விடுதலைக்கு புதிய வரைவிலக்கணத்தை வரைந்த..தேசியத் தலைவர் பிரபாகரன்!

Posted on Updated on

மாவோ சேதுங்…லெனின்..
மார்க்ஸ்..
என்றெல்லாம்…எண் நிறைந்தோர் ..
ஆயிரம் ஆயிரம் வரைவிலக்கணங்களை..
விடுதலைக்கு வரைந்தார்கள்…

எங்கள் தலைவன்….
என்ன சொன்னான்?
ஒன்றே ஒன்றை மட்டும்தான்…
சொன்னான்..

எங்கள் கைகளில் எதிரிதான்
ஆயுதத்தை திணித்தான்..அதனால்தான் நாம் போராடுகிறோம்
என்றுதான் சொன்னான்..

அதுவே..இன்று
தமிழர்களின் உள்ளங்களில்
விடுதலைக்கான
வரைவிலக்கணம் ஆகிவிட்டது..

ஆம்..நாங்கள்..
ஆயுதப் பிரியர்கள் அல்ல..
இரத்த ஆற்றில் குளித்து..ஓர்..
இலட்சியச் சீனாவை..
அல்லது..உறஷ்யாவை.
உருவாக்க வேண்டும்..என்று
விரும்பியவர்களும் அல்ல..

நாங்கள் விரும்பியது..
எங்கள் மண்ணில்
மாற்றானிடம் கைகட்டி..நின்று
கனவிலும்..
வாழக் கூடாது..என்பதுதான்..
எங்கள் மண்ணில் இருந்து..
மாற்றானின் சப்பாத்துகளை
துடைத்துக் கொண்டு..
அவன் இடும் கட்டளைகளுக்கு அடிபணிந்து
வாழக் கூடாது..என்பதுதான்…

ஒருபிடி சோறுக்காக..
எங்கள்…இனத்தின் தன்மானத்தை
இறுதிவரை..
இழக்க கூடாது..என்பதுதான்..

அதற்காக நாங்கள்..எங்கள்
பிள்ளைகளைக் கொடுத்தோம்..
கூடப் பிறந்தவர்களைக் கொடுத்தோம்..
தேவை எனில்..
பேரப் பிள்ளைகளையும் கொடுப்போம்….
ஏன் தெரியுமா?..
விடுதலை எங்கள்
உயிரிலும் மேலானது!

மு.வே.யோ.

Advertisements