தமிழீழத்திற்காக ஆயிரம் தடவைகள் வேண்டுமானாலும் இறக்கலாம் – பிரபாகரன் எழுதிய கடிதம்

Posted on

காலத்தால் பல விடயங்கள் மறைக்கப்படலாம், அல்லது அழிக்கப்படலாம் ஆனால் நிதர்சனங்கள் எப்போதும் அழியாது.ltte-flag

காலத்தின் பாதையில் என்றாவது ஓர் நாள் அது வெளிப்படுத்தப்படும் அல்லது வெளிவரும் என்பதே உண்மை.

ஈழத்தில் நடைபெற்று வந்த இன அழிப்பு, இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடிதம் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் முத்துவேல் கருணாநிதிக்கு தெரியப்படுத்தினார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 22.02.1989 அன்று கருணாநிதிக்கு எழுதிய கடிதம் தற்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ வெளியிட்டுள்ளார்.

அழிக்கப்பட்ட ஆவணம் இதோ

praba-karunanithi-letter-1

praba-karunanithi-letter-2praba-karunanithi-letter-3
prabahakaran-2பிரபாகரனின் கடிதத்தை கருணாநிதி கிழித்தெறிந்தார்! தாம் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்!- வைகோ

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். கருணாநிதிக்கு, விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன், 1989ம் ஆண்டு அனுப்பிய கடிதத்தை 28 வருடங்களின் பின்னர்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை.கோபாலசுவாமி தற்போதுவெளியிட்டுள்ளார்.

இந்திய அமைதிப்படையினர் இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொண்டு வரும்அத்துமீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அந்த கடிதத்தில் பிரபாகரன்,கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கைக்கு தாம் சென்றிருந்த வேளையில் வனப்பகுதியில் வைத்து குறித்த கடிதத்தைபிரபாகரன் தம்மிடம் தந்ததாக கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தை கையளித்த சில மாதங்களில் தாம் அதனை கிழித்தெறிந்து விட்டதாககருணாநிதி தெரிவித்திருந்தார்.

எனினும் உலகம் அந்த கடிதத்தில் உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதாம் அதன், பிரதியை பத்திரமாக வைத்திருந்ததாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.

22 பெப்ரவரி 1989 என்ற திகதியிடப்பட்டு பிரபாகரன், தமது கைப்பட எழுதிய அந்தகடிதத்தில், இலங்கையின் தமிழ் தலைவர்கள் தமது இன்பங்களுக்காக தமிழர்களை கைவிட்டுசென்றுள்ள நிலையில் வைகோ, உயிரையும் பணயம் வைத்து தம்மையும் தமது வீரர்களையும்சந்தித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ, இலங்கை தமிழர்கள் மீது வைத்துள்ள உணர்வுக்காக ஆயிரம் தடவைகள் தாம்மரணிக்க முடியும் என்றும் பிரபாகரன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிப்படையின் காரணமாக தமது நாடு பாரிய இடுகாட்டில் தள்ளப்பட்டுள்ளதாகபிரபாகரன் அந்த கடிதத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் இந்திய அமைதிப்படை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளதுமட்டுமல்லாமல், பாரிய தாக்குதல் ஒன்றுக்கும் தயாராவதாக பிரபாகரன் அதில்கூறியிருந்தார்.

எனவே ஆபத்தான சூழ்நிலை காரணமாக வைகோ அண்ணனை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகபிரபாகரன் தமது கடிதத்தில் கருணாநிதிக்கு அறிவித்திருந்தார் என்றும் வைகோகுறிப்பிட்டுள்ளார்.