விடுதலைப்பேரொளி

Posted onதமிழீழத் தேசியத்தலைவரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு ஈழமுரசு வெளியிட்ட விடுதலைப்பேரொளி எனும் நுலை, 55வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்க்கதிர் வாசகர்களுக்காக நாம் இங்கே தொடராகத் தருகின்றோம்.

தமிழ்க்கதிர் குழுமம்.

பதிப்புரைக்குறிப்பு

தமிழ் கூறும் நல்லுலகத்தின் எழுச்சிக் குறியீடாய் செயற்படுபவர் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

அகவை ஜம்பதை எட்டும் அவரின் பன்முகப் பரிமாணத்தைக் காண்பிக்க சிறிதளவேனும் முயலும் இம்மலரைத் தயாரித்ததில் மலர்க்குழு பெருமிதம் கொள்கின்றது. அத்துடன் இம்மலர் முடியாது என்ற சொல் அகராதியிலேயே இருக்கக் கூடாது என்ற மாவீரன் நெப்போலியன் சாதனைகள் புரிந்த பிரான்ஸ் மண்ணில் இருந்து வெளிவருவதென்பதும் பொருத்தப்பாடுடையதே. ஏனெனில் முடியாது என்ற சொல்லை தமிழில் திருத்தி எழுதியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.

அத்துடன், அவரைக் கவர்ந்து வரலாற்று நாயகர்களில் நெப்போலியனும் ஒருவர். எமது சிறப்பு வெளியீடான இம்மலர், ஒரு வாழ்த்து மலராக இல்லாமல் ஓர் ஆவணமாக வெளிவர வேண்டும் என்பதைதே நாம் நோக்கமாகக் கொண்டிருந்தோம். குறுகிய காலத் தயாரிப்பாக இப்பணியினை ஆரம்பித்தபோதுதான் எங்கள் சக்திக்கும் அப்பால் இச்சிறப்பு நூலின் வீச்சு விரிந்திருப்பதைக் கண்டோம். குருவி தலையில் பனங்காயை சுமத்தியதைப் போன்று பாரிய சுமை எம்மை அழுத்தியது. சில குறுகிய பக்கங்களுக்குள் இந்நூலின் வீச்சை அடக்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று என்பதையும் நாம்உணர்ந்துகொண்டோம். அப்புரிதலின் அடிப்படையில் மிகக்குறைந்த அதாரவு வளங்களுடன்தான் எமது நோக்கத்தை எட்ட முயற்சித்திருக்கின்றோம். இம்மலரில் பலரது எண்ணங்கள், அனுபவங்கள் வழியே ஒரு அரைநூற்றாண்டு வரலாறு எழுத்துக்களாயும், ஒளிப்படங்களாயும் தாள்களில் உறைந்து கிடக்கின்றன.

தற்போது இம்மலரை உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ளோம். நாம் ஆக்கங்கள் கேட்டு அணுகியவர்கள் பெரும்பாலானோர் எமது கோரிக்கையை எற்று உடனடியாக பதில் எமுதியிருந்தனர். பொறப்புணர்வு மிக்க அவர்களக்கு எமது நன்றிகள். தமிழ் சூழலுக்கு அப்பாலானவர்களும் எமக்கு ஆக்கங்கள் அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் அவ்வாக்கங்கள் மாத்திரம் இரு மொழிகளில் இம்மலரின் இடம் பெற்றுள்ளன. இம்மலர் தயாரிப்பில் பலரும் பல நாடுகளில் இருந்தும் தம் ஒத்துழைப்புக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். அதுவே இம் மலரின் சிறப்புக்கு அடித்தளம் இட்டது. அனைவருக்கும் எமது நன்றிகள்

மலர்க்குழு
நவம்பர் 2004

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிராபாகரன் அவர்கள் ஈழத் தமிழர் வராலற்றில் அரை நூற்றாண்டை அசைத்து நிமிர்கின்ற இவ்வேளையில், அவரை வாழ்த்துவதில் நாம் பெரும் மகிழ்வடைகின்றோம்.

வெறும் வார்த்தைகளிலும், வரிகளிலும் உள்ளடக்க முடியாத உன்னதமான பெரும் தலைவனை ஈழத் தமிழினம் பெற்றிருக்கிறது. அத்தகைய பெரும் தலைவனுக்கு பெரும் தலைவனுக்கு சிறப்பு மலர் ஒன்றினை வெளியிடுவது வாழ்துரைப்பது எம்மை மட்டற்ற மகிழ்ச்சிக்கும் பெருமித நிலைக்கும் இட்டுச்செல்கிறது. ஆழப்பெரும் கடலை சிறு சுள்ளிகொண்டு அளக்க முயன்று தோற்றப்போன நிலையிலும் சிறிய தலை நிமிர்வை இம்மலர் எமக்கு எற்படுத்தியுள்ளது. பிராபாகரன் என்கின்ற அதியுயர் மனிதனின் தோற்றுவாகய்க்குப் பின்னாலான ஈழத் தமிழ் மக்களின் வரலாறு அந்த மனிதனுடன் பின்னிப் பினைந்து இசைத்தே நடைபோடுகிறது.

அவ்வகையில் அந்த மாமனிதனின் மிகப் பெரிய வரலாற்றை ஆவணப்பதிவாக்கி பத்திரப்படுத்த வேன்டிய கட்டுப்படு ஈழத் தமிழ் மக்களின் முன்னே குறிப்பாக தமிழ் அறிவு ஜீவிகளின் முன்னே குறிப்பாக பெரும் கடனாய் விரிந்து கிடக்கின்றது. இக்கடப்பாட்டின் ஒரு துளியாயும் அவ்வரலாற்று பெரும்பணி நோக்கிய சிறு தொடக்கமாகவும் விடுதலைப் பேரொளி உங்கள் முன் கதிர் பரப்பியிருக்கின்றது. பொய்மை வரலாறுகளைத் தகர்தெறிந்து தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் பல்லாயிரம் மாவீரர்கள் இலட்சிய ஆகுதியோடு முன்நகர்ந்து வரிந்து செல்லும் ஈழபோராட்டத்தின் சத்திய சாட்சியங்காளாக அனைத்துத் தமிழ் உறவுகளும் கைகோர்த்து முன் செல்வோம். உண்மை பெருவரலாற்றை உலகிற்குப் படைத்தளிப்போம்.

நன்றி

ஈழமுரசு ஐரோப்பா.

(நிர்வாக ஆசிரியர்குழு)

பரிஸ்- பிரான்ஸ்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s