இனப் படுகொலை

துரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide

Posted on

1995ல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பகுதி புலிகள் கையில் இருந்தது. சிங்கள ராணுவம் யாழ்ப்பாண கோட்டை, பலாலி விமானப்படைத்தளம், அதற்குள் அடங்கிய காங்கேசன் துறைமுகம் (காங்கேயன்துறை என்பதே சரி) போன்றவற்றில் ஆடுகளைப் போல பட்டி அடைக்கப்பட்டிருந்தது.

பலாலி படைத்தளத்தைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். மொத்த யாழ். மாவட்டத்தில், பரந்து விரிந்து கிடந்த பலாலி படைத்தளத்தின் பரப்பளவு மட்டும் 8 விழுக்காடு.

யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினருக்கு உணவு, ஆயுதம், மருந்து போன்றவை அந்த காலகட்டத்தில் வான் வழியே கொண்டு செல்லப்பட்டு வந்தன.

இந்தநிலையில், பலாலி விமானப்படைத்தளத்தில் இருந்து 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில், ஓர் அவ்ரோ சரக்கு விமானம் அநுராதபுரத்துக்குப் புறப்படத் தயாரானது. வழமையான விமானம் அது.

சார்லி ரோஜர் HS – 748 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த விமானத்தில், விமானப்படையின் வடபகுதி தளபதி விங் கமாண்டர் ரோகன் வீரசிங்கே உள்பட நான்கு விங் கமாண்டர்கள், 35 ராணுவத்தினர், ஊர்காவற்துறை பகுதியில் நடந்த சண்டையில் காயமடைந்த 4 படையினர், விமானஊழியர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 48 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த 8 ராணுவத்தினரின் உடல்களும் விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தன.

விமானம் ஓடுதளத்தில் ஓடி மேலேறி பறந்தபோது மெல்லிய மழைத்தூறல் பொசுங்கிக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம். அதையடுத்து விமானத்தின் இரு ரோல்ஸ்ராய்ஸ் இயந்திரங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

பதற்றம் அடைந்த விமானத்தின் வலவர், விமானத்தை திருப்பி ஓடுபாதைக்கு மீண்டும் கொண்டுவர முயன்றார். ஆனால் முடியவில்லை. விமானம் வெடித்து கடலில் விழுந்தது. விமானத்தில் இருந்த அத்தனைப் பேரும் பலியானார்கள். விமானம் வெடித்து, ஓடுதளத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் விழுந்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்த புலிகளின் ஏவுகணை தாக்கித்தான் விமானம், பலியானது என்பதுகூட இலங்கை படையினருக்குத் தெரியவில்லை. வழக்கம்போல, இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சரத் முனசிங்கேவிடம் , “புலிகளின் ஏவுகணை தாக்கி விமானம் விழுந்திருக்குமோ?” என்று கொழும்பில் செய்தியாளர்கள் கேட்டபோது, சரத் முனசிங்க அதை அடியோடு மறுத்துவிட்டார்.

இதற்கிடையே ஏவுகணை தாக்குதல் நடத்தி விமானத்தை வீழ்த்தியது பற்றி புலிகளும் மூச்சு விடவில்லை. அடுத்த விமானத்தை தாக்கி தகர்ப்பதற்காக அவர்கள் மற்றொரு ஏவுகணையுடன் தயாராகக் காத்திருந்தனர்.

இதற்கு மறுநாள் 29ஆம்தேதி சனிக்கிழமை காலை 8.45 மணி. மீண்டும் ஓர் அவ்ரோ விமானம், இந்தமுறை கொழும்பு ரத்மலானை விமானநிலையத்தில் இருந்து பலாலிக்குப் புறப்பட்டது.

சார்லி ரோஜர் 834 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த விமானத்தில் பாதுகாப்புப் படையினர் மொத்தம் 52 பேர் இருந்தனர். அவர்களில், அவ்ரோ விமான ‘விபத்தை‘ பற்றி புலனாய்வு நடத்த வந்த அலுவலர்களும் அடங்குவார்கள். விமானப்படை ஏர்மார்ஷல் ஒலிவர் குணதிலகவும் அந்த விமானத்தில் இருந்தார்.

அநுராதபுரத்தில் சற்றுநேரம் தரித்துநின்ற பின் அந்த விமானம், பலாலி நோக்கி புறப்பட்டது. விமானத்தை ஓட்டியவர் விங் கமாண்டர் சிரந்த குணதிலக. இவர் இலங்கை விமானப்படையின் ஏர்வைஷ் மார்ஷலான ஹாரி குணதிலகவின் இளைய மகன். மற்றொரு விமானப்படை அலுவலரான ரோஷன் குணதிலகவின் சகோதரர்.

ஐந்தாயிரம் அடி உயரத்தில், பலாலி விமானதளத்துக்கு 4 மைல் தொலைவில் விமானம் வந்தபோது, தொண்டமானாறு பகுதியில் இருந்து விமானத்தை நோக்கி ஓர் ஏவுகணை சீறிப்பாய்ந்து வந்தது.

ஏவுகணை பாய்ந்து வருவதை பார்த்துவிட்ட வலவர் சிரந்த குணதிலக, ‘ஏவுகணை வருகிறது’ என்று அலறினார். ஆனால் அதற்குள் விமானம் அடிபட்டு சிதறி, பலாலி விமானப்படைத் தளத்துக்கு 7 கிலோ மீட்டர் வெளியே நிலாவரை பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது. பலாலி விமானப் படைத்தளம், அதைச்சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பு வலயத்தை அமைத்திருந்த நிலையில், இந்த பாதுகாப்பு வலயத்துக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு வெளியே விமானம் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் 30 ராணுவத்தினர், 12 கடற்படையினர், 12 விமானப்படையினர், 2 காவல்துறையினர் என 59 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது. மொத்தம் 52 பேர் என்றும் தகவல் பரவியது. எது எப்படியோ விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர்தப்பவில்லை.

அடுத்தடுத்து நாள்களில் 16 மணிநேர இடைவெளியில் இரண்டு விமானங்களை புலிகள் சுட்டுவீழ்த்தி விட்டதால், இலங்கை முழுவதும் பரபரப்பு ‘பக்’கென பற்றிக் கொண்டது. இந்த சம்பவம் நடந்தபோது அதிபர் சந்திரிகா பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதிர்ந்து போன அவர் உடனடியாக நாடு திரும்பினார்.

புலிகளின் தாக்குதலின் எதிரொலியாக பலாலி விமானப்படைத்தளத்தில் அனைத்து விமானப்போக்குவரத்துகளும் உடனே நிறுத்தப்பட்டன.

புலிகள் நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதல் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்த தவறவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், அதன் விமானிகளை இலங்கைக்கு மேலே 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அறிவுறுத்தியது.

இதனிடையே புலிகள் பயன்படுத்திய ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று பலவாறான கேள்விகள் நாலா திக்கிலும் எழுந்தன. புலிகள் ரஷியத் தயாரிப்பான ஸ்ட்ரெலா அல்லது இக்லா ஏவுகணையைப் பயன்படுத்தியிருக்கலாம், அல்லது ஒருவேளை அது அமெரிக்கத் தயாரிப்பான ஸ்டிங்கர் ஏவுகணையாக இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் வட்டமிட்டன.

ஒலியைவிட ஒன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடிய அமெரிக்க ஸ்டிங்கர் ஏவுகணை, தோளில் இருந்து ஏவப்படக்கூடியது. 4 கிலோ மீட்டர் தொலைவு வரை இது அதிக ஆற்றலுடன் செயல்படக் கூடியது. ரஷிய ஏவுகணைகள் ஒன்றும் தக்காளித் தொக்கல்ல. ஆற்றலில் ரஷிய ஏவுகணைகளும் படுசமர்த்து. ஒலியை விட 3 அல்லது 4 மடங்கு வேகத்தில் பாயக் கூடிய விமான வீழ்த்தி ரஷிய ஏவுகணைகள் உண்டு.

இக்லாவின் உச்சகட்ட வேகம் நொடிக்கு 570 மீட்டர். ஸ்ட்ரெலாவும் லேசுபட்டதல்ல. ராடாரின் கண்ணில்படாமல் 2,300 மீட்டர் உயரத்துக்குக் கீழே திருட்டுத்தனமாகப் பறக்கும் விமானங்களை மிரட்டி, ‘மேலே போ, மேலே போ என்று ஒரேடியாக ‘மேலே’ பறக்க வைக்கக்கூடிய ஏவுகணை அது.
ரஷிய மொழியில் இக்லா என்றால் ஊசி. ஸ்ட்ரெலா என்றால் அம்பு.

இறுதியில், புலிகள் பயன்படுத்திய ஏவுகணை, ரஷிய உருவாக்கமான ஸ்ட்ரெலா -2 என தெரியவந்தது. தரையில் இருந்து புறப்பட்டு வான் இலக்கைத் தாக்கும் உணர்மோப்பத்திறன் கொண்ட இந்த ஸ்ட்ரெலா -2 ஏவுகணை புலிகளிடம் இருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலி விமானப்படைத்தளத்தின் இயக்கம் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டது.

ஈழப்போர் வரலாற்றில் தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இரு விமானங்களை அடுத்தடுத்து புலிகள் வீழ்த்தியது அதுவே முதல்முறை.

புலிகள் வீசிய ஏவுகணைகள். ஈழப்போர் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சிங்கள விமானப்படையின் சிறகுகளை அறுத்து புலிகள் வானில் நடத்திக் காட்டிய புதிய பாய்ச்சல் அது.

பா. ஏகலைவன்

எழுத்தாளர் மோகன ரூபன் பதிவு

தமிழ்த் தேசிய ஆவணக்காப்பகம்

விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி.

மண்டைதீவு படைத்தளம் போராளிகளின் இலக்காக பல முறை தேர்வாகியது. அவ்வண்ணம் எதிரியின் ஆதிக்கமும், மக்களை பெரும் துன்பவியல் வாழ்விற்குள் தள்ளும் சில ஆறாத ரணங்களை எம்மக்களுக்கு அந்தப் படைத்தளம் கொடுத்தது.

எதிரிக்கு சில தேவைகளை பூர்த்தி செய்யவும், சில இராணுவ ஆக்கிரமிர்க்கும் தீவகத்தின் உள் பகுதிகளில் இருக்கும் சிறு சிறு எதிரி முகாம்கள் மற்றும் மினிமுகாம் போன்றவற்றுக்கும் முக்கியம் வாய்த தளமாக மண்டைதீவு படைத்தளம் இருந்தது.
அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப் பகுதியிடமிருந்து சிறு நீர்ப் பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இரு மாதங்களே ஆகியிருந்தன. யாழ் குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நேரமது. இந்நிலையில்தான் யாழ் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு மிகமிக அண்மையாக இருக்கும்.

யாழ் குடாநாட்டின் மீதான படையெடுப்புக்கு முக்கியமான தளமாக இயங்கப்போகும் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.

மிகநுட்பமான வேவுத்தரவுகளுடன் திட்டம் வகுக்கப்பட்டு நல்ல தயார்ப்படுத்தலுடன் புலியணிகள் தாக்குதலைத் தொடுத்தன. பூநகரி படைத்தளம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ நடவடிக்கையின் பின் நிகழ்த்தப்பட்ட பெருமெடுப்பிலான ஈருடகத் தாக்குதல் முயற்சி இதுவாகும். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலைகுலைந்து ஓடியது. கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.

இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப்.கேணல் சூட்டி உட்பட எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.

திட்டமிட்ட வலிந்த முகாம் தகர்ப்புக்களைப் பொறுத்தவரை இருதரப்புக்குமிடையிலான இழப்பு விகிதம் (கிட்டத்தட்ட பத்துமடங்கு) மிக அதிகளவாக இருக்கும் தாக்குதற்சம்பவம் இதுதான். இதற்கு அடுத்தநிலையில் மண்கிண்டிமலை மீதான ‘இதயபூமி’ தாக்குதல் உள்ளது.

மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதல், அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிறந்தநாளை அண்மித்து நடத்தப்பட்டிருந்தது. இதுவும் சிறிலங்கா அரசியலில் அப்போது குறிப்பிட்டுப் பேசப்பட்டது.

இன்றும் அவ்வண்ணம் தான், ஆயினும் எம்மக்களின் நிலங்களும் அங்கு அபகரிக்கப்பட்டு அதன் கடல்வளங்களும் சிங்கள அரசால் சூறையாடிய அழிக்கப்பட்ட வண்ணம் இருப்பது வேதனைக்குரிய விடயம்.

தற்போதும், மண்டைதீவும் அது உள்ளிட்ட தீவுப்பகுதியும் யாழ் குடாநாடு மீதான படையெடுப்புக்கும் பாதுகாப்புக்கும் முக்கியதளமாகவே உள்ளது.

நெல்சன் மண்டலேவும் பிரபாகரனும்.

27 வருடங்கள் சிறையில் இருந்த நெல்சன் மண்டலேவிடம் “ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிக்கை விடுங்கள் விடுதலை செய்கிறோம்” என ஆட்சியாளர்கள் கூறினார்கள்.

ஆனால் அவர் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கவில்லை. இறுதியாக அவர் விடுதலையானபோது பல உலக நாட்டு தலைவர்கள் அவரை சந்திக்க விரும்பினார்கள்.

ஆனால் அவர் தான் சந்திக்க விரும்பிய ஒரு தலைவர் பிரபாகரன் என்று கூறியிருக்கிறார்.

நெல்சன் மண்டலேவுக்கு ஈழப் போராளிகளன் தியாகம் தெரிந்திருக்கிறது. அவர்களின் போராட்டத்தின் நியாயம் புரிந்திருக்கிறது.

நான் போராளி, அரசியல்வாதி இல்லை.
என்னால் என்றுமே ஒரு அரசியல்வாதியாக இருக்கமுடியாது.

#காலங்களை வென்ற புரட்சியாளன்…

பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் (நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide

Posted on

பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி

ஓவியர் புகழேந்தி உலகத்தமிழர்களால் நன்கறியப்பட்ட தமிழின உணர்வாளர். தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.தனது உயிரோட்டமான ஓவியங்களால் தமிழீழ விடுதலைப் போராட்ட பரிமாணங்களை பொதுவெளியில் கொண்டு சென்று நிலைநிறுத்தியவர். தொடர்ந்தும் ஈழத்தமிழருக்காக பணியாற்றிவருபவர்.

அவர் எமக்கு வழங்கியிருந்த சிறப்பு நேர்காணலை இங்கு தருகிறோம்.

தங்களின் ஈழ பயணத்தின் போது தாங்கள் மேற்கொண்ட ஓவியப் பயிற்சி மற்றும் ஓவியக் கண்காட்சி பற்றி அறியத் தருவீர்களா?

முதலில் ஓவியக் காட்சி திட்டமிடப்பட்டு கிளிநொச்சி,பளை,பூநகரி,மல்லாவி, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஆண்டான்குளம், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இடங்களிலும், போராளிகள் தளபதிகள் பார்வையிட வேண்டும் என்பதற்காக கிளிநொச்சி தூயவன் அரசறிவியல் கல்லூரியிலும், பளைப் பகுதியில் தளபதி தீபன் பொறுப்பிலிருந்த ஜி10 என்றழைக்கப்படும் போர் பயிற்சிக் கல்லூரியிலும் நடைபெற்றது.

யாழ். குடா நாட்டில் யாழ்ப்பாண பல்கலைக் கழகம், வடமராட்சி கரவெட்டி அரசடி, தென்மராட்சி சாவகச்சேரி நுணாவில் கிழக்கு ஆகிய இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று மக்களின் வரவேற்பை பெற்றது.

ஓவியக் காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இடையிடையே திட்டமிடப்பட்டு கிளிநொச்சியில் பள்ளி மாணவர்களுக்கும், ஓவிய ஆசிரியர்களுக்கும், யாழ்ப்பாணத்தில் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ஓவியப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. யாழ். பல்கலைக்கழக நுண்கலை மாணவர்களுக்கு சிறப்பு விரிவுரையும் நிகழ்த்தினேன்.

ஓவியக் காட்சி திட்டமிடும் போதே என்னை அழைத்து பேசிய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், போராளிகளுக்கும் நீண்ட கால ஓவியப் பயிற்சிக்கு திட்டமிட வேண்டும் என என்னைக் கேட்டுக் கொண்டார். அதாவது “உங்கள் கல்லூரியில் நான்கு ஆண்டுகால படிப்பை எப்படி நடத்துகிறீர்களோ அவ்வாறு எங்கள் போராளிகளுக்கு நீங்கள் நடத்த வேண்டும். அதற்கேற்றவாறு திட்டமிடுங்கள்” என்று அண்ணன் பிரபாகரன் கூறினார்.

அதன்படி நான்கு மாத நான்கு கட்ட செய்முறை பயிற்சிக்கு மட்டும் பாடத்திட்டம் தயாரித்தேன். தொடர்ச்சியாக ஒருமாதம் பயிற்சி மூன்று மாதம் இடைவெளி விட்டு மீண்டும் ஒருமாதம் பயிற்சி என நான்கு மாதங்களுக்கு நான்கு கட்ட பயிற்சியாக திட்டமிட்டிருந்தேன்.

அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் போராளிகள் உள்வாங்கப் பட்டு, தலைவரின் நேரடி கண்காணிப்பில், கிளிநொச்சி தூயவன் அரசறிவியல் கல்லூரியில் போராளிகளுக்கான ஓவியப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. போர் பதற்றம் அதிகரித்த நிலையில், திட்டமிட்டபடி  இறுதிகட்ட ஓவியப் பயிற்சி வகுப்பு  நடைபெறவில்லை.

ஈழப் பயணத்தின் போது, அங்கு உங்களுக்கு மறக்க முடியாத விடயமாக இருந்தது எது என்பதை குறிப்பிட முடியுமா? 

நிச்சயமாக, மறக்க முடியாத விடயம் நிறைய இருக்கிறது. அதில் முக்கியமானது என்றால் இரண்டைக் குறிப்பிடலாம். ஓன்று,  ஓவியக் காட்சி தொடங்குவதற்கு முன்பு என்னையும் என் மனைவி குழந்தைகளையும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தார். வல்வெட்டித்துறையில் தலைவரின் இல்லத்தைப் பார்வையிட்டு, பின்னர் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பன்னிரெண்டு மாவீரர்களின் நினைவுச் சதுக்கத்தை பார்வையிட அவ்விடத்திற்கு சென்றோம்.

அதற்கு அருகில் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். “அவரிடம் சென்று பேசுங்கள் அண்ணா” என்றார் சேரலாதன்.  அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்து “நான் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். முகம் மலர்ந்து எனக்கு வணக்கம் தெரிவித்தவர், இந்திய அமைதிப்படை இவ் வல்வெட்டித்துறையில் நடத்திய படுகொலைகளைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார். திடீரென்று தான் சட்டையைக் கழற்றி, தன் மார்பில் இருந்த தழும்பைக் காட்டி “இதோ பாருங்கள் இந்திய அமைதிப் படை சுட்டதில் ஏற்பட்ட தழும்பு. வலது புற மார்பில் பாய்ந்த குண்டு இடது புற மார்பு வரை கிழித்துக் கொண்டு வெளியேறியதால் உயிர் தப்பினேன். குண்டடிப்பட்டு தப்பியவன் நான் ஒருவன் தான்” என்றார்.

வாகனத்திலிருந்த சேரலாதன் என்னுடைய “உறங்கா நிறங்கள்” ஓவியத் தொகுப்பு நூலை என்னிடம் கொடுத்து, நான் செய்த ‘வல்வைப் படுகொலை’ ஓவியத்தைக் காட்டச் சொல்ல, அப் பெரியவரிடம் காட்டினேன். “இப்படித்தான் முழங்காலில் நிற்க வைத்து, கைகளை பின்னால் கட்டி, மார்பிலே சுட்டார்கள்.” என்றார் ஓவியத்தைப் பார்த்துக்கொண்டே.

“எங்களுக்கு நிகழ்ந்த கொடுமையை அப்படியே வரைந்திருக்கிறீர்கள்” என்றும் பாராட்டினார். 1999ஆம் ஆண்டு அவ் ஓவியத்தைச் செய்த போது யார் பாதிக்கப்பட்டரோ அவரிடமே அந்த ஓவியத்தைக் காண்பிக்க நேரிடும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

அப்போது போராளி சேரலாதன்  “அண்ணே, வேறு எந்த ஓவியருக்கோ, படைப்பாளிக்கோ இல்லாத பெருமை உங்களுக்கு இருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒருவரே உங்கள் ஓவியப் படைப்பை பார்த்து பாராட்டுவது என்பது வேறு எந்த விருதையும் விட உயர்ந்தது” என்றார்.

மற்றொன்று, மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் நடைபெற்ற ஓவியக் காட்சியை பார்வையிட தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்டினென்ட் மாலதியின் தந்தை வந்திருந்தார். அவர் இல்லத்திற்கும் என்னை அழைத்தார். நேர நெருக்கடியிலும் மாலதியின் இல்லத்திற்கு சென்றேன். வரலாற்று சிறப்புமிக்க போராளி மாலதியின் தந்தை, சகோதரிகள், சகோதரர் ஆகியோரை சந்தித்து உரையாடியதும், மாலதியின் நினைவைப் பகிர்ந்து கொண்டது முக்கியமானதும் மறக்க முடியாததும் ஆகும்.

தேசியத் தலைவரை நேரில் சந்தித்தவர் என்ற வகையில் அவரின் தேசியப் பற்று மற்றும் மக்கள் நலன் போன்ற உங்களை கவர்ந்த சில விடயங்களை கூற முடியுமா?

தமிழீழத்தில் ஓவியக் காட்சி திட்டமிடப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில்  தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் என்னை அழைத்து பேசும் போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்த இருக்கும் ஓவியப் பயிலரங்கு குறித்து தமிழ்ச்செல்வன் தலைவரிடம் சொல்லும் போதே போராளிகளுக்கும் ஓவியப் பயிற்சி கொடுக்கலாம் என்று தலைவரிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் சற்று தயங்கினேன். ஆனால் தலைவர் அவர்கள் என்னிடம், “மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஓவியப் பயிற்சி கொடுக்க வேண்டியதுதான்.

அவர்கள் அதை தங்கள் சொந்தத் தேவைக்குத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள். அதுவும்  முக்கியம். அதைவிட முக்கியம் போராளிகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்கினால் அது நாட்டுக்குப் பயன்படும். அதனால் அதற்கும் திட்டமிடுங்கள்” என்று கூறிய போது, மிகவும் மகிழ்ந்து நான் முன்பே உங்களிடம் சொல்ல நினைத்தேன் போராளிகளுக்கு எதற்கு ஓவியப் பயிற்சி என்று நீங்கள் நினைத்துவிடக்கூடும் என்று தயங்கியதற்கான காரணத்தை சொன்னேன்.

உடனே தலைவர் அவர்கள் சிரித்துக்கொண்டு, நிச்சயம் அப்படி இல்லை. ஓவியம் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. எல்லாத் துறைக்கும் அந்த அடிப்படைத் தேவை இருக்கிறது. ஓவிய அடிப்படையை தெரிந்து கொண்டால் நாம் செய்கின்ற  செயலை சிறப்பாக செய்யலாம் என்று தலைவர் சொல்லிக்  கொண்டிருக்கும் போதே… நான் லியார்னாடோ டாவின்சி குறித்த செய்தி ஒன்றை சொல்ல முனைகின்றேன், அதற்குள் தலைவர் பிரபாகரன் லியார்னாடோ “டாவின்சியை எடுத்துக் கொள்ளுங்கள், அவருக்கு ஓவியம் வரைகின்ற ஆற்றல் இருந்ததால் தான் ஹெலியை கீறி வடிவமைத்து ஹெலிகாப்டர் உருவாகக் காரணமாக இருந்தது.

அவருடைய அறிவியல் திறன் சரியாக வெளிப்பட அவருடைய ஓவியத் திறன் துணை புரிந்திருக்கிறது” என்று அவர் கூறிய போது நான் வியப்பில் ஆழ்ந்து போய், அட என்ன மனிதர் இவர், ஓவியத் துறையை சேர்ந்தவர்கள் அல்லது அறிவியல் துறையை சேர்ந்தவர்கள் பெரும்பாலனோருக்கு தெரியாத செய்தியை மிக அழகாக குறிப்பிடுகிறாரே… நான் சொல்ல வந்ததை அவர் சொல்கிறாரே என்று அந்த வியப்பிலிருந்து மீள்வதற்கே நீண்ட நேரம் ஆனது.

அதேபோல் தமிழீழத்தில் ஓவியக்காட்சி நிறைவுற்ற பின்னர் என்னை அழைத்து “அனைத்து இடங்களுக்கும் செற்றிருக்கிறீர்கள், மக்களை சந்தித்திருக்கிறீர்கள் மக்கள் என்ன சொல்கிறார்கள்” என்று கேட்டார். தமிழீழத்தை ஒரு முன் மாதிரி நாடாக கட்டமைக்கவும் உருவாக்கவும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். அவருடைய பல்துறை அறிவும் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது. இதை ‘தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை’ என்ற நூலில் விரிவாகவே எழுதியுள்ளேன்.

முள்ளிவாய்க்காலில் போர் மௌனிக்கப்பட்ட காலகட்டத்திற்குப் பிற்பாடு ஈழத் தமிழர்களின் நிலை தொடர்பாக உங்கள் படைப்புகள் பற்றி அறியத் தர முடியுமா?

முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ விடுதலை ஓவியத் தொகுப்பில் 27 ஓவியங்கள் இருந்தன. அதற்கு ‘புயலின் நிறங்கள்’ என்று தலைப்பு வைத்திருந்தோம். முள்ளிவாய்க்காலில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 2009 மே மாதத்தில் ஓவியங்கள் வரையத் தொடங்கி ஜூன் மாதம் வரை 23 ஓவியங்களை முடித்து மொத்தம் 50 ஓவியங்களோடு “உயிர் உறைந்த நிறங்கள்” என்ற தலைப்பில் ஜூலையில் சென்னையில் ஏழு நாட்கள் காட்சிப்படுத்தினேன்.

இந்த 50 ஓவியங்களிலும் மக்களின் துன்பங்கள், துயரங்கள், வலிகள், வேதனைகள், இழப்புகளை  வெளிப்படுத்தியிருந்தேன். தாயக விடுதலைக்காக போராடிய போராளிகள் குறித்து வெளிப்படுத்த வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு மேலும் 30 ஓவியங்களை செய்து 80 ஓவியங்களோடு ‘போர் முகங்கள்’ என்ற தலைப்பில் மே 11 முதல் 16 வரை காட்சிப்படுத்தினேன். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றன. நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளிலும்  நடைபெற்றன. போருக்குப் பிந்திய ஆண்டுகளில் மக்களின் மன ரீதியான சிக்கல்கள் குறித்து 2011லிருந்து 2017 வரை செய்யப்பட்ட 20 ஓவியங்களோடு மொத்தம் 100 ஓவியங்களை பிரித்தானியாவில் காட்சிப்படுத்தினேன்.

ஈழத் தமிழர் உரிமை போராட்டம் வலிமை பெற தமிழ் நாட்டின் உறவுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து பங்களித்து வந்துள்ளனர். அனால் இன்று அவ்வகை தன்முனைப்பு பெற்ற நடவடிக்கைகள் குறைவடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந் நிலையில் மாற்றம் வர தற்கால இளம் சந்ததியினர் என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறீகள்?

தமிழீழத்தில் எப்பொழுதெல்லாம் போராட்டம் தீவிரம் அடைந்ததோ அப்பொழுதெல்லாம் அதற்கு ஆதரவாக தமிழகத்திலும் 1983 தொடக்கம்  போராட்டங்கள் நடைபெற்றன. களமுனை ஏற்படுத்தும் தாக்கம் அப்படிபட்ட போராட்டங்களை செய்ய வைத்தது. களமே அதைத் தீர்மானித்தது. பலர் உயிர்த் தியாகங்களையும் செய்திருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு கூட மாணவர்கள் மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு இருந்தது. இனிமேலும் ஈழத் தமிழர்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு தமிழகம் நிச்சயம் துணை நிற்கும்.

இளம் தலைமுறை வரலாறுகளை படிக்க வேண்டும். பெற்ற வெற்றிகளை எப்படி கொண்டாடுகிறோமோ அப்படி அடைந்த தோல்விகளையும் படிக்க வேண்டும். அதுதான் படிப்பினைகளைத் தரும். அது நமது இலக்கை அடைய உரமாக இருக்கும்.வெறும் உணர்ச்சி மட்டும் போதாது அறிவுபூர்வ செயற்பாடும் முக்கியம் என்பதை உணர வேண்டும்.

தற்போதைய நிலையில் எமது விடுதலை தொடர்பாக ஈழத் தமிழர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என நீங்கள் கருதுகிரீகள்?

அன்று தமிழீழம் களமாக இருந்தது. இன்று உலகமே களமாக உள்ளது. அந்தக் களத்தை சரியாக கையாளுவதற்கு ஆட்கள் இல்லை. ஆளுமைகள் இல்லை. அது எதிரிக்கு பலமாகவும் தமிழினத்திற்கு பலவீனமாகவும் ஆகிவிட்டது. போராட்டக் களத்தில் சுடுகலன் மட்டுமே ஆயுதம் அல்ல.

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ ஆயுதங்கள் இருக்கின்றன. யூதர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. நம் வரலாறுகளை பல்வேறு நிலைகளில் பதிவு செய்யவும்  படிக்கவும் வேண்டும். பிற இன மக்களின் வரலாறுகளையும் படிக்க வேண்டும். இன்னும் பல பல ஆண்டுகள் இப் போராட்டம் நீடிக்கலாம். ஈழத் தமிழர்கள் மட்டுமே விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை முதலில் உணர வேண்டும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீண்டும் அவலமனநிலை அடையும் வரை, எந்த பெரிய முன்னேற்றத்தையும் தமிழ்த்தேசியம் பெறப்போவதில்லை…! -PKR-

தமிழனத்தில் யாரும் உணராத எதிர்வரும் அவலத்தை முன்னரே அறிந்து உணர்த்திய ஒரே தலைவன் பிரபாகரன்தான். இந்தியா அமைதிப்படையை தமிழர்களைக் காக்க வந்ததாக வேடம் போட்டு வந்தது. மக்கள் நூற்றுக்கு நூறு சதம் நம்பினார்கள். மற்ற போராளி குழுக்களும் நம்பினர். ஆனால் பிரபாகரன் நம்பவில்லை.

இந்தியாவை எதிர்க்கவேண்டுமானால், முதலில் மக்களிடம் அவல மனநிலையை உருவாக்கவேண்டும். இதற்கு முதலில் திலீபனின் உண்ணாவிரதம் துணை புரிந்தது. மக்களுக்கு இது முதல் அதிர்ச்சி, அதன் பின்பு இந்தியா தனது கட்டுப்பாட்டில் இருந்த சில முக்கிய புலித்தளபதிகளை சிங்களத்திடம் கையளிக்க முற்பட, அவர்கள் அனைவரும் சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இது இரண்டாவது அதிர்ச்சி. அதன் பின்பு புலிகளும் அமைதிப்படைகளும் மோத, அமைதிப்படைகளின் கோரப்பற்கள் அப்பாவிகளின் மேல் பாய, மக்களுக்கு முழு அவலமும் புரிந்தது. முடிவில் மக்களின் துணையுடன் அமைதிப்படை விரட்டியடிக்கப்பட்டது.

தமிழக வரலாற்று நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது, இது தெரியாமல் நடந்த பிழைபோலத் தெரியவில்லை. பெரிய கூட்டுச்சதி போன்றே தெரிகிறது. இன்றும் திராவிடக்கட்சிகள் அவர்கள் ஆட்சியில் பாலும் தேனும் ஓடுகிற மாதிரிதான் பேசுகிறார்களே ஒழிய, அவல மனநிலை கொஞ்சமும் இல்லை.

திராவிடக்கட்சிகள் ஈழத்தில் நடந்த விடயங்களை மக்களிடம் ஆரம்பத்தில் இருந்து பரப்பி இருந்தால், ஒரு அவல மனநிலை ஏற்பட்டு, இனப்படுகொலையைத் தடுக்க வாய்ப்பிருந்திருக்கும், ஈழப்போராட்டத்தில் தமிழகம் பெரும்பங்களித்திருக்க முடியும். ஆனால் திராவிடக்கட்சிகள் அதனைச் செய்யாமல், அவல மனநிலையைப் பரப்ப முனைபவர்களை தடை செய்தது. இன்றும் ஈழம் சார்ந்த போராட்டங்களுக்கோ, திரைப்படங்களுக்கோ, ஊர்வலங்களுக்கோ பெரிய தடை விதிக்கப்படுகிறது. எந்த காரணம் கொண்டும் தமிழர்களிடம் அவல மனநிலை தோன்றிவிடக்கூடாது என்று மிகக்கவனமாக உள்ளனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இராசீவ் காந்தி இறந்ததுதான் தமிழர்களுக்கு நடந்த மிகப்பெரிய அவலம்போல இன்றுவரை தமிழகத்து தலைவர்கள் பேசுகிறார்கள். அதை மக்களும் நம்புமளவுக்கு பரப்புரை செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீண்டும் அவலமனநிலை அடையும் வரை, எந்த பெரிய முன்னேற்றத்தையும் தமிழ்த்தேசியம் பெறப்போவதில்லை.

கலாநிதி மு. சேதுராமலிங்கம். ( தமிழ்த் தேசிய வியூகவியல் வல்லுநர்)

#முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு #வீரவணக்கம் ! #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #Tamil #Eelam #Mullivaikkal #ltte #Genocide #May18 #TamilGenocide

Posted on

leader prabakaran tribute 4

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”

ltte leaders dead


leader prabakaran tribute

praba god
எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !

Mullivaikal Remembrance 2

“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா? #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide

Posted on

ஆரம்பத்தில் மதிப்பு மிக்க தலைவர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வந்து போராடி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என்றும் கூறிவந்தார்கள்.

ஆனால் இப்போது வைகோ அவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவதில்லை. நெடுமாறன் அவர்கள் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறார்.

பிரபாகரன் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக நெடுமாறன் ஒருமுறை கூறியிருந்தார். அதுமட்டுமன்றி தன்னை சந்தித்த ஒரு ஈழத் தமிழரிடம் பிரபாகரனின் நீரிழிவு நோய்கூட தற்போது குணமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த வருடம் தனது பிறந்தநாளின் போது நெடுமாறன் அவர்கள் தனக்கு பிரபாகரன் வாழ்த்து கூறினாரா என்பது பற்றி எதுவும் கூறவில்லை.

அவரிடம் இது பற்றி யாரும் கேட்கவில்லையா அல்லது அவராகவே இவ்வாறு கூறுவதை விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை.

பிரபாகரன் இருக்கிறார் என்று தொடர்ந்து கூறிவரும் இத் தலைவர்கள் அவர் எங்கு இருக்கிறார்? எப்போது வருவார்? என்பன குறித்து எதுவும் கூறுவதில்லை.

இதனால் பிரபாகரன் இருக்கிறார் என்று கூறுவதால் யாருக்கு நன்மையளிக்கிறது என்று கேட்க வேண்டியுள்ளது.

இப்பதிவு கடந்த 2.4.2014 செய்த பதிவாகும். காலத்தின் தேவைகருதி மீள் பதிவு செய்கிறோம்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது,

(1) தமிழ் மக்களை பிரபாகரன் வருகைக்காக காத்து இருக்க வைக்கின்றது.

(2) தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு தலைமை உருவாவதைத் தடுக்கிறது.

(3) தமிழ் மக்கள் இன்னொரு போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தடுக்கிறது.

(4) கோத்தபாயா “புலிகள் இருக்கிறார்கள்” என்று பிரச்சாரம் செய்ய உதவுகிறது.

(5) மகிந்த ராஜபக்சவும் கோத்தபாயாவும் இதனைக் காட்டி தேர்தலில் வெல்ல வழி செய்கிறது.

(6) ஜ.நா வில் புலிகளும் போர்க்குற்றம் செய்தவர்கள் என்றும் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் வலியுறுத்த இடம் அளிக்கிறது.

(7) தமிழ் மக்கள் பல்லாயிரம் பேரைக் கொல்ல கொடுத்துவிட்டு தான் மட்டும் தப்பி சென்றுவிட்டார் என பிரபாகரன் மீது சிலர் விமர்சனம் செய்ய இடம் கொடுக்கிறது.

(8) தனது மகன், மகள், மனைவி எல்லாரும் இறந்துவிட தான் மட்டும் தப்பிச் செல்லும் அளவிற்கு பிரபாகரன் சுயநலமானவரா? என சிலர் கேட்டு கொச்சைப்படுத்த வைக்கின்றது.

(9) இந்தியாவில் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து தடை செய்ய உதவுகிறது.

(10) தமிழகத்தில் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாமை தொடர்ந்து வைத்திருக்கவும் அதில் அப்பாவி அகதிகளை அடைக்கவும் உதவுகிறது.

(11) தமிழக மக்கள் இந்திய அரசுக்கு எதிராக கோபம் கொண்டுவிடாமல் தடுக்கிறது.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது இலங்கை இந்திய அரசின் நோக்கங்களுக்கே அதிகம் துணை செய்கிது.

மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. நட்டமே அதிகம்.

26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வியட்நாம் தந்தை கோசிமின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது “எந்த உண்மைகளையும் மக்களிடம் மறைக்காதீர்கள். கசப்பான உண்மையாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்றார்.

மக்களை நம்புவோம்.
மக்களுக்கு உண்மைகளை கூறுவோம்.
மக்கள் வெற்றியை பெற்று தருவார்கள் .

முகநூல் பதிவு-வடக்கு கிழக்கு மக்கள்

என் பெயர் #கரிகாலன் என்கிற… #வேலுப்பிள்ளை_பிரபாகரன் ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

Posted on

19.5.1982 அன்று சென்னை பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிக் சண்டைக்கு முன்பு…

மயிலாப்பூரில் உள்ள சாலைத் தெருவில் தான் பிரபாகரன் தங்கிருந்தார். அதற்கு முன்பு வேறு சில இடங்களில் இருந்தார்கள். (கைதுக்கு பிந்தைய காலத்தில் இந்திராநகரிலும், திருவான்மீயூரிலும் இருந்தார்கள்). அந்த ஏற்பாட்டை எல்லாம் செய்தது #பழ_நெடுமாறன் அவர்களும், அவரோடு இருந்த வழக்கறிஞர் கே.எஸ். #ராதாகிருஷ்ணனும்தான்.

அதன் பிறகுதான், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த மயிலாப்பூர் சாலைத்தெருவிற்கு இடமாற்றமானார் தலைவர்.

அப்போது முகுந்தன் என்கிற #உமா_மகேஸ்வரனுக்கும்#தலைவர்_பிரபாகரன் அவர்களுக்கும் முரண்பாடு முற்றி மோதலில் நகர்ந்துகொண்டிருந்தது. உமா மகேஸ்வரன் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்தார். தலைவர் பிரபாகரன் அவர்கள் மயிலையில்.

புலிகள் இயக்கம் பிரதான அறிமுகமில்லா காலம் அது.

குறிப்பிட்ட அந்த நாளில், சிவகுமார் என்கிற ராகவனுடன் பாண்டிபஜாருக்கு சென்றார் தலைவர் பிரபா அவர்கள். அங்கே எதேச்சையாக முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன், கண்ணன் என்கிற ஜெகதீஸ்வரனோடு எதிரில் வந்தார். கீதா கபே ஓட்டல் அருகில் சந்தித்துக்கொண்டபோதில் பழைய முரண்பாடுகளைப் பற்றி பேச,அது முற்றி ஆவேசத்தில் முடிய, இருவருமே தற்காப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்கள்.

சற்று நேரத்திற்கெல்லாம் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் வீட்டிற்கு ஒரு ஆங்கில பத்திரிகை நிருபர், ‘என்ன சார், என நடந்த சம்பவத்தைச்சொல்லி, கைதான நபர் உங்க வீட்டில்தான் தங்கியிருந்தாராமே’ என்ற தகவலைச் சொல்ல, உடனே ஆட்டோ பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையம் சென்றார்.

தலைவர் பிரபாகரனும் அவருடனிருந்தவர்களும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.

நடந்த விடயத்தைச் சொல்லி, “நான் இப்போது இந்தியாவில்தான் இருக்கிறேன். ஆனபடியால் இந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டியது என் கடமை. அதான் துப்பாக்கிச் சண்டை முடிஞ்சதும் நானே போலீஸ்கிட்ட அரெஸ்ட்டாகிட்டேன்” என்று நடந்ததை சொன்னார். (கீதா கபே ஓட்டல் எதிரில்தான் காவல் நிலையம்)

காவல் நிலைய ஆய்வாளர் #பாண்டியன், துப்பாக்கி சண்டை போட்டக்கொண்டவர்களை #நக்ஸலைட்டுகள் என்றே கூறினார். இலங்கை போராளிகள் இயக்கம் பற்றி ஏதும் அவருக்கு தெரியாது. பிரபாகரன் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் துப்பாக்கியை கொடுத்துவிட்டு, தங்களோடு வந்ததாக கூறினார் இன்ஸ்பெக்டர்.

(இரண்டு நாட்கள் கழித்து உமா மகேஸ்வரன் (முகுந்தன்) பூண்டி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.)

#தலைவரின்_வாக்குமூலம் இப்படித் தொடங்குகிறது…

“என் பெயர் #கரிகாலன் என்கிற #வேலுப்பிள்ளை_பிரபாகரன். நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன். நாங்கள் எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக #ஆயுதம் ஏந்திப் போராடும் #விடுதலை_வீரர்கள்” என்று தொடங்கி TNT(Tamil National Tigers) என்ற பெயரில் இயக்கம் இருந்தது, முகுந்தனை விட்டு பிரிந்த பிறகு #LTTE என்ற இயக்க்ததை தொடங்கியது என்பதை சொல்லி, நடந்த துப்பாக்கி சண்டையின் பின்னணியையும் எழுதிக்கொடுத்தார்.

அடுத்த நாள் அவரை சென்னை #மத்திய_சிறையில் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே இருந்த சிறை) அடைக்கப்பட்டார். அதுவரையிலும் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்தான் உடன் இருந்தார். வேறு யாருமில்லை. ஜாமீன் விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் வானமாமலை இருந்துள்ளார்.

செய்தி வெளியாக, இலங்கை அதிபர் #ஜெயவர்தனே, ‘பிரபாகரன்-முகுந்தன் உள்ளிட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று #இந்தியாவுக்கும்#இந்திராவுக்கும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்.

தகவல் கிடைத்து, #மதுரையில் இருந்து அடித்துப் பிடித்துவந்த #பழ_நெடுமாறன் அவர்கள், முதல்வர் #எம்ஜிஆரிடம் தகவலைக் கூறிவிட்டு, உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். #ஓமந்தூரார் தோட்ட வளாகத்தினுள், பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்த பழ.நெடுமாறன் அலுவலகதில் தான் அந்த கூட்டம் நடந்தது.

அந்த வளாகத்திற்குள்ளாகவே இருந்த #திமுக-வின் கட்சி அலுவலத்தில் இருந்த கலைஞரை, வழக்கறிஞர் கே. எஸ் ராதாகிருஷ்ணனும், #பேபி_சுப்ரமணியனும் நேரில் சென்று சந்தித்து, நடந்தவைகளை கூறினார்கள்.

கலைஞர் கேட்டுக்கொண்டரே ஒழிய எந்த கருத்தையும் கூறவில்லை.

அனைத்துக்கட்சி கூட்டதிலும் திமுக-கலைஞர் சார்பாக ஒருவரும் பங்கேற்கவில்லை. #காங்கிரஸ் மற்றும் #மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ளவில்லை. ஆளும் கட்சி என்றதால், எம்.ஜி.ஆர்-அதிமுக தரப்பில் யாரும் வரவில்லை.

ஆனால், ‘இப்படி ஒரு கூட்டம்-தேவை’ என்பதை எல்லாம் #எம்ஜிஆரும்-நெடுமாறனும்தான் திட்டமிடுகிறார்கள்.

அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, கா.கா.தே.கா (காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ்) #குமரி_ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலர் #பா_மாணிக்கம், ஜனதா கட்சி #இரா_செழியன், பார்வர்டு பிளாக் #ஆண்டித்தேவர், லோக்தல் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளும் பங்கேற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கரிகாலன் என்கிற வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளை இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது என்பதுதான் தீர்மானத்தின் அழுத்தம்.

அந்த அந்த தீர்மானத்தோடு அடுத்தநாள் #டெல்லிக்கு சென்றார் பழ.நெடுமாறன். கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.

#பிரதமர்_இந்திராகாந்தியை சந்தித்து, நடந்தவைகளை எல்லாம்கூறி, “‘பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது” என்பதை வலிறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்கள்.

அப்போது இந்திராகாந்தியின் ஆலோசகராக இருந்தவர் #ஜி_பார்த்தசாரதி (IFS) . (அண்ணல் அம்பேத்கர் சட்டவரைவை எழுதிய குழுவில் இருந்த கோபால்சாமி ஐயங்காரின் மகன்) அந்த ஜி. பார்த்தசாரதி (ஐயங்கார் என தன் சாதியை எங்கேயும் போட்டுக்கொண்டதே இல்லை) அங்கே இருந்தார்.

அந்த ஐயங்காரும் ‘பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்ககூடாது. பங்களாதேஷ்கு விடுதலையை வாங்கிக்கொடுத்ததைப் போல் இவர்களுக்கும் (#தமிழீழம்) விடுதலையை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தை பார்த்தசாரதி (ஐயங்காரும்) கூறினார்.

இங்கே திமுக-வின் பங்கு எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் சில உடன் பிறப்புகள் எழுதி வருவதைப்போல், பிரதமர் இந்திராவிடம் வலியுறுத்தி கடிதம் ஏதும் கலைஞர் அளிக்கவில்லை. பிரதமரிடம் பேசவுமில்லை.

ஆனால், சில நாட்கள் கழித்து, ‘பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது’ என்ற அறிக்கை அளித்திருக்கின்றார்.

நடந்தது இதுதான். எல்லா கட்சிகளுடனும் பேசி ஓடி உழைத்தது எல்லாமும் பழ.நெடுமாறன் அவர்கள்தான், சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்தது வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான். அறிக்கை விட்டு ஆதரித்து நின்றுகொண்டார் கலைஞர்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் அப்படி சிறைச்சாலைக்கு சென்று தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்துக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில்தான் வைகோவை சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்றார் கே.எஸ்.ஆர்.

தலைவர் கலைஞர் அன்று அறிக்கைவிட்டு ஆதரித்தார். கலந்தும் இருக்கலாம். பின்னாளில் உதவியுமிருக்கலாம்.

ஆனால் அவர்தான் பிரபாகரன் அவர்களை அன்று காத்தார். பிரதமர் இந்திராவுக்கு கடிதம் எழுதினார். கலைஞர் இல்லை என்றால் இந்த பிரபாகரனே இருந்திருக்க மாட்டார் என்று இப்போது ‘யுனஸ்கோ விருது’ கணக்காக அடித்துவிட்டு, வரலாற்று திரிபு வேலைகளை செய்கிறார்களே…அவர்களுக்காக இது எழுதப்பட்டது.

வரலாற்றை திரிக்கக்கூடாது. அந்த தொழில் எப்போதும், எல்லாவற்றிலும் நிறைவேறாது

பா. ஏகலைவன்

‘பிரபாகரனியம்’ என்றால் என்ன?

‘பிரபாகரனியம்’ என்றால் என்ன? இது பலரின் கேள்வி. பதில் மிக எளிமையானது – பிரபாகரனைப் போல் – பிரபாகரனியத்தைப் போல்.

எனது சிந்தனை, உங்களது சிந்தனை மட்டுமல்ல போராடும் ஒவ்வொரு தேசிய இனங்களினதும் கூட்டு சிந்தனையின் வடிவமே ‘பிரபாகரனியம்’.

பெயரின் பின்னால் ஒரு இய(ச)ம் ஒட்டியுள்ளதால் அது தனித்த அவரது கோட்பாடு என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

அது பிரபாகரனியத்திற்கு முரணானது மட்டுமல்ல ‘நந்திக்கடல்’ அதை அடியோடு நிராகரிக்கவும் செய்கிறது.

அது லெலினிசம், மார்க்சிசம், மாவோயிசம் ஏன் பெரியாரியத்திற்குக் கூட பொருந்தலாம். ஆனால் பிரபாகரனியத்திற்கு அது பொருந்தாது. அதுவே அதன் சிறப்பு.

மௌனம்தான் பிரபாகரனியத்தின் மொழி. சிந்தனையுடன் கூடிய செயல் வடிவம்தான் அதன் அசைவியக்கம்.

தனது கண்ணசைவிலும் கையசைவிலும் ஒரு இயக்கத்தையும் இனத்தையும் வழி நடத்தியது மட்டுமல்ல ஒரு நடைமுறை அரசையும் கட்டியெழுப்பியவர் பிரபாகரன்.

அவர் நடந்தால் அது ஒரு அரசியல். அமர்ந்தால் அது வேறு ஒரு அரசியல். அதுதான் அவர் முள்ளிவாய்க்காலில் நின்ற போது அது ஒரு அரசியலாக இருந்தது. அவர் நந்திக்கடலை நோக்கி நடந்தபோது அது வேறு ஒரு அரசியலாகப் பரிணமித்தது.

இந்த இரு நிலங்களுக்கும் இடையிலான அவரது நடையின் பின்னுள்ள அரசியல் பிரளயத்தை கணிக்க சாதாரண மனித அறிவால் முடியாது.

அதுதான் ‘நந்திக்கடல்’ அதைக் கணித்து அந்த வரலாற்று பெருமையைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.

எனவே பிரபாகரனுக்காக, பிரபாகரனியத்திற்காக யாரும் காத்திருக்காதீர்கள். ஏனென்றால் அது உங்களிடம்தான் இருக்கிறது.

அதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கூட்டாக அதற்கு ஒரு செயல் வடிவம் கொடுக்கும்போது நாம் விடுதலையை எமதாக்கிக் கொள்வதாடு ‘பிரபாகரனியம்’ என்பது நம் ஒவ்வொருவரினதும் தனித்துவ கோட்பாட்டுருவாக்கம் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

தனக்கோ தனது குடும்பத்திற்கோ என்று ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்து செல்லாத ஒரு அதி மனிதன் தனது ‘சிந்தனையை’க் கூட நம் ஒவ்வொருவருக்கானதாக மாற்றி விட்டு ‘வெறும்’ மனிதனாக சென்ற வரலாற்றுக் கதை இது.

#ElevenYearsGenocide.

Image may contain: 2 people, people standing
PKR

விழ விழ எழுவோம் விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.! #இனப்படுகொலை #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Genocide #Ltte #Prabhakaran #Tamil #Eelam

Posted on

வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார் – உறங்கும் உண்மைகள்:

அவன் கண்ட கனவு அது அவன் கொண்ட லட்சியம் அது அவனுடைய தன்மானத்தையும் கௌரவத்தையும் மீண்டும் உலகறியச் செய்த அவன் மண் பெற்றெடுத்த பிள்ளைகள். விழ விழ எழுவோம் விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.

விடுதலைப்புலிகள் செய்த நல்லவை ,கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக் கொண்டிருந்தேன்!

அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று!

இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள் ! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்!

இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி! “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை ஞாபகப்படுத்துகிறதா? அது எப்படி? “ என்றுஅவசரமாகக் கேட்டார்! அவரிடம் நான் சொன்னேன்! ” பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கம் நடத்தினார் தெரியுமா? அது ஃபிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுக்கு நிகராக இருந்தது!” இப்போது நண்பருக்கு மேலும் மேலும் ஆச்சரியம்! “ எப்படி? எப்படி?” என்று ஆர்வமாகக் கேட்டார்! அவருக்கு நான் சொன்னவற்றை கீழே தொகுப்பாகத் தருகிறேன்!

வன்னியிலே பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது! லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊழல் என்றாலே என்னவென்று தெரியாது! ஏழை பணக்காரன் பேதம் இல்லை! வேலை கொடுக்கும் நிறுவனங்கள் கண் துடைப்புக்கு இண்டெர்வியூ நடத்திவிட்டு, காசு வாங்கிக்கொண்டு அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை கொடுக்கும் இழி நிலை இல்லை!

அரசியல் கட்சிகளின் காமெடி கிடையாது! கொழும்பில் இருப்பது போல, ஒரு கட்சி, அதற்கு தொண்டர்கள், சில குண்டர்கள், வன்முறைகள், பஸ் கொழுத்துறது, காரை எரிக்கிறது, ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்கிட்டு சாவுறது எதுவுமே கிடையாது! ஐரோப்பா போலவே ரொம்ப அமைதியா இருக்கும்!

குனிந்துவிட்டோம் ஆயினும், நிமிர்ந்தோம் என்பதும் வரலாறு

மேலும் விடுதலைப்புலிகளின் காவல் துறை பற்றி சொல்லியே ஆகவேண்டும்! கருநீல ஜீன்ஸும் + மெல்லிய நீலத்தில் ஷர்ட்டும் அணியும் காவல் துறை உறுப்பினர்கள் நிச்சயமாக ஃபிரெஞ்சுப் போலீசையோ, லண்டன் போலீஸையோ நினைவு படுத்துவார்கள்! இவர்களிடம் இருக்கும் ஸ்மார்ட், கம்பீரம் அவர்களிடமும் இருக்கும்! அப்புறம் தமிழீழ போலீசுக்கு லஞ்சம் கொடுப்பீங்க? அந்தப் பேச்சே இருக்காது! ஒரு வேளை நீங்கள் ஒரு தப்புப் பண்ணிவிட்டு, அதனை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரிக்கு ஒரு ஐம்பது ரூபாவை நீங்கள் எடுத்து நீட்டினீர்கள் என்றால், அவ்வளவுதான், அடுத்தநாள் எங்கோ ஒரு இருட்டறைக்குள் இருந்து முழிச்சு முழிச்சுப் பார்ப்பீர்கள்!

இன்று மேற்கு நாடுகள் செல்வந்த நாடுகளாக இருப்பதற்கு முக்கிய காரணமே சுய உற்பத்தியும், டெக்ஸ் ( Tax ) அறவிடப்படுகின்றமையுமே ஆகும்! வன்னியிலும் டெக்ஸ் முறைமை இருந்தது! கள்ளக்கணக்கு காட்டுறது, பணத்தை பதுக்கி வைத்து கறுப்பு பணமாக்குறது இதெல்லாம் கனவிலும் நடக்காது! சட்டம் ஒழுங்கு அப்படி இருந்தது!

இங்கு ஃபிரெஞ்சுக்காரர்கள் தூய ஃபிரெஞ்சில் தான் பேசுவார்கள்! அதற்குள் ஆங்கிலத்தைச் செருகி, புதுவிதமான ஒரு பாஷை பேசுவதில்லை! இங்கு தூய ஃபிரெஞ்சு என்றால், அங்கு தூய தமிழ்! எல்லாவிதமான பொறியியல் சாதனங்கள், இலத்திரனியல் சாதனங்கள் அனைத்துக்கும் தமிழைக் கண்டுபிடித்து நல்ல தமிழில் தான் கதைப்பார்கள்! வன்னி மக்கள் பேசும் பேச்சை வைத்தே, அவர் வன்னிதான் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்! வன்னிமக்கள் தமது தேவைகளின் நிமிர்த்தம் அரச கட்டுப்பாடுப் பகுதிக்குள் வரும்போது, அவர்களது மொழியை, இங்கிருப்பவர்கள் பரிகசித்த சம்பவங்களும் நிறையவே உண்டு!

கலைகள் – வன்னியிலே கலைத்துறை உச்சம் பெற்றிருந்தது என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன்! எத்தனை நூல்கள்? எத்தனை பாடல்கள்? எத்தனை கவிஞர்கள்? பாடலாசிரியர்கள்? இசையமைப்பாளர்கள்! அனைவருமே மக்களால் மிகவும் ரசிக்கப்படுபவர்கள்! ஒரு கிளிநொச்சி பாடலாசிரியர் பாடல் எழுதுவார்! அதற்கு கிளிநொச்சி இசையமைப்பாளர் மெட்டுப் போடுவார்! பாடலை பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்! கார்த்திக் பாடியிருப்பார்! கேட்கவே பரவசமாக இருக்கும்! வன்னியிலே பிரபாகரன் வளர்த்தெடுத்த கலைகள் பற்றி, தனிப்பதிவுகள் ஆறேழு எழுதினால் தான் தகும்!

வன்னியின் எல்லைப் பகுதிகளில் கடும் சண்டைகள் நடைபெற்ற 2007 ம் ஆண்டு காலப்பகுதி! கிளிநொச்சியிலே சில தமிழக சிற்பாச்சாரிகள் தங்கியிருந்து, ஒரு மிகவும் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு நூதன சாலையை நிர்மாணிக்கிறார்கள்! “ தமிழீழ தேசிய நூதன சாலை” அது! அதன் வேலைப்படுகளைப் பார்த்தால் மண்டை விறைக்கும்! இங்கு பாரிஸின் லூவ்ர் மியூசியத்தைப் பார்த்தது போலவே இருக்கும்! அவ்வளவு அழகிய வேலைப்பாடுகள்!

உலகில் அழகான தெரு அதற்கு அருகிலே “ சந்திரன் பூங்கா” என்று ஒரு உயிரியல் பூங்கா! தொங்கு பாலம்! எத்தனையோ விதமான பறவைகள், விலங்குகள்! எல்லாமே தமிழில் பொறிக்கப்பட்ட பெயர் பலகைகள்! விளக்க அட்டைகள்! பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்! இதைவிட விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பிய மருத்துவத்துறை பற்றியும் அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும் சொல்ல பல பத்து பதிவுகள் போட வேண்டும்!
வன்னியிலே “ கணிநுட்பம்” என்று ஒரு கம்பியூட்டர் சஞ்சிகை வந்தது! தலைவரின் மகன் சாள்ஸ் ஆண்டனிதான் அதன் நிர்வாகி! என்ன சொல்வது? சத்தியமா கொழும்பில் இருந்துகூட அப்படி ஒரு சஞ்சிகையை நான் பார்த்ததில்லை! அதன் அட்டையத் தொட்டுப் பார்த்தால் கை கூசும்! புகைப்படத்துறையும், அச்சகத்துறையும் அங்கிருந்ததைப் போல வேறெங்கும் நான் காணவில்லை!

வன்னியில் இயங்கிய வங்கிகள் பற்றி சொல்லவா வேண்டும்? உங்களுக்கு வங்கியிலே வேலை பார்க்க வேண்டுமா? அப்படியானால் அதற்க்கு லஞ்சப் பணமாக ஒரு தொகை கொடுக்கணுமே! அடப்போங்கப்பா, திறமை இருந்தால் வேலை! ஒரு சல்லிப் பைசா தேவையில்லை! இங்கு ஐரோப்பாவில் இருக்கும் வங்கிகள் போலவே!
வன்னியின் ஒவ்வொரு கட்டுமானத்தையும், அணுவணுவாக ரசித்தேன்! அனைத்துமே ஐரோப்பாவுக்கு நிகரானவை! இன்னும் என்னென்ன கட்டமைப்புக்கள் எல்லாம் வன்னியில் இருந்தன என்பதை பின்னூட்டம் போடும் நண்பர்கள் வந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன்!

ஒன்று தெரியுமா? இத்தினூண்டு குட்டி வன்னியில் 7 விமான ஓடுபாதைகள் இருந்ததாக, அரச படையினர் சொல்கிறார்கள்! ஒரு வேளை நாடு கிடைத்திருந்தால்…., சொல்லவே வேண்டாம் நிச்சயமாக ஒரு குட்டி ஐரோப்பாவே அங்கு உருவாகியிருக்கும்! இங்கு ஃபிரான்ஸில், இவர்கள் எந்தளவுக்கு தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, எமக்கும் மிக இயல்பாகவே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், மண் பற்றும் வந்துவிடுகிறது! ஆனால் எமக்குத்தான் நாடே கிடையாதே! என்ன செய்ய?

தமிழீழம் என்ற மண் மீது வைக்கவேண்டிய அத்தனை பற்றுக்களையும் நான் இந்த ஃபிரெஞ்சு தேசத்தின் மீது வைத்திருக்கிறேன்! உலகத்தில் மிகவும் அழகான சாலை இங்குதான் இருக்கிறது! அதில் நடக்கும் போது, கிளிநொச்சி 9 சாலையில் நடப்பதாகவே தோன்றும்! மோனாலிஸா ஓவியம் இருக்கும் லூவ்ர் மியூசியத்துக்குப் போகும் போதெல்லாம், எனக்கு அந்த கிளிநொச்சி மியூசியத்துக்குப் போவதாகவே நினைப்பு வரும்! பாரிஸ் நகரின் மத்தியில் இருக்கும் கொன்கோர்ட் பூங்காவில் நிற்கும் போது, சந்திரன் பூங்காவின் நினைப்பே வந்து போகும்! இங்கிருக்கும் கல்லறைகளும், அவை பராமரிக்கப்படுகின்ற விதமும், அங்கே எமது தெய்வங்கள் உறங்கும், “ துயிலும் இல்லங்களை” நினைவுபடுத்துகிறது!

இங்குள்ள தொலைக்காட்சியில், சுத்தமான ஃபிரெஞ்சில் செய்தி வாசிக்கும் ஒரு ஃபிரெஞ்சுக்காரியைப் பார்க்கும் போது, அவளை சைட் அடிக்கத் தோணுவதில்லை! அங்கே சுத்தமான தமிழிலே செய்தி வாசித்த இசைப்பிரியாதான் நினைவுக்கு வருகிறார்! கூடவே விழியோரம் கொஞ்சம் கண்ணீர்! எப்படிப் பார்த்தாலும் இங்கிருக்கும் ஒவ்வொரு தூணும், துரும்பும் எங்களுக்கு, எமது மண்ணையே நினைவுபடுத்துகிறது! ஆகவே புலம்பெயர் தமிழர்களின் மனசை விட்டு, புலிகளையும், தமிழீழத்தையும், பிரபாகரனையும் அழிக்க முடியாமல் இருப்பதற்கான உளவியல் பின்னணி இதுதான்!

Paris C Fou என்பது இங்கு மிகவும் பிரபலமான நிகழ்ச்சி! அதனை அழகாகத் தொகுப்பவர் ஃபிரெஞ்சு – இத்தலியன் கலப்பு பெண்ணான மேரி !

ஒவ்வொரு முறையும், ஃபிரெஞ்சு இராணுவ வீரன் களப்பலியான செய்தி வரும்போதெல்லாம் உள்ளம் துடிக்கும்! யாரென்றே தெரியாத அந்த வீரனுக்கு மனதுக்குள் வீரவணக்கம் செலுத்துவேன்! “ மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது உறுதி” பாடலை மனதுக்குள் உச்சரிப்பேன்! இவையெல்லாம் இயல்பாகவே நடந்துவிடுகிறது!

1940 களில் ஹிட்லரின் படைகள் ஃபிரான்ஸை ஆக்கிரமித்த போது, ஃபிரெஞ்சுத் தளபதி சா து கோல், லண்டனுக்குப் போய், நாடுகடந்த ஃபிரெஞ்சு அரசை உருவாக்கினார்! அதைத்தான் இன்று தமிழனும் செய்கிறான்! ஆகவே ஐரோப்பாவில் இருக்கும் எந்தவொரு தமிழனுக்கும் ஈழப்பற்று வருவது மிக மிக இயல்புதான்!
நாமாக மறக்க நினைத்தாலும், இங்கு வந்த பின்னர் பிரபாகரனையும், தமிழீழத்தையும் இங்கு மறக்கவே முடிவதில்லை! “ புலம்பெயர் தமிழர்கள் யுத்த வெறியர்கள்!” என்று யார் திட்டினாலும் நமக்கு வலிப்பதில்லை! இருந்துவிட்டுப் போகிறோம்!

இங்கு மறக்கக் கூடிய சூழல் இல்லை! அதனால் கத்துகிறோம்! அங்கு நினைக்கக் கூடிய சூழல் இல்லை! திட்டுகிறீர்கள்! என்ன செய்ய?
ஒன்று சொல்லட்டுமா? புலம்பெயர் மக்களின் மனங்களில் இருந்து எவரேனும் பிரபாகரனை அகற்ற நினைத்தால்,முதலில், ஐரோப்பாவைத்தான் அழிக்க வேண்டும்!

புரட்சி எப்.எம் இற்காக மாத்தியோசி மணி

பிற் குறிப்பு: மேலும் சில குறிப்புக்கள் / தகவல்கள்

*ஆயப் பகுதி என்று ஒன்றினை உருவாக்கி வைத்திருந்தார்கள். இதன் மூலம் வரி, தீர்வை விலக்கு போன்றவற்றினைப் புலிகள் நிர்வகித்தார்கள். புலிகள் பகுதிக்குள் இணைய வசதி, மின்சார வசதி வந்த பின்னர் இந்த ஆயப் பகுதிக்கு என்றே தனியான ஓர் இணையம் உருவாக்கி உலகெங்கும் கொண்டு சென்றார்கள்.

*அகதிகளுக்கும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் உதவுவதற்கு என்று புலத் தமிழ் உள்ளங்களின் உதவியோடு இயங்கும் வகையில் பிரபாகரன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினைக் கட்டியெழுப்பினார்.
இந்தப் புனர்வாழ்வுக் கழகத்திற்குச் சொந்தமான 400 மில்லியன் கோடி ரூபாவினை இலங்கை அரசு 2006ம் ஆண்டில் கையகப்படுத்தியிருந்தது.

*படகுகளை வடிவமைக்க, எம் தேசத்தின் கடற் தொழிலை விரிவாக்க வெளி நாட்டு உதவியுடன் படகு கட்டுமானத் துறையினை உருவாக்கியிருந்தார் பிரபாகரன். இது 2002 இல் உருவாக்கபப்ட்டது.

*வெளிநாட்டில் உள்ள தமிழ் அன்பர் ஒருவரின் உதவியுடன் முதன் முதலாக பசுப் பாலைச் செயற்கை முறையில் இயந்திரங்களின் உதவியுடன் எடுக்கும் முறையினை உருவாக்கினார்கள். பசுப்பால் பதனிடுதல், பாக்கட்டில் அடைத்து பாலை விற்றல் ஆகியவை இம் முறை மூலம் செயற்படுத்தப்பட்டது. இந்த நிறுவனமும் கிளிநொச்சியில் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டது. பெயர் ஞாபகம் வரவில்லை.

*சர்வதேச தரத்திலான ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் அறிவியல் நகர் பகுதியில் நிர்மானிக்க திட்டம் தொடங்கப்பட்டது பின்பு அதுவும் சில காரணங்களால் கைவிடப்பட்டது அதுவும் நிர்மானிக்கப்பட்டு இருந்தால் புகழ் பெற்ற மைதானமாக மாறியிருக்கும்

*ஒரு மரம் வெட்டினால் ஒரு மரம் நட வேண்டும் எனும் அறிவிப்பு எல்லா இடமும் காணப்படும்! காட்டுப் பாதைகளிலும் இந்த அறிவிப்பினை வைத்திருப்பார்கள். ஒட்டுசுட்டான் புதுக் குடியிருப்பு வீதியில் கூட ஆள் அரவமற்ற இடங்களிலும் இந்த அறிவிப்பினைப் பார்த்திருக்கிறேன்.

எம் இயற்கை வளங்களினைப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினை அமைத்தார் தலைவர்.

இதுவும் வன்னியிலும் சரி, முன்னர் யாழ், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் இலங்கையின் ஏனைய வட கிழக்குப் பகுதியில் இயங்கிய காலத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தியது.

*போராளிகள் வெறுமனே களப் பணிகளில் மாத்திரம் இருக்கக் கூடாது, கல்வியிலும் முன்னேற வேண்டும் எனும் நோக்கில் அறிவியல் நகரில்
தூயவன் அரசறிவியற் கூடம்,
லெப் கேணல் நவம் அறிவுக் கூடம்,
துளசிராம் இலக்கிய வட்டம்,
மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி கலையகம், எனப் பல கல்விக் கூடங்களைத் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.

*வன்னிக்குள் சுனாமி வந்த நேரம் தந்திரமாக வெளிநாட்டுடன் பேசி, காலநிலை, வானிலையினை அவதானிக்கும் நோக்குடன் இண்டெல்சாட் எனும் சாட்டிலைச் (satellite) சேவையினை வரவைத்தார்கள் புலிகள். பின்னர் அதன் மூலம் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையத்தினையும், வானிலை அவதானிப்பு நிலையத்தினையும் உருவாக்கினார்கள்.

அதன் பிறகு செய்மதியில் இயங்கக் கூடியதாகவும், அனைத்துலகினையும் சென்று சேரக் கூடியதாகவும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியினையும் உருவாக்கினார்கள்.

*தமிழ் மக்களுக்காக தமிழ் பேசும் மக்களால், போராளிக் கலைஞர்களால் நடாத்தப்படும் வானொலியினை உருவாக்கினார்கள். அது புலிகளின்குரல்.

*இலங்கையின் வரலாற்றில் மிகச் சிறந்த ஒளிப்பதிவுடனும், தொழில் நுட்பங்களுடனும் கூடிய படங்கள் வன்னியில் தான் வெளியாகியது.
இவற்றை வெளியிட்ட உரிமை, தமிழீழ திரைப்பட உருவாக்கற் பிரிவிற்கும், நிதர்சன நிறுவனத்தினருக்குமே சாரும்!

அதே போல ஒலிப் பதிவில் சிறந்த பாடல்களை உருவாக்கிய பெருமை தர்மேந்திராக் கலையகத்திற்கும், நிதர்சன நிறுவனத்திற்குமே சாரும்.

*தமிழீழ மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கல்விக் கழகத்தினை உருவாக்கினார்கள். அதன் பொறுப்பாளராக திரு.வே.இளங்குமரன் அவர்கள் இறுதிக் காலம் வரை விளங்கினார்கள்.

இதனூடாக வன்னியில் புலமைப் பரிசில். உயர்தரப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முன்னோடிப் பரீட்சைகளும், ஆண்டிறுதிப் பரீட்சைகளும் நிகழ்த்தப்பட்டன.

*இலங்கை வரலாற்றில் முதன் முதல் வெளி நாடுகளில் உள்ளது போன்று அளவுக்கு மீறிய ஸ்பீட்டில் ஓடும் வாகனங்களைப் பிடிப்பதற்கான கருவினையும், வேகத் தடைக் கண்காணிப்பினை நிகழ்த்திய பெருமையும் தமிழீழ காவல் துறையினையே சாரும்.

*இலங்கை அரசால் தமிழர் தம் வரலாறுகள் மறைக்கப்பட்டு, இளஞ் சந்ததிக்குப் பாட நூல்கள் ஊடாகத் திரிபுபடுத்தப்படுவதனை உணர்ந்த புலிகள் கல்விக் கழகம் ஊடாக 2000ம் ஆண்டிலிருந்து வரலாற்றுப் புத்தகங்களையும், ஏனைய சில பாட நூல்களையும் அச்சிட்டு வெளியிடத் தொடங்கினார்கள்.

*தரமான போக்குவரத்துச் சேவையினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் தமீழ போக்குவரத்துச் சேவையினையும், போக்குவரத்து கண்காணிப்புச் சேவையினையும் உருவாக்கினார்.

*இறந்த போர் வீரர்களை என்றுமே எம் இதயத்தில் இருத்தி வைக்கும் நோக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களை, கல்லறைகளை உருவாக்கினார்.

அதே போல மாவீரர் விபரங்களைத் திரட்டிட மாவீரர் பணிமனையினை உருவாக்கியிருந்தார்.

ஊர்கள் தோறும் சனசமூக நிலையம், நூலகம் ஆகியவை இல்லையே எனும் குறையினைப் போக்க மாவீரர் படிப்பகத்தினை உருவாக்கும் உத்தரவினை பிரபாகரன் வழங்கியிருந்தார்.

*கலைகளையும், இலக்கியங்களையும் வளர்க்கும் நோக்கில் தமிழீழ கலை பண்பாட்டுப் பிரிவினை உருவாக்கினார். மக்களுக்கும், புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஊர்கள் தோறும் அரசியற் துறை அலுவலகங்களை நிர்மாணித்திருந்தார்.

*பாலர் முன்பள்ளிகள், ஆதரவற்ற சிறுவர்களுக்கு அண்ணனாகவும், மாமனாகவும் தான் இருக்கிறேன் எனும் நோக்கில் அரவணைத்திட காந்தரூபன் அறிவுச் சோலை, செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆகியவற்றினை அமைத்திருந்தார்.

வடக்கு கிழக்கு மக்கள்- Anantharasa Sellathurai.

டிவிட்டரில் டிரென்டான #PrabhakaranIsTamilsIdentity ! #ஈழம் #இனப்படுகொலை #சுத்துமாத்துக்கள் #தமிழர் #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide #dulquersalmaan @dulQuer #VaraneAvashyamund

Posted on

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #PrabhakaranIsTamilsIdentity என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் இடம்பெறும் வளர்ப்பு நாய்க்கு ”பிரபாகரன் என பெயரிட்டிருப்பதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாய்க்கு பிரபாகரன் என பெயரிட்டிருப்பது தமிழர்களையும், அவர்களது உரிமை போரையும் இழிவுபடுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள துல்கர் சல்மான் யாரையும் இழிவுபடுத்த அந்த பெயர் வைக்கப்படவில்லை என்றும், தவறுதலாக நடந்துவிட்டது என கூறி மன்னிப்பும் கேட்டார்.

இருப்பினும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த காட்சியை படக்குழுவினர் நீக்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல துல்கரின் மன்னிப்பு பதிவில் பிரபாகரன் என்பது ஒரு காமெடி மீம் எனவும் தெரிவித்திருந்தார்.

எனவே சமூக வலைத்தளமான டிவிட்டரில், மலையாளிகளுக்கு பிரபாகரன் என்பது காமெடியாக இருக்கலாம் ஆனால் தமிழர்களுக்கு அது ஒரு எமோஷன் என #PrabhakaranIsTamilsIdentity என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழின் வீரத்தை பாருக்கு பறைசாற்றிய இரண்டு கடைக்குட்டிகள் ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

Posted on

தமிழர்களின் பண்டைக்கால வரலாறுகளை தோண்டும்போது சோழர்களுக்கும் ஈழவர்களுக்கும் உள்ள வரலாற்று ரீதியான ஒரு உண்மை தன்மையை காண முடிகின்றது குறிப்பாக சோழர்காலத்தில் எந்த மன்னர்கள் கொடிகட்டி பறந்தார்களோ அவர்களுக்கும் தமிழீழ தேசியத் தலைவருக்குமான ஒரு நெருக்கமான வரலாற்று உறவை காணமுடிகின்றது. அந்த வகையில் கடந்த பதிவில் கரிகால சோழனுக்கும் தலைவருக்குமான வரலாறு பிரசவித்த வரலாற்று அற்புதத்தை பாத்திருந்தோம் அதே போன்றுதான் இன்றைய பதிவில் தேசியத் தலைவருக்கும் இராசராச சோழனுக்கும் இடையேயான ஒரு அற்புத நிகழ்வை பற்றி பார்ப்போம்.

வீட்டில் பிறந்த இரு கடைக்குட்டிகள் புலிக்கொடியை வின்னில் பறக்க விட்டு தமிழன் வீரத்தை பாருக்கு பறை சாற்றினார்கள் யார் அந்த இரு கடைக்குட்டிகளின் வரலாறு சொல்லும் அற்புதத்தை படித்து பார்ப்போம் வாருங்கள்.

இராசராச சோழன் பெயரை இன்று கேட்டாலும் தமிழுக்கு புது இரத்தம் பாயும், வின்னும் பாரும் அதிரும். அந்த அற்புதம்இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழனுக்கும் அவன் பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்தான் அருண்மொழிவர்மன்.

சுந்தர சோழனுக்கு மூன்று பெரிய தந்தைகள் இருந்தனர்.ஆகையால் சுந்தர சோழன் ஆட்சி பீடம் ஏறமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர்.ஆனால் முதலாம் பராந்தகனின் புதல்வன் உத்தமசீலி என்பான் பாண்டிய நாட்டு போரில் உயிர் துறந்தான்.அது போலவே முதல் பராந்தகனின் முதல் புதல்வனும் மிக பெரும் வீரனுமாகிய ராசாதித்தன் ராட்டிடகூட போரில் ஆனை மேலமர்ந்த படியே வீரசொர்க்கம் எய்தினான்.

முதலாம் பராந்தகனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார் அவரது இரண்டாம் புதல்வர் கண்டராதித்தர்.கண்டராதித்தனின் புதல்வன் சிறிய குழந்தை என்பதால் அவருக்கு பின்னர் அவனது இளவலும் சுந்தர சோழனின் தந்தையுமாகிய அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்தான்.சில திங்களில் அவனும் காலமானதால் அவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தக சோழனாகிய சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.

சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள்.முதலாமவன் பெரும் வீரனாகிய ஆதித்ய கரிகாலன்.அவனுக்கடுத்து குந்தவை என்னும் பெண் பிறந்தாள்.இவர்களுக்கு பின்னர் கடைக்குட்டியாக பிறந்தவன் தான் இந்த அருண்மொழிவர்மன். கி.பி-969 இல் சோழ நாட்டிலேயே சில வஞ்சகர்களால் அருண்மொழிவர்மனின் அண்ணனான ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டான்.

ஆதித்த கரிகாலன் போன்றதொரு வீரனை அது நாள் வரை கண்டிராத சோழ நாடு அவனது மறைவால் சோகத்தில் ஆழ்ந்தது.ஆதித்தனின் மறைவை தாங்க இயலாத சுந்தர சோழன் சில திங்களில் வானுலகம் எய்தினான்.சுந்தர சோழனின் மறைவுக்கு பின்னர் சோழ நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் நிகழ்ந்தது.சோழ நாட்டின் கீழ் இருந்த சிற்றரசர்களில் ஒரு சாரார் கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்றும் மற்றொரு சாரர் அருண்மொழி வர்மனே ஆட்சி பீடம் ஏறவேண்டும் என்றும் தங்களுக்குள் பிரிந்தனர்.

சங்கு சக்கர ரேகைகளை உடைய அருண்மொழிவர்மனுக்கு மக்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது. இந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி எதிரிகள் மீண்டும் சோழ நாட்டின் மீது படைஎடுக்க கூடாது என்று நினைத்த அருண்மொழிவர்மன் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஆட்சி பீடத்தின் மீதான தனது உரிமையை கண்டராதித்தரின் புதல்வனான உத்தம சோழனுக்கு விட்டுகொடுத்தார்.

மிக பெரும் தொன்மை வாய்ந்த சோழ நாட்டின் அரசுரிமையை தனது சிறியதந்தைகாக விட்டு கொடுத்தது அருன்மொழிவர்மனின் தயாள குணத்தை காட்டுகிறது.

உத்தம சோழனின் பதினைந்து ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் கி.பி-985 இல் அரசு கட்டில் ஏறினான் ராசகேசரி அருண்மொழிவர்மன்.தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில்(கி.பி-988) சேரனையும் பாண்டியனையும் கந்தாளூர் சாலை போரில் வென்றான்.இப்போருக்கு பிறகே அரசருக்கேலாம் அரசர் என்று பொருள் படும் “ராஜராஜன்” என்னும் அபிஷேக பெயரை சூடினான். அதுவே அவனது பெயராக பின்னாளில் மாறி போனது.

விசயாலய சோழனால் அடிகோலப்பட்ட பிற்கால சோழ அரசு மகோன்னதம் அடைந்தது இவனது ஆட்சியிலே தான்.அது நாள் வரை தேங்கி இருந்த சோழரின் ஆற்றலை அனைத்து துறைகளிலும் வெளிக்கொண்டு வந்து சோழர் பரம்பரையை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் பேச செய்தவன் இவனே.இவன் இயற்கைலேயே நுண்ணறிவும்,பெரும் ஆற்றலும்,மக்களின் செல்வாக்கும்,இறைவனின் ஆசியும் உடையவனாய் இருந்து இருக்க வேண்டும்.இவனது முப்பது ஆண்டு கால நீண்ட ஆட்சியும் இவனது சாதனைகளுக்கு பெருந்துணை புரிந்துள்ளது.

அது நாள் வரை எந்த தமிழ் மன்னரும் செய்திராத ஒன்றை ராசராசன் செய்தார்.தனது ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அனைவரும் நன்குணரும் பொருட்டு அவற்றை விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழில் அகவற்பாவில் அமைத்து தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை தொடங்கினான்.மன்னனது ஆட்சி வளர வளர மெய்க்கீர்த்தியும் வளர்ந்து கொண்டே போகும்.மெய்க்கீர்த்திகளில் இருப்பனவெல்லாம் கற்பனை அல்ல.அவை அனைத்தும் அந்த மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களே.

பாண்டி மண்டலமும்,சேர மண்டலமும் அடங்கிய ராசராச தென்மண்டலமும், தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலமும்,கங்க மண்டலமும்,கொங்கு மண்டலமும்,நுளம்பாடி மண்டலமும்,கலிங்க மண்டலமும்,ஈழமாகிய மும்முடி சோழ மண்டலமும் இவனது ஆட்சியில் சோழ நாட்டிற்க்கு உட்பட்டு இருந்தது. மற்றும் பல அன்னிய நாடுகளும் இவன் கட்டுப்பாட்டில் இருந்தது.

வளர்ந்து கொண்டே வநத சோழ சாம்ராஜ்யத்தின் நிதிநிலையை சமாளிக்க அது வரையில் யாரும் யோசிக்காத வண்ணம் தனது சாம்ராஜ்யத்தை அளக்க உத்தரவிட்டான் ராஜராஜன்.இப்பெரும் பணியை மிககுறுகிய காலத்தில் செய்து முடித்தவன் சேனாதிபதி குரவன் உலகளந்தானான ராசராச மாராயன்.எவ்வளவு நன்செய் நிலங்கள்,புன்செய் நிலங்கள்,காடுகள்,விளைநிலங்கள் என்பதை புலப்படுத்தி அவற்றுள் விளைநிலங்களுக்கு மட்டும் வரி விதிக்குமாறு பரிந்துரைத்தான்.

இவ்வாறு பலத்துறைகளில் சிறப்புற்று விளங்கிய ராஜராஜனுக்கு பல்வேறு அபிஷேக பெயர்கள் இருந்தன.
ஷத்திரிய சிகாமணி, ராசேந்திர சிங்கன், உய்யக்கொண்டான்,
பாண்டிய குலாசினி, கேரளாந்தகன், நித்த வினோதன், ராசாசிரையன்,
சிவபாதசேகரன், சநநாதன், சிங்களாந்தகன், சயங்கோண்டசோழன்,
மும்முடி சோழன், ரவிகுல மாணிக்கம், நிகரிலி சோழன்,
சோழேந்திர சிங்கன், சோழமார்த்தாண்டன், ராசா மார்த்தாண்டன், தெலுங்குகுல காலன், கீர்த்தி பராக்கிரமன் என்பன ஆகும்.

மன்னர்கள் கோயில் கட்டுவது என்பது புதிது அன்று. எதையும் புதிதாக முயற்சி செய்யும் ராஜராஜன் இதிலும் தனது புதுமையை கட்டினார்.அதாவது அதுவரை தென்னாட்டில் எங்குமே இல்லாத பரிமாணத்தில் 793 அடி நீளத்தில் 397 அடி அகலத்தில் 216 அடி உயரத்தில் ராஜராஜேச்வரம் என்னும் கோயிலை கட்டினான், இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து தமிழரின் கட்டிட கலையை உலகிற்கு உணர்த்துவது திண்ணம்.

இவ்வாறாக பலத்துறைகளில் சோழர்களின் முத்திரையை பதித்த ராசராசன் கி,பி-1012இல் தனது புதல்வனாகிய, பின்னாளில் ராசேந்திரசோழன் என்னும் அபிஷேக பெயரை அடைந்த இளங்கோ மதுராந்தகருக்கு இளவரசு பட்டம் சூட்டினான். இவனது வீர சாகசங்களை அடிக்கிக்கொண்டே போகலாம் ஆனால் கட்டுரை நீளும் என்பதால் சுருக்கி கொண்டு.

இதே ஓர்மத்தோடும் திமிரோடும் ஈழவள நாட்டில் ஒரு தெய்வக் குழந்தை கடைக்குட்டியாக உதித்தது வரலாற்று ஏடுகளாக இருக்கும் தமிழர் வீரத்தை உலகுக்கு காட்டினான் அந்த சூரிய தேவன்.

திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு கடைக்குட்டியாக வல்வையில் அவதரித்தான் பிரபாகரன். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். மூத்தவர்கள் குடும்ப வாழ்க்கையோடு நின்றுவிட, கடைக்குட்டி மட்டும் தமிழையும் அடிமையாக மாற்றான் காலில் விழுந்து கிடக்கும் தமிழர்களையும் பற்றி எண்ணினான்.

இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.

கடைக்குட்டியான பிரபாகரன் தனது தாய் தந்தையரிடம் உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். உன்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறிவிட்டு உலக வரலாற்றில் மிகப்பெரிய சரித்திரத்தை படைக்க வெளிக்கிட்டார். இதனை அன்று எவரும் அறிந்திருக்கவில்லை. காலம் கடந்தது ஒற்றை கைத்துப்பாக்கியோடு ஆரம்பித்த கடைக்குட்டியின் தமிழருக்கான விடுதலை பயணம்.

துரோகிகள் அழிப்பில் தொடங்கி, இந்திய வல்லரசு தொட்டு பல தடைகளை தவிடுபொடியாக்கி தரை, கடல், வான் என முப்படைகளையும் கட்டமைத்து, உலக வல்லரசுகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக இருந்து, ஒழுக்க சீலனாக சோழர் காலத்தில் வீழ்ந்த புலிக்கொடியை புது ரெத்தம் பாய்ச்சி வின்னில் பறக்க விட்டு உலக அரங்கில் புதிய வரலாற்றை படைத்து தமிழீழத்தின் தேசியத் தலைவனாக உயர்ந்து நின்றான்.

கடை குட்டியாக பிறந்து
தோழர்களின் தம்பி எனும் வீரப்பிணைப்போடு
அண்ணனாக
புலிகள் தலைவனாக
தமிழீழ தேசியத் தலைவனாக
தமிழ்த் தேசிய தலைவனாக
வையகம் போற்ற உயர்ந்து நின்றான்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைக்குட்டியாக பிறந்த தமிழன் தமிழை உயர்த்தினார்
இன்று இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து பிறந்த தமிழன் தமிழை நிமிர்த்தினான்.

ஈழம் புகழ் மாறன்

புலிகளின் அவலக் கோட்பாடு – பகுதி 1 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

Posted on

புலிகள் துன்பத்தின் ஆழத்தையும், அழிவின் விளிம்பையும் ஈழ வரலாற்றில் தொடர்ந்து பார்த்தவர்கள். புலி வீரனின் சராசரி வாழ்க்கை காலம் என்பது மிகக்குறைவு, எப்பொழுது வேண்டுமானாலும் போரில் வீரமரணம் நிகழலாம். அவர்களின் ஈழம் எப்பொழுது வேண்டுமானாலும் வல்லூறுகளுக்கு இறையாகலாம். ஆனாலும் அவ்வாறான தங்களின் நிலையாமையை அறிந்து அவர்கள் எப்பொழுதும் மனம் துவழவில்லை, மாறாக அவர்கள் அதைக்கண்டு தங்கள் மனதை உறுதியாக்கி பலம் பெற்றார்கள், குறிக்கோளில் உறுதியடைந்தார்கள், வீராவேசமாக போரிட்டார்கள், தலைமை தாங்கி வழி நடத்தினார்கள், கடல்களில் அலைந்து திரிந்தார்கள், ஒரு உன்னத நோக்கத்திற்காக தியாகம் செய்தார்கள், வீரமிக்க காவிய நாயகர்களாக வாழ்ந்தார்கள்.

ஆனால் 20009-இல் நடந்த அவலத்திற்கு பின்னரான காலத்தை நோக்கினால், நேர் மாறான பண்பை தமிழர்களிடம் காணலாம். துன்பத்தை கண்டு துவண்டு, எல்லாம் முடிந்துவிட்டது என்று நம்பிக்கை இழந்து தமிழ்ச்சமூகம் தன்னைத்தானே    உள்ளிழுத்துகொண்டது. அது மட்டுமில்லாமல் ஒருவரை ஒருவர் நண்டுபோல் பின்னிழுத்து தனக்குத்தானே குழிதோண்டுகிறது. இதுதான் புலிகளுக்கும் மற்ற தமிழர்களுக்கும் உள்ள வித்தியாசம். புலிகள் அவலத்தைக்கண்டு உறுதியடைந்தார்கள், மற்றவர்கள் பயப்படுகிறார்கள். புலிகள் தமிழினத்தில் தோன்றினாலும், அவர்கள் தமிழ்சமூகத்தைக் காட்டிலும் சிந்தனைகளிலும், செயல்பாடுகளிலும், பண்பாட்டினாலும் முற்றிலும் வேறுபட்டவர்கள். அடிக்கடி எனக்கு புலிகள் தமிழர்கள்தானா என்று ஐயமே ஏற்படும். புலிகள் எவ்வாறு துன்பத்தைக்கண்டு உறுதியடைந்தார்கள் என்பது தமிழ்ச்சமூகம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய பாடம். அதன் மூலமே இன்றைய உடைந்த மனநிலையில் இருந்து வெளிவந்து நம்மால் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரமுடியும்.

புலிப்பண்பாடு, உத்திகள், குழுக்களின் குழு அமைப்பு முறை எனப்பல புதுமைகளை புலிகள் உருவாக்கினாலும், அவர்களின் மன உறுதியை அவற்றைக்கொண்டு மட்டும் விளக்க முடியாது. அவர்களின் மன உறுதிக்கு முக்கியக் காரணம் என்பது அவர்களின் அவலத்தினைப் பற்றிய மனநிலை .

இவ்வுலகில் பெரும்பாலானோர் நினைப்பது என்னவென்றால் இவ்வுலகம் நீதியின்படி இயங்குகிறது. நீண்டகால நோக்கில் பார்த்தால் நீதி நிலைபெறும், அநீதி ஒழிக்கப்படும், தவறிழைப்பவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். இதை நீதி மனநிலை எனலாம், இது ஒரு ஒரு கனவுலக சிந்தனை. ஆனால் உண்மை என்னவென்றால் இவ்வுலகம் நீதியின்படி இயங்குவதில்லை, இவ்வுலகத்தில் நீதி நிலைபெறுவதைவிட அவலங்கள் ஏற்படுவதுதான் அதிகம், தவறிழைக்கும் நாடுகள் தண்டனைக்கு உள்ளாவதில்லை, அப்பாவிகள் அழிக்கப்படுகிறார்கள். நல்லவர்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தால், நீதி ஏற்படாது, மேலும் அவலங்கள்தான் ஏற்படும். இதுதான் அவல மனநிலை, இதுதான் இவ்வுலகு எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய சரியான மனநிலை.

“The arc of world affairs is quintessentially tragic” [1]

பிரபாகரன் ஈழத்தில் ஏற்பட்ட அவலத்தைக் கண்கூடாகப் பார்த்து மனம் வெதும்பி சீற்றமுற்று உருவாக்கியதுதான் புலிப்படை. அவலத்தை நேருக்கு நேராகப் எதிர்த்து போராடுவதன் மூலமே அவலத்திலிருந்து தப்பிக்க முடியும், அதற்கு மாறாக அமைதியாக இருந்தால் மேலும் அவலங்கள்தான் கூடும்   என்பதை உணர்ந்தவர்கள் புலிகள். இன்று சிலர் புலிகள் போரிட்டதனால்தான் 2009-இல் அவலம் ஏற்பட்டது, அமைதியாக அடிபணிந்து இருந்தால் தப்பி இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது உலக வரலாற்றைப் பற்றி அறியாதவர்கள் பார்வை, நீதி மனநிலையில் இருப்பவர்களின் பார்வை. உலகில் போரிட்டு அழிந்த இனங்களைவிட போரிடாமல் அழிந்த இனங்கள்தான் அதிகம். இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு சிறந்த நாடும், ஏற்படும் அவலத்தை உணர்ந்து, அவலத்தை நேருக்கு நேர் சந்தித்து வென்றவர்களே.

“Great men, great nations, have not been boasters and buffoons, but perceivers of the terror of life, and have manned themselves to face it.” – Ralph Waldo Emerson

இவ்வுலகின் அவலத்தன்மையையும், புலிகள் அவலத்தை எவ்வாறு உணர்ந்து எதிர்கொண்டார்கள், எவ்வாறான அவலமனநிலையைக் கொண்டு நாம் செயல்படவேண்டும் என்பவற்றை விளக்குவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

  1. இவ்வுலகில் அவலங்கள் என்பது சாதாரண நிகழ்வு

போரில்லா அமைதியான உலகில் வாழ அனைவரும் விரும்புகின்றனர், ஆனால் போர் மட்டும் நின்றபாடில்லை. ஒவ்வொரு போரும் முந்தைய போரைவிட உக்கிரமாகவே நடக்கிறது. அறிவியல் வளர்ச்சியால் போர்களை நிறுத்தமுடியவில்லை, மாறாக போருக்கென்று கொடூரமான ஆயுதங்களை உருவாக்கவே அறிவியல் துணைபோகிறது. உலகம் நீதியின்படி இயங்குகிறது என்று கனவுலக சிந்தனையில் அறிவாளர்களும் தொன்றுதொட்டு கூறுகிறார்கள். உதாரணமாக பண்டைய சிலப்பதிகாரத்தில் “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” (அரசியல் நெறி தவறி ஆட்சி புரிபவர்களைத் தரும தேவதையே தண்டிக்கும்) . அவ்வாறான நிகழ்வுகள் கதைகளிலும் காப்பியங்களிலும் நடக்கலாம், ஆனால் உண்மையான உலகு அவலங்களால் நிறைந்தது. அதுவும் குறிப்பாக தேசங்களுக்கிடையேயான பூலோக அரசியல் கொடூரமானது.

ஒரு நாட்டுக்குள் நீதியை நிலைநாட்ட காவல்துறை இருப்பதுபோலம் உலக அரசியலில் கிடையாது. ஐக்கிய நாடுகள் அவை என்பது நாடுகளுக்கு இடையேயான ஒரு தரகு அமைப்பு, அதற்கு காவல் காக்கும் உரிமை கிடையாது, வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம்தான் நாடுகளுக்கிடையே அன்றிலிருந்து இன்றுவரை நிலவுகிறது. அதனால் ஒவ்வொரு நாடும் தான் பிழைக்கவேண்டுமென்றால் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.

“The sad fact,” writes political scientist John Mearsheimer, “is that international politics has always been a ruthless and dangerous business, and it is likely to remain that way.” States exist in a world in which there has traditionally been no “night watchman”— no supreme authority to enforce order and defend the weak. 6 The incentives for fierce, even deadly, competition are enormous, because the penalties for failing to compete effectively are so severe.[1]

As Thomas Hobbes, the English philosopher and one of the founders of international relations realism, put it, so long as man exists in the “state of nature,” so long as there is no overarching authority to provide peace and stability, human relations are destined to be characterized by “continual fear, and danger of violent death,” and the “life of man” is sure to be “solitary, poor, nasty, brutish, and short.”[1]

இதைக் கடந்த 500 ஆண்டுகால ஐரோப்பிய வரலாற்றைப் பார்த்தாலே விளங்கும் [1]:

  • ரசியாவில் வருடங்கள் 900-1900 வரையான ஆயிர வருட காலத்தில் , ஒரே ஒரு கால் நூற்றாண்டில் மட்டுமே போரில்லாமல் இருந்தது. போர் என்பது பெரும்பாலும் நிரந்தர நிலையாகவும், அமைதி என்பது போர்களுக்கு இடையேயான சிறிய இடைவெளியாகவே இருந்தது.
  • கத்தோலிக்க மதப்பிரிவினருக்கும் பிராட்டசுடண்டு மதப்பிரிவினருக்கு இடையே நடந்த முப்பது வருடப்போரில் (1618 to 1648. ) 5-10 கோடி மக்கள் இறந்துள்ளனர். வட ஐரோப்பாவின் மக்கள்தொகையில் 30% அழிந்தனர்.
  • 18 ஆம் நூற்றாண்டின் பிரஞ்சு புரட்சியின் பின்னரான நெப்போலியனின் போர்கள் மேலும் உக்கிரமடைந்தன. இதற்கு முன்னரான போர்களில் 100,000 படை வீரர்கள் போரிடுவது என்பது அபூர்வமாகேவே இருந்தது. ஆனால் இந்த கால கட்டத்தில் பெரும்படை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. லைப்சிகு (Battle of Leipzig ) போரில் மட்டும் 500,000 படைவீரர்கள் மோதினார்கள், அவர்களில் 150,000 இறந்தார்கள் அல்லது காயமுற்றார்கள்.
  • முதல் உலகப்போரில் 1.5 கோடி வீரர்களும் மக்களும் இறந்தனர். இரண்டாம் உலகப்போரில் 8 கோடி பேர் இறந்தனர்.

இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் பிரதமந்திரி பால்டுவின், “போரில் நமது பொது மக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் காக்கவேண்டுனெறால், எதிரியின் பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் நாம் முதலில் கொல்லவேண்டும்   ” என்ற நிலை ஏற்படும் என்று ஆருடம் கூறினார். முடிவில் அப்படிதான் நடந்தது.

As British prime minister Stanley Baldwin had predicted, “You would have to kill more civilians, more women and children, first, if you want to save yours from the enemy.” 45 The war finally ended in 1945, with the use of atomic weapons that themselves set new standards for indiscriminate destruction, and yet were still seen, rightly, as the best way to bring the fighting to a close. [1]

Breakdowns of international peace and security are not anomalies or anachronisms; they veritably litter the historical landscape. And whatever their proximate causes and particularities, the common theme is that they have often unfolded with a pace, intensity, ferocity, and scope that have stunned even the sharpest minds of the day. “Every war is ironic,” writes Paul Fussell, “because every war is worse than expected.” [1]

இவ்வாறு நடந்த எந்த போரும் இவ்வாறு நடக்கும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. ஒவ்வொரு போருக்கு முன்னரும், பல அறிஞர்கள் இனி பெரிய போரே சாத்தியமில்லை என்று ஆரூடம் கூறியிருக்கிறார்கள். போர் முடிந்தபின், இவ்வளவு அழிவைப் பார்த்தபின்னர் இனிப்போரே சாத்தியமில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் போரும் அவலமும் தொடர்கின்றன. இன்றும் அதுபோல ஆரூடங்கள் நடக்கின்றன. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்லலாம் அவலங்களும் போரும் தொடரும். அன்று எப்படி மனிதன் இருந்தானோ, இன்றும் அப்படிதான் இருக்கிறான். இறையாண்மை உள்ள நாடுகள் இருக்கும் வரையில், காவலாளி இல்லாத உலக அரசியலில் அவலம் என்பதைத் தவிர்க்க முடியாது.

“As long as there are sovereign nations possessing great power,” Albert Einstein agreed, “war is inevitable.”

உலகில் இவ்வளவு அவலங்கள் நடந்தும் நமது மூதாதையர் அவற்றில் இருந்து எதுவும் கற்றதாகத் தெரியவில்லை. அவர்கள் வள்ளுவனும், இளங்கோவடிகளும் வடித்த கனவுலக நீதி மனப்பான்மையில் வாழ்ந்திருக்கின்றனர். இன்றும் அதில்தான் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். அன்றைய தலைவர்கள் வரலாற்றைக் கற்றிருந்தால், அவல மனநிலையைப் பெற்றிருப்பார்கள், சிங்களவர்கள் நீதி அளிப்பார்கள் என்று நம்பி இருக்கமாட்ட்டார்கள். வெள்ளையர்கள் வெளியேறும் பொழுது ஈழம் பிறந்திருக்கும். இன்றைய அவலம் நடந்திருக்காது.

ஆனால் புலிகள் மற்ற தமிழர்கள் போல அல்ல. அவல மனநிலையே முற்றிலும் உள்வாங்கியவர்கள். இவ்வுலகில் நீதி என்பது நமது வலிமையில் முயற்சியில் மட்டுமே கிடைப்பது. அவலத்தை நேரடியாக எதிர் கொள்வதின் மூலமே அவலத்தை தடுக்கமுடியும், இல்லையென்றால் தொடந்து அனைவரும் பரிதாபப் படும் இனமாகவே அவலப்படவேண்டும் என்று உணர்ந்தவர்கள். மற்றவர்கள் நம்மீது இரக்கப்பட்டு எதையும் செய்யப்போவதில்லை. யார் ஈழத்தில் மூக்கை நுழைத்தாலும், அது அவர்களின் சுயநலத்திற்கே இன்றி, தமிழர்களின் நலத்திற்கு அல்ல என்பதை முதன் முதலில் கற்றுணர்ந்த தமிழன் பிரபாகரனே. இதுவே அவர்கள் போராட்ட ஆரம்பகாலத்தில் இருந்து இறுதிவரை கொண்ட மனநிலை. மெத்தப்படித்த மேதாவிகள் கோட்டை விட்டதும் விடுவதும் இதில்தான். திராவிடக் கட்சிகளும் இதில்தான் கோட்டை விட்டது. இன்னும் அவர்கள் எதையோ பெரிதாக சாதித்து விட்டார்கள் என்று பெருமைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து முன்னேற்றமும் ஒருநொடியில் காணாமல் போகும் என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை. அவ்வாறு உணர்வதற்கு அவல மனநிலை அடிப்படைத் தேவை.

Good times, Aristotle warned, tended to produce an “arrogant and unreasonable” character. This misplaced optimism lulled societies into a false sense of complacency; such complacency led to ruin.

Thucydides believed what so many Greek tragedians believed— that understanding the precariousness of all of humankind’s achievements was essential to living wisely, living bravely, and living with purpose.

  1. அவலங்கள் நல்ல மாற்றத்தை உருவாக்கத் தூண்டுகோலாக இருப்பவை.

அவலம் என்பது இரு சாராரும் தங்களின் பக்கமே நீதி உள்ளது என்று மோதுவதால் உருவாகிறது என்கிறார் தத்துவமேதை ஏகல்.

Hegel is right to insist that tragedy is the collision between opposed yet mutually justified claims to what is right. [2]

சிங்களவர்கள் முழுத்தீவும் தங்களுடையது, தமிழர்கள் வந்தேறிகள் என்று உறுதியான உண்மையாக நம்புகிறார்கள். இதுதான் அவர்களின் மகாவம்ச மனநிலை. நாம் நமது தொன்றுதொட்டு வாழ்ந்த பூர்வீக நிலத்திற்கு உரிமை கோருகிறோம். இந்த இருவேறு “உண்மைகளின்” மோதல்தான் ஈழத்தில் அவலத்தை உருவாக்கியது. நாம் என்ன சொன்னாலும், சிங்களவர்கள் அவர்களின் உண்மையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை, நாமும் நமது உண்மையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. இது கடந்த 70 ஆண்டுகால ஈழ வரலாறே சாட்சி.

இதற்கு இரு தீர்வுகள் மட்டுமே உள்ளது. ஒன்று அடிபணிவது, இல்லை எதிர்த்து போராடுவது. அடிபணிவது என்பது ஒரு தரப்புக்கு மட்டும் அவலத்தை உருவாக்கும். எதிர்த்து போரிடுவது என்றால், இரு தரப்புக்குமே அவலங்கள் ஏற்படும். ஆனால் போராட்டத்தின் ஒரு நல்ல பண்பு என்னவென்றால், அதன் மூலமே நிரந்தரத்தீர்வுகளும் ஏற்படுகின்றன. கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல் என்று போரிட்டு அவலங்களை சந்தித்து, இருதரப்பும் குருடான பின்னரே அவர்களின் ஞானக்கண் திறக்கும்.

உதாரரணமாக கத்தோலிக்க மதப்பிரிவினருக்கும் பிராட்டசுடண்டு   மதப்பிரிவினருக்கு இடையே நடந்த முப்பது வருடப்போர் அவலங்களின் உச்சத்தை தொட்டபின்னரே, இருதரப்பும் உட்கார்ந்து பேசி முடிவுக்கு வந்தனர். அவர்கள் இனிமேல் அதுபோன்ற அவலம் ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே பேச்சை அணுகினர். அதன் விளைவாக உருவானதுதான் Treaty of Westphalia . அதன்படி ஒவ்வொரு நாடும் அவர்கள் விரும்பும் மதத்தினைப் பின்பற்றலாம், அனால் அதே நேரம் மற்ற மதத்தினர் அவர்கள் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இன்றும் மேற்குலகம் மத சுதந்திரத்துடன் இருக்கிறதென்றால், அதாற்குக் காரணம் 30 வருடப்போர் உருவாக்கிய அவலங்கள்தான். கத்தோலிக்க போப்பு, இந்த ஒப்பந்தத்தை, “அநியாயம், அக்கிரமம், எக்காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குதித்தார். எந்த மதங்கள் போருக்குக் காரணமாக இருந்ததோ, அதே மதங்கள் அவலத்தின் மூலமாக அடக்கப்பட்டன.

The parties accepted the principle of cuius regio, euius religio, under which the rulers of the constituent parts of the empire were free to choose the established religion of their own states. Crucially, however, those rulers were also required to grant Protestants and Catholics alike freedom of worship…the Holy See denounced the accord as “null, void, invalid, iniquitous, unjust, damnable, reprobate, inane, empty of meaning and effect for all time.”

அதேபோல இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னர், உலகில் மற்ற நாடுகளை அடிமைப்படுத்தும் காலனி ஆதிக்கங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. நாடுகளுக்கிடையே அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் அவையும் உருவாக்கப்பட்டது. போர் முடிந்தவுடன் போரில் தோற்ற நாடுகள் பழிவாங்கப் படவில்லை. மாறாக ஜப்பானும் சேர்மனியும் புனரமைக்கப்பட்டு பொருளாதாரம் மீட்கப்பட்டு அவை சம மதிப்புள்ள நாடுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இன்று உலகில் பல நாடுகள் சுதந்திரம் அடைந்திருக்கின்றன, போர்கள் ஓரளவு குறைந்திருக்கின்றன, உலகம் முன்னேறியிருக்கிறது என்றால், இரண்டாம் உலகப்போர் உருவாக்கிய அவலம்தான் காரணம்.

இவ்வுலக வரலாற்றில் அவலங்கள் முடிவுக்கு வந்து அமைதி நிலவ இரு முக்கியமான தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும்.

  • அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளும்படியாக ஒரு ஒப்பந்தம் இருக்கவேண்டும்.
  • மேலும் நாடுகளிக்கிடையான ஆற்றல் சமநிலை (Balance of Power) பேணப்படவேண்டும். அதாவது, ஏதாவது ஒரு தரப்பு ஒப்பந்தத்தை மீறி தாக்கினால், மற்றநாடுகள் அதனைக் கட்டுப்படுத்துவதற்கேற்ற ஆற்றல் இருக்கவேண்டும்.

வெறும் ஒப்பந்தந்தை மட்டும் உருவாக்கினால், அது அவலத்தைத் தடுக்கப்போவதில்லை. உதாரணமாக முதலாம் உலகப்போர், முடிந்தவுடன் வெர்சாயி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது சேர்மனியை பழிவாங்கும் நோக்கத்துடன் இருந்தது மட்டுமில்லாமல், அவ்வொப்பந்தத்தைக் கட்டிக்காக்க ஆற்றல் சமநிலையும் பேணப்படவில்லை. இது முடிவில் இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது. போர் ஒப்பந்தங்களை நீதி மனநிலையில் அணுகாமல், அவல மனநிலையில் அணுகவேண்டும். மீண்டும் அவலத்தை எவ்வாறு தவிர்ப்பது என்று அணுகவேண்டும். மாறாக போரில் வென்றவர்கள், தோற்றவர்களை பார்த்து “நீதி வென்றது, தோற்றவர்கள் தண்டனை அனுபவிக்கவேண்டும், இழப்பை ஈடுகட்டவேண்டும்” என்றால் மீண்டும் போர்தான் நிகழும். அமெரிக்க அதிபர் ஊடரோவ் வில்சன், வெர்சாயி ஒப்பந்தத்தை நீதி மனநிலையில் அணுகினார். மேலும் அவ்வொப்பந்தத்தை பாதுகாக்க எந்த பொறுப்பையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த ஒப்பந்தத்தின் தோல்வியிலிருந்து கற்றுதான் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான ஒப்பந்தங்களை அவல மனநிலையில் கட்டி எழுப்பினார்கள். தோற்றவர்களை பழி வாங்கவில்லை, அவர்கள் மீண்டெழ உதவி செய்தார்கள். உலகில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டு ஆற்றல் சமநிலையைப் பேணி போர்களைத் தடுக்கிறது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்களம்தான் ஆட்சி மொழி, சிங்களக் குடியேற்றங்கள், குடியுரிமை பறிப்பு, படுகொலைகள் என தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டது. பல பேச்சுவார்த்தைகள் நடந்தன, ஆனால் சிங்கள அரசு தனது மகாவம்ச மனநிலைய மாற்றிக்கொள்ளவில்லை. தமிழர் மட்டுமே அடுக்கடுக்காக அவலத்தை எதிர்கொண்டு வந்தனர். புலிகள் வந்த பின்னர்தான் அவலத்திற்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். அவலத்தைத் தந்தவனுக்கே அவலத்தைத் திருப்பிக்கொடு என்பதே புலிகளின் உத்தியாகவும் இருந்தது, அது மூன்றாம் ஈழப்போரில் மாபெரும் வெற்றியும் பெற்றது. அதன்பின்னர்தான் சிங்களமே இறங்கி வந்தது. நடுவிலே மூக்கை நுழைத்த இந்தியாவிற்கும் பதிலடி கொடுத்து திருப்பி அனுப்பினார்கள்.

அவல மனநிலையை புலிகள் ஆரம்பத்திலிருந்து உணர்ந்தார்கள், சிங்களத்திற்கும் ஒரு அவல மனநிலைய உருவாக்கி தீர்வை நோக்கி புலிகள் முன்னேறினார்கள். ஆனால் சிக்கல் என்னவென்றால், இவ்வுலக ஒழுங்கைப் பேணும் அமெரிக்க நேச நாடுகள், அவல மனநிலையை மறந்து நீதி மனநிலைக்கு சென்றார்கள் [1]. இதற்கு ஒபாமாவின் மனநிலையே ஒரு நல்ல உதாரணம்:

“Obama repeatedly argued that the arc of the moral universe bent inevitably toward justice,” [1]

அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், போராடும் அனைத்து குழுக்களையும் பாரபட்சமின்றி தீவிரவாதிகள் என்றும் அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று ஒரு நீதி மனநிலையை எடுத்தது. இதன் விளைவாக புலிகள் தடை செய்யப்பட்டு, அவர்களின் அனைத்து செயல்பாடுகளும் உலக அளவில் முடக்கப்பட்டது. அமைதி ஏற்படுத்தத் தேவையான ஆற்றல் சமநிலையைக் குலைத்தது. இப்பொழுது சிங்களத்திற்கு போரில் வெற்றி பெறலாம் என்ற நிலை பிரகாசமாகியது. முடிவில் தமிழினத்திற்கு உலகம் மிகப்பெரிய அவலத்தை அளித்திருக்கிறது. அமெரிக்காவின் நீதி மனநிலை உலங்கெங்கும் பலபோர்களை நடத்தி மேலும் பல அவலங்களைத்தான் உருவாக்க முடிந்ததே ஒழிய, எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இவ்வுலகின் ஒரு நேர்மாறான தன்மை என்னவென்றால், நீதி மனநிலையில் செயல்பட்டால், அவலங்கள் உருவாகும். ஆனால் அவல மனநிலையில் செயல்பட்டால், அவலங்களைத் தடுத்து நீதியை நிலைநாட்ட வாய்ப்பிருக்கிறது.

சிங்களம் போரில் வென்று, இனப்படுகொலை அவலத்தை உருவாக்கி, மக்களை கம்பி வேலிக்குள் அடைத்து பழி வாங்கியது. அவர்கள் இவ்வாறு செய்து நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். எந்தத்தீர்வும் இதுவரை இன்னும் வைக்கவில்லை. மாகாவம்ச மனநிலையைக் கொண்டு இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை நவீன துட்டகெமெனு என்று சிங்களம் புகழ்கிறது. வரலாறு கூறும் பாடம் என்னவனெறால், தமிழருக்கு இரு வழிகள் மட்டுமே உள்ளன: ஒன்று அடங்கி வாழ்ந்து அவலத்தை தொடர்ந்து அனுபவிக்கலாம், இல்லை தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டு அவலத்தை எதிர்க்கலாம். சிங்களம் தானாக திருந்தி தமிழருக்கு நல்ல தீர்வை அளிக்கும் என்று நம்புபவர்கள் ஏமாளிகள் அல்லது நம்மை ஏமாற்றுபவர்கள். எப்படி நடந்தாலும் அடுத்த அவலம் வெகுதூரம் இல்லை.

தரவுகள்:

  1. Brands, Hal, and Charles Edel. The Lessons of Tragedy-Statecraft and the Preservation of World Order. Yale University Press, 2019.
  2. Critchley, Simon. Tragedy, the Greeks, and us. Pantheon, 2019.

Posted on by 

“நந்திக்கடல்” என்பது ஒரு கோட்பாட்டு #ஈழமறவர் #தமிழர் #ஈழம் #பிரபாகரன் #இனப்படுகொலை #Tamil #Eelam #Prabhakaran #Genocide #Nandikadal

Posted on

“நந்திக்கடல்” என்பதும் அது ஒரு கோட்பாட்டு வடிவம் அடைவதும் எதிரிகளுக்கும் அதன் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் மேற்படி அவதூறு கும்பலுக்கும் பெரும் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. -PKR-

உக்கிரமான ஒரு மீள் பதிவு..

வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல தோற்றுப் போனவர்களும் வரலாற்றில் நினைவுகொள்ளப் படுவார்கள். ஏனென்றால் அவர்கள் போட்டிக் களத்தில் நின்றார்கள். ஆனால் வேடிக்கை பார்த்தவர்களுக்கு எந்த வரலாறும் இருக்கப் போவதில்லை.

அதே போல் வீழ்ந்துபோன ஒரு போராட்டத்தை சரியோ , தவறோ அதை முன்னகர்த்த / அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்க அயராது முயன்று கொண்டிருப்பவர்களுக்கும் வரலாற்றில் ஒரு இடம் கிடைக்கும்.

ஆனால் தினமும் இந்த முயற்சிகள் மீது காறி உமிழ்பவர்களுக்கும் / அவதூறு பேசுபவர்களுக்கும் எந்த வரலாறும் மிஞ்சப் போவதில்லை.

2009 மே இலிருந்து பல்வேறு தரப்புக்களால் பல்வேறு வழிமுறைகளில் தொடங்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியையும் அவதூறுகளாலேயே நிர்மூலம் செய்த தரப்பின் தற்போதைய இலக்கு ‘நந்திக்கடல்’.

“நந்திக்கடல்” என்பதும் அது ஒரு கோட்பாட்டு வடிவம் அடைவதும் எதிரிகளுக்கும் அதன் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் மேற்படி அவதூறு கும்பலுக்கும் பெரும் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

“நான் இங்கு பேச விரும்பும், முன்வைக்க விரும்பும், விவாதிக்க விரும்பும் கருத்துக்கள் ஒரு கோட்பாட்டையோ அல்லது ஒரு முறையியலையோ பிரநிதித்துவப்படுத்துபவை அல்ல, நீண்ட தேடலின் விளைவாய் – ஆழ்ந்த புரிதலின் அடிப்படையில் எழுந்த எனது தர்க்கரீதியான ஆய்வின் முடிவை நிராகரிப்பதற்கான எல்லா உரிமைகளையும் நான் உங்களுக்கு வழங்குகிறேன்” என்றார் மிசேல் பூக்கோ.

பூக்கோவை கிரமமாக உள்வாங்கிய எமக்கும் இதே கருத்துத்தான்..

தலைவர் ஒரு புரட்சியாளனாக இருந்து ஒரு கோட்பாட்டாளனாகப் பரிணமித்தவர்.
அவர் போராடும் தேசிய இனங்கள் சார்ந்து ஒரு புதிய வடிவத்தை நந்திக்கடலில் அறிமுகம் செய்தார்.

அதைக் கண்டடைவதும் கோட்பாட்டுருவாக்கம் செய்வதும் பின்னுள்ளவர்களின் பணி / கடமை.

நிறைய போதாமைகள் உள்ள போதும் பெரும் பிரயத்தனப்பட்டு நாங்கள் நண்பர்களாக அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவத்தைக் கொடுக்க முயன்று வருகிறோம்.

அதை ஏனைய ஆளுமைகளும் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம். பல இளைய தலைமுறையினர் இணைந்து விட்டார்கள் என்பது பெரு மகிழ்வு.

இதுவே எதிரிகளுக்குப் பதட்டத்தைத் தருகிறது.

இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.. அவதூறு பேசுபவர்கள் வேறு வழியாகச் செல்லவும் அல்லது நல்ல குளிர் நீராகக் காலை மாலை இரு வேளையும் அருந்தி வரவும் இந்தக் கொதிப்பு அடங்கும்.

நாளை நமது “நந்திக்கடல்” வடிவம் ஏற்கப்படலாம், நிராகரிக்கவும் படலாம்.. அது எதுவாக இருந்தாலும் அதை ‘அ’ எழுதித் தொடக்கி வைத்ததற்காக வரலாற்றில் நினைவு கூரப்படுவோம்.

அப்போது அவதூறு பேசிய உங்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கும்.

PKR