தமிழின் வீரத்தை பாருக்கு பறைசாற்றிய இரண்டு கடைக்குட்டிகள் ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

Posted on

தமிழர்களின் பண்டைக்கால வரலாறுகளை தோண்டும்போது சோழர்களுக்கும் ஈழவர்களுக்கும் உள்ள வரலாற்று ரீதியான ஒரு உண்மை தன்மையை காண முடிகின்றது குறிப்பாக சோழர்காலத்தில் எந்த மன்னர்கள் கொடிகட்டி பறந்தார்களோ அவர்களுக்கும் தமிழீழ தேசியத் தலைவருக்குமான ஒரு நெருக்கமான வரலாற்று உறவை காணமுடிகின்றது. அந்த வகையில் கடந்த பதிவில் கரிகால சோழனுக்கும் தலைவருக்குமான வரலாறு பிரசவித்த வரலாற்று அற்புதத்தை பாத்திருந்தோம் அதே போன்றுதான் இன்றைய பதிவில் தேசியத் தலைவருக்கும் இராசராச சோழனுக்கும் இடையேயான ஒரு அற்புத நிகழ்வை பற்றி பார்ப்போம்.

வீட்டில் பிறந்த இரு கடைக்குட்டிகள் புலிக்கொடியை வின்னில் பறக்க விட்டு தமிழன் வீரத்தை பாருக்கு பறை சாற்றினார்கள் யார் அந்த இரு கடைக்குட்டிகளின் வரலாறு சொல்லும் அற்புதத்தை படித்து பார்ப்போம் வாருங்கள்.

இராசராச சோழன் பெயரை இன்று கேட்டாலும் தமிழுக்கு புது இரத்தம் பாயும், வின்னும் பாரும் அதிரும். அந்த அற்புதம்இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழனுக்கும் அவன் பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்தான் அருண்மொழிவர்மன்.

சுந்தர சோழனுக்கு மூன்று பெரிய தந்தைகள் இருந்தனர்.ஆகையால் சுந்தர சோழன் ஆட்சி பீடம் ஏறமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர்.ஆனால் முதலாம் பராந்தகனின் புதல்வன் உத்தமசீலி என்பான் பாண்டிய நாட்டு போரில் உயிர் துறந்தான்.அது போலவே முதல் பராந்தகனின் முதல் புதல்வனும் மிக பெரும் வீரனுமாகிய ராசாதித்தன் ராட்டிடகூட போரில் ஆனை மேலமர்ந்த படியே வீரசொர்க்கம் எய்தினான்.

முதலாம் பராந்தகனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார் அவரது இரண்டாம் புதல்வர் கண்டராதித்தர்.கண்டராதித்தனின் புதல்வன் சிறிய குழந்தை என்பதால் அவருக்கு பின்னர் அவனது இளவலும் சுந்தர சோழனின் தந்தையுமாகிய அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்தான்.சில திங்களில் அவனும் காலமானதால் அவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தக சோழனாகிய சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.

சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள்.முதலாமவன் பெரும் வீரனாகிய ஆதித்ய கரிகாலன்.அவனுக்கடுத்து குந்தவை என்னும் பெண் பிறந்தாள்.இவர்களுக்கு பின்னர் கடைக்குட்டியாக பிறந்தவன் தான் இந்த அருண்மொழிவர்மன். கி.பி-969 இல் சோழ நாட்டிலேயே சில வஞ்சகர்களால் அருண்மொழிவர்மனின் அண்ணனான ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டான்.

ஆதித்த கரிகாலன் போன்றதொரு வீரனை அது நாள் வரை கண்டிராத சோழ நாடு அவனது மறைவால் சோகத்தில் ஆழ்ந்தது.ஆதித்தனின் மறைவை தாங்க இயலாத சுந்தர சோழன் சில திங்களில் வானுலகம் எய்தினான்.சுந்தர சோழனின் மறைவுக்கு பின்னர் சோழ நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் நிகழ்ந்தது.சோழ நாட்டின் கீழ் இருந்த சிற்றரசர்களில் ஒரு சாரார் கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்றும் மற்றொரு சாரர் அருண்மொழி வர்மனே ஆட்சி பீடம் ஏறவேண்டும் என்றும் தங்களுக்குள் பிரிந்தனர்.

சங்கு சக்கர ரேகைகளை உடைய அருண்மொழிவர்மனுக்கு மக்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது. இந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி எதிரிகள் மீண்டும் சோழ நாட்டின் மீது படைஎடுக்க கூடாது என்று நினைத்த அருண்மொழிவர்மன் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஆட்சி பீடத்தின் மீதான தனது உரிமையை கண்டராதித்தரின் புதல்வனான உத்தம சோழனுக்கு விட்டுகொடுத்தார்.

மிக பெரும் தொன்மை வாய்ந்த சோழ நாட்டின் அரசுரிமையை தனது சிறியதந்தைகாக விட்டு கொடுத்தது அருன்மொழிவர்மனின் தயாள குணத்தை காட்டுகிறது.

உத்தம சோழனின் பதினைந்து ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் கி.பி-985 இல் அரசு கட்டில் ஏறினான் ராசகேசரி அருண்மொழிவர்மன்.தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில்(கி.பி-988) சேரனையும் பாண்டியனையும் கந்தாளூர் சாலை போரில் வென்றான்.இப்போருக்கு பிறகே அரசருக்கேலாம் அரசர் என்று பொருள் படும் “ராஜராஜன்” என்னும் அபிஷேக பெயரை சூடினான். அதுவே அவனது பெயராக பின்னாளில் மாறி போனது.

விசயாலய சோழனால் அடிகோலப்பட்ட பிற்கால சோழ அரசு மகோன்னதம் அடைந்தது இவனது ஆட்சியிலே தான்.அது நாள் வரை தேங்கி இருந்த சோழரின் ஆற்றலை அனைத்து துறைகளிலும் வெளிக்கொண்டு வந்து சோழர் பரம்பரையை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் பேச செய்தவன் இவனே.இவன் இயற்கைலேயே நுண்ணறிவும்,பெரும் ஆற்றலும்,மக்களின் செல்வாக்கும்,இறைவனின் ஆசியும் உடையவனாய் இருந்து இருக்க வேண்டும்.இவனது முப்பது ஆண்டு கால நீண்ட ஆட்சியும் இவனது சாதனைகளுக்கு பெருந்துணை புரிந்துள்ளது.

அது நாள் வரை எந்த தமிழ் மன்னரும் செய்திராத ஒன்றை ராசராசன் செய்தார்.தனது ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அனைவரும் நன்குணரும் பொருட்டு அவற்றை விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழில் அகவற்பாவில் அமைத்து தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை தொடங்கினான்.மன்னனது ஆட்சி வளர வளர மெய்க்கீர்த்தியும் வளர்ந்து கொண்டே போகும்.மெய்க்கீர்த்திகளில் இருப்பனவெல்லாம் கற்பனை அல்ல.அவை அனைத்தும் அந்த மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களே.

பாண்டி மண்டலமும்,சேர மண்டலமும் அடங்கிய ராசராச தென்மண்டலமும், தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலமும்,கங்க மண்டலமும்,கொங்கு மண்டலமும்,நுளம்பாடி மண்டலமும்,கலிங்க மண்டலமும்,ஈழமாகிய மும்முடி சோழ மண்டலமும் இவனது ஆட்சியில் சோழ நாட்டிற்க்கு உட்பட்டு இருந்தது. மற்றும் பல அன்னிய நாடுகளும் இவன் கட்டுப்பாட்டில் இருந்தது.

வளர்ந்து கொண்டே வநத சோழ சாம்ராஜ்யத்தின் நிதிநிலையை சமாளிக்க அது வரையில் யாரும் யோசிக்காத வண்ணம் தனது சாம்ராஜ்யத்தை அளக்க உத்தரவிட்டான் ராஜராஜன்.இப்பெரும் பணியை மிககுறுகிய காலத்தில் செய்து முடித்தவன் சேனாதிபதி குரவன் உலகளந்தானான ராசராச மாராயன்.எவ்வளவு நன்செய் நிலங்கள்,புன்செய் நிலங்கள்,காடுகள்,விளைநிலங்கள் என்பதை புலப்படுத்தி அவற்றுள் விளைநிலங்களுக்கு மட்டும் வரி விதிக்குமாறு பரிந்துரைத்தான்.

இவ்வாறு பலத்துறைகளில் சிறப்புற்று விளங்கிய ராஜராஜனுக்கு பல்வேறு அபிஷேக பெயர்கள் இருந்தன.
ஷத்திரிய சிகாமணி, ராசேந்திர சிங்கன், உய்யக்கொண்டான்,
பாண்டிய குலாசினி, கேரளாந்தகன், நித்த வினோதன், ராசாசிரையன்,
சிவபாதசேகரன், சநநாதன், சிங்களாந்தகன், சயங்கோண்டசோழன்,
மும்முடி சோழன், ரவிகுல மாணிக்கம், நிகரிலி சோழன்,
சோழேந்திர சிங்கன், சோழமார்த்தாண்டன், ராசா மார்த்தாண்டன், தெலுங்குகுல காலன், கீர்த்தி பராக்கிரமன் என்பன ஆகும்.

மன்னர்கள் கோயில் கட்டுவது என்பது புதிது அன்று. எதையும் புதிதாக முயற்சி செய்யும் ராஜராஜன் இதிலும் தனது புதுமையை கட்டினார்.அதாவது அதுவரை தென்னாட்டில் எங்குமே இல்லாத பரிமாணத்தில் 793 அடி நீளத்தில் 397 அடி அகலத்தில் 216 அடி உயரத்தில் ராஜராஜேச்வரம் என்னும் கோயிலை கட்டினான், இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து தமிழரின் கட்டிட கலையை உலகிற்கு உணர்த்துவது திண்ணம்.

இவ்வாறாக பலத்துறைகளில் சோழர்களின் முத்திரையை பதித்த ராசராசன் கி,பி-1012இல் தனது புதல்வனாகிய, பின்னாளில் ராசேந்திரசோழன் என்னும் அபிஷேக பெயரை அடைந்த இளங்கோ மதுராந்தகருக்கு இளவரசு பட்டம் சூட்டினான். இவனது வீர சாகசங்களை அடிக்கிக்கொண்டே போகலாம் ஆனால் கட்டுரை நீளும் என்பதால் சுருக்கி கொண்டு.

இதே ஓர்மத்தோடும் திமிரோடும் ஈழவள நாட்டில் ஒரு தெய்வக் குழந்தை கடைக்குட்டியாக உதித்தது வரலாற்று ஏடுகளாக இருக்கும் தமிழர் வீரத்தை உலகுக்கு காட்டினான் அந்த சூரிய தேவன்.

திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு கடைக்குட்டியாக வல்வையில் அவதரித்தான் பிரபாகரன். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். மூத்தவர்கள் குடும்ப வாழ்க்கையோடு நின்றுவிட, கடைக்குட்டி மட்டும் தமிழையும் அடிமையாக மாற்றான் காலில் விழுந்து கிடக்கும் தமிழர்களையும் பற்றி எண்ணினான்.

இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.

கடைக்குட்டியான பிரபாகரன் தனது தாய் தந்தையரிடம் உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். உன்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறிவிட்டு உலக வரலாற்றில் மிகப்பெரிய சரித்திரத்தை படைக்க வெளிக்கிட்டார். இதனை அன்று எவரும் அறிந்திருக்கவில்லை. காலம் கடந்தது ஒற்றை கைத்துப்பாக்கியோடு ஆரம்பித்த கடைக்குட்டியின் தமிழருக்கான விடுதலை பயணம்.

துரோகிகள் அழிப்பில் தொடங்கி, இந்திய வல்லரசு தொட்டு பல தடைகளை தவிடுபொடியாக்கி தரை, கடல், வான் என முப்படைகளையும் கட்டமைத்து, உலக வல்லரசுகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக இருந்து, ஒழுக்க சீலனாக சோழர் காலத்தில் வீழ்ந்த புலிக்கொடியை புது ரெத்தம் பாய்ச்சி வின்னில் பறக்க விட்டு உலக அரங்கில் புதிய வரலாற்றை படைத்து தமிழீழத்தின் தேசியத் தலைவனாக உயர்ந்து நின்றான்.

கடை குட்டியாக பிறந்து
தோழர்களின் தம்பி எனும் வீரப்பிணைப்போடு
அண்ணனாக
புலிகள் தலைவனாக
தமிழீழ தேசியத் தலைவனாக
தமிழ்த் தேசிய தலைவனாக
வையகம் போற்ற உயர்ந்து நின்றான்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைக்குட்டியாக பிறந்த தமிழன் தமிழை உயர்த்தினார்
இன்று இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து பிறந்த தமிழன் தமிழை நிமிர்த்தினான்.

ஈழம் புகழ் மாறன்