ஊழிக்காலம்வரை உலாவரும் ஒப்பற்ற விடுதலை நட்சத்திரம் நீ.!

Posted on Updated on

ஈழத்தின் சிற்பியே.
எம்மினத்தின் தலைவனே!
இன்னும் ஒரு வாரத்தில்..
உனக்குப் பிறந்தநாளா?
அறுபத்து ஒன்றை தாண்டிவிட்டாயா
அரும் பெரும் தலைவனே?

விண் பற்றி எரிந்த நாட்கள்- அன்று
ஒன்றா இரண்டா?
விழுந்து விட்டாய்.. அப்போது என்று
சிலர்
சொன்னார்கள்….
விழுந்தா விட்டாய்?
எந்த வீணன் இதைச் சொன்னான்?

மண் பற்றி எரிந்த நாட்களிலும்
மடிந்தா விட்டாய்?
ஐயா..ஆதியும் இல்லா
அந்தமும் இல்லாச் சோதியையா நீ
அழிப்பவன் யார் உன்னை?

அழிக்க நினைப்பவன்
அழிந்து விடுவான்..
உன்னை
எரிக்க நினைப்பவன்
எரிந்து விடுவான்..
அழிவும் பிரிவும் இல்லா
அரும் பெரும் சோதி ஐயா நீ…!

வாழ்வியலின் புதிய
வரலாற்றை வரைந்து சென்ற
தமிழர் அகராதி நீ..
எந்த நேரத்திலும் உன்னை
எடுத்துப் படிக்கலாம்..!

ஊழிக்காலம்வரை உலாவரும்
ஒப்பற்ற
விடுதலை நட்சத்திரம் நீ..
பூமியின் எந்தப் பக்கத்திலும்..
எப்போது நின்று பார்த்தாலும்
நீ.. தெரிவாய்…!

தமிழ் இனம் மட்டுமல்ல..
விடுதலையை வேண்டி நிற்கும்
அடக்கப் பட்டவர்கள்..
ஒடுக்கப் பட்டவர்கள்..
அழிக்கப் பட்டவர்கள்..

உன்
வரலாற்றைப் புரட்டிப்
பார்த்தால் போதும்..
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
அவர்களுக்கும் ஆசை வரும்!
விடுதலையின் பிராண வாயுவே
நீதானே ஐயா!

மு.வே.யோகேஸ்வரன்

Advertisements