அகவை காணும் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் காணொளிகள்

Posted on


தேசிய தலைவர் அவர்களுக்கு, இன்றைய விஞ்ஞான உலகத்தில் எங்களின் உணர்வு எப்படியும் சேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

உலகப் பூப்பந்தில் இருக்கும் ஒவ்வொரு தன்மான தமிழனின் ஒரே தலைவர் என்கிற தகுதி உள்ள தங்களுக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தங்களின் தலைமையில் தமிழ் ஈழத்திற்காக தங்களை உயிராயுதமாக்கிய அனைத்து மாவீரர்களுக்கும் தமிழினத்தின் சார்பாக வீரவணக்கம்.

உயுராயுதம் இது சாதாரண வார்த்தை அல்ல. போனால் வராத உயிரை நொடிப் பொழுதில் தன் இனத்திற்காகவும், நாட்டிற்காகவும், தன் தலைவனின் கட்டளைக்காகவும் அர்ப்பணித்த உள்ளங்களை வாழ்த்தவும், வர்ணிக்கவும், தமிழில் வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு முன் நிகழ்ந்த வீர வரலாறுகளும் சரி, அதன் பிறகு நடந்த போராட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால். நீங்கள் தனித்தே நிற்கிறீர்கள்.

முப்பது வருடத்திற்கு முன்பு சிறிய கை துப்பாகியால் துவங்கிய போராட்டம் பிறகு யாருடைய துணையும் இல்லாமல் முப்படைகளின் வளர்ச்சியை கண்டு உலக வல்லரசுகள் அஞ்சின. எங்களை போன்ற தமிழ் உணர்வளர்களைவிட எதிரிகுத்தான் உங்களின் பலம் தெரியும்.

அதன் பலம் அறிந்தே அனைத்து வல்லரசுகளும் உங்களுடன் மோதின. காரணம் உலகில் தமிழனின் ஈழம் வல்லரசாகி நிலைத்து நின்று விடும் என்கிற பயம். அவர்களின் வெற்றிக்கு உங்களுக்கு மரணத்தை அவ்வப்பொழுது ஏற்படுத்துவார்கள். இப்பொழுதும் அப்படியே. இப்படியே அவர்கள் வெற்றி பலமுறை……… உலகத்தில் தன்னுடைய மரணத்தை பல முறை கண்ட ஒரே மனிதர் நீங்கள்.

தேசிய தலைவர் அவர்களுக்கு,

கடந்த மூன்று வருடமாக இந்த ஒரு நாளுக்காக (நவம்பர் 27) வருடத்தில் 364 நாட்கள் காத்திருக்கும் உங்களிடம் இருந்து என்ன பதில் வரும் என்று உலக தமிழினம் ஏங்குகிறது. சரியான வழிகாட்டலோ சரியான தலைமையோ இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருகிறது தமிழினம்.

உங்கள் மனம் எப்பொழுது கலையும். சனநாயக முறையில் போராட்டமா இல்லை, மீண்டும் கெரில்லா போர் முறையா. இதில் எம்முறையானாலும் அது உங்களால் மட்டுமே சாத்தியம். நீங்கள் இல்லாத நிலை இப்பொழுது உங்களுக்கு புரியும்.

எத்தனை எத்தனை கிளைகள் உங்கள் பெயரில் இதில் யார் உண்மை என்ற குழப்பம். யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் தவிக்கின்றோம். ஈழ மண்ணில் பகைவன் நமது அடையாளம் தெரியாமல் நம் இனத்தை அழித்து கொண்டு இருக்கிறான்.

தாய் தமிழகத்தில் இனத்தை அழிக்காமல் மொழி, கலாச்சாரம் மற்றும் வந்தேறிகளின் தலைமை மற்றும் ஆக்கிரமிப்பால் இறையாண்மை என்னும் பெயரில் அழிக்கிறான். ஈழ மண்ணில் சொல்லி அழ முறையிடுவதற்கு நீங்கள். தாய் தமிழகத்தில் சொல்லி அழ தகுதியற்ற நிலையில் நாங்கள். உண்மையில் நாங்களே அகதிகள்.

ஓய்ந்தது தமிழினம் என்று எதிரி நினைக்காமல், ஓயாத அலைகளாக தமிழினத்தை காக்க வரவேண்டும். இதற்கு வேறு தீர்வு இல்லை. பிம்பத்திலும், புத்தகத்திலும் பழைய வரலாறுகளை சொல்லி சொல்லி மழுங்க செய்த எங்களுக்கு வீர வரலாற்றை செய்து காட்டிய தலைவர் நீங்கள்.

நீங்கள் அதிகம் பேசாதவர். அது பயன் இல்லை என்று உங்களுக்கு தெரியும். தலைவா அனைத்து வல்லரசுகளின் தோல்விக்கு மற்றும் தமிழர்களின் ஒற்றுமைக்கு தற்சமயம் உங்கள் குரல் இத்தருணத்தில் கண்டிப்பாக ஒலிக்க வேண்டும்.

செயல் மட்டுமே சாத்தியம் என்று உணர்த்தியவர். அது உலகிற்கு தெரியும். உங்கள் செயலுக்காக காத்திருக்கும் கோடான கோடி தமிழனில் நானும் ஒருவன். நீண்ட நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழ் இனத்திற்கு எந்த சூழ்நிலையிலும் விலை போகாத ஒரு நல்ல ஒழுக்கமுள்ள தன்மான தலைவன் உள்ளார் என்ற பெருமையோடு என்றும் உங்கள் வழியில் நாங்கள்.

ஓவியம்,
சென்னை.

பிறந்த நாள் பாடல்கள் – இங்கே அழுத்தவும்

தமிழீழப் பாடல்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s