விடுதலைப்பேரொளி -1

Posted on

மலையாகித் தலை நிமிர்ந்தாய்

மனித வரலாற்றை நகர்த்துவது வரலாற்று நியதியா அல்லது வரலாற்று நாயகனா என்ற வினாவுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்கை விடை பகர்கின்றது.

அவருடைய சொல்லும் செயலும் தமிழினத்தின் வாழ்வும் வரலாறுமாக அமைகின்றது. வரலாறு பலரை உருவாக்குகிறது. ஒருசிலர் மாத்திரம் வரலாற்றை உருவாக்குகிறார்கள். எமது தேசியத் தலைவர் அவர்கள் வரலாற்றை உருவாக்குவதோடு அதை வழிநடத்திக்கொண்டு செல்கிறார். மீகாமன் இல்லாத கடற்கலம் போல் தத்தளித்த உலகத் தமிழினத்திற்கு அவர் ஒப்பற்ற தலைவனாகவும் இணைப்புப் பாலமாகவும் திகழ்கிறார். சென்ற இடமெல்லாம் கரைந்துபோகும் இயல்புடைய உலகத் தமிழினம் தனது இன,மொழி,பண்பாட்டு அடையாளங்களில் மீண்டும் பெருமிதம் அடைய அவரே காரணமாவார். கூனிக் குறுகிய நாம்இன்று நிமிர்ந்து நிற்கிறோம். எங்கே அழிந்துவிடுமோ என்று அஞ்சிய எமது தாய்மொழி மீண்டும் புதுப்பொலிவுடன் மறுமலர்ச்சி காண்கிறது.

ஆங்கிலத்திற்கு நிகரான கணினி மொழியாகத் தமிழ் திகழ்வதற்கு எமது விடுதலைப்போரும் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளின் தமிழுணர்வும் காரணங்களாக அமைகின்றன. உலக அரங்கில் பிரபாகரன் சகாப்தம் வித்தியாசமானது. அதில் மேடைப் பேச்சிற்கும் பகுதி நேர அரசியலுக்கு இடமில்லை. முழுநேர ஈடுபாடு ஈகம் அர்பணிப்பு என்ற உயர் பன்புகள் முதலிடம் பெறுகின்றன ‘சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருத்தல் வேண்டும் செயல் தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் எமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகிறது’ இது அவருடைய கோட்பாடு. அரசியல் என்றால் என்னவென்பதற்கு அவர் கூறும் விளக்கம் அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல் வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு அவர் குறிப்பிடும் செயல் என்ற சொல் பல்வேறு அர்த்தபரிமாணங்களைக் கொண்டது.

மனவுறுதியும், வீரமும், விடுதலைப்பற்றும், தன்னம்பிக்கையும் அவர் கூறும் செயலின் பிறவடிவங்களாகும். வீரத்தின் விளைநிலமாக ஈழத்தை மாற்றியவர் பிரபாகரன் அவர்களே. உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களுக்கு அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. ஜம்பது அகவை காணும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவதில் பெருமிதமடைகிறோம். அவர்மீது பாடப்பட்ட கவிதை வரிகளை இங்குசமர்ப்பிக்கிறோம். இத்தொகுப்பு நூலையும் அவருக்கே உரித்தாக்குகிறோம்.

தங்கத் தலைனுக்கு!

ஒளிகொண்டு எம்மண்ணில் இன்றுதித்தாய், தலைவா!!

ஓயாத அலைகொண்டு பகை மிதித்தாய்,

அழியாத புகழ்வென்று நிலையுயர்ந்தாய் – எதற்கும்

அசையாத மலையாகித் தலை நிமிர்ந்தாய்.

வாழ்க பல்லாண்டு.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழம்.

நவம்பர் 2004

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s