாலும் நீயும் எதிரியே – தேசியத் தலைவர் கூறும் செய்தி ! #இனப்படுகொலை #ஈழம் #தமிழர் #சுத்துமாத்துக்கள் #Tamil #Eelam #TamilGenocide #srilanka #Traitors @TNAmediaoffice

Posted on


(பகுதி 01)

கலங்காலமாக தமிழ்தேசியம் புதுப்புது தமிழின துரோகிகளை பிரசவித்து கொண்டே இருக்கின்றது. மாமன்னன் இராவணன் தொடக்கம் தமிழீழ விடுதலைப்போராட்டம் வரை தொடராகவே விதையில் விசமானதால் விருட்சமாக துரோகங்கள் வளர்ச்சியடைந்து செல்கின்றது. பயிரில் கலந்த நச்சு செடிகள் காலங்காலமாக புடிங்கி எறியப்படுவதைப்போன்று விரைவில் இந்த அடிவருடிகளும் புடுங்கி எறியப்படும் அதற்கு முதல் நாம் தெளிவு நிலையை அடைய வேண்டும். காலங்காலமாக விடுதலைப்போரை குறிப்பிட்ட சிலரிடம் ஒப்படைத்து விட்டு ஒதிங்கி விடுகின்றோம் அது தற்காலத்தில் பெருமடங்காக அதிகரித்துள்ளது.

தமிழீழ கொள்கையில் உலகத் தமிழர்கள் அறுதி பெரும்பான்மையினர் அணைவரும் ஒற்றுமையாகவே இருக்கின்றோம் ஆனால் கேள்வி என்னவென்றால் தமிழீழ கொள்கையில் ஒற்றுமையாக இருக்கும் நாம் ஏன் நமக்குள் ஒற்றுமையாக இல்லை?

இதற்கான காரணத்தை தேடினால் விடை சின்னதாகவே தெரியும் ஆனால் அதன் பின்னால் உள்ள காரணத்தை தட்டி பார்த்தால் துரோகத்தை விட கொடிய நச்சு செடியாக அசுர வளர்ச்சி பெறுவதை பார்க்க முடியும். பதவி ஆசை, அரசியல் லாபம், பணம் சம்பாதிப்பது பெயர் புகழ். அவனை விட நான் பெரது இவ்வாறு பல காரணங்களை சொல்லலாம்

தமிழீழ விடுதலைப் போராட்ட களங்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. களம் – ஈழம்
2. பின் களம் – புலம்பெயர் தேசம்
3. பின் களம் இரண்டு – தமிழகம்

தற்போது தமிழீழத்தை பொறுத்தவரை ஒற்றுமையாக களத்தில் நிற்க மாத்திரமே முடியும் ஆனால் எவ்விதமான போராட்டங்களையும் முன்னெடுக்க முடியாது காரணம் அரசியல் சட்டம் மூன்று மற்றும் ஆறு ஆகிய சட்டங்கள் எந்த நேரத்திலும் களத்தில் உள்ளவர்கள் மீது பாயும் நிலமை உள்ளது. ஆகவே தற்போது தமிழீழ களம் ஒரு பலவீனத்தை சந்தித்து நிற்கின்றது ஆனால் இந்த பலவீனத்தை பின்களம் அதாவது புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்றவர்கள் இந்த பதினொரு ஆண்டுகளில் சீர் செய்திருக்க முடியும்?

உதாரணத்திற்கு:

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவை ஐரோப்பிய தேசத்தில் உள்ள ஈழத்தமிழர் ஒருவரின் விருந்து உபசர நிகழ்வில் கலந்து கொள்ள முடிகின்றது எனில்!?

முன்னால் பிரித்தானிய பிரதமர் திரேசா மே ஈழத்தமிழரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள முடிகின்றது எனில்?

கனடா பிரதமர் ஈழத்தமிழரின் பிறந்த நாள் விழா திருமண விழா பொங்கல் விழா போன்றவற்றில் கலந்துகொள்ள முடிகின்றது எனில்?!

பிரான்ஸ் ஜனாதிபதி ஈழத்தமிழர் ஒருவரின் விருந்து உபசாரத்தில் கலந்து கொள்ள முடிகின்றது எனில்?!

கனடா ஒன்றாரியோ நாடளுமன்ற உறுப்புனராக, சுவிஸ் பேர்ன் நகராட்சி உறுப்பினராக, நோர்வே ஒஸ்லோ நகர முதல்வராக, அமெரிக்க நியு ஜெர்சி நகராட்சி உறுப்பினராக, கலியோர்னியா நாடாளுமன்ற உறுப்பினராக, காவல்துறையாக, ஜேர்மனி அரசியல் ஆரிசியராக, காவல்துறையாக ஈழத்தமிழர்களால் வர முடியுமெனில்? ஏன் இதுவரை ஈழத்தில் சிறிய மாற்றத்தை கொன்டுவர முடியவில்லை? முடியவில்லையா மாற்றத்தை கொண்டுவர விரும்பவில்லையா? இதற்கான காரணத்தை பார்க்க முதல் ஏன் நாம் ஒற்றுமையாக இல்லை

மாவீரர் நாள், கரும்புலி நாள், தமிழின அழிப்பு நாட்களில் கடமைக்காகவும் பெயருக்காகவும் அவர் அவர் இனங்களில் பிரிந்து நின்று நினைவேந்துவதும் கடமைக்காகவும் பெயருக்காகவும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாத்திரமே மேற்கொள்ளுகின்றோம் இதிலும் ஒருசிலரே உணர்வுபூர்வமாக கலந்து கொள்கின்றனர் மற்றவர்கள் பெயருக்கும் புகழுக்கும், சுயநல ஆதாயத்திற்குமாகவே கலந்து கொள்கின்றனர் இன்னும் சிலர் நான் தான் பெரிது நீதான் பெரிது என காட்டிக்கொள்வதற்காக நிகழ்வுகளை செய்கின்றனர். ஒரு அறிக்கை விடுவதில் தொடங்கி ஒரு பாடல் வெளியிடுவதுவரை எமக்குள்ளையே பிளவும் வேற்றுமைகளும் ஏன் இவ்வாறு நடக்க காரணம் தாங்கள்தான் பெரிது என ஒருகூட்டம் தேசியத்தை மறந்து தேசியத்தலைவராக முற்படுகின்றனர். ஆளுக்கொரு அமைப்பு, ஆளுக்கொரு கொள்கை.

இவ்வாறு தொடர்ந்தால் விடுதலை என்பது வெறும் வார்த்தைகளிலே அமைந்து விடும். எப்போது ஒரு தமிழனாக தமிழீழ விடுதலைக்காக தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் ஒன்றாக “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது கொள்கை பெரிது” என்று ஒன்றாக செயற்படுகின்றோமோ அன்றுதான் விடுதலை இது தேசியத்தலைவர் கூறியது.

இவ்வாறு பின் களம் பலம் பெற்றால் தமிழீழ களம் பலம் பெறும் தமிழீழ களம் பலம் பெற்றால் அரசியல் துரோக நரிகள் சுமந்திரன், சம்மந்தன், சிறிதரன் உட்பட பலர் தானாகவே களைந்து மக்கள் மத்தியில் இருந்து தூக்கி எறியப்படுவர்.

இதனையே தேசியத்தலைவர் இவ்வாறு கூறுகின்றார். “போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறாது” என

இதனிடையே அன்று சமாதான காலகட்டத்தில் தலைவருக்கும் ஒரு ஊடகவியளாலருக்கும் இடையில் நடந்த உரையாடலில் அந்த ஊடகவியளாளர் ஒரு கேள்வியை கேட்டார் அதாவது உங்களுக்கு கோபம் வரவேண்டுமாயின் நான் என்ன செய்ய வேண்டும் இதற்கு தலைவர் சிறிதும் யோசிக்காது புன்னகையுடன் “தமிழினத்திற்கு எதிரியாகி பாருங்கள் எனது கோபம் விளங்கும் என்றார்”

ஆக தமிழீழ களத்தில் நிற்கின்ற தடம் மாறுகின்ற கூத்தமைப்பு தொடக்கம் சில முன்னால் போராளிகள் உட்பட தமிழீழ தேசத்தின் அடிவருடிகளாக துரோகிகளாகவே கருதப்படுவார்கள்

நாங்கள் ஒன்றாக இல்லாவிட்டாலும் இலட்சியத்தில் இருந்து தவறினாலும். தமிழீழ தேசத்தில் தண்டனைகள் உள்ளன

தமிழீழ விடுதலை போராட்டத்தில் கறுப்பு பக்கங்களில் நின்றார்கள் என்பதற்கு அமைவாக அவர் அவர் செய்த துரோக செயற்பாடுகளுக்கு அமைவாக

வி/போ/து/ச/1994/1/1மற்றும் 1996/1/3 ஆகிய தமிழீழ சட்டங்களுக்கு அமைவாக தண்டனைகள் வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இப்போது அரசியல் போராட்டாங்கள் கைகொடுக்க போவதில்லை பரிதாபத்திற்கு உரியவர்களாக இருந்தால் உலகம் எம்மை கண்டுகொள்ளபோவதில்லை ஆகவே நாம் பலசாலியாக மாறவேண்டும் அதற்கு எம்மிடம் இருக்கும் ஒரே ஆயும் இராஜ தந்திர நகர்வு.

இதற்கிடையில் ஒரு சிலர் எம்மிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை எவ்வாறு போரோடுவது என்று உங்கள் கொள்கையில் இருந்து வலகாதீர்கள் காரணம் இழப்பதற்கு ஒன்றும் இல்லாதவனால்தான் போராட முடியும் இலட்சியத்தை வெற்றிகொள்ள முடியும்.

இறுதியாக பலருக்கு இருக்கும் கேள்வி தமிழீழ களத்தை பலப்படுத்திய பின்னர் எவ்வாறு இராஜ தந்திர போராட்டத்தை முன்னெடுப்பது எம்மிடம் பலம் இல்லை எந்த பின்புல சக்தியும் இல்லை எந்த நாட்டின் ஆதரவும் இல்லை பின்னர் எவ்வாறு சாத்தியம்??

இதற்கான விடை அடுத்த பகுதியில் இதுவும் தேசியத் தலைவரே குறிப்பிட்டுள்ளார்….

ஈழம் புகழ் மாறன்

#முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு #வீரவணக்கம் ! #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #Tamil #Eelam #Mullivaikkal #ltte #Genocide #May18 #TamilGenocide

Posted on

leader prabakaran tribute 4

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”

ltte leaders dead


leader prabakaran tribute

praba god
எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !

Mullivaikal Remembrance 2

“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா? #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide

Posted on

ஆரம்பத்தில் மதிப்பு மிக்க தலைவர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வந்து போராடி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என்றும் கூறிவந்தார்கள்.

ஆனால் இப்போது வைகோ அவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவதில்லை. நெடுமாறன் அவர்கள் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறார்.

பிரபாகரன் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக நெடுமாறன் ஒருமுறை கூறியிருந்தார். அதுமட்டுமன்றி தன்னை சந்தித்த ஒரு ஈழத் தமிழரிடம் பிரபாகரனின் நீரிழிவு நோய்கூட தற்போது குணமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த வருடம் தனது பிறந்தநாளின் போது நெடுமாறன் அவர்கள் தனக்கு பிரபாகரன் வாழ்த்து கூறினாரா என்பது பற்றி எதுவும் கூறவில்லை.

அவரிடம் இது பற்றி யாரும் கேட்கவில்லையா அல்லது அவராகவே இவ்வாறு கூறுவதை விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை.

பிரபாகரன் இருக்கிறார் என்று தொடர்ந்து கூறிவரும் இத் தலைவர்கள் அவர் எங்கு இருக்கிறார்? எப்போது வருவார்? என்பன குறித்து எதுவும் கூறுவதில்லை.

இதனால் பிரபாகரன் இருக்கிறார் என்று கூறுவதால் யாருக்கு நன்மையளிக்கிறது என்று கேட்க வேண்டியுள்ளது.

இப்பதிவு கடந்த 2.4.2014 செய்த பதிவாகும். காலத்தின் தேவைகருதி மீள் பதிவு செய்கிறோம்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது,

(1) தமிழ் மக்களை பிரபாகரன் வருகைக்காக காத்து இருக்க வைக்கின்றது.

(2) தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு தலைமை உருவாவதைத் தடுக்கிறது.

(3) தமிழ் மக்கள் இன்னொரு போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தடுக்கிறது.

(4) கோத்தபாயா “புலிகள் இருக்கிறார்கள்” என்று பிரச்சாரம் செய்ய உதவுகிறது.

(5) மகிந்த ராஜபக்சவும் கோத்தபாயாவும் இதனைக் காட்டி தேர்தலில் வெல்ல வழி செய்கிறது.

(6) ஜ.நா வில் புலிகளும் போர்க்குற்றம் செய்தவர்கள் என்றும் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் வலியுறுத்த இடம் அளிக்கிறது.

(7) தமிழ் மக்கள் பல்லாயிரம் பேரைக் கொல்ல கொடுத்துவிட்டு தான் மட்டும் தப்பி சென்றுவிட்டார் என பிரபாகரன் மீது சிலர் விமர்சனம் செய்ய இடம் கொடுக்கிறது.

(8) தனது மகன், மகள், மனைவி எல்லாரும் இறந்துவிட தான் மட்டும் தப்பிச் செல்லும் அளவிற்கு பிரபாகரன் சுயநலமானவரா? என சிலர் கேட்டு கொச்சைப்படுத்த வைக்கின்றது.

(9) இந்தியாவில் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து தடை செய்ய உதவுகிறது.

(10) தமிழகத்தில் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாமை தொடர்ந்து வைத்திருக்கவும் அதில் அப்பாவி அகதிகளை அடைக்கவும் உதவுகிறது.

(11) தமிழக மக்கள் இந்திய அரசுக்கு எதிராக கோபம் கொண்டுவிடாமல் தடுக்கிறது.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது இலங்கை இந்திய அரசின் நோக்கங்களுக்கே அதிகம் துணை செய்கிது.

மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. நட்டமே அதிகம்.

26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வியட்நாம் தந்தை கோசிமின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது “எந்த உண்மைகளையும் மக்களிடம் மறைக்காதீர்கள். கசப்பான உண்மையாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்றார்.

மக்களை நம்புவோம்.
மக்களுக்கு உண்மைகளை கூறுவோம்.
மக்கள் வெற்றியை பெற்று தருவார்கள் .

முகநூல் பதிவு-வடக்கு கிழக்கு மக்கள்

“நந்திக்கடல்” என்பது ஒரு கோட்பாட்டு #ஈழமறவர் #தமிழர் #ஈழம் #பிரபாகரன் #இனப்படுகொலை #Tamil #Eelam #Prabhakaran #Genocide #Nandikadal

Posted on

“நந்திக்கடல்” என்பதும் அது ஒரு கோட்பாட்டு வடிவம் அடைவதும் எதிரிகளுக்கும் அதன் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் மேற்படி அவதூறு கும்பலுக்கும் பெரும் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. -PKR-

உக்கிரமான ஒரு மீள் பதிவு..

வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல தோற்றுப் போனவர்களும் வரலாற்றில் நினைவுகொள்ளப் படுவார்கள். ஏனென்றால் அவர்கள் போட்டிக் களத்தில் நின்றார்கள். ஆனால் வேடிக்கை பார்த்தவர்களுக்கு எந்த வரலாறும் இருக்கப் போவதில்லை.

அதே போல் வீழ்ந்துபோன ஒரு போராட்டத்தை சரியோ , தவறோ அதை முன்னகர்த்த / அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்க அயராது முயன்று கொண்டிருப்பவர்களுக்கும் வரலாற்றில் ஒரு இடம் கிடைக்கும்.

ஆனால் தினமும் இந்த முயற்சிகள் மீது காறி உமிழ்பவர்களுக்கும் / அவதூறு பேசுபவர்களுக்கும் எந்த வரலாறும் மிஞ்சப் போவதில்லை.

2009 மே இலிருந்து பல்வேறு தரப்புக்களால் பல்வேறு வழிமுறைகளில் தொடங்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியையும் அவதூறுகளாலேயே நிர்மூலம் செய்த தரப்பின் தற்போதைய இலக்கு ‘நந்திக்கடல்’.

“நந்திக்கடல்” என்பதும் அது ஒரு கோட்பாட்டு வடிவம் அடைவதும் எதிரிகளுக்கும் அதன் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் மேற்படி அவதூறு கும்பலுக்கும் பெரும் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

“நான் இங்கு பேச விரும்பும், முன்வைக்க விரும்பும், விவாதிக்க விரும்பும் கருத்துக்கள் ஒரு கோட்பாட்டையோ அல்லது ஒரு முறையியலையோ பிரநிதித்துவப்படுத்துபவை அல்ல, நீண்ட தேடலின் விளைவாய் – ஆழ்ந்த புரிதலின் அடிப்படையில் எழுந்த எனது தர்க்கரீதியான ஆய்வின் முடிவை நிராகரிப்பதற்கான எல்லா உரிமைகளையும் நான் உங்களுக்கு வழங்குகிறேன்” என்றார் மிசேல் பூக்கோ.

பூக்கோவை கிரமமாக உள்வாங்கிய எமக்கும் இதே கருத்துத்தான்..

தலைவர் ஒரு புரட்சியாளனாக இருந்து ஒரு கோட்பாட்டாளனாகப் பரிணமித்தவர்.
அவர் போராடும் தேசிய இனங்கள் சார்ந்து ஒரு புதிய வடிவத்தை நந்திக்கடலில் அறிமுகம் செய்தார்.

அதைக் கண்டடைவதும் கோட்பாட்டுருவாக்கம் செய்வதும் பின்னுள்ளவர்களின் பணி / கடமை.

நிறைய போதாமைகள் உள்ள போதும் பெரும் பிரயத்தனப்பட்டு நாங்கள் நண்பர்களாக அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவத்தைக் கொடுக்க முயன்று வருகிறோம்.

அதை ஏனைய ஆளுமைகளும் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம். பல இளைய தலைமுறையினர் இணைந்து விட்டார்கள் என்பது பெரு மகிழ்வு.

இதுவே எதிரிகளுக்குப் பதட்டத்தைத் தருகிறது.

இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.. அவதூறு பேசுபவர்கள் வேறு வழியாகச் செல்லவும் அல்லது நல்ல குளிர் நீராகக் காலை மாலை இரு வேளையும் அருந்தி வரவும் இந்தக் கொதிப்பு அடங்கும்.

நாளை நமது “நந்திக்கடல்” வடிவம் ஏற்கப்படலாம், நிராகரிக்கவும் படலாம்.. அது எதுவாக இருந்தாலும் அதை ‘அ’ எழுதித் தொடக்கி வைத்ததற்காக வரலாற்றில் நினைவு கூரப்படுவோம்.

அப்போது அவதூறு பேசிய உங்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கும்.

PKR

அண்ணை வருவார் என்று பாட்டு போட்டு கொண்டிருப்பதை விடுத்து… அவர் காட்டிய வழியில் !

Posted on

பிரபாகரம் என்றால் என்ன? 

பிரபாகரம் குறித்த சரியாக புரிதல் இருந்தால், சின்ன சின்ன வெற்றிகளை நோக்கியாவது வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள்…

அவ்வெற்றிகளை உங்கள் மக்களிடம் உடன் உரியமுறையில் பகிர்ந்து, அவர்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை கட்டியெழுப்பப்பாருங்கள்…

அண்ணை வருவார் என்று பாட்டு போட்டுகொண்டிருப்பதை விடுத்து…

ஒரு தலைவன் காட்டிய வழியில் சாதித்து, இம்மக்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருக்கப்பாருங்கள்….

அது தான் அவர் படைத்த உயரிய வீரவரலாற்றின் தொடர்ச்சியாகும்….

ஆகஸ்ட் 11, 2017இல், ஆம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கீழ்க்கண்ட பதிவை இட்டிருந்தேன. இதன் தொடர்சியாக எழுத நினைத்த பிரபாகரம் தொடர்வதற்கு இரண்டு வருடங்கள் எடுத்துவிட்டது. இடையில் உடலியல் ரீதியாக சந்தித்த சவால்கள் அதற்கான மனோதிடத்தை தரவில்லை. தற்போது அது எழுதப்படும் நிலையில் அன்றைய பதிவை ஒரு முன்னூட்டாக மீண்டும் எடுத்துவருகின்றேன். …..

தமிழர் மனங்களில், பாசமுள்ள, பற்றுள்ள, தலைமையாக பதிந்துவிட்ட பிரபாகரன் என்ற நாமத்தை, அதன் சூத்திரத்தை, இன்றைய தமிழ் தலைமைகளோ அல்லது செயற்பாட்டாளர்களோ அது ஈழம் மட்டுமல்ல, ஈழம் கடந்தும் இன்றுவரை சரிவர புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இது குறித்து விரிவாக பல பரிணாமங்களில் பல விடயங்களை விரைவில் எழுதுகிறேன். ஆனால் இன்று ஒரு விடயம்…

பிரபாகரன் பேசும் தலைவர் அல்ல…. முழங்கும் தலைவர் அல்ல… சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆழமான அர்த்தத்தை தேடுபவர்… தன் மக்களிற்கு என்றும் உண்மையாக இருந்தவர்… உரிமை வேண்டி நிற்கும் மக்களின் விடுதலை வரலாறுகளின் இதயநாயகனாக பார்க்கப்படும், சே எனப்படும் சேகுவாராவிடம், தலைமை என்றால் என்ன என்று கேட்டபோது, அவர் சொன்னார்… “முதலில் உங்கள் மக்களிற்கு என்ன தேவை என்பது தெரிந்திருக்கவேண்டும்… இரண்டாவதாக அதை அடைவதற்கான மார்க்கம் தெரிந்திருக்கவேண்டும்… இறுதியாக அதை அடைவதற்கான முழுமையான அர்ப்பணிப்பு இருந்தாக வேண்டும்”… என்றார்.

இன்று இவை மூன்றையும் கொண்டிருக்கும் ஒரு தலைமையை, ஈழத்திலோ, ஈழத்திற்கு வெளியிலோ முடிந்தால் அடையாளம் காட்டுங்கள்… இந்நிலையை எட்டுவதற்கு பல்பரிமாண ஆளுமை இருந்தாக வேண்டும்…. இன்றும் பிரபாகரன் என்ற தலைமையை தமக்கு பிடித்த ஒரு பரிமாணத்திலேயே, அறிந்து, புரிந்து பலர் கொண்டாடிக் கொண்டிருக்கிற்ன்றனர். அவரின் பல்பரிமாண ஆளுமையையும், அதுவே அவரை ஒரு உயரிய நிலைக்கு இட்டுச் சென்றது என்பதையும், முழுமையாக புரிந்து கொண்டவர்களாக இல்லை. பிரபாகரன் தன்னை சுற்றியிருந்தவர்களிடமும், இவ்வாறான பல்பரிமாண ஆளுமையை வளர்த்துக் கொண்டே இருந்தார். அதை புரிந்து கொண்டு தம்மை அவ்வாறு வளர்த்துக் கொண்ட பலர், ஈழ விடுதலை வரலாற்றில் தாமும் சாதனையாளர்களானார்கள்… கூடவே அர்ப்பணிப்பின் உயர் வடிவமாகி மாவீரக்களுமாகினர்… அது குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்….

சே சொன்ன மூன்று விடயங்களை கொண்டிருந்தால் மட்டும் போதாது… எந்த மக்களுக்காக களம் கண்டீர்களோ அந்த மக்களின் மனங்களை வென்றவர்களாக, அந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி உங்கள் பின்னால் அணிவகுக்க, எப்போது உங்களால் முடிகிறதோ, அப்போதே மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு தேசிய போராட்டத்தில் மக்கள் பலத்துடன் உங்களால் முன்னேற முடியும். இதில் முதலில் உங்கள் மக்களின் பலம், பலவீனம் குறித்த முழுமையான புரிதல் உங்களுக்கு இருந்தாக வேண்டும்… இது ஈழத்தில் இருந்து, தமிழகத்தில் சற்று மாறுபடலாம்… மலேசியாவில் இன்னும் வேறுபடலாம்… இவேவேளை காலத்திற்கு காலமும்… போராட்ட களங்களிற்கு ஏற்பவும் கூட இது மாறுபடலாம் அல்லது வேறுபடலாம்… சுருங்கக்கூறின் இதற்கென்று ஒன்றும் நிரந்தர போமிலா கிடையாது… இங்கு தான் தலைமைகளின் ஆளுமை வெளிப்படுகிறது… அதனால் தான் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறந்த தலைமை என்கிறோம்…

ஈழத்தமிழினத்தில் உள்ள முக்கிய பலவீனம், நம்பிக்கையை இலகுவாக தொலைத்துவிடுவது… இந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதை பிரபாகரன் வெற்றிகரமாக, கட்டம் கட்டமாக, தொடர்ச்சியாக, ஏறுநிலை படிமாணத்தில் செய்தார். இதை முள்ளிவாய்காலுக்கு பின்னராக, கடந்த எட்டு ஆண்டுகளில் (இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய பதிவு இது) யாரும் செய்யதாக தெரியவில்லை… முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான காலம் என்பது மக்கள் நம்பிக்கையை மீண்டும் தொலைத்துவிட்ட காலம்… சிறதுசிறிதாக என்றாலும் மக்களிற்கு வெற்றியை காட்டுங்கள்… இல்லையேல் விரைவில் இந்த மக்களை இழந்து விடுவீர்கள் என தாயகத்தில் இருந்து புலம்வரை நானும் அனைவரிடமும் கதறிப்பாத்துவிட்டேன்… பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்… பந்தா தலைமைகள் மக்கள் தலைமைகளாக முடியுமா?

இதற்கான ஒரு உதாரணத்தை என் பதிவுகளில் இருந்தே எடுத்து வருகின்றேன்… நானும் பல பதிவுகளை இட்டு வருகின்றேன்… சமீபத்தில் அமெரிக்க கோப்பைளை வென்றது கனடிய தமிழர் இளையோர் உதைபந்தாட்ட அணி என்றொரு செய்தியை தரவேற்றியிருந்தேன்… அதற்கு காட்டிய ஆதரவு வெளிப்பாடும் பகிர்வுமே இதற்கான பதில்… அவர்களின் சாதிப்பு உங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது…. உங்களின் வெற்றி போன்ற உணர்வை ஏற்படுத்தியது… இளையோர் சாதிப்பார்கள் என்றொரு சிறு நம்பிக்கையையாவது ஏற்படுத்தியது… இவ்வாறு நல்ல செய்திகள் தொடர்ச்சியாக வருமானால் இனத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை உங்களிடம் தானாகவே அதிகரிக்கும் அல்லவா?

இவ்வாறான நல்ல செய்திகள், அரசியல் சார்ந்தோ, பொருண்மியம் சார்ந்தோ, சமூகம் சார்ந்தோ, விளையாட்டு சார்ந்தோ, கலை சார்;ந்தோ அல்லது இன்னும் ஏதோ துறைசார்ந்தோ அமையலாம்… இரண்டாவது இவ்வாறு அமையும் செய்திகள் உடனுக்கு உடன் அம்மக்கள் குழுமத்திடமும் உரிய முறையில் பகிரப்படல் வேண்டும்… அதாவது இதை ஆங்கிலத்தில் சொல்வதானால மாக்கட்டிங்… இங்கும் தமிழ் இனத்தில் பாரிய குறைபாடு… போராட்ட காலத்தில் கூட, இவ்விடயத்தில் புலம்பெயர் தமிழர் தரப்பு தன்னை முழுமையாக வளர்த்துக் கொள்ளவில்லை… குறிப்பாக தமிழர் கடந்த பரப்புரையில்…

ஆகவே

பிரபாகரம் குறித்த சரியாக புரிதல் இருந்தால், சின்ன சின்ன வெற்றிகளை நோக்கியாவது வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள்…

அவ்வெற்றிகளை உங்கள் மக்களிடம் உடன் உரியமுறையில் பகிர்ந்து, அவர்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை கட்டியெழுப்பப்பாருங்கள்…

அண்ணை வருவார் என்று பாட்டு போட்டுகொண்டிருப்பதை விடுத்து…

ஒரு தலைவன் காட்டிய வழியில் சாதித்து, இம்மக்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருக்கப்பாருங்கள்….

அது தான் அவர் படைத்த உயரிய வீரவரலாற்றின் தொடர்ச்சியாகும்….

– நேரு குணரட்ணம்

இதற்காகத்தான் விடுதலைப்புலிகளை 30 நாடுகள் சேர்ந்து வீழ்த்தினார்கள்!

Posted on

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் நாப்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை !

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!

முகநூல்களிலும் வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!

விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால் எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?

அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது ?

பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தனர்?

அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்!

அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே!

அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கானதளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்?

அவர்கள் தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்று வரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!

இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கானஇ தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலு விழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (ளொட்கெ).
* 1௯ தங்ககம் (ளொட்கெ)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள். உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை. சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோ இட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள் தான் மேற்குறிப்பிட்டமக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா ?

மக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க!

இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள் !

தரைப்படைகள்
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணின்
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி

கடற்படைகள்.
* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.
* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (Mஈ)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
* மாவீரர் பணிமனை

இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை!ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.

எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”! உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.

அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால் அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும்.

அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது ! இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளாஸ தீவிரவாதிகள் ?

விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ.. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது!

விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது!

யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள் !

யார் சொன்னது அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று ?

புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை!

ரோப்பிடோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. ஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் தயாரிப்பதில் வல்லவர்கள். தொழினுட்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர் என அது மேலும் தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் கரும்புலிப் படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் நீர்மூழ்கி ஏவுகணகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குலக நாடுகள் உற்பத்திசெய்யும் நீர்மூழ்கி ஏவுகணைகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவுகணையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுற்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது.

தமது வசதிகளுக்கு ஏற்ப, தொலைவில் இருந்து இயக்கப்படும் ‘ரிமோட் கன்றோலர்’ மூலம் நீர்மூழ்கி ஏவுகணைகளைப் புலிகள் துல்லியமாக தயாரித்து வைத்திருந்துள்ளனர். இலங்கை இராணுவம் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம் திடீரெனக் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, நீர்மூழ்கி ஏவுகணையைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்காசியாவில் இவ்வகையான பாரிய சக்திகொண்ட நீர்மூழ்கி ஏவுகணைகளைக் கொண்ட ஒரே இயக்கம், புலிகளாகத்தான் இருக்கவேண்டும் என இந்தோனேசிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற கனரக ஆயுதங்களை மிக இலகுவாக உற்பத்திசெய்யக் கற்றுக்கொண்டனர் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும்.  


கட்டமைப்புகள்


 

தமிழீழ விடுதலைப் (போராட்டம்) புலிகள் அழிக்கப்பட்டது எவ்வாறு ?-காணொளிகள்

Posted on

மகாபாரதத்தில் கர்ணனை யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவனது சக்திகளை அழித்து அதன் பின்னர் செத்தப் பாம்பை அடித்து வென்றது போல் கண்ணன் வரிகளில் கீழே

சமாதானத்தில் சர்வதேசத்தின் கட்டமைக்கப்பட்ட சதிகளால் புலிகள் வழங்கள் அழிக்கப்பட்ட பின்னர் செத்த பாம்பை அடிப்பது போல் இலங்கை இராணுவம் இறுதி யுத்தத்தில் புலிகளை வென்றது.


அதன் முழுமையான பார்வைகள்

சர்வதேச சமாதான வேடம் பற்றி தலைவர் பிரபாகரன்

யோகி பீக்கன் திட்டம் பற்றி

சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட புலிகளின் ஆயுத வழங்கல் !

கருணாவின் பிளவிலிருந்து தப்பி வந்த நிலாவினி

கருணாவின் பிளவுக்கு புலிகள் விளக்கம்

சமாதான வலைப்பொறி

மணிவண்ணன்  விடுதலை அரசியல் -மெத்தப்படித்தவர்களின் விக்கிற அரசியல்தேசியத் தலைவரின் வீரச்சாவும் ! தேவைப்படுவோரின் தேவைகளும் !

Posted on

புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ண பத்திரிகை ஒன்றில் “சத்திய சோதனை” எனும் ஆக்கத்தில் எழுதிய விடயம் ஒன்று தற்போது நினைவுக்கு வந்தது.

காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிக மணி வி.வி.வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார்.

‘சோகசோபித சொர்ணக்குயில்’ இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மேடையேற்றினார்.

‘மயானத்தில் மன்னன்’ என்ற பேரில் அரியாலையைச் சேர்ந்த பொன்னையா சண்முகலிங்கம் என்பவரால் நடிக்கப்பட்டது. இந்த அரிச்சந்திரன் கதா பாத்திரம் மகாத்மா காந்தியின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அரசுரிமை, மனைவி, மகனை இழந்த போதும் சத்தியத்துக்காக நிலைகுலையாத மன்னன் அரிச்சந்திரனின் வரலாறு அது. மகாத்மாகாந்தி தனது சுய சரிதையை சத்தியசோதனை என்ற பெயரிலேயே எழுதினார்.

தமிழர் தம் வரலாற்றிலும் இதேபோன்ற நிலை எழுந்தது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் ‘அவர்’ உயிருடன் வாழவேண்டும் எங்காவது தப்பித்து இருக்க வேண்டும் என மனதார விரும்புகின்றனர்.

ஆனால் அவர் இல்லை என்பதே யதார்த்தம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சாத்திரிமாரை அணுகும்போது அவர் ஓரிடத்தில் உள்ளார்; மறை பொருளாகக் காட்டுகிறது என்றே சொல்லுவர்.

உண்மையில் அவர்களுக்குத் தெரியும் ஆள் இல்லையென்று. அதைச் சொன்னால் அன்று கிடைக்கும் வருமானத்துக்குப் பின் எதுவும் கிடைக்காது. ஆகவே இருக்கிறார் – இருக்கிறார் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.

இதையொத்த நிலைதான் 2009 மே 18இற்கு பின் ஏற்பட்டது. சுமார் முப்பத்தையாயிரம் மாவீரர்களை வழிநடத்தியவர் மாவீரராகிவிட்டார். அவரை மாவீரர் பட்டியலில் சேர்க்கத் தயாரில்லை புலம்பெயர்வாசிகளை வழிநடத்துவோர்.

அவரின் அண்ணன் மனோகரன் ‘சிலர் மண்ணில் தேடுகிறார்கள், சிலர் விண்ணில் தேடுகிறார்கள்’ என ஒரு ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளித்தார். வேறு எப்படித்தான் பதிலளிப்பது? அவர் தமிழரின் மனங்களில் வாழ்கிறார் என்பதே உண்மை.

குலம் அண்ணா அவருக்கு விளக்கேற்றி தமது உணர்வை வெளிப்படுத்த முயன்றார். அதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர் உயிரோடு உள்ளார் என்று மற்றவர்களுக்கு சொல்லலாம்.

குலம் அண்ணருக்கே சொல்ல முடியுமா? தலைவருக்கு விளக்கேற்ற அனுமதிக்காத இடத்தில் எனக்கென்ன வேலை? என நினைத்தார். ஒரு மாபெரும் பொய்யை வழிமொழிய அவர் தயாராக இருக்கவில்லை.

இதற்காக அல்பிரட் துரையப்பா, கருணா போன்றோருக்கு கொடுத்த பட்டத்தை வாய்மொழியாகவும், சமூகவலைத் தளங்களிலும் பரப்பினர். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு 2009இற்கு பின்னர் மாவீரர் நாளில் ஒரு சாதாரண தமிழ் மகனாக ஒரு மூலையில் நின்று சுடரேற்றி விட்டுத் திரும்புகிறார்.

‘ஒரு விளக்கேற்ற வேண்டுமென்று துடிக்கிறார்கள்’ என்றும் ஒரு பிரகிருதி இவரது நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்தினார். 2009 இல் ‘எமது ஆயுதப்போராட்டம் மௌனித்து விட்டது’ என்று அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உத்தியோகபூர்வமாக அறிவித்தாயிற்று.

2011 ஜனவரி 11இல் சுவிஸ் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர்கள் 7 பேரை சுவிஸ் அரசு கைது செய்தது. இவர்கள் உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

சுவிஸிலுள்ள தமிழர்களிடம் பலாத்காரமாக நிதி சேகரிக்கப்பட்டது என்றொரு குற்றச்சாட்டு. இப்பணம் குற்றவியல் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது என்றுமொரு குற்றச்சாட்டு.

வங்கியை ஏமாற்றினர் என்றும் ஒரு குற்றச்சாட்டு. இறுதி யுத்தத்தின் தேவைகளுக்கென தனி மனிதர்களின் பெயர்களில் கடன் பெற்று இயக்கத்துக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அங்குள்ள அப்போதைய மற்றும் தற்போதைய தலைமை மௌனம் காத்தது. அவர்கள் வேண்டிய காசு அவர்களே கட்டட்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

இந்தக் காசு எங்கே போனது என்பதும் சந்தேகமறத் தெரியும். அந்தப் பொய்யை தொடர்ந்து சொல்ல விடாமல் குலம் அண்ணா போன்றோர் தடுக்கிறார்கள் என்பதே அவர்களின் கோபம்.

சுவிஸில் உள்ள தமிழர்களிடம் நாம் மனம் விரும்பியே நிதி வழங்கினோம் என்றொரு ஆவணத்தைச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் வழங்கினால் வழக்கை முடிக்கலாம் என்றொரு நிலை இருந்தது.

மாவீரர் நாள் நிகழ்வு மற்றும் ஆலயங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த 14ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் குலம் அண்ணர் இந்த விடயத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார். உலகெங்கும் உள்ள ஆர்வலர்கள், உணர்வாளர்கள் சம்பந்தப்பட்டோரின் செயல் குறித்து கடும் சீற்றமடைந்தனர்.

எனினும் பூப்புனித நீராட்டு விழா, திருமணம் போன்ற வைபவங்களில் இந்த விடயத்தை தெரியப்படுத்திய எஸ்.ரி.ஏ எனும் அமைப்பினர் மக்களிடம் படிவத்தை வழங்கிக் கையொப்பம் பெற்றனர்.

இச் செய்தியை குலம் அண்ணரின் வாயால் கேட்டதும் மிகவும் ஆறுதல். இவ்வாறு கையெழுத்திட்ட 5069 உணர்வுத் தமிழர்களே! உங்கள் அனைவரையும் ஒவ்வொரு போராளியாக நான் மதிக்கிறேன், என் நண்பர்களாக ஏற்கிறேன்.

எனது நட்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மன்னிக்கவும்! எனது தலைவன் யார் காலிலும் விழக்கூடாது என்றுதான் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். இன்றோ போராடிய இனம் யார் யாரோ காலிலெல்லாம் விழுகிறது. அவர் இருக்கிறார் திரும்பி வருவார் என்று சொல்வதன் மூலம் தமக்கான கடமையை நாசூக்காக நிராகரிக்கின்றனர்.

யுத்தம் முடிந்தபின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கும், வெளிநாட்டில் முதலீடுகளை வைத்திருப்போருக்கும், ஏனைய புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் உள்ளது.

மூன்றாம் தரப்பினர் ஏதோ தம்மாலான உதவிகளை செய்கின்றனர். மலைபோல் உள்ள தேவைக்கு இது மிகவும் அற்பமே. இருக்கும் பணத்தை நாட்டில் தேவை உள்ளோருக்கு அனுப்பாமலிருக்க தீர்மானித்த இரண்டாம் தரப்பினர் இந்த முதலீடுகளை எப்படி மேலும் பெருக்கலாம் என எண்ணுகின்றனர்.

அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு எப்போதுமே அடுத்த தேர்தல் பற்றிய சிந்தனைதான். ஆளுமையுள்ளவர்கள் எவரும் அருகில் வந்துவிடக்கூடாது. அவர்களுக்கு தேவை எடுபிடிகளே.

இந்த நிலையில் தமக்கு சமூக அங்கீகாரமும், வாழ்வாதாரமும் வழங்கும் சக்திகளின் பின்னால் பாதிக்கப்பட்டோர் இழுபட்டுப் போவது தவிர்க்க முடியாதது. ஒரு மனிதனை ‘நூறாண்டு காலம் வாழ்க!’ என்றே வாழ்த்துகிறோம்.

இப்போதிருந்தால் அவருக்கு 64 வயது. இன்னும் 36 வருடங்களுக்கு இப்படியே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்களா? இன்று இவர்கள் சொல்லும் சொல்லை பலர் நம்புகின்றனர். இவர்களின் பிள்ளைகள் 36 வருடங்களுக்குப் பின்னும் இதே பொய்யைச் சொல்லப்போகிறார்களா?

அப்போது எமது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இந்தக் கதையைக் கேட்க வேண்டி வருமா? ஒவ்வொருவரும் யாருக்காகச் சுடரேற்றப் போகிறீர்களோ அத்தோடு மனதில் அவரையும் நினைத்துச் சுடரேற்றுங்கள்.

இன்று முன்னாள் போராளிகள், போராட்டத்துடன் நீண்ட காலம் ஒத்துழைத்தோர் யாசகம் கேட்கின்றனர். மனதை உலுக்கும் செய்தி இது. இன்னொரு விடயம் ஒரு ஆண் எந்த வயதிலும் தந்தையாகலாம்.

ஆனால் பெண்ணின் நிலை அப்படி அல்ல. பெரும்பாலும் 35 வயதுக்குப்பின் தாயாக முடியாது. (விதிவிலக்காக சிலர் 40 வயதிலும் குழந்தை பெறுகின்றனர்) அவர் வளர்த்த செஞ்சோலைப் பிள்ளைகள் பலருக்குத் திருமணமாகவில்லை.

ஒரு பகுதியினர் வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ளனர். இன்னொரு பகுதியினர் அகிலாண்டேஸ்வரி இல்லத்தில் உள்ளனர். இவர்கள் பற்றிச் சீரியஸாகச் சிந்திக்க வேண்டும்.

வயது வந்த ஆண் பிள்ளைகள் உள்ள தமிழர்கள் இந்தப் பிள்ளைகளை மருமக்களாக ஏற்கத் துணியவேண்டும். அது அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும். நாங்கள் உறவுகள் இருக்கிறோம் என நம்பிக்கையூட்ட வேண்டும்.

இந்த விடயத்தில் ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும். டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தை நிர்வகிக்கும் அருட்சகோதரி குடிகாரனாக இல்லாமல் இருந்தால் அதுவே போதும் என்கிறார்.

வெளிநாட்டில் சண்டித்தனம் புரிவோருக்கு இவ்வாறான விடயங்களில் அக்கறை இல்லை. முள்ளிவாய்க்காலில் எல்லாத்தரப்பையும் ஒற்றுமையாக்கி விட்டாலும் இவர்கள் விடுவதாய் இல்லை. தனியே சுடரேற்ற ஏற்பாடு செய்தார்கள்.

பிரதேச வேறுபாடு காட்டுகிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தத் துணை நின்றார்கள். பிரான்ஸில் மாவை கலந்து கொண்ட மாநாட்டில் கண்ணீர்ப்புகையடிக்க ஏற்பாடு செய்தார்கள்.

எமது மொழியின் பெயரால் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடந்தாலும், பிரான்ஸில் நடந்தாலும் கண்ணீர் புகைக்குண்டுதானா? அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதலைத் தொடர்ந்து ஒன்பது பேர் உயிரிழக்க நேர்ந்தது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆயுத வழியை இளைஞர் நாடினர். ஏற்கனவே தமிழ் இளைஞர் பேரவையில் அங்கம் வகித்தவர்களில் குலம் அண்ணரும் ஒருவர்.

‘இந்தப் போராட்ட வரலாற்றில் எம்மைப் பாதுகாத்தவர் நீங்கள். உணவு தந்தவர் நீங்கள். நோயுற்ற வேளையில் பராமரித்தவர்கள் நீங்கள். தேவை என்றால் இரத்தம் தந்தீர். மீட்பு நிதி என்றதும் நகையைத் தந்தீர். இறுதிப் போர் என்றதும் பிள்ளைகளைத் தந்தீர்.

இன்று தலைவன் இல்லாத நிலையில் உங்களுக்கு மட்டுமே நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆயிரம் தடவை சொல்கிறோம் அவர் எங்கள் மனதில் மட்டுமே வாழ்கிறார்.

தமிழகத்தில் வைகோவிடம், அவரைத் தமிழினம் இழந்துவிட்டது என்று சொன்னதும் விம்மி விம்மி அழுததாக எனது நெருங்கிய நண்பர் எனக்குச் சொன்னார்.

அவரையும், நெடுமாறன் ஐயாவையும், காசி அண்ணாவையும் ஏமாற்றி விட்டனர். அவர்கள் அனைவருக்கும்தான் இந்த வருத்தமான செய்தியை உறுதிப்படுத்துகிறேன். என் மீது மேற்கொள்ளப்படும் எந்தச் சேறடிப்பையும், செருப்படியையும் ஒரு பொருட்டாக மதிக்கப்போவதில்லை.

உண்மையையா, எமக்கு விருப்பமானதையா என்ற கேள்வி வரும்போது உண்மையின் பக்கம் நிற்போர் எங்களுடன் கைகோத்துக் கொள்ளுங்கள். இது சத்தியசோதனை தான்! விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல எனத் தெரிவித்தமைக்காக சுவிஸ் அரசுக்கு நன்றி சொல்வோம்.

தண்டனை கிடைக்க வேண்டுமென எதிர்பார்த்த சக்திகளுக்குள் சில ஊடகங்களும் அடக்கம். அவர்களுக்கு ஏமாற்றம்தான்… அவ்வாறான ஏமாற்றம் தொடரட்டும்.

யார் இந்தக் குலம் அண்ணர்?

இயற்பெயர் – செல்லையா குலசேகரராஜசிங்கம்

சொந்த இடம் – புன்னாலைக்கட்டுவன்

பிறந்த திகதி – 1955 ஏப்ரல் 17

‘சுருக்கமாகச் சொன்னால் ஈழத்துக் காமராஜர். இருவருக்குமிடையில் வழிமுறைகள் மாறுபட்டபோதும் அவரைப்போலவே திருமணமாகாதவர். எளிமைக்கும், யோக்கியத்துக்கும் இவரேயே உதாரணம் காட்டுவர்.

‘புதிய தமிழ்ப் புலிகள்’ இயக்கத்தில் இருந்த சுமார் பத்துப் பேரில் ஒருவர். தமிழ் உணர்வாளர்களைத் தேடித் திரிந்த தலைவர் பிரபாகரன் 1975இல் இவரை இனங்கண்டார்.

துரையப்பாவின் சம்பவத்துக்குப் பின்னர் தலைவரைப் பாதுகாத்தவர்களில் இவரும் ஒருவர். ஒரு தேவைக்காக தலைவருடன் அச்சுவேலிக்குப் போய் வருகையில், வேறொரு விடயமாக வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் இவர்களை மறித்தனர்.

அவ்வேளை தலைவர் வானத்தை நோக்கித் துப்பாக்கி பிரயோகம் செய்யவே பொலிஸார் சிதறி ஓடினர். அவரின் துணிச்சலை நேரடியாகக் கண்ட குலம் சரியான தலைவனின் தொடர்பு கிடைத்ததற்காகப் பெருமைப்பட்டார்.

தீவிரவாத இளைஞர்களைத் தேடித் திரிந்த இன்ஸ்பெக்டர் சம்பந்தனுக்கு, துரோகி ஒருவர் இவரை இனங்காட்டினார். பொலிஸாரால் கைதான இவர் மோசமான சித்திரவதைக்குள்ளானார்.

பல்வேறு இடங்களுக்குக் கொண்டு திரிந்த பொலிஸார் பின்னர் கொழும்பு நாலாம் மாடியில் தடுத்து வைத்திருந்தனர். 1978 செப்டெம்பரில் இரத்மலானையில் இடம்பெற்ற அவ்ரோ விமானக் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வழக்குத் தாக்கல் செய்தனர்.

அதன் பின் ‘அவ்ரோ குலம்’ என்றே எல்லோராலும் குறிப்பிடப்பட்டார்.

அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் வாதாடி இவரை விடுவித்தார். 1980 மே மாதம் இயக்கத்தில் பிளவு உண்டானது. இரு பகுதியினரையும் ஒன்றிணைக்க ராஜா என்பவர் லண்டனிலிருந்து வந்திருந்தார்.

1980 ஓகஸ்ட் மாதம் ஊர்காவற்றுறை கரந்தனில் இணைப்புச் சம்பந்தமாகக் கலந்துரையாடல் நடைபெற்றது. இரு பகுதியினரதும் கருத்துக்களை குலம் அண்ணரே பதிவு செய்தார். சமரச முயற்சி வெற்றிபெறவில்லை.

செல்லக்கிளி அம்மான், காந்தன் முதலியோரைப்போல இவரும் தற்காலிகமாக ஒதுங்கி இருக்க முடிவு செய்தார். எனினும் 1981இல் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டதும் இவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

விமானம் மூலம் பலாலியிலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டோரில் இவரும் ஒருவராக இருந்தார். பனாகொடை முகாமில் குட்டிமணி, தங்கத்துரைக்கு நிகழ்ந்தது போன்றே கடுமையான சித்திரவதை இவருக்கும்.

1982இல் சந்திரஹாசன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மூலம் விடுதலையானார். எனினும் பிரதி வாரம் பொலிஸில் கையெழுத்திட வேண்டியிருந்தது. பின்னர் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார்.

மண் வீடு, வறுமை, திருமணமாகாத மூன்று சகோதரிகள். வேறு வழியில்லை. 1984இல் இந்தியாவுக்குச் சென்றார். தலைவரை சந்தித்த பின் 1985இல் சுவிற்சர்லாந்துக்குச் சென்றார்.

இவரது புகலிடக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. சுவிஸில் செங்காளன் மாநிலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளுக்குத் தலைமை தாங்கினார்.2000ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் முழுவதற்குமான பொறுப்பை ஏற்றார். 2009இல் யுத்தம் முடிவடையும் வரை இப்பொறுப்பில் இருந்தார்.

கே.பியின் அறிவித்தலுக்கு அமையவும் ஜீ.ரீ.வி (GTV) (தமிழ் தொலைக்காட்சி) தகவல் அடிப்படையிலும் அலுவலகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தலைவர் இருக்கிறார் என ஒரு பகுதியினரும், அவர் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்று இன்னொரு பகுதியினரும் முரண்பட்டுக் கொண்டார்கள்.

இந்நிலையில் முரண்பாட்டைத் தவிர்த்துக் கொள்வதற்காக அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இறுதி யுத்தத்தில் தலைவரின் இழப்பு இவருக்கு வேதனையைக் கொடுத்தது. மக்களினதும், தமதும் மனங்களில் தலைவர் வாழ்கிறார் என்றார் இவர்.

அவர்களோ மண்ணிலும் வாழ்கிறார் என்று சொன்னார்கள். இவரால் ஏற்கமுடியவில்லை. பல்வேறு பட்டங்கள் கிடைத்தன. 1975இல் விடுதலை இயக்கத்தில் இணைந்த தனக்கு, சுமார் இரண்டு தசாப்தங்களின் பின்னர் இணைந்தவர்கள் வழங்கும் பட்டங்கள் குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.

‘என் கடமை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி செய்து கிடப்பதே…’ என்பது அவரது நிலைப்பாடு. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு உதவி வருகிறார்.

தன்னுடையதும் தனது சகாக்களின் விடுதலை என்பதைவிட ‘விடுதலைப் புலிகள் என்பது குற்றவியல் அமைப்பு அல்ல’ என நீதிமன்றம் தெரிவித்ததே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.

தனக்காகவும், 1994ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்காகவும் வாதாடிவரும் தமது சட்டத்தரணி மார்சல் பெஸோநெற் (Marcel Bosonee) அவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

எழுத்தாளர் டயஸ்

leader prabakaran tribute 4

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

leader prabakaran tribute


  1. Prabhakaran’s Death Revisited
  2. Dissecting the Prabhakaran Death Story and profiling the liars
  3. Confronting the Death of Prabhakaran !