பிரபாகரம்” – “உலகின் புதிய உயிரோடை”-காணொளிகள்

Posted on

ஆயிரம் ஆண்டுகளானாலும் அயியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!

 • தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. பிரபாகரன் என்கின்ற எங்கள் தேசியத்தின் ஆத்மா சிரஞ்சீவியானது அழிவில்லாதது ஆத்ம நிகேதமானது. தமிழ் கூறும் நல்லுலகுக்கு பிரபாகம் அழிவில்லாத ஆத்மஞானச்சுடரொளி. இந்த வரலாறுதந்த வல்லமை தமிழினத்துக்கு வழிகாட்டியாகும் ஓர் இறைதத்துவம். ஜேசுவும் காந்தியும் புத்தனனும் புனித அல்லாவும் தாயும் தந்தையும் தயாபரனும் தலைவன் பிரபாகரனே என்பது தமிழர்களின் நம்பிக்கையானது. இதுவே எமக்கு வழிகாட்டும். இதுவே எமக்கு வாழ்வுதரம். ஆயிரம் விமர்சனங்கள் எழட்டும் ஆதவன்போல் எழுந்த தலவனை அது சுட்டெரிக்காது என்கின்றார் தமிழாசான் ஏ.சீ தாசிசீயர் அவர்கள்.

  பிரபாகரம் – உலகின் புதிய உயிரோடை! என மகுடம் சூட்டி தனது வழமையான, எளிமையான மொழிநடையில் வளரி இணையத் தொலைக்காட்சியில் வல்ல தலைவனை வழிகாட்டும் இறைவானக சித்தரிக்கின்றார். ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது பிரபாகரன் நாமம் எனக்கூறும் தமிழாசான் ஏ.சீ தாசிசீயர், பிரபாகர உயிரோடையின் உயிர் அணுக்களாக நம் இளையோர் தம்மைப் புடமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் ஒடுக்கப்படும் சமூகங்களிடையே தங்கள் பல மொழிப் புலமையோடு ஊடாடி, அவர்க்கும் நமக்கும் வளம் திரட்டுவார்கள். அடக்கும் அரசுகளும் ஒடுக்கும் ஆட்சிகளும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் – தாயகம்-தன்னாட்சி-தேசியம் என்று உறுமும் பிரபாகரம் அன்றெல்லாம் -அங்கெல்லாம் – உயிரோடையாகச் சேவித்து நிற்கும்!

  வெற்றி பெறும் வரை அது ஓயாது! என்கின்றார்

அவரது உரைச்சித்திரத்தின் எழுத்துருவை இன்போதமிழில் இடுக்கை செய்கின்றோம்

இன்போதமிழ் குழுமம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…

” மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்….
அது முடிஞ்ச பின்னாலும் என் பேச்சிருக்கும்….”

உலக வரலாற்றில் சிறிய கூறு ஒன்றை மேலோட்டமாகப் புரட்டுவோம்! அதிலே – தனித்தனி நாட்டின் – தனித்தனி இனத்தின் – வரலாறுகள் விலாவாரியாகப் பொதிந்திருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இனத்திலும் காலாதி காலமாக, எத்தனையோ மன்னர்கள், ஞானிகள், தலைவர்கள் – தோன்றியிருக்கின்றார்கள்! நாட்டுக்கு அல்லது தம் இனத்துக்கு அவர்கள் மேம்பட்ட பணி புரிந்திருக்கின்றார்கள். அதனால், வரலாற்றின் இதயத்தில் நிரந்தர இடம் பிடித்திருக்கின்றார்கள். நாடும் இனமும் இன்றும் அவர்களைப் போற்றிக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறே, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இனத்திலும் காலாதி காலமாக, எத்தனையோ கொடுங்கோலர்கள், சுயநல-சர்வாதிகாரிகள், வரலாற்றுத் துரோகிகள், மண்ணையும் வரலாற்றையும் கறைப்படுத்திச் சென்றிருக்கின்றார்கள்!

நாட்டுக்கு அல்லது தம் இனத்துக்கு அவர்கள் தாங்கொணாப் பேரிடர் புரிந்திருக்கின்றார்கள். அதனால், அவர்களும் வரலாற்றின் இதயத்தில் நிரந்தர – வலிதரும் – இடம் – பிடித்திருக்கின்றார்கள். நாடும் இனமும் இன்றும் அவர்களைத் தூற்றிக் கொண்டே இருக்கின்றன. இவர்களைப் பற்றிப் பேசி, கசப்புணர்வு கரிக்க, நெஞ்சம் புண்ணாவதை எங்கும் என்றும் தவிர்ப்போம். தங்கள் தங்கள் நாட்டுக்கும் இனத்துக்கும் நல்லது செய்து, வரலாற்றின் வரிகளிலும், மக்களின் நெஞ்சங்களிலும் பசுமைப் பதிவுச் செதுக்கம் பெற்ற மன்னர்களை, ஞானிகளை, தலைவர்களை நினைவுகூருவோம்!

அவர்கள் நாட்டு நலனுக்கும் மக்களின் நலனுக்கும் வேண்டிய தத்துவ வழித்தடம் பதித்துச் சென்றிருக்கின்றார்கள்! மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு வேண்டிய நடைமுறை வழித் தடம் பதித்துச் சென்றிருக்கின்றார்கள்! இவர்களிடையே ஞானிகள் என இனங் காணப்பட்டோர் – நல்லொழுக்க அல்லது ஆன்மீக வழித்தடமும் பதித்துச் சென்றிருக்கின்றார்கள்! இந்த வழித் தடம்; எல்லாமே அந்தந்த நாட்டுக்கும் அந்தந்த இனத்துக்கும் சிறப்பான ஆட்சி வடிவங்களை – வாழ்க்கை முறைகளை – பண்பாட்டுக் கோலங்களை – சிறு தெய்வ பெருந் தெய்வ வழிபாடுகளை – ஒழுங்கு படுத்தி இருக்கின்றன. தனித்துவம் தந்திருக்கின்றன! அத்தோடு – இந்த வாழ்க்கை வழித் தடங்கள் – உயிர்-ஒளித் தடங்களாகவும் உயிர்-ஒளி ஓடைகளாகவும் வடிவெடுத்து – அதாவது – டுiஎந-pயவாள ஆகவும் டுiஎந-உhயnநெடள ஆகவும் வடிவெடுத்து – ஆங்காங்கே வாழ்க்கையை இன்றும் நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றன! அவற்றில் சிலவேனும் – தங்கள் சிறிய நாட்டின் எல்லையையும் சிறிய இனத்தின் எல்லையையும் கடந்து உலக உயிர்த் தடங்களாகவும் உயிர் ஓடைகளாகவும் Live-paths MfTk; Live-channels – ஆகி – இன்று பொதுமைப்பட்டு நிலை பெற்றிருக்கின்றன! அத்தகைய உயிர்த் தடங்களையும் உயிர் ஓடைகளையும் உலகுக்கு அருளியவர்கள், உலகப் பெரு நாயகர்களாக, பேரருளாளர்களாக, கலங்கரை விளக்கங்களாக, குன்றிலிட்ட ஒளிர் மணிகளாகப் போற்றப் படுகின்றார்கள்.

இவர்களிடையே – புத்தர், கிறீஸ்து, ஏபிரஹாம் லிங்கன், காள் மாக்ஸ், லெனின், மாவோ, காந்தி, மாட்டின் லூதர் கிங், ச்சே குவேரா, ஹோச்சி மின், மண்டேலா, மதர் தெரெஸா, போன்ற பெயர்களும் அவற்றோடு இன்று பிரபாகரன் என்ற பெயரும் நம் கண் முன்னே துள்ளி வருகின்றன.

 • 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் வந்தார் – பழைய உலகத்துக்கு புத்தம் கிடைத்தது.
 • 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிறீஸ்து வந்தார் – பழைய உலகத்துக்கு கிறிஸ்தவம் கிடைத்தது.
 • 19 ஆம் நூற்றாண்டில் காள் மாக்ஸ் வந்தார் – 20 ஆம் நூற்றாண்டு உலகத்துக்கு மாக்சியம் கிடைத்தது.
 • 20 ஆம் நூற்றாண்டில் காந்தி வந்தார் – 20 ஆம் நூற்றாண்டு உலகத்துக்கு காந்தியம் கிடைத்தது.
 • 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரபாகரன் வந்தார் – இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பிரபாகரம் கிடைத்திருக்கிறது.

முதலில், புத்தரையும் கிறீஸ்துவையும் எடுத்துக் கொள்வோம்.

புத்தரும் சரி, கிறீஸ்துவும் சரி, தாம் வாழ்ந்து உலாவும் மக்களிடையே நிலவும் அஞ்ஞானத்தை அதாவது அறிவின்மையை அகற்றி, மெஞ்ஞானத்தை அதாவது அறிவை அவர்களிடையே விதைக்க முயன்றார்கள். புத்தர் – கருணையை-ஜீவகாருண்யத்தைப் போதித்தார். கிறீஸ்து – அன்பே உலகு – அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு – என்ற வள்ளுவ வாக்குக்கு அமைவான வழிமுறையை வலியுறுத்திச் சென்றார். புத்தரும் சரி, கிறீஸ்துவும் சரி, தாமாக எதையும் ஓலையிலோ தோலிலோ கல்லிலோ செப்பேடுகளிலோ எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. இவர்களுடன் கூடித் திரிந்து, இவர்கள் கூறுவதைக் கேட்ட தோழர்கள்-தொண்டர்களுடைய சிந்தைகளில் இவர்கள் கூறியவற்றில் எவை எவை பதிந்தனவோ – அவையே மக்கள் மத்தியில் அவர்களுடைய தோழர்களாலும் தொண்டர்களாலும் திரும்பத் திரும்ப எடுத்தோதப்பட்டன. அவையே பின்னர் எழுத்து வடிவில் பதியப்பட்டன.

தங்கள் போதனைகளைப் புத்தகமாக எழுதி இவற்றைப் போதியுங்கள் என்று புத்தரோ கிறிஸ்துவோ கட்டளை இட்டுவிட்டுப் போகவில்லை. தங்களைக் கடவுளர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு கூட எவரையும் நிர்ப்பந்திக்கவில்லை! தாம் கூறும் தர்மத்தை-நீதியை மத முலாம் பூசி, உலகம் எல்லாம் பரப்பும்படி ஆக்ஞாபிக்கவுமில்லை. புத்தர் பிறந்தது – ஒரு சிறிய நாட்டில்! அது ஒரு நகர நாடு! கபிலவஸ்து! கிறீஸ்து பிறந்ததும் – ஒரு சிறிய நாட்டிலேதான்! யூதேயாவில்! இரண்டு பேருமே தாம் பிறந்த அந்தச் சிறிய நாடுகளில்-வாழ்ந்த அடிநிலை மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, சாதாரண மக்களுடைய நல்வாழ்வுக்கு உகந்த நல் வழி கூறியவர்கள்! சமத்துவம் கற்பித்தவர்கள்! வறுமை ஒழியவேண்டும் என்றவர்கள்! இல்லாமை இல்லாதொழிய வேண்டும் என்று வாதிட்டவர்கள்! உணவு – உடை – உறையுள் அடங்கிய சமத்துவ உரிமைகள் அனைவருக்கும் கிடைத்தாக வேண்டும் என்பதற்குத் தத்துவ வலுச் சேர்த்தவர்கள்! தாம் கற்பித்த எதையும் மத முலாம் பூசி, உலகமெல்லாம் கொண்டு திரிந்து பரப்புங்கள் என்று அவர்கள் எந்தத் தோழரையோ தொண்டரையோ கேட்கவில்லை. வாள்முனையில் உலக வலம் வந்த புத்தமோ கிறீஸ்தவமோ எந்த நாட்டிலும் நீண்ட நாள் தாக்குப் பிடிக்கவில்லை! ஆனால், இவை சென்றடைந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள் இவர்களுடைய வழிகாட்டல்களை உற்று நோக்கினார்கள்!

இவற்றால் தமக்கு நற்பயனோ சுபீட்சமோ கிடைக்கும் என்று எங்கெங்கே கண்டார்களோ, அங்கெல்லாம் இவர்களுடைய வழிகாட்டலை வெவ்வேறு இனத்தவர்களும்; வெவ்வேறு நாட்டவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். புத்தர் பிறந்த சிறிய கபிலவஸ்துவிலும் சரி, அந்தச் சிறிய நாடு பின்னர் இணைந்து கொண்ட இன்றைய பரந்த பாரதத்திலும் சரி, புத்த மதம் அங்கே நிலை கொண்டதா? இல்லையே! மாறாக, இந்தியாவுக்கு வெளியே உள்ள ஸ்ரீலங்காவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் ஜப்பான் அடங்கிய தூர கிழக்கிலுமே அது இன்று கொடிகட்டிப் பறக்கிறது.

கிறீஸ்துவை எடுத்துக் கொண்டாலும், அவர் பிறந்த யூதேயாவிலும் சரி – அந்த யூத நிலம் அடங்கிய மத்திய கிழக்கிலும் சரி, கிறீஸ்தவம் அங்கே நிலை கொண்டதா? இல்லையே! மாறாக, அந்தப் பிராந்தியத்துக்கு வெளியே உள்ள ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்தானே அது இன்று காலூன்றி நிற்கிறது.

இனி, காள்மாக்ஸை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு யதார்த்த வாதி! புத்தர் மீதும், கிறீஸ்து மீதும் அவருடைய அடியார்கள் சூட்டிய தெய்வீகப் போர்வையையோ ஞான ஒளிக் கிரீடத்தையோ மாக்ஸ் மீது யாராலும் சூட்ட முடியவில்லை!

தாம்பிறந்த ஜேர்மனியிலும் தாம் புகலிட வாழ்வு வாழ்ந்த பிரித்தானியாவிலும் சுரண்டலுக்கு உள்ளாகி அல்லல் பட்டுக் கொண்டிருந்த அடிநிலைத் தொழிலாளர்களின் அவலம் அவர் நெஞ்சைத் தொட்டது. சிந்தனையைக் கிளறியது. வஞ்சிக்கப்பட்ட அந்த மக்களே அவருடைய தத்துவக் கருப்பொருளாகவும் கதாநாயகர்களாகவும் அமைந்தார்கள். ஆனாலும், அவருடைய தத்துவங்கள் அவர் எதிர் பார்த்தது போல அவர் பிறந்த ஜேர்மானிய மண்ணிலோ அவர் புகலிடமாகக் கொண்ட பிரித்தானியாவிலோ முதலில் வேரூன்றவில்லை. அவர் எதிர்பார்த்த அந்த மையங்களில் தொழிலாளர் புரட்சி வெடித்ததா? இல்லையே!

மாறாக, மாக்ஸ் வாழ்ந்த பிரதேசங்களுக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தையே மாக்சியம் முதலில் பிரகாசிக்கச் செய்தது. எதேச்சாதிகார ரு;யாவை அது தகர்த்தது! ருசியா உள்ளடங்கிய சோவியற் யூனியனிலும் பின்னர் சீனாவிலும் அதன் பின்னர் சுரண்டப்படும் அடிநிலை மக்கள் – முதல்-நிலை-சோசலிச அரசுகளின் ஆதரவோடு புரட்சி செய்த நாடுகள் மட்டிலுமே மாக்சிய தத்துவம் ஆழ-அகல வேர் ஊன்றியது!

இனி, காந்தியத்தை எடுத்துக் கொள்வோம். சூரியன் அஸ்தமிக்காத பேரரசைக் கொண்டவர்கள் தாங்கள் என்ற படைச் செருக்கோடு கொலனித்துவ உலக வலம் வந்த ஆயுததாரிகளான பிரித்தானியரை எதிர்த்து நின்றவர், காந்தி! அஹிம்சை என்ற சாத்வீகப் போர்க் கொடியோடு மானுட தர்மம், உண்மை ஆகியவை தரித்த சத்திய போதராக ஒத்துழையாமை என்ற ஆயுதம் ஏந்தியவர், காந்தி! தனது நாட்டின் மிகச் சாதாரண, ஏழைக் குடிமக்கள் ஒன்று திரண்டு தம் பின்னே அசையா விசுவாச ஆதரவோடு வர தமது நாட்டுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தவர், காந்தி!

அஹிம்சை, மானுட தர்மம், சத்தியம் என்பவையே தம் புதிய நாட்டின் புதிய வேதம் என்று – ஒடுக்கப்படும் மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுக்க வல்ல உலக தார்மீகத் தலைமை நாடாக இந்தியாவைத் தாற்காலிகமாவேனும் உலகத்துக்கு இனம்காட்டியவர், காந்தி!

தார்மீகத் தலைமை இந்தியாவை வழிநடத்த எவரெவரைத் தம் வாரிசுகளாக அரசியல் அரியணைத் தலைமையில் காந்தி அமர்த்தினாரோ – அவர்களுடைய வாரிசுகள் – குறிப்பாக இந்திரா காந்திக்குப் பின் வந்தவர்கள் – காந்தி மகான், நாட்டுக்குச் சம்பாதித்துக் கொடுத்த நற்பெயரை நாசம் பண்ணிவிட்டார்கள் என்றால், காந்தியம் அந்த நாட்டில் இருந்து வெளியேறிவிட்டது என்பதுதானே அர்த்தம்? ஊரவர் உதறிவிட்டாலும் – காந்தியத்தை – சத்திய தார்மீகத்தை – பொறுத்த கால கட்டங்களில் உலகம் உவந்து ஏற்றுக் கொண்டது என்பதற்கு – அமெரிக்காவில் மாட்டின் லூதர் கிங், தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா, ஆகியோர் உலக உதாரணங்கள் அல்லவா?

தம்மைச் சூழ உள்ள மக்கள் மீது கருணை மழை பொழியப்பட வேண்டும் என்பது – புத்தரின் அவதார அவாவாக இருந்தது! தம்மைச் சூழவுள்ள மக்களின் அறியாமை அந்தகாரம் அகற்றப்பட்டு அவர்கள் விடுதலை பெறவேண்டும்; என்பது – கிறீஸ்துவின் அவதார அவாவாக இருந்தது! தம்மைச் சூழவுள்ள அடிநிலைத் தொழிலாளர் வர்க்கம் சுரண்டல் இல்லாச் சுபீட்சம் பெற்றுப் பொதுவுடமைச் சமுதாயம் பலிதமாக வேண்டும் என்பது, காள் மாக்சின் அவதார அவாவாக இருந்தது! தம்மைச் சூழவுள்ள சாதாரண மக்கள் ஒரு தேசமாகத் திரண்டு அந்நிய ஆங்கிலேய ஆட்சி விலங்கொடித்து விடுதலை பெற்ற நாட்டினராக முகிழ்க்க வேண்டும் என்பது, காந்தியின் அவதார அவாவாக இருந்தது!

இத்தகைய ஒரு அவதார அவாவே பிரபாகரனிடமும் இருந்தது!

 • ஓடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் ஒரு தேசமாகத் திரண்டு தம்மை ஒரு இனக் கருவறுப்புப் புதைமணல் அகழிக்குள் நெம்பிக் கொண்டிருக்கும் அந்நிய சிங்கள ஆட்சி விலங்கை ஒடித்து விடுதலை பெற்ற நாட்டினராக – தமிழீழ நாட்டினராக – முகிழ்க்க வேண்டும் என்பது பிரபாகரனின் அவதார அவாவாக அமைந்தது!
 • காந்தி வழி வந்த தந்தை செல்வாவின் அடியொற்றி, அமைதி நியதியையே முதலில் கடைப் பிடித்தவர் – பிரபாகரன்! கடிக்க வரும் பாம்பை அடித்துக் கொல்வது தர்மமே என்ற இயல்பான பொது-நீதிக்குச் செயல்-வடிவம் கொடுக்க உந்தப் பட்டவர் – பிரபாகரன்!
 • அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது நியாயமே என்ற உலகப் பொதுவாதத்துக்கு – ஒரு நடைமுறை உரிமையை மீளத் துலக்கிக் காட்டியவர் – பிரபாகரன்!
 • திட்டமிட்டஒரு இனக் கருவறுப்பு நடைமுறைப் படுத்தப் படும்போது, ஆயுதம் ஏந்தி, தன்னைப் பாதுகாக்கும் உரிமை பாதிப்புக்கு உள்ளான எந்த இனத்துக்கும் உண்டு என்று ஐ நா மனித உரிமைச் சாசனம் கூறுவதற்கு அமைவாக, ஆயுதம் ஏந்தி, இனத் தற்காப்புப் போர் நடத்தியவர், பிரபாகரன்!

பதினாறாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், உலகத்தைச் சுற்றிவரும் கடல்வழிப் போக்குவரத்துப் புரட்சி தொடங்கியது! அச்சு-யந்திர-வழிக் கருத்துப் பரம்பலும் செய்தித் தொடர்பும் தொடங்கின. இவற்றின் விளைவாக – தொடர்பு ரீதியில் உலகம் வேகமாகச் சுருங்கிச் சிறுகத் தொடங்கியது! அதன் பின்னர்தான் – அதாவது – புத்தர் வாழ்ந்து ஏறத்தாழ 1500 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் புத்தரின் தத்துவம் மேற்குலகம் முழுவதும் எழுத்து வடிவில் பரவலாகப் பரவியது! கிறீஸ்து வாழ்ந்து ஏறத்தாழ 1500 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் கிறீஸ்துவின் தத்துவம் கிழக்குலகம் முழுவதும் எழுத்து வடிவில் பரவலாகப் பரவியது!

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் உலகத்தைச் சுற்றிவரும் விமானப் போக்குவரத்துப் புரட்சி தொடங்கியது. தொலைபேசியும் வானொலியும் காணொலியும் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. விளைவாக – செய்தித் தொடர்பு ரீதியிலும் அறிவுப் பரம்பல் ரீதியிலும் உலகம் மிக மிக வேகமாகச் சுருங்கிச் சிறுகத் தொடங்கியது!

இது காரணமாக, — காள் மாக்சின் தத்துவமும் காந்தியின் தத்துவமும் சில தாசாப்தங்களுக்குள்ளேயே – கிழக்கு-மேற்கு – வடக்கு-தெற்கு என்று உலகம் பூராவும் எழுத்து வடிவிலும், வானொலி-காணொலி வடிவங்களிலும் மிக மிக மிக வேகமாகப் பரவியிருக்கின்றன!

ஆனாலும், இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் தொடங்கிய விண்வெளி ஆய்வும் நூற்றாண்டின் கடைசிப் பாகத்தில் ராட்சத வேகம் பெற்றிருக்கும் இணைய வலைப் பின்னலும் இருக்கின்றனவே – Space Explorations and Website networks – அவை – உலகம் முழுவதையும் மிக மிக மிக மிக வேகமாகச் சுருக்கி, ஒரு சிறிய கிராமமாக்கி விட்டிருக்கின்றன.

 • இந்தக் கட்டத்திலேதான் பிரபாகரம் பிறந்திருக்கிறது! இரக்கமற்ற மன்னராட்சி உலகமெல்லாம் வியாபித்திருந்த காலத்தில் அடிநிலை மக்கள் மட்டில் கருணையை விதந்துரைத்து பௌத்தம் பிறந்தது போல, சுயநலமும் சூழ்ச்சியும் மலிந்திருந்த காலத்தில் தன்னைப்போல் பிறரையும் நேசி என்று மானுட நேயம் உரைத்து கிறீஸ்தவம் பிறந்தது போல, முதலாளித்துவக் கொடுமை தலை விரித்தாடி தொழிலாளி வர்க்கத்தின் குரல் வளையை நெரித்துத் திணறடித்துக் கொண்டிருந்த வேளை சுரண்டல் நீத்த சமத்துவம் உரைத்து மாக்சியம் பிறந்தது போல, நாடுகளைக் கபளீகரம் செய்யும் பேரரசுக் குடியேற்றக் கோரப் பிடி கோலோச்சிக் கொண்டிருந்த வேளையிலே முரண்பாட்டின் இரண்டு புறத்தினர்க்கும் வன்முறை நீத்த அஹிம்சை உரைத்து காந்தியம் பிறந்தது போல கொடிய ஆதிக்கங்களினதும், கொடிய அரசுகளினதும் கோரப் பிடியில் சிக்கி, இனப் படுகொலைக்கும் இனக் கருவறுப்புக்கும் உலகம் பூராவும் முகம் கொடுக்கின்ற சிறிய இனங்களுக்கும் சிறிய சமூகங்களுக்கும் உய்ய வழி காட்டுவதாக – பிரபாகரம் குதிர்ந்திருக்கிறது!

அழிவில் இருந்து – ஆபத்தில் இருந்து – இடர்ப்பாடுகளில் இருந்து – தன்னைக் காப்பாற்றிக் கொள்வது – ஒரு தனி மனிதரின் பொறுப்பு! தன் குடும்பத்தைக் காப்பாற்றுவது – ஒரு குடும்பத் தலைவரின் பொறுப்பு! பேராபத்தில் இருந்து தன் சமூகத்தைக் காப்பாற்றுவது – அந்தச் சமூகத் தலைவரின் பொறுப்பு!

 • பேரழிவில் இருந்து ஒரு இனத்தைக் காப்பாற்றுவது – அந்த இனத்தின் தலைவருடைய பொறுப்பு! இந்தப் பொறுப்பையே பிரபாகரன் ஏற்றிருந்தார்!
 • எத்தனை இன்னல்கள்! எத்தனை இடர்கள்! எத்தனை காட்டிக் கொடுப்புகள்!
 • எத்தனை துரோகங்கள்!

எத்தனை நெருப்பு ஆறுகள் ஊடாக நடை நடந்து, தம்மையும் தமது விடுதலைப் போராளிகளையும் பிரபாகரன் புடமிட்டார். தமது இனம் முற்று முழுதான இனக் கருவறுப்பில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள – தனது இதயத்தில் பதித்திருக்க வேண்டிய தாரக மந்திரத்தை, மண்ணிலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களின் இதயங்களில் அவர் ஆழமாக ஊன்றிவிட்டுச் சென்றிருக்கிறார்!

 • அதுவே – தாயகம்! தன்னாட்சி! தேசியம்! நிறைவேறமுடியாத கனவுகளோடு கற்பனை வாத வானத்தில் மிதந்தவராக பிரபாகரன் செயல்படவில்லை! தான் வாழ்ந்த மண்ணில் தமது கால்களை அவர் உறுதியாகப் பதித்திருந்தார். தமது மக்கள் முகம் கொடுக்கும் பேராபத்தை முழுமையாக உணர்ந்திருந்தார். தாயக விடுதலை வேணவாக் கொண்ட தோழர்களை ஒன்று திரட்டி, விடுதலைத் தவநடை தொடங்கினார். ஒரு நடைமுறை அரசைத் தோற்றுவித்தார்.
 • தமது மண்ணில் காலாகாலமாக வேர் ஊன்றி நின்ற நீதி-ஒழுங்கு முறைகளோடு, சமகால நீதி வழக்கமைதி புகுத்தி இழைக்கப்பட்ட நீதிக் கோவை உருவாகக் காலானார். ஆண்-பெண் சமத்துவத்தையும் சமுதாய சமத்துவத்தையும் வாய்ச் சொல் உலக முன்றலில் நடைமுறைச் சாத்தியமாக்கினார்.
 • சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சுமுகப்படுத்தும் காவல் துறையை உருவாக்கினார். ஒரு நாட்டுக்குத் தேவையான அதி நவீன உள் கட்டுமானங்களை, வளரச்சித் திட்டங்களை வடிவமைத்தார்.
 • நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றை வலிமையாகக் கட்டியெழுப்பினார்.
 • நடைமுறை அரசு ஒன்றை நடத்திக் காட்டினார். உலகின் வெவ்வேறு நாடுகளில் – தாயக விடுதலைப் போராட்ட வேள்வியில் பக்கிஸ்தான் , சீனாவையும் தமிழீழ எல்லையிலே நீண்ட காலமாக ஆட்டங்காணச் செய்து கொண்டிருந்தவர் பிரபாகரன்!

அண்மையிலே அவர் தோற்கடிக்கப் பட்டாரென்றால், பாரதப் போரின் அபிமன்யு போர்க் காண்டம் முள்ளிவாய்க்கால் களத்தில் மீளப் புதுப்பிக்கப் பட்டைமையே காரணம் என்பது சொல்லிப் புரிய வேண்டியதில்லை!

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ருசியா போன்ற வலு மிக்க உலக ஒட்டுமொத்த நாடுகளின் இறுதி நேரக் கூட்டுச் சதிப் பழியை இங்கு மீண்டும் நினைவு கூர்ந்தாலே போதும்!

 • எது எப்படியாயினும், இத்தனை விவரமாக இங்கே குறிப்பிடும் பிரபாகரனும் அவர் நிறுவிய கட்டுமானங்களும் இன்று காணாமற் போய் விட்டனவே என்று நையாண்டியாகக் கேட்பவர்களுக்கு ஒன்றையே துணிவோடு கூறுவேன்!

நீங்கள் கூறுவது உண்மையே! ஆனால் ஸ்தூலப் படைப்புகளும் ஸ்தூலப் பண்டங்களும் சிரஞ்சீவித்துவம் பெற்றவை அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்!

இயற்கையான மறைதல் விதிக்கு அவை அமைவானவை என்பதையும் நீங்கள் மறுக்கமாட்டீர்கள்!

ஆனால் சத்திய தத்துவங்கள் மறைவதில்லை!

பிரபாகரன் மறையலாம்!

பிரபாகரம் மறையாது!

தமிழர் தாயகம்-தமிழர் தன்னாட்சி-தமிழ்த் தேசியம் என்று ஒரு சிறு தேசிய வட்டத்துக்குள் ஒளிரும் பிரபாகரம் – இனி, தாயகம் தன்னாட்சி தேசியம் என்று சர்வ தேசிய விசாலம் பெறும்!

அகிலம் எங்கும் வியாபிக்கும்!

 • ஆதியில் – புறா மூலம் செய்தி பறந்தது – மெதுவாக!
 • பறைமூலம் மூலம் செய்தி பறந்தது – மெதுவாக!

அச்சு யந்திர செய்தித்தாள் மூலம் செய்தி பறந்தது – மெதுவாக! இவையூடாக புத்தமும் கிறிஸ்தவமும் பரவின – மெதுவாக! தொலை பேசி, வானொலி மூலம் செய்தி பறந்தது – சிறிது வேகமாக! மாக்சியம் பரவியது – சிறிது வேகமாக! காணொலி மூலம் செய்தி பறந்தது – மேலும் வேகமாக!
காந்தியம் பரவியது — மேலும் வேகமாக! இப்போது இணைய வலை மூலம் செய்தி பறக்கிறது!

இனி பிரபாகரம் பரவும் — மிக மிக மிக வேகமாக!

 • ஏனென்றால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் நம் இளைஞர் சமுதாயத்தினர் பிரபாகர மன உறுதியோடு ஜனனாயக வழி நின்று -இணைய-வலை-ஆயுதத்தைத் தம் கரங்களில் ஏந்தி முன்னே சென்று கொண்டிருக்கிறார்கள்.
 • பிரபாகர உயிரோடையின் உயிர் அணுக்களாக நம் இளையோர் தம்மைப் புடமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் ஒடுக்கப்படும் சமூகங்களிடையே தங்கள் பல மொழிப் புலமையோடு ஊடாடி, அவர்க்கும் நமக்கும் வளம் திரட்டுவார்கள். அடக்கும் அரசுகளும் ஒடுக்கும் ஆட்சிகளும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் – தாயகம்-தன்னாட்சி-தேசியம் என்று உறுமும் பிரபாகரம் அன்றெல்லாம் -அங்கெல்லாம் – உயிரோடையாகச் சேவித்து நிற்கும்!

வெற்றி பெறும் வரை அது ஓயாது!

 • உறங்காது!
 • தளராது!
 • அநாதி காலத்துக்கும் மறையாது!
 • சிலிர்த்து நிமிரும்!
 • நிலைத்து நின்று சத்திய-தர்ம-ஒளி உமிழும்!

உரைச்சித்திரம் காணொளி

வளரி http://www.valary.tv இணையத் தொலக்காட்சிக்கு நன்றிகள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s